மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 30 நவம்பர், 2013

அறிமுகம்



              அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு
என் பெயர் கூ. செ. செய்யது முஹமது. நான் ஏற்றுமதி இறக்குமதி துறையில் மேலதிகரியாக இருபதாண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். நாம் உலக அளவில் இஸ்லாமிய மதத்தில் கொள்கைகள், ஐம்பெரும் கடமைகள், ஷரியா சட்டங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இது இந்த பூமிப்பந்தின் எந்த மூலைக்குப் போனாலும் நம்மை மாற்றிவிடாது. அதே சமயம் நாம் உலகளாவிய இஸ்லாமிய வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறோமா என்று பார்த்தால், மிக மிக சொற்ப அறிவே மிஞ்சிக் கிடக்கிறது.  இஸ்லாமிய ஆட்சி என்பது நபி (ஸல்) அவர்களால் மதீனாவிலிருந்து துவங்கப்பட்டது. அதனாலேயே நாம் அந்த இஸ்லாமிய ஆட்சி யார் யார் மூலம் எப்படியெல்லாம் ஆளப்பட்டது எப்படிப்பட்ட பேரரசுகளானது, எப்படி சுருங்கியது, தற்போதைக்கு எப்படி இருக் கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று உணருகிறேன். அதிகம்பேர், நபிகள் (ஸல்) அவர்கள், நான்கு நேர்மையான கலீஃபாக்கள், அலி (ரலி), காலித் பின் வலீத், அப்பாஸ் (ரலி) இன்னும் சிலரது சரித்திரம் மட்டும் அறிந்து வைத் திருக்கிறார்கள். நாம் வாழும் நாட்டிலோ சொல்லவே வேண்டியதில்லை. ஔரங்க ஸேப் கலீஃபாக்களுக்கு இணையாக (அவர்களைப் போலல்ல இவர் இந்துக்களை யும் இந்துக்களாகவே ஆளவேண்டிய கட்டாயத்திலிருந்தார்) ஆட்சி செய்தார் என்று அடுத்து வந்த ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் சான்றளித்திருக்க இந்த மேதாவிகள் அவர் துரோகி போலவும், அக்பர் மாவீரன் நல்லவர் போலவும் (அக்பர் ராஜ புத்திர இந்து பெண்களை மணந்தார். அதனால், இந்துக்களுக்கான ‘ஜிஸ்யா’ வரியை நீக்கினார். இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் இணைத்து ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதத்தை தோற்றுவித்த காரணங்களால்) சரித்திரம் எழுதி தங்கள் புழு பூத்த மேனியை சொறிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கல்வி அமைச்சர் மாறும் போது இங்கு இஸ்லாமிய சரித்திரம் மட்டும் மாறுகிறது. இம்மைக்காக மட்டுமே வாழ்பவர்கள். நம் சமுதாயம் உலக இஸ்லாமிய சரித்திரம் அறிந்து கொள்ள வேண் டும். உங்கள் பிள்ளைகளையும் அறிந்திடச் செய்யுங்கள். அதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சிறு புள்ளியாக மதீனாவில் நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய மத ஆட்சி ஆரம்பித்து, கலீஃபாக்கள், உமய்யாக்கள், அப்பாஸிட்கள், செல்ஜுக்குகள், மம்லுக்குகள், அய்யுபிட்டுகள், ஓட்டோமான்கள், மங்கோலியர்கள், தைமூரியர்கள், மொகலாயர்கள் மற்றும் இப்போது இருக்கும் அமெரிக்க, மேற்கத்தியர்களின் விசு வாசிகளாகிப்போன இஸ்லாமிய நாடுகளாக எப்படி மாறிப்போனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குள்ளேயே எத்தனை துரோகம், எத்தனை கொலைகள் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டே இதை எழுதுகிறேன். இவைகள் ஆங்கிலத்திலிருந்து விக்கி மற்றும் பல வெப் ஸைட்டுகளிலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். இஸ்லாமிய கடமை மட்டும் போதும் இதெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணுபவர்கள் மாற்று சிந்தனைக்கு வழி கொடுக்காமல் சட்டென்று இதிலிருந்து விலகிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முதலில் நீங்கள் படியுங்கள் உங்களுக்குப் பிடித்தால் மற்றவர்களுக்கு பரிந்துரையுங்கள்.
வஸ்ஸலாம்
கூ. செ. செய்யது முஹமது.   

கருத்துகள் இல்லை: