மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 6



பாகம் : 6
ஜெருசலத்தின் ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் எகிப்திலும், ஹரம் மற்றும் பானியஸை வெல்வதில் தீவிரம் காட்டிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நூருத்தீன் ஏறக்குறைய எகிப்தை வென்றார். இதன் விளைவாக அல் மாரிக்குக்கு அச்சம் ஏற்பட்டு தளபதி ஷிர்குஹுடன் போர் ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரு படைகளும் எகிப்திலிருந்து விலக வேண்டும் என்று முடிவாகியது. இதனால் நூருத்தீனுக்கும் சிலுவைப் போராளிகளுக்குமான முதல் கட்ட போர் (ஃப்ராங்க்ஸ்) எகிப்தில் தவிர்க்கப்பட்டது. ஃப்ராங்க்சின் சிலுவைப் போராளிகளுக்கும், சிரியாவை ஆண்ட நூருத்தீனுக்கும் நிலையில்லாமல் ஷியா பிரிவினர் ஆண்டு வரும் எகிப்தைப் பிடிப்பதில் ஆர்வமாகியது.
இந்த ஆர்வம் ஷிர்குஹுக்கு எகிப்தில் நுழைவதற்கு வாய்ப்பாக வும், சிலுவைப் போராளிகளை எதிர்க்க எகிப்து சிறந்த இடம் என்றும் துல்லியமாக அறிந்து கொண்டார். இதை நூருத்தீனிடம் எளிமையாக்கி விளக்கி எகிப்தை கைப்பற்ற அவரின் அனுமதி வேண்டினார். ஷிர்குஹின் வேண்டுதலை ஏற்று நூருத்தீன் இரண்டாம் முறையாக 562 A.H. ல் ஷிர்குஹையும், ஸலாவுத்தீனை யும் மீண்டும் எகிப்துக்கு அனுப்பினார்.
சிரியப் படைகள் எகிப்தை முன்னோக்குவதை அறிந்த மந்திரி ஷவீர் சிலுவைப் போராளியின் உதவியை நாட அவர்கள் சேர்ந்து போரிட ஒப்புக்கொண்டார்கள். இரு இராணுவமும் மேற்புர எகிப்தில் ‘முனியா’ என்ற இடத்தில் சந்தித்தன. இதில் ஷிர்குஹ், ஸலாவுத்தீன் தலைமையில் சிரியா இராணுவம் வெற்றி பெற்றது. இப்போரில் ஸலாவுதீனின் தன்னிகரற்ற வலிமையும், வீரமும் வெளிப்பட்டது. உடன் சிரிய இராணுவம் தடையின்றி வடக்கையும், துறைமுக நகரமான அலக்ஸாண்டிரியாவையும் வென்றது. ஷிர்குஹ் அலெக்ஸாண்டிரியாவின் ஆட்சியாளராக ஸலாவுத் தீனை நியமித்தார். இதுவே ஸலாவுத்தீன் முதன்முறையாக பொறுப்பான ஆட்சியமைக்கும் தகுதியை பெற்றார். விதி அவருக்கு  வீரத்தையும், திறமையையும், புத்திக்கூர்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்தது. ஷிர்குஹ் அல் ஃபுஸ்தத் மற்றும் கெய்ரோவில் கவனத்தை திசை திருப்பிய போது, சிலுவைப் போராளிகள் பைசாந்திய இராணுவ உதவியுடன் அலெக்ஸாண்டிரியாவை கடல் மற்றும் நில வழியாக முற்றுகையிட்டனர்.

கருத்துகள் இல்லை: