மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

செல்ஜுக்குகள் வரலாறு 4



 சரியாக சூடான வெயில் காலமான ஆகஸ்டில் செல்ஜுக்குகள் அமஸ்யா என்ற இடத்தில் லம்பார்ட்சை எதிர்த்து போரிட்டனர். அவர்களின் தானியக்கிடங்கை குறிவைத்து தாக்கி சிலுவைப்போராளிகளை தவிக்கவிட்டனர். அடுத்தடுத்து செல்ஜுக்குகள் அமஸ்யா, எரிக்லி ஆகிய பகுதி களை மீண்டும் திரும்ப கைப்பற்றி மத்திய அனடோலியாவை தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம் க்ரேட் செல்ஜுக்குகள் இதுவரை கூட்டா ளியாக இருந்த துருக்கி செல்ஜுக் குகளுக்கு மேலும் கிழக்கு பகுதியில் மலத்யா வையோ, ஈராக்கின் மோஸுல் நகரையோ நோக்கி முன்னேற எதிர்ப்பு தெரிவித் தனர். இதனால் கிலிக் அர்சலனின் எல்லை பரப்பும் எண்ணம் பலனற்று போனது.
                             கிலிக் அர்சலனுக்குப் பிறகு வந்த முதலாம் மெலிக் ஷா என்பவர் தனது சகோதரர் முதலாம் மெசுத்துடன் சேர்ந்து 1116 ல் பலமுறை பைஸாந்தியர்களை எதிர்த்து தோற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் விடாமல் கிரேட் செல்ஜுக்குகளுடன் கூட்டு சேர்ந்து (இதற்காக சகோதரர் மெசுத்துக்கு க்ரேட் செல்ஜுக்கின் இளவரசியை திருமணம் செய்து வைத்தார்.) எதிர்த்தார். 1134 ல் க்ரேட் செல்ஜுக்கின் மன்னர் இறந்தவுடன், சூழ்நிலை மெசுத்துக்கு சாதகமாக இருக்க அவர் இரண்டாம் சிலுவைப்போராளிகளுடன் போரிட்டு எஸ்கிசெஹிர், டெனிஸ்லி, அனடோலியா ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். இந்த செல்ஜுக் போரின் இடையூறாலேயே ஐரோப்பியர்களுக்கு இரண்டாம் சிலுவைப்போர் பெரும் தோல்வியைத்தந்தது. க்ரேட் செல்ஜுக்குகளின் வெகு தொலைவிலிருந்த பிரதேசங்களை எல்லாம் மெசுத் வென்றெடுத்தார். இவருடைய ஆட்சியில் கொன் யாவில் கட்டப்பட்ட அலாவுத்தீன் மசூதி (1153) செல்ஜுக்குகளின் கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது.
                               மெலிக் ஷாவுக்குப் பிறகு, இரண்டாம் கிலிக் அர்சலன் ஆட்சிக்கு வந்தார். இவர் சிலுவைப்போராளிகள், பைஸாந்தியமன்னர் மானு வேல்  க்ரேட் செல்ஜுக்குகள் மற்றும் இவர்களுடன் கூட்டு வைத்திருந்த சொந்த சகோத ரர் ஷஹின் ஷா ஆகிய அனைவருடன் போரிட்டார். சகோதரருடனும், மற்ற செல்ஜுக்குடன் நடந்தபோரில் வெற்றிபெற்றார். தோற்ற இருவரும் மீண்டும் இரண்டாம் கிலிக் அர்சலனுடன் மவுண்ட் சுல்தான் தாக் என்ற இடத்தில் இறுதி யாக போரிட்டு ஆட்சியை இழந்தார்கள். போரில் கைப்பற்றப்பட்ட செல்வத்தை வைத்து இரண்டாம் கிலிக் அர்சலன் கொன்யா நகரை வளப்படுத்தினார். பைஸாந் தியர்களின் கையை விட்டு அனடோலியா முற்றிலும் நழுவி செல்ஜுக்குகள் வசமானது. ஐரோப்பியர்கள் அனடோலியாவை துருக்கி என்று அழைக்க ஆரம்பித் தார்கள். செல்ஜுக்குகளும் துருக்கியில் பொருளாதார நடிவடிக்கைகளை மேற் கொண்டார்கள். கட்டிடங்கள், வியாபாரம், துறைமுகம், மதரஸா என்னும் இஸ்லா மிய கல்விக்கூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்தார்கள். முக்கியமான முன்னே ற்றங்களை துருக்கி நாட்டில் உண்டாக்கினார்கள். விஞ்ஞான ஆராய்ச்சி முன்னே ற்றத்திற்கு பெரும் தூண்டுகோலாய் இருந்தார்கள்.
                              1190 ல் மூன்றாவது சிலுவைப்போரின் போது கொன்யா நகரத்தை சிலுவைப்போராளிகள் கைப்பற்றினார்கள்.  இரண்டாம் கிலிக் அர்சல னுக்கு எழுபது வயது ஆனபோது அவர் மிகவும் தளர்ந்துவிட்டார், அவரின் ஒன்பது பிள்ளைகளும், ஒரு சகோதரரும், சகோதரர் மகனும் தங்கள் இஷ்டம் போல் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டார்கள். கொன்யா மட்டும் இரண்டாம் கிலிக் அர்சலனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரின் மகன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனி ஆட்சியாளர்கள் போல் செயல்பட்டனர். வேடிக்கை என்னவென் றால் தனித்தனி நாணயங்கள் கூட வெளியிட்டுக் கொண்டார்கள். 1192 ல் தனது 77 வது வயதில் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்தார். அவரின் மகன்கள் ஏறக்குறைய பனிரெண்டு ஆண்டுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அந்த பேரரசின் ஸ்திரத்தன்மையைக் குலைத்தன. 1190 ல் மூன்றாம் சிலுவைப் போரின்போது ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா ஜெருசலம் போக கிலிக் அர்சலனிடம் அவர் இறப்பதற்கு முன், தென் துருக்கி வழியாக கடந்து செல்ல அனுமதி கேட்டுப் பெற்றார். அந்த அனுமதியுடன் அவர் தென் துருக்கியைக் கடக்கும் போது, இரண்டாம் கிலிக் அர்சலனும், அவர் மகன்களும் திடீரென்று எதிர்பாராத விதமாக ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொ ஸ்ஸாவின் படையைத் தாக்கினர். இதில் நிலைகுலைந்து ஃப்ரெடெரிக், சிலிஃப்கி என்ற இடத்தில் கோக் ஆற்றின் வெள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்துபோனார். இது அவர்களுக்கும் சிலுவைப்போராளிகளுக்குமிடையில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.  1192 ல் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடை ந்து கொன்யாவில் செல்ஜுக் சுல்தான்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட் டார்.
                                    இரண்டாம் கிலிக் அர்சலனின் மரணத்திற்குப் பின் அவர் மகன்களின் பதவிச் சண்டையில் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்ற மகன் மன்னரானார். அவரால் நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியவில்லை. அடுத்த சகோதரர் இரண்டாம் ரூக்னத்தீன் விரைவில் அவரை அகற்றி விட்டு ஆட்சியில் அமர்ந்தார். அமர்ந்த கையோடு கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், அவர் மகன்கள் இஸ் ஸத்தீன் கெயுஸ்ரேவ், அலாத்தீன் கெயுஸ்ரேவ் ஆகியோரை பைஸாந்திய பேரரசு க்கு நாடு கடத்தினார். இரண்டாம் ரூக்னத்தீன் மலத்யா, அர்டுகிட்ச் மற்றும் ஹர் புத் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். எர்ஸுருமின் சால்துகிட் தலைமையக த்தை செல்ஜுக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மிகுந்த சிரமத்தில் ஆட்சி செய்த இவர் 1204 ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் மீண்டும் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் ஆட்சியைக் கைப்பற்றினார்.  அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று கான்ஸ்டாண்டிநோபிள் நான்காம் சிலுவைப்போரா ளிகள் வசம் வீழ்ந்தது. இரண்டாவது மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் சூறா வளி போல் தனது முதல் படையெடுப்பை நடத்தினார்.
                                முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் பதவியேற்றதும் லத்தீன் பகுதி கான்ஸ்டாண்டிநோபிள் இவர் வசம் வந்து மீண்டும் மத்திய அன டோலியா செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்தது. தற்போது செல்ஜுக்குகளின் மாகாணம் முன்பை விட இருபுறமும் கடல் அமைந்து பலமானது. இது முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவின் முக்கியமான திட்டமாக கருதப்பட்டது. அடுத்து வெனிஷிய அல்டோப்ரந்தினியிடமிருந்து புத்திசாலித்தனமாக சண்டையிட்டு 1207 ல் மெடிட்டரேனியன் துறைமுக நகரமான அண்டால்யாவைக் கைப்பற்றினார். தனது பொழுதுபோக்கை பெரும்பாலும் பைஸாந்திய அரண்மனையில் தன் மகன் இஸ்ஸத்தீன் கெய்கவுஸ், அலாவுத்தீனுடன் சென்று கழிப்பார். மேற்கத்திய கிறிஸ் தவ நட்பை பலவகையிலும் விரும்பினார். இது செல்ஜுக்குகளின் மேற்குப்புற வாணிபத்திற்கு பெரிதும் உதவியது. அண்டால்யாவைக் கைப்பற்றிய பிறகு, செல் ஜுக்குகளுக்கும், வெனிஷியர்களுக்கும் இடையில் முதல் வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது.

கருத்துகள் இல்லை: