மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 24



பாகம் : 24
இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. ஒருங்கிணைந்தோ, தனியாகவோ போர்களில் வெற்றி பெற முடியவில்லை. ஏனோ திருக்குர்ஆன் சொல்லும் முறையில் ஜிஹாத் வழியில் அல்லாஹ்வுக்காக போர் செய்வதில்லை. அவர்கள் இணைவைப்பாளர்களான அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய நாடுகளின் ஆதரவாளர்களாக இடது சார்பு, வலது சார்பு, ஜனநாயகம் என்று போதிக்கப் பட்டு தரம் தாழ்ந்திருக்கின்றனர்.                    1948 ல் கூட யூதர்கள் 200 பேர் அடங்கிய ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் சகோதரப் படையால் பலமாக, தைரியமாக, அற்புதம் நிகழ்த்திய வண்ணம் தடுக்கப்பட்ட போது, கைது செய்யப் பட்ட முஜாஹித்தீன் மாரூஃப் அல் குதிரி என்பவர் யூதர்களிடம் சொன்னார். “நீங்கள் வெகு தூரத்தில் இருந்து இங்கு வந்து தங்குவதற்காக போர் செய்கிறீர்கள். நாங்கள் அல்லாஹ்வுக்காக இறப்பதற்கு போர் செய்கிறோம்” என்றார். ஒரு குழுவின் தலைவனிடம் இருந்த ஜிஹாத் கொள்கை ஏனோ இன்று மிகப்பெரிய இராணுவ பலத்துடன் நாடாளும் முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் இல்லை. 1973 ல் கூட அமெரிக்காவால் அறியப்பட்ட யோம் கிப்புர் போரில் நம்பிக்கை கொண்ட சிரிய தளபதிகளாலும், முஸ்லீம் வீரர்களாலும் அல்லாஹ் வின் பேரில் உறுதி பூண்டு நடத்திய போரில் வென்றார்கள். எதிரிகளுக்கு சேதத்தை உண்டுபண்ணினார்கள். அன்றைக்கு ஸலாவுத்தீனால் ஹத்தீனில் பாலஸ்தீனத்தை வெற்றிகொள்ள நடத்திய போர் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பெயரில் இஸ்லாத்துக்காக நடந்தது. அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைத் தந்தான். இன்றைக்கு அதே பாலஸ்தீனுக்காக தோல்விக்கு மேல் தோல்வியாக அடைந்து நடத்தும் போர்கள் அரபிகளுக்காகவும், அரபு தேசங்களுக்காகவும் சுயநலமாக நடத்தப்படுகின்றன. பாலஸ்தீனியர்களுக்கு சுதந்திரம் வழங்கும் சாக்கில் யூதர்களை சூழ்ச்சிகரமாக பாலஸ்தீனில் பிரிட்டன் நுழைத்து விட்டுச் சென்று விட்டது.  இழந்த முஸ்லீம் தேசத்தை யூதர்களிடமிருந்து மீட்க கிறிஸ்தவ அமெரிக்காவும், ஐரோப்பாவும் மத்தியஸ்தர்களா? அட சுயநலமிக்க மூட முஸ்லீம் ஆட்சியாளர் களே. அதுவும் யாரிடம் தோற்கிறார்கள். சரித்திரத்தில் மிகவும் இழிவுபடுத்தப் பட்டவர் களிடம், அல்லாஹ் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றி விட்டவர்களிடம், முன்னர் சரித்திரமெங்கும் துரோகத்திற்கும், கோழைத்தனத்திற்கும், நன்றி கெட்டவர்களாக மட்டுமே இருந்த ஒரு கூட்டத்தினருடன். ஆம் வெட்கம்.
பாலஸ்தீன விவகாரம் நாளுக்கு நாள் மோசமாகிப் போய் கொண்டிருக்கிறது. ஒவ்வோரு நாளும் இஸ்ரேல் தன் பலத் தையும், நிலப்பரப்பையும்  விரிவாக்கிக் கொண்டு போகிறது. தற்போதைய இஸ்லாமிய நாட்டு ஆட்சியாளர்களை உலகின் மிகச் சிறந்த முட்டாள்களாக ஆக்கி எதிரிகள் வெற்றி பெற்று கொண்டிருக்கின்றார்கள். அரபு ஆட்சியாளர்களுக்கு தாத்தா, தந்தை, மகன் என்று வரிசையாக ஆளவேண்டும். ஓ.. இஸ்லாமிய தேசங்களே! உலகின் ஒப்பற்ற மார்கத்தை கடை பிடிப்பவர்களே உண்மையில் உங்களுக்கு குர்ஆன் கூறும் ஜிஹாதின் பேரில் நம்பிக்கையில்லையா? எப்போது நீங்கள் விபசாரத்தையும், நடன அரங்குகளையும், மதுபான விடுதிகளை யும் அடைத்து விட்டு, கீழ்த்தரமான பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், வெட்கங்கெட்ட நாடகங்கள் ஒளி பரப்பும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு, உங்கள் நாட்டு இளைஞர்களுக்கு மறந்து போன சரித்திரத்தை நினைவூட்டி ஜிஹாதின் பால் எதிர்களை விரட்டப் போகிறீர்கள்.
முஸ்லீம் நாடுகள்,
1946 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் தேசத்திற்காக.
1956 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் தேசத்திற்காக.
1967 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் புரட்சிகரமான நடைமுறைகளுக்காக.
1973 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் சவாலுக்காக வும், மதிப்புக்காகவும், மரியாதைக்காகவும்.
போர் என்றாலே ஜிஹாத் வழியில் அல்லாஹ்வுக்காக என்று குர்ஆன் கூறும் முறையில் அழைக்க ஏன் மறந்தீர்கள்?
பாலஸ்தீன் இந்த நம்பிக்கையற்ற நாஸ்திகவாதிகளால் விடுதலை அடையாது.
பாலஸ்தீன் இந்த மத நம்பிக்கையற்ற மறுப்பாளர்களால் விடுதலை அடையாது.
பாலஸ்தீன் இந்த அற்பத்தனமான குற்றவாளிகளால் விடுதலை அடையாது.
யார் பாலஸ்தீனத்தை விடுதலை செய்வதற்காக யூதர்களைக் கொல்கிறார்களோ அவர்கள் ஜோர்தானியர்களோ, சிரியர்களோ, பாலஸ்தீனியர்க்ளோ, அரபுகளோ அல்ல. அவர்கள் முஸ்லீம்கள் என்று தான் அழைக்கப் படுவார்கள். யூதர்களுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் தேசத்திற்காகவும், அரபுகளுக்காகவும் என்று சொன்னால், அது இஸ்லாத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும். ஏனென்றால், அவர்கள் இஸ்லாமிய சகோதரத்து வத்தை அரபுச் சகோதரத்துவமாக ஆக்குகின்றனர்.
ஸலாவுத்தீனின் குணாதிசயம்
சந்தேகமில்லாமல் ஸலாவுத்தீன் தொழுகையிலும், இறை அச்சம் உள்ளவராகவும் இருந்தார். அதுவே அவர் ஒரு சிறந்த முஸ்லீமாக இருந்ததற்கு காரணமாய் இருந்தது. ஜகாத் கொடுக் காமல் இருந்ததில்லை. ஏழைகளுக்கு பெருவாரியாக அள்ளி வழங்கினார். சில நாட்கள் தவறவிட்ட ரமலான் மாத நோன்பை தான் இறப்பெய்திய வருடம் ஜெருசலத்தில் நிறைவேற்றினார். அதற்காக டாக்டர்கள் எச்சரித்த போது, இதனால் தனக்கு விதிக்க பட்டதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றார். தான் இறந்து போன அந்த வருடம் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், நேரமும், பொருள் வசதியும் (ஆம் இந்த சக்கரவர்த்தியின் உண்மையான பொருளாதாரம் வசதியற்றுதான் இருந்தது), உடல்நலமும் ஒத்துழைக்காததால் அடுத்த வருடம் நிறைவேற்றலாம் என்று இருந்தார். ஆனால் இறப்பு முந்தி விட்டது. நீதியும், நேர்மையும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார். உமர் அல் கல்லதி என்ற வியாபாரி, ஸலாவுத்தீன் அவர்கள் சுன்குர் என்ற தனது அடிமை ஒருவனை அபகரித்துக் கொண்டதாக வழக்கு தொடர்ந்தான். ஸலாவுத்தீன் பொறுமையாக வழக்கை எதிர் கொண்டு தான் நிரபராதி என்று நிரூபித்தார். இறுதியில் அந்த வியாபாரியை மன்னித்து பரிசும் கொடுத்தார். இவருக்கு முன் ஆண்ட  ஃபாத்தி மிட்கள் பல விதங்களில் வரி வசூலித்தனர். வரி செலுத்தாத வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தனர். அந்த வரி களை எல்லாம் ஸலாவுத்தீன் தனது ஆட்சியில் நீக்கினார்.
ஸலாவுத்தீன் கட்டிட கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கெய்ரோவின் பிரம்மாண்டமான சுவர் இடிந்து சுலபமாக நகருக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வரக்கூடிய அளவுக்கு இருந்தது. அத் தவஷி பஹா அத்தீன் கரகுஸ் என்பவரின் தலைமையில் 29.302 கி. மீ. பரப்பளவில் மொத்த கெய்ரோவையும் உள்ளடக்கிய வண்ணம் கட்டினார். எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கல அத் அல் ஜபல் (மலை அரண்மனை) என்ற அரண்மனையை கட்டினார். தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்ததால் முழு பணியும் முடிக்கவில்லை. இது எகிப்திய கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருந்தது. சினாய் பகுதியில் சூயஸ் நகரின் வடகிழக்கில் 57 கி. மீ. தொலைவில் கலா அத் சினா என்ற அரண்மனையைக் கட்டினார். கிஸா, அர் ருதாஹ் தீவுகளை நைல் நதியின் ஆழ, அகலத்திற்கு ஏற்ப அமைத்தார். கெய்ரோ வில் புகழ் பெற்ற மர்ஸ்தான் மருத்துவமனையைக் கட்டினார்.

கருத்துகள் இல்லை: