மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸோரோஸ்ட்ரியன்கள்



                                     ஈரானியர்களால் ஸோரோஸ்டர் (ஸரதுஸ்த்ரா என்ற கிரேக்க பெயரைத் தாங்கிய தூதர் ஒருவர் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தார். அவர் கிழக்குப் பகுதியில் கஸ்பியன் கடற்கரைப் பகுதி யில் வசித்ததாகக் கூறப்படுகிறது. இவரின் போதனைகளைப் பின்பற்றியவர்கள் “ஸோரோஸ்டரியன்கள்” எனப்பட்டனர். ஸோரோஸ்டரின் போதனையாவது, புராதன இந்திய ஈரானிய மதத்திலுள்ள பல கடவுளை மறுத்து ஒரே கடவுள் “அஹுரா மஸ்தா” என்பது தான். ஸோரோஸ்டரின் அஹுரா மஸ்தாவின் கருத்து களடங்கிய கதாஸின் ஆரம்ப பகுதியான “அவிஸ்டா” ஸோரோஸ்டர்களின் புனித நூலாகும்.
                                        அஹுரா மஸ்தா இரு ஆவிகளை உருவாக்கி தன் இரு மகன்களைப் படைத்தார். ஒன்று ஸ்பெண்டா மயின்யூ உண்மை, வெளிச் சம் மற்றும் உயிரானது. இன்னொன்று அங்க்ரா மயின்யூ சூது, இருட்டு மற்றும் மர ணமானது. ஸோரோஸ்டரின் மரணத்திற்குப் பிறகு, ஸோரோஸ்டரியனிஸம் ஒரு மதமாக மாறியது. அஹுரா மஸ்தா (இது பின்னாளில் “ஓர்மஸ்த்” என்றானது) தானே தன் நல்ல மகனைக் கைப்பற்றி, தீய மகனான அங்க்ரா மயின்யூவை அழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். மனித சரித்திரத்தில் ஸோரோஸ் டரியன்களின் நம்பிக்கையானது எதிரெதிராக உள்ள ஸ்பெண்டா மயின்யூ மற்றும் அங்க்ரா மயின்யூவின் நல்லது கெட்டது, வெளிச்சம் இருட்டு, உயிர் மரணம் இவைகளின் சிக்கல்களை நீக்கி வாழ்வது. ஸோரோஸ்டரின் தத்துவம் இவை களை எல்லாம் விட்டு இந்தோ ஈரானியர்கள் தீயினால் தியாகம் செய்து வாழ வேண்டும். ஆகவே நெருப்பு மட்டுமே ஸோரோஸ்டரியன்களின் தியாகத்தின் அடையாளம்.
                                     இந்த ஸோரோஸ்டரியனிஸம் ஈரான் முழுவதும் எப்படிப் பரவி “அக்கேமேனிய” பேரரசின் ஆட்சி மதமானது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், முதலாம் தரியஸ் என்பவர் தனது பதவியேற்பின் போது “ கடவுள் அஹுரா மஸ்தாவின் அருளாள் நான் மன்னனாக இருக்கிறேன். இதை அவரே எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார். பக்திமிகுந்த மகி (மாஜிக் என்றும் இருக்கிறது) என்னும் பகுதி ஸோரோஸ்டரியத்துடன் இணைந்து ஆரம்பகால ஈரானிய மதத்தில் ஒத்துழைத்திருக்கிறது. பெர்ஷியர்கள் மகிக்கு உயரிய அந்தஸ்தைக் கொடுத்தனர். மகி கிழக்குப் பகுதியியை ஆளப் பிறந்தவர்கள் என்றனர். அடுத்த ஐந்நூறு ஆண்டுகள் கழித்து மகிக்கள் கிறிஸ்து வத்திற்கு பலமும், அதிகாரமும் கொடுத்தனர் என்றனர். மேலும், கிறிஸ்துவ கதை யில் வரும் மகி பெர்ஷியாவை ஆண்ட நாடோடி பேரரசான பார்தியனிலிருந்து குழந்தை ஏசுவுக்கு பரிசு கொண்டு தந்தது. ஆனால், ஸோரோஸ்டரியனிஸம் கிரிஸின் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் கிரீஸை வெற்றி கொண்ட சமயத்தில் ஸோரோஸ்டரியனிஸம் கிரீஸில் இருந்ததாக ஒரு வரலாறு உள்ளது.        

கருத்துகள் இல்லை: