மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 7



பாகம் :7
அலெக்ஸாண்டிரியாவின் மக்கள் எதிரிகளின் சண்டையிலிருந்து ஏறக்குறைய தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைய தயாராயிருந் தனர். ஆனால் ஸலாவுத்தீன் ஷிர்குஹ் கெய்ரோவிலிருந்து வந்து தன்னுடன் இணையும் வரை தாக்குப் பிடித்து போரை நீட்டித்தார். விளைவு இரு படைகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு எகிப்தை விட்டு விலகுவதாக முடிவாகியது.
ஆனால் ஜெருசலத்தின் ஆட்சியாளர் அல் மாரிக் ஒப்பந்தத்தை முறித்து குறிப்பிட்ட எண்ணிக்கையினாலான படையை வாபஸ் வாங்காமல் சிரியப் படைகள் வெளியேறியவுடன் எகிப்தை ஆக்கிரமிக்க உத்தேசித்தார். அதுபோலவே சிரிய படைகள் வெளியேறியவுடன் விரைந்து தயாராகி பெரும்பான்மையான மக்களைக் கொன்று புல்பைஸ் என்னும் நகரை கைப்பற்றினார். பின் அல் ஃபுஸ்தத் நகரை ஆக்கிரமிக்க முன்னோக்கினார். இது கூட்டாளி ஷவீருக்கு தெரிய வந்ததால் அவர் அல் ஃபுஸ்தத்தை நாற்பத்தி நான்கு நாட்கள் தீ மூட்டி எறியச் செய்தார். இதனால் சிலுவைப் போராளிகள் மாற்றாக கெய்ரோவை முற்றுகையிட்டனர். ஷவீர் மீண்டும் நூருத்தீனின் உதவியை நாட சிரிய இராணுவம் தன்னுடன் இணையும் வரை ஷவீர் சிலுவைப் போராளிகளுடன் பேச்சுவார்த்தையை நீட்டித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நூருத்தீன் மீண்டும் மூன்றாம் முறையாக ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் அனுப்பி எகிப்தை கைப்பற்றினார். அவர்கள் எகிப்து சென்று ஷவிர் இராணுவத்துடன் இணைந்தனர். இதனால் சிலுவைப் போராளிகள் சண்டையின்றி வெளியேறினர். சித்தப்பா ஷிர்குஹ் கெய்ரோவில் நுழைந்தவுடன் மக்கள் அதை நல்ல சகுணமாக நினைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஃபாத்திமிட் கலிஃபா அல் அதித் தாராள மனதுடன்  ஷிர்குஹை வரவேற்றுக் கொண்டார். 564 A.H. ல் ஷவீர் அஸ் ஸாதி சதி செய்து கொலை செய்யப்பட்டார். அல் அதித் சித்தப்பா ஷிர்குஹை ஃபாத்திமிட் கலீஃபாவாக பதவியில் அமர்த்தினார். ஆனால், இரண்டு மாதத்திலேயே அவர் மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை: