மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 14



பாகம் :14
ஸா அத்தீன் கமஷ்தகின் என்பவன் அலிப்போவின் உண்மையான ஆட்சி யாளர் ஷம்ஸ் அத்தீன் இப்னு அத் தயாஹ் மற்றும் அவர் சகோதரர்கள், இளவரசர்களை சிறையில் அடைத்து அலிப்போவை அபகரித்துக் கொண்டு பாதுகாப்புக்கு சிலுவைப் போராளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டான். ஸலாவுத்தீன் தூதுவர் ஜுர்துக்கை ஸா அத்தீனிடம் அனுப்பி இப்னு அத் தயாஹ்வையும் மற்ற கைதிகளையும் விடுதலை செய்ய சிபாரிசு செய்தார். அவன் பொறுப்பற்றத் தனமாக தூதுவர் ஜுர்துக்கையே கைது செய்து அத் தயாஹ்வுடன் சிறையில் அடைத்தான். அந்த அநீதிக்கு ஸா அத்தீன் பதில் சொல்ல வேண்டிய காலத்திற்காக ஸலாவுத்தீன் காத்திருந்தார். ஸா அத்தீன் மேலும் விடாமல் மிஸ்யஃப் என்னும் பகுதியில் வாழ்ந்த “இஸ்மாலியாஹ்” என்னும் பிரிவினரின் தலைவர் ராஷித் அத்தின் ஸினான் என்பவரிடம் ஒரு தூதுவரை அனுப்பி தனக்கு ஆதரவளித்து உதவுமாறு வேண்டினான்.
(இமாம் அல் கஸ்ஸாலி தனது “ ஃபதா இஹ் அல் பதானியாஹ் அன் மபதி அல் இஸ்லாமியாஹ்” என்னும் கிரந்தத்தில் இஸ்மா யிலியாக்கள் வெளித் தோற்றத்திற்க்கு ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றுவார்கள். ஆனால், உள் தோற்றத்தில் அவர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். பெண்கள் தங்கள் ஹிஜாபுகளை நீக்கிக் கொண்டு விபசாரம் செய்வதை நியாயம் என்று நம்புபவர்கள். மற்ற மதங்களை தடுத்தும், மறைத்தும் வந்தார்கள். தங்கள் நம்பிக்கையை யாராவது மறுத்தால் அவர்களை அவர்கள் மறுத்தார்கள். இஸ்மாயில் ஜாஃபர் அஸ் ஸித்திக்கிடமும் தங்களை மறுத்தார்கள். என்று குறிப்பிட்டுள்ளார் கள்)
ராஷித் அத்தீன் ஒரு குழுவினரை அனுப்பி ஸலாவுத்தீனை கொல்ல உத்தரவிட்டார். ஸலாவுத்தீன் அலிப்போ நகரின் மேற்கில் ஜுஷான் என்னும் விடுமுறை தலத்தில் இருந்த போது அவரின் கூடாரத்திற்குள் ஒருவனை அனுப்பி அவரைக் கொல்ல முயன்றார். ஸலாவுத்தீனின் பாதுகாவலர்கள் சண்டையிட்டு காப்பாற்றினார் கள்.
மீண்டும் 571 A.H. ல் அலிப்போ நகரில் அஸாஸ் என்ற கிராமத்தில் இருந்த போது சில இஸ்மாலிய ஃபிதாயீன்கள் ஸலாவுத்தீன் பாதுகாவலர்கள் போல் உடையணிந்து கூடாரத்துக்குள் நுழைந்து அவரை தலையில் காயப்படுத்தினர். ஏறக்குறைய ஸலாவுத்தீன் மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டார். அவர் அந்த சமயத்தில் இராணுவக் கவசம் அணிந்திருந்ததனால் தலைக் காயத்துடன் தப்பினார். விரைந்து வந்த ஸலாவுத்தீனின் பாதுகாவர் கள் சண்டையில் இணைந்து கொள்ள சில ஃபிதாயீன்கள் கொல்லப் பட சிலர் தப்பிச் சென்றனர்.
ஸலாவுத்தீன் அந்த துரோகிகளை பழி வாங்க துடித்தார். அவர் அலிப்போவிலிருந்து திரும்பியதும், மோஸூலின் மேற்குப் புறத்தில் இருந்த அவர்களின் மிஸ்யஃப் நகரின் கோட்டையைத் தாக்கினார். அவர்களில் பெரும்பான்மையானவர்களை கொன்று, அவர்களின் செல்வங்களைப் பறித்து, வீடுகளை அழித்து, என்றுமே அவர் மீது அச்சம் ஏற்படும் வண்ணம் கடுமையான பாடம் புகட்டினார்.

கருத்துகள் இல்லை: