மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மருத்துவத்தின் வரலாறு 1



 இந்த கட்டுரை இறுதியில் எழுதப்பட்டுள்ள ஆதாரமான புத்தகங்களின் வாயிலாகவே எழுதப்படுகிறது. எதுவும் கூட்டப்பட வில்லை, குறைக்கப்படவில்லை. சில முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்கள் கூட பயன்பட்டிருக்கின்றன. அமெ ரிக்காவில் லூயிஸ்வில்லி பல்க லைக்கழகத்தில் பேராசிரியராக இரு க்கும் பி. சையத் பி.எச்.டி என்பவரின் ஆதார பூர்வமான திரட்டலின் பகு தியாகும். இந்த அளப்பறிய வரலாற்றுப் பணிக்காக அவருக்கு எனது சலாமையும், நன்றிகளையும் உங்களின் வாயிலாக தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
                                                    நபி (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு, இஸ்லாமியர்கள் வெறும் நிலப்பரப்புகளை மட்டும் வெல்லவில்லை. விஞ்சானத் துறையில் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளை கண்டுபிடித் து உலக சமுதாயத்திற்கு மாபெரும் சேவையை செய்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் மருத்துவஞானம் மேற்குலகை வியப்படைய வைத்தது. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இரு க்க ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவ மனைகள், மருத்துவர்கள், ஆராய்ச்சிகள் என்று பிரபலமாக இருந்தது. குறிப்பாக பாக்தாதின் பொது மருத்துவமனை நவீனமயமாக இருந்தது. நோயாளிகளின் அறையைச் சுற்றி நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந் தன. மனநோயாளிகள் அக்கரையுடன் சிகிச்சை பெற்றும், வலி நோயா ளிகள் இரவுகளில் கதையுடன் கூடிய மெல் லிய இசை முழங்கப்பட்டு கவனிக்கப்பட்டனர்.
                                       இளவரசர்களும், ஆண்டிகளும் சமமான சிகிச்சை பெற்றனர். மருத்துவத்துறையை பிரபல்யமாக்க சிகிச்சை முடிந்து செல்பவர்களு க்கு ஐந்து தங்க துண்டுகள் வழங்கப்பட்டன. பாரிஸ் மற் றும் பிரான்சு நகரங்கள் சேரும்சகதியுமாக இருக்க பாக்தாத், கெய்ரோ நகரங்களில் ஆண், பெண்களுக் கென தனித்தனியாக மருத்துவமனை கள் இருந்தன. மருத்துவமனைகள் மருந்தகம், நூலகம் இணைந்திரு ந்தன. உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவும் இருந்தது. புற நகர் பகுதிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நடமாடும் மருத்துவ மனைகள் கூட இருந்தன. மருந்தகங்கள் பதிவு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப் பட்டிருந்தன.
                                              நபி(ஸல்)கள் நாயகம் அவர்களை மைக்கேல் ஹார்ட் என்னும் யூத ஆசிரியர் (THE MOST INFLUENTIAL PERSONS IN HISTORY) உலகம் போற்றும் முதல் நூறு நபர்களில் முதல் நபராக தேர்வு செய்தி ருக்கிறார். உலகின் கடு மையான மக்களான அரபுக்களை பழுவாங்கு தல், உள்நாட்டுக் குழப்பம், போர் போன்ற பல பிண்ணனியில் வென்ற வர்கள். அப்போது இருபுறமும் பெர்ஷியா, பைஸாந்தியர்கள் என்ற இரு பிரமாண்டமான சாம்ராஜ்ஜியம் இருந்தது. இஸ்லாமிய சாம்ராஜ் ஜியம் அட்லாண்டிக் கடலிலிருந்து மேற்கிலும், சீனாவின் எல்லை வரை கிழக்கிலும் பரவிக்கொண்டிருந்தது. நபி(ஸல்)கள் நாயகம் இறப்பிற்கு 80 ஆண்டுகளுக்குப் பின் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் நுழைந்து 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். தாங்கள் வென்ற இடத்தில் எல்லாம் உலகின் மிகச் சிறந்த இஸ்லாமிய கலாச் சாரத்தை விதைத்தார்கள்.
                                           இஸ்லாமிய பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியதும் கலாச்சாரத்தை சார்ந்த ஈடற்ற மருத்துவமும் எதிரிகளால் அழிக்கப் பட்டன. 1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை தீயிட்டு அழித்தனர். அது சரித்திரத்தில் இன்றுவரை ஈடு செய்யமுடியாத இழப்பு. ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. பல ஆராய்ச்சிக் குறி ப்புகள், வரலாற்றுபதிவுகள் தீக்கிரையாகின. அதன்பிறகு, இஸ்லாமின் மீதுள்ள வெறுப்பால் ஸ்பானியார்டுகள் ஸ்பெயினில் மிகப்பெரிய அறிவுக்களஞ்சியங்களை அழித்தனர். இஸ்லாமிய பேரரசு 1000 ஆண் டுகளுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையும், அதி கப்படியான மக்களையும் ஆட்சி செய்த ஒரே பேரரசு. இந்த ஒன்றே மற்ற மதங்கள் இஸ்லா மின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு முக் கிய காரணமாக இருக்கிறது. குர் ஆனும், அதன் ஆராய்ச்சிகளும் இஸ் லாமியர்களுக்கு அளப்பறிய அறிவாற்றலை தந்தது. அதற்கு குர் ஆனே சாட்சியாகவும் இருக்கிறது. தானே மனிதனுக்கு அறிவூட்டுவதற்கு இறைவன் உத்திரவாதம் அளிக்கிறான்.
                                      இன்று குறிப்பாக மருத்துவத்தில் எந்த ஒரு கண்டு பிடிப்பும் மேற்கத்தியர்களாலும், யூதர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது போல் தான் சொல்லப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும், இதற்கு ஆரம்ப அடி பிடித்துக் கொடுத்தவர்கள் முஸ்லீம்கள். இது அவர் களுக்கும் தெரியும். உதாரணத் திற்கு பலர் தங்கள் திறமைக்கேற்ப ஆடைகளை வடிவமைத்து பெயர் பெற்றா லும், ஊசியும், நூலையும் ஆரம்பத்தில் கொடுத்தவரை மறக்க முடியாது. அப்படிதான் முஸ்லீம் கள் இந்த மனித இனத்திற்கு மருத்துவத்தைக் கொடுத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து கற்காத வரை உலகில் யாராலும் மருத்துவம் படிக்க முடியாது. இது மிகைப் படுத்திச் சொல்லப் படுவதல்ல. அப்பழுக்கற்ற உண்மை. யூத, கிறிஸ் தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். முஸ்லீம்கள் அறிவுத்தாகம் எடுத்து தேடினார்கள். மங்கோலியர்களா லும், ஸ்பானியார்டுகளாலும் அழிக்கப்பட்டது போக, பத்தாம் நூற்றாண்டில் கிரே க்க மருத்துவ குறி ப்புகள் டமாஸ்கஸ், கெய்ரோ மற் றும் பாக்தாத் நகரங்களுக்கு கொண் டு வரப்பட்டு அரபு மொழியில் ஆராய்ச்சிக்காக மொழி பெயர்க்கப்பட் டன.
                                               அப்போதைய உலகின் மருத்துவத்துறையில் பாக்தாத் தான் தலைமையகமாகத் திகழ்ந்தது. முஸ்லீம்கள் உலக மரு த்துவத் துறையில் ஒளியைப் பரப்பினார்கள். மருத்துவத்தைப் பற்றி கேம்ப்பெல் என்பவர், ”ஐரோப்பிய மருத்துவம் அரபுகளின் மூலம் மட் டுமல்ல அதன் கட்டமைப்பின் மீது தான் இருக்கிறது. அரபியர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் ஐரோப்பியர்களுக்கு முன்னோடிகள்” என்று புக ழ்ந்துள்ளார். இஸ்லாமிய மருத்துவம் மருத்துவமனை, நுண்ணணு, மருந்து, மயக்கமேற்றுதல், அறுவை சிகிச்சை, மருந்தகம், கண் மருத் துவம், மனநோய் போன்று அனைத்திலும் சிறந்து விளங்கி இருந்தது. மருத்துவமனை நிர்வாகமாகிய உள்நோயாளி, புறநோயாளி, அவர்க ளுக்கான நோயாளி மற்றும் நோயின் குறிப்புகள் போன்றவைகள் பிர மிக்கத்தக்க வகையில் பாக்தாத் மருத்துவமனையில் பத்தாம் நூற்றா ண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை: