மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

செல்ஜுக்குகள் வரலாறு 3



ரோம செல்ஜுக்குகள்
                     சிரிய செல்ஜுக்குகள், கோரசான் செல்ஜுக்குகள், கிர்மான் செர் ஜுக்குகள், அனடோலியா செல்ஜுக்குகள் என்று சிறிய பகுதிகளின் ஆட்சியாளர் களாகப் பிரிந்து போன செல்ஜுக்குகளில் அனடோலியா செல்ஜுக்குகள் திறமை யாக செயல்பட்டு மீண்டும் சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்தினார்கள். இவர்களை சரித்திரம் மைனர் ஆசியாவிலிருந்து வந்த செல்ஜுக்குகள், ரோமின் செல்ஜுக்கு கள், துருக்கிய செர்ஜுக்குகள் என்றும் குறிப்பிடுகிறது. இவர்களை க்ரேட் துருக்கி கள் என்றும் அழைக்கிறார்கள். துருக்கிய செர்ஜுக்குகள் 1071 ல் பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன் டியாகினிஸ் என்பவருடன் வான் ஏரியிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள மன்ஸிகர்ட் என்ற கோட்டையில் போர் நடத்தினர். இந்த போர் மிகவும் தந்திரமாக நடத்தப்பட்டது நிறைய கொள்ளைகளும், அழிவுகளையும் நிகழ்த்தின. துருக்கிய செர்ஜுக்குகள் அனடோலியாவின் அந்த பகுதியின் வாழ் வாதாரமான கால்நடைகளை கொள்ளையடித்துக் கொண்டு தங்கள் வட ஈரானி யப்பகுதிக்கு திரும்பினர். துருக்கிய செர்ஜுக்குகள் மன்ஸிகர்ட் போரில் வெற்றி யடைந்தனர். மேலும் வடக்கு மேற்கு பகுதிகளில் முன்னேறி பெரும் பண்ணை யாளர்களாகவும், கால்நடை வளர்ப்பாளர்களாகவுமாகி ஆதாயம் பெற்றார்கள். இவர்களின் மத்திய அண்டோலியா பகுதிதான் தற்போதைய துருக்கி நாடானது. இவர்கள் இஸ்லாமிய மதத்தை துருக்கியில் பரப்பினார்கள்.
                         அந்த நேரத்தில் அனடோலியாவைச் சுற்றி அதிக அளவில் லத்தீன் மொழி பேசுபவர்கள், பைஸாந்தியர்கள், வெனிஷியன் மற்றும் ஜினோயெ ஸின்களின் காலனிகள், மெடிட்டரேனியன் பகுதிகளில் செயிண்ட் ஜானின் மன்னர் கள், மேற்குப்புறத்தில் க்ரீக் இனத்தவர்கள் மற்றும் அர்மேனியன்கள், ஜார்ஜியன் கள் கிழக்கிலுமான அரசியல் சூழ்நிலை இருந்தது. 1064 ல் சுலைமான் இப்ன் குதல்மிஸ் என்பவர் அல்ப் அர்சலனை எதிர்த்து புரட்சி செய்தார். ஆனால் அது தோல்வியடைந்து அவர் பெர்ஷியாவிலிருந்து அனடோலியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு அருமையான வாய்ப்பு அமைந்து அவரும் அவர் மகனும் துருக்கி பழங்குடியின தலைவர்களாக அறியப்பட்டு பைஸாந்தியர்களை எதிர்த் துப் போரிட்டு கிழக்கு அனடோலியாவை கைப்பற்றினார்கள். மேலும் மேற்கில் முன்னேறி ஆண்டியாக், கொன்யா (கென்யா அல்ல) பகுதிகளை வெற்றி கொண் டார்கள். இவர்களில் சிலர் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தில் பல பகுதிகளில் பணியில் இருந்தார்கள். அங்கே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அந்த பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் எதிராக இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டினார்கள். 1081 ல் முதலாம் அலெக்ஸியஸ் என்பவர் பைஸாந்திய சாம் ராஜ்ஜியத்தின் மன்னரான போது சுலைமான் இப்ன் குதல்மிஸ் உடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அதாவது சுலைமான் இப்ன் குதல்மிஸ் பைஸாந்தியர்களின் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிளுக்கு அருகேயுள்ள இஸ்னிக் நகரில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவா னது. அதே நேரத்தில் இன்னொரு பிரிவு செல்ஜுக்குகள் பைஸாந்தியர்களுக்கு சொந்தமான சிவாஸ், அமஸ்யா மற்றும் அர்மேனியாவை கைப்பற்றி தென் அனடோலியாவில் சிலிஷியா என்ற பகுதியை தங்கள் தனி மாகாணமாக அறிவித்துக்கொண்டார்கள். அவர்களின் இந்த அதிகாரத்திற்கு சுலைமான் இப்ன் குதல்மிஸ் ஆதரவளித்தார். அதே நேரத்தில் அல்ப் அர்சலன் வழியில் வந்த க்ரேட் செல்ஜுக்குகளுக்கு தான் கட்டுப்பட மாட்டேன் என்றார். 1086 ல் சுலைமான் இப்ன் குதல்மிஸ் ஆண்டியாக்கைக் கைப்பற்றினார். அலொப்போவை வெல்ல பலமுறை முயற்சி செய்தார். அந்த முயற்சியில் இறந்து போனார். அவரின் மகன் கிலிக் அர்சலன் என்பவரை க்ரேட் செல்ஜுக்கின் ஆட்சியாளர் மெலிக் ஷா கைது செய்து ஈராக்குக்கு கொண்டு சென்றார்.
                                1092 ல் இளம்வயது கிலிக் அர்சலன் மெலிக் ஷாவால் விடுதலை செய்யப்பட்டார். அவர் திரும்பி இஸ்னிக் வந்து க்ரேட் செல்ஜுக்குகளை ஒன்றும் செய்ய முடியாமல் போனார். ஆனால் அதேசமயம் அவர்கள் ஐரோப்பிய சிலுவைப் போராளிகளுக்கு எதிராக போரிடும் வரை நிரந்தர எதிரியாக இருந் தார். 1096 ல் முதல் சிலுவைப்போராளிகள் பைஸாந்திய பேரரசர் அலெக்ஸி யஸை எதிர்த்து போரிட செல்லும் வழியில் மேற்கு அனடோலியா வந்தார்கள். அப்போது கிலிக் அர்சலன் எதிர்திசையில் கிழக்கில் மலட்யா என்ற இடத்தில் போரில் இருந்ததால் சிலுவைப் போராளிகள் தலைநகர் இஸ்னிக்கை கைப்பற்று வதை தடுக்க முடியவில்லை. கிலிக் அர்சலன் சிலுவைப்போராளிகளை எதிர்க்க க்ரேட் செல்ஜுக்குகளுடன் இணைந்து போரிட சம்மதித்தார். ஆனால் இணைந்த இரு செல்ஜுக் படைகளும் 1097 ஜூனில் டோரிலாயெம் என்ற இடத்தில் படு தோல்வி அடைந்தன. அதன் பிறகு செல்ஜுக்குகள் கொன்யாவை புதிய தலை நகரமாக ஆக்கிக்கொண்டனர். சிலுவைப்போராளிகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் அவர்கள் கொன்யாவையும் மேலும் எரிக்லி, கைசெரி ஆகிய இடங்களையும் செல்ஜுக்குகளிடமிருந்து வென்றார்கள். 75% சதவிகித நிலப்பரப்பு பைஸாந்தியர்களின் ஆளுமைக்கு சென்றுவிட்டது. ஜெரு சலத்தை நோக்கி செல்ல வேண்டிய சிலுவைப்போராளிகள் சில காலம் அனடோ லியாவிலிருந்து கொலைகளைச் செய்தும், கொள்ளை அடித்தும் அட்டூழியம் செய்து கொண்டு செல்ஜுக்குகளின் மேலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையைத் தடுத்து மத்திய கடலோரம் நோக்கி விரட்டினர். மேலும் சிலுவைப்போராளிகளை எதிர்க்க ஒன்று கூடிய க்ரேட் செல்ஜுக்குகளுட னான நட்பை பிளவு படுத்தினர். ஆனால் அவர்கள் சென்ற பிறகு மீண்டும் செல்ஜுக்குகள் நட்பு கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: