மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 25 நவம்பர், 2013

அப்பாஸிட்கள் வரலாறு 3



756 ல் அப்பாஸிட் கலீஃபா அல் மன்சூரும் 4000 வீர்ர்களுடன் டாங்க் எனும் பேரரசை சேர்ந்தவர்களின் ‘அன் ஷி’ புரட்சிப்படையை எதிர்கொண் டார். கருப்புக்கயிறு கட்டிய டாஸிகள் என்றும் அறியப்பட்ட இவர்களை பெர்ஷியர் கள் உமய்யாத்களை ஆட்சியில் இருந்து அகற்ற அழைத்து வந்தனர். டாஸிகள் பாக்தாத் நகரத்தை நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றினார்கள். உலகின் முதல் காகித தொழிற் சாலையை பாக்தாதில் நிர்மாணித்து அப்பாஸிட்களின் புத்திசா லித்தனமான புதிய எழுச்சிக்கு காரணமானார்கள். அடுத்த பத்தாவது ஆண்டில் அப்பாஸிட்கள் மற்றொரு காகித ஆலையை கார்டோபா நகரில் தொடங்கினார் கள்.
                                 புதிய முஸ்லீம்களாக மதம்மாறிய பெர்ஷியர்களின் முழுஆதரவும் அப்பாஸிட்களுக்கு இருந்தது. பெர்ஷியாவை சற்று ஒட்டி பாக்தாத் நகரம் இருந்ததால் பெர்ஷிய சரித்திரமும், கலாச்சாரமும் இணைந்து காணப்பட் டது. புதியதாக நியமிக்கப்பட்ட மந்திரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு மத்திய அரசின் முன்னேற்றத்திற்கு உதவினார்கள். கலீஃபா அல் மன்சூர் அவர்கள் அரண் மனைக்கு முஸ்லீம் அல்லாதவர்களையும் வரவேற்றார். அப்பாஸிட்களுக்கு குறிப் பாக பெர்ஷிய, கோரசானிய அரபுகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவைப்பட்டது. ஏனென்றால் அவர்கள் உமய்யாத்களை எதிர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அப்பாஸிட்கள் திருக்குரானையும், ஹதீஸ்களையும், மதபோதகர்களையும் பெரி தும் மதித்தார்கள். அப்பாஸிட்கள் ஆட்சியில் இஸ்லாமிய உலகம் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அது சிரியாவிலிருந்து மெஸோபொடாமியா வரை நீண்டது. ஈராக்கில் டிக்ரிஸ் நதிபாயும் பாக்தாதை அப்பாஸிட்கள் தலைநகரமாக்கிக் கொண்டார்கள். பாக்தாத் சஸானியர்களின் முண்ணனி நகரமான செஸிபோனிலிருந்து இருபது மைல்கள் மேற்புறத்தில் இருந்தது. மேலும், பாக்தாதின் வடக்கே சமர்ரா என்னும் புதிய நகரத்தை உருவாக்கினார்கள். அப்பாஸிட்கள் நீண்ட கால பெர்ஷிய நிர் வாகத்திறனையே பாக்தாதில் கையாண்டார்கள். பெர்ஷிய முஸ்லீம்களும் அரபு முஸ்லீம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர்.
                                                               இஸ்லாம் வெகு வேகமாக உலகில் சர்வதேச மதமாகப் பரவிக்கொண்டிருந்தது. மெஸோபொடாமியா மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் புரா தன நகர அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டிருந்தது. முதல் முந்நூறு ஆண்டுகால ஆட்சி அப்பாஸிட்களின் ஆட்சி இஸ்லாமிய உலகின் பொற்காலமாக விளங்கி யது. பாக்தாதும், சமர்ராவும் வாணிபத்திலும், கலையிலும் சிறந்து விளங்கின. புதிய தொழில்நுட்பங்களும், நவீன செயல்முறைகளும் இவர்களின் ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்டன. முஸ்லீம்களும், முஸ்லீமல்லாதவர்களும் உலகின் சிறந்த புத்தகங்களை அரபு மொழியில் மொழி பெயர்த்தனர். பல அரிய கலைப் படைப்புகள் அரபு, பெர்ஷிய, துருக்கி, ஹீப்ரு மற்றும் லத்தீன் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. இதனால் ரோம, இந்தியா, சீனா, எகிப்து, வடஆப்பி ரிக்கா மற்றும் கிரேக்கர்களின் பல அரிய புராதனப் படைப்புகள் அரபுக்களிடம் சென்றடைந்தது. கலீஃபா ஹாருன் அல் ரஷீத் அவர்களின் ஆட்சியிலும், பின் வந்த கலீஃபாக்களின் ஆட்சியிலும் திறமையான சாதனைகள் நிகழ்ந்தன. அப் பாஸிய ஆட்சியின் கீழிருந்த விஞ்ஞானிகள் அரிய பல இஸ்லாமிய அறிவியல் படைப்புகளை மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு மாற்றினார்கள். இன்றியமை யாத உலகப்புகழ் பெற்ற ‘அல் ஜீப்ரா’ என்னும் கணிதவியல் முஹம்மது இப்ன் மூஸா அல் க்வாரிஸ்மி என்பவரால் படைக்கப்பட்டது தான். மேலும் இவர் அரபிய, இந்திய எண் வடிவத்தையும் உண்டாக்கினார். இப்ன் ஹைதம் என்பவர் விஞ்ஞானத்தின் ஒளியியலுக்குரிய அரிய கண்டுபிடிப்பான உள்வாங்கி இயங்கும் ஆற்றலை 1021 ல் கண்டுபிடித்தார். மருத்துவதுறையிலும் அப்பாஸிய காலம் சிற ந்து விளங்கியது. பெர்ஷிய விஞ்ஞானி இப்ன் சினா(AVICENNA) வின் உடற்கூறு மற்றும் நோய் தோன்றும் விதம் குறித்த கண்டுபிடிப்பு இன்றளவும் தொடரப்படு கிறது. இப்ன் சினா எழுதிய ‘தி கேனன் ஆஃப் மெடிசின்’ மற்றும் ‘தி புக் ஆஃப் ஹீலிங்க்’ என்ற மருத்துவ சம்பந்தமான தகவல்களஞ்சியத்தைத் தொடாமல் யாரும் மருத்துவ ஆராய்ச்சியே செய்யமுடியாது. இவரின் பல அரிய படைப்புகள் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்படி மருத்துவ ஆராய்சிக்கு பயன்பட்டது. வியப் பான தகவல் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே பாக்தாத் நகரத்தில் 800 க்கும் மேற் பட்ட மருத்துவர்கள் இருந்தார்கள். தட்டம்மை மற்றும் சின்னம்மை நோயின் அறி குறிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
                                   வானவியலில் பூமியின் மிகத்துல்லியமான மைய அளவைக் குறித்ததில் அல் பத்தானி என்ற இஸ்லாமிய விஞ்ஞானி முன்னோடி யாகத் திகழ்ந்தார். இந்த கண்டுபிடிப்பை மேலும் விரிவாக்க ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். அதேபோல் திரவஆராய்ச்சியில் ஜாபிர் இப்ன் ஹய்யான் (GEBER) முன்னோடியாக இருந்து பல திரவகலப்புகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் திரவ வடிகட்டுதல் ஆராய்ச்சியில் பலவற்றைக் கண்டுபிடித்து ஐரோப்பா வில் பரப்பினார். கற்பனைக் கதைகளில் உலகப்புகழ் பெற்ற “ஆயிரத்தோரு அரபு இரவுகள்’ (THE BOOK OF ONE THOUSAND AND ONE NIGHTS) படைக்கப்பட்டதும் இந்த கால கட்டத்தில் தான். இந்திய மூலக்கருவில், பெர்ஷிய நடையையும் கலந்து, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா கதைகளை இணைத்து புதிய வடிவில் அனைவரையும் படிக்க படிக்க கவர்ந்திழுத்தது இதன் சிறப்பு. இது பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பி த்து பதினாலாம் நூற்றாண்டில் முடிவுற்றது. இந்த கதைகளில் எண்களும், கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் அண்டோய்னி கல்லண்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மேற்கத்திய நாடுகளில் பிரபல்யப்படுத்தினர். அலாவுத்தீன், சிந்துபாத் மற்றும் அலிபாபா கதா பாத்திரங்கள் மேற்கத்திய கலைகளில் கையாளப்பட்டன.  
                                    இன்னுமொரு அரபுக் காதல் கவிதைக்களஞ்சியம் ‘லைலா, மஜ்னூன்’ ஆகும். இறுதியில் சோகம் ததும்பும் இது ஈரானிய, பெர்ஷிய, அஜர்பைஜான், துருக்கிய மொழிகளில் மேன்மைப்படுத்தப்பட்டது. இது ஏழாம் நூற்றாண்டில் உமய்யாத்களின் ஆட்சியின்போதே எழுதப்பட்டது. இதன் தழுவல் தான் மேற்கத்தியரின் ‘ரோமியோ ஜூலியட்’ ஆனது. ஒன்பதாம் நூற்றாண்டின் அரபுக் கவிஞர்கள் அல் முதன்னபி, அபு தம்மாம் மற்றும் அபு நுவாஸ் ஆகியோர் பாக்தாதில் கலீஃபாக்களின் அரண்மனைக்கு சென்று வருபவர்களாக இருந்தார் கள். அப்பாஸிட் காலத்தில் தத்துவம் இஸ்லாத்துடன் இணைந்து கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. சிந்தனையாளர்களான அல் கிண்டி, அல ஃபராபி, அல் ஜாஹிஸ், இப்ன் அல் ஹைதம் மற்றும் அவிசின்னா ஆகியவர்களின் தத்துவங் கள் புகழ்வாய்ந்தவை. எட்டாம் நூற்றாண்டுகளின் இறுதியில் சீனாவின் காகித உற்பத்தி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அறிமுகமானது. அதை பெரிதும் வர வேற்று காகித ஆலையை உருவாக்கி இஸ்லாமிய ஆட்சிதான் பத்தாம் நூற்றா ண்டுகளில் அதை ஸ்பெயின் வழியாக ஐரோப்பா கொண்டுசென்று இன்று உலகம் முழுவதும் இன்றியமையாத நிலைக்கு இட்டுச் சென்றது. அதேபோன்று வெடி மருந்து தயாரிப்பு நுட்பமும் சீனாவின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு வந்து பொட்டாசியம் நைட்ரேட்டுடன் இணைத்து வெடிமருந்து துகள்களை தயாரித்து உலகம் முழுவதும் பரவலாக்கினார்கள்.
                                     அப்போது புதிய முறையாக இயந்திரத்தறியில் நூல் உற்பத்தி செய்யப்பட்டும், ஐரோப்பியர்களுடன் இணைந்து அல் அண்டலூஸ் வழியாக பாதாம், சிட்ரஸ் கனிவகைகளை வரவழைத்து சர்க்கரை தயாரிக்கப்பட் டதும் இஸ்லாமிய ஆட்சியில் தான். கடற்பயணத்திற்கென வழிகாட்டும் வரை படம் தயாரித்தது. முதன்முதலில் வியாபாரக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வரும் வரை இந்தியப் பெருங்கட லில் இஸ்லாமியர்களின் கப்பல்களே கோலோச்சின. இதற்காக மெடிட்டரேனியன் கடலில் இணைக்கும் வகையில் கடல்வழிகளை அமைத்து வெனிஸ், ஜினோவா மற்றும் கேடலோனியா போன்ற ஐரோப்பிய நகரங்களுடன் வாணிபம் செய்தார் கள். இந்த கடல் வாணிபத்திற்கு ஹோர்முஸ் துறைமுகம் தளமாக இருந்தது. கடல்வழியில் சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே மத்திய ஆசியாவைக் கடக்க பயன்பட்ட ‘சில்க் ரோட்’ என்னும் கடல்வழி முஸ்லீம் பேரரசில் தான் இருந்தது.
                                         இன்றைய உலகத்தின் தொழிற்சாலைப் பயன் பாட்டுக்கான பலவற்றை அன்றே இஸ்லாமிய பொறியாளர்கள் உருவாக்கி இருந் தார்கள். விண்ட் பவுடர், டை டல் பவுடர், ஹைட்ரோ பவுடர் போன்றவற்றை கண்டுபிடித்தார்கள். முக்கியமாக பெட்ரோலிலிருந்து மண்னெண்ணை வடிகட் டும் நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். ஏழாம் நூற்றாண்டிலேயே நாட்டின் தொழிற் கூடங்களில் வாட்டர் மில்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண் டுகளில் ஹரிஸாண்டல் வீல், வர்டிகல் வீல் போன்றவற்றையும் பயன்படுத்தி முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போரின் போதே அல் அண்ட லூஸ், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல ஆலைகளை நிர்வகித்திருந்தார்கள். அவைகளில் விவசாயத்திற்கும், தொழிற் கூடங்களுக்கும் தேவையானவற்றைத் தயாரித்தார்கள். மேலும் பழங்காலத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட வேலைகளுக்கு இஸ்லாமிய பொறியாளர்கள் பல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்று கண்டுபிடித்து அணைகளு க்கு பயன்படுத்தி இருந்தார்கள். பல தொழிற்சாலைக்கு பயன்படும் கண்டுபிடிப்பு களை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியதும் இஸ்லாமியர்கள் தான். துணி, சர்க் கரை, கயிறு தயாரித்தல், தரைவிரிப்பு, சில்க் மற்றும் காகித ஆலைகளை முதல் முதலில் பயன்படுத்தினார்கள். வேதியியல் மற்றும் தொழிற்சாலைக்கான ஆயுதங் கள் செய்யும் நுட்பத்தை பனிரெண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப் படுத்தினார்கள்.
                                    அப்பாஸிட்கள் தங்கள் பேரரசில் வசித்த முஸ்லீம் அல்லாதவர்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். தினசரி வாழ்க் கையில் அனைவரும் அரபி மொழி பேசும் அளவுக்கு சுமூக உறவு இருந்தது. இது ஒருவருக்கொருவர் அறிவாற்றலைப் பறிமாறிக்கொள்ள பயன்பட்டது. பெரும் பான்மையான அறிவுத்திறமையும், தொழில்நுட்பமும் சிலுவைப்போரின் போது ஐரோப்பாவில் கொள்ளையடித்துச் செல்லப்பட்டது. அப்பாஸிட்களின் ஆட்சி 1258 ல் மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பால் முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை: