மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

அடிமைகள் வரலாறு 2



செல்டிக் பழங்குடியினரை ரோமர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். கலவரங்களாலும், போரினாலும் கைப்பற்றப்பட்டவர்களை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த வரலாறுகள் இருக்கின்றன. புகழ் பெற்ற செயிண்ட் பாட்ரிக் கூட கைப்பற்றப்பட்டு விற்கப்பட்ட ஒரு அடிமைதான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற அதிகமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியதாக “லெட்டர் டூ தி சோல்ஜர்ஸ் ஆஃப் கோரோடிகஸ்” என்ற புத்தகம் தெரிவிக்கிறது. வைக்கிங்குகள் ஐரோப்பாவின் மீது படையெடுத்தபோது நிறைய அடிமைகளை பிரிட்டிஷ் தீவுகளிலிருந்தும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கைப் பற்றினார்கள். அப்படி கைப்பற்றிய அடிமைகளை வைக்கிங்குகள் “த்ரால்ஸ்” (THRALLS) என்ற பெயரில் பணிக்கு வைத்துக்கொண்டு, பெரும்பான்மையான அடி மைகளை பைஸாந்தியர்களுக்கும், இஸ்லாமிய சந்தைகளிலும் விற்றுவிடுவார் கள். ஐரோப்பாவின் மேற்கில் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ்களும், கிழக் கில் ஸ்லாவ்களும் பெருகி இருந்தனர். பதினோராம் நூற்றாண்டுகளில் வைக்கிங் குகளின் அடிமை வியாபாரம் படிப்படியாக குறைந்தது. வைக்கிங்குகள் ஐரோப்பா வில் எந்த பகுதிகளைக் கைப்பற்றினார்களோ அங்கேயே அந்த இன மக்களுடன் கலந்து தங்கிப் போனார்கள். முதலில் செர்ஃப் (சுய நபர்கள்) களாக இருந்த அவர் கள் நாளடைவில் கிறிஸ்துவர்களாக மாறிப் போனார்கள்.
                                         புராதன ஸ்பெயினும், போர்சுகலும் அடிக்கடி முஸ்லீம்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அல் அண்டலூசிலிருந்து தொடர்ந்து ஐபீரிய கிறிஸ்தவ குடியாட்சிகளின் மீது படை எடுத்து அங்கிருந்து கொள்ளைப் பொருட்களுடன் அடிமைகளையும் பிடித்து வந் தார்கள். 1189 ல் அல்மொஹதின் கலீஃபா லிஸ்பனை எதிர்த்து போரிடும் போது 3000 பெண், குழந்தை அடிமைகளை கைப்பற்றிச் சென்றார். அதேபோல் 1191 ல் கார்டோபாவின் கவர்னர் சில்விஸில் பகுதியில் போரிடும் போது 3000 கிறிஸ்தவ அடிமைகளைக் கைப்பற்றினார். பைஸாந்திய,ஓட்டோமான் போரிலும், ஓட்டோ மான், ஐரோப்பிய போரிலும் மிகப்பெரிய அளவில் அடிமைகள் கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய சந்தைகளில் விற்கப்பட்டார்கள். லிபாண்டோ போரில் கடலில் படகு களில் கைப்பற்றப்பட்ட ஏறக்குறைய 12,000 கிறிஸ்தவ அடிமைகள் ஓட்டோமான் பேரரசால் விடுதலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களும் போரில் கைப்பற்றப் பட்ட முஸ்லீம் அடிமைகளை விற்றிருக்கிறார்கள். மால்டாவின் மன்னர்கள் கடல் கொள்ளை மூலம் முஸ்லீம் கப்பல்களைத் தாக்கி நிறைய அடிமைகளை கொள் ளையடித்திருக்கிறார்கள். வட அப்பிரிக்கா, துருக்கி நாடுகளுக்கு விற்கப்பட்டு வந்த அவர்களின் அடிமைச்சந்தை பதினெட்டாம் நூற்றாண்டு வரை மிகவும் புகழ் பெற்றது. அந்த காலகட்டத்தில் சுழற்சி முறையில் ஒரு கப்பலை இயக்குவதற்கு ஆயிரம் அடிமைகள் தேவைப்பட்டனர்.
                                         பதினைந்தாம் நூற்றாண்டுகளில் போலந்தில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டிருந்தது. 1588 ல் லிதுவேனியாவிலும் தடை செய்யப்பட்டு மறுபரிசீலனையாக அடிமைகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். 1679 ல் ரஷ்யாவில் விவசாய அடிமைகளாய் இருந்தவர்கள் பணியாட்களாக மாற்றப்பட்டனர். 1723 வரை ரஷ்யாவில் சிறு அளவிலிருந்த அடிமைகள் பீட்டரால் வீட்டு வேலைக்கு மாற்றப்பட்டனர். போலந்து, ரஷ்யாவிலிருந்து தப்பிய அடிமைகள் ஒன்றாக இணைந்து எவருக்கும் கட்டுப்படாத “கொஸாக்கு” (COSACK) களாக மாறினர். போரில் பிடிபட்ட, கடன் செலுத்த முடியாத, தானாகவே முன்வந்த அடிமைகள் பிரிட்டனில் இருந்தார்கள். அயர்லாந்தும், டென்மார்க்கும் கைது செய்யப்பட்ட ஆங்கிலோ சாக்ஸன் மற்றும் செல்டிக் அடிமைகளை விற்றுவந்தனர். அடிமைகளுக்கும் இஸ்லாமிய உலகுக் கும் நிறைய தொடர்புகள் இருந்தன. வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய தீபகற்பத் தின் மீது படையெடுத்த போது மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருவாரியான அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். இஸ்லாமிய சட்டமும், கிறிஸ்துவ, யூத, சபிய, மாஜிய சட்டங்களும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்து வதை தடை செய்தன. ஆனால், அடிமைகள் போரில் கைப்பற்றப்பட்டால் சட்டம் அவர்களை ஒரு பொருளாக கருதி விலக்கி விடுகிறது. முஸ்லீம்களாக மதம் மாறிவிட்ட அடிமைகளை முஸ்லீம்கள் விடுதலை செய்து வந்தார்கள். மாறவி ல்லை என்றாலும் உரிமையாளர்கள் நல்லுபதேசம் செய்தார்கள். ஆனால், பொதுவாக இஸ்லாமியர்கள் அடிமைகளை மதம் சொன்ன அடிப்படையில் நடத்தவில்லை.
                                             அடிமைகள் வியாபாரம் யூதர்களிடத்தில் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே இருந்தது. யூத வியாபாரிகள் அடிமைகளை கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், கிறிஸ்துவ ஸ்பெயினிலிருந்தும் அல் அண்டலூஸ் அடிமைச்சந்தைக்கு கொண்டு வந்து மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்த னர். ஆங்கிலத்தில் ஸ்லேவ் என்று சொல்லப்படும் அடிமைகளைக் குறிக்கும் சொல் ஸ்க்லபோஸ் (SKLABOS) என்ற பதத்திலிருந்து வருகிறது. 1100 லிருந்து 1500 வரை ஐரோப்பிய அடிமைகள் வியாபாரம் மேற்கத்திய மெடிட்டரேனியன் இஸ்லா மிய நாடுகளையும், கிழக்கு கிறிஸ்துவ, முஸ்லீம் நாடுகளையும் சார்ந்திருந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் வெனிஸ் மற்றும் ஜினோவா நகரங்கள் கிழக்கு மெடிட்டரேனியனையும், பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் கருங்கடலையும் சார் ந்து வியாபாரம் செய்தன. அவர்கள் ஸ்லாவிக், பால்டிக், ஜியார்ஜிய, துருக்கிய அடிமைகளை இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்தனர். 1440 லிருந்து பதினெட் டாம் நூற்றாண்டு வரை லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டு அடிமைகள் துருக்கி நாட்டுக்கு விற்கப்பட்டனர். டடார் (TATOR) எனப்படுபவர்கள் 1575 ல் 35,000 பேரையும், 1676 ல் 40,000 பேரையும், 1688 ல் 60,000 பேரையுமான உக்ரைனிய அடிமைகளை பிடித்து சந்தைகளில் விற்றனர். 1864 ல் தடை செய்யும் வரை ஐந்நூறு ஆண்டுக ளாக ரோமில் சில அடிமைகள் இருந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய கடற்கொள்ளையர்கள் குறிப்பாக அல்ஜீரியன்கள் ஓட்டோமான் பேரரசின் ஆதரவுடன் ஐரோப்பிய கடலோரங்களில் ஆயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்து சந்தையில் விற்றுவந்தனர். சில ஐரோப்பிய நாடுகள் பணவசூல் செய்து தங்கள் அடிமைகளை விலை கொடுத்து மீட்டனர்.
                                   பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மங்கோலியர்கள் படையெடுப்பின் போது ஏராளமான அடிமைகளை கையகப்படுத்தி திறமையான பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பிரித்து கரகோரம் அல்லது சராய் பகுதிகளு க்கு அனுப்பினர். பெரும்பான்மையானவர்களை நோவ்கோராட் சந்தைக்கு ஏற்று மதி செய்தனர். அமெரிக்க காலனிய நாடுகளில் புகையிலை, பருத்தித் தோட்டங்க ளில் அடிமைகள் வேலை செய்திருக்கிறார்கள். உலகில் மெடிட்டரேனியன் பகுதி தான் அடிமைச்சந்தைக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி அளவுக்கதிகமாக “ஸ்லாவ்” இன அடிமைகளை பிடித்து வைத்திருந்தது. அவர்களின் இனப்பெயரே ஸ்லேவாக ஆங்கிலத்தில் ஆகியது. ஒரு கட்டத்தில் அடிமைகளை கருங்கடல் ஒர நாடுகளில் இறக்குமதி செய்வதே ரஷ்யாவின் வரு மானமாக இருந்தது. மெடிட்டரேனியனின் தென்பகுதியில் அரபுகளின் பேரரசுகள் இருந்ததால் சஹாராவில் ஸ்வீலா என்ற நகரில் 700 அடிமை வியாபாரிகள் இருந் தனர்.         
                             பழங்காலத்தில் மனிதசமுதாயத்தில் இன்றியமையாமல் போனவர்கள் அடிமைகள். புராதன காலத்தில் எல்லா இனமக்களும் அடிமை    களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் கிடைப்பது மிக சுலபமாக இருந் தது. போர்கள் இன்றியமையாததாக இருந்த காலங்களில் தோற்றவர்களிடம் இரு ந்து பிடிபட்ட மனிதர்களில் பலசாலிகளை அடிமைகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டு மீதியுள்ளவர்களை கொன்றுவிடுவார்கள். கடற்கொள்ளையர்கள் ஒரு பொருள் போல அடிமைகளையும் கொள்ளையடித்தனர். கடும் குற்றம் செய்தவர் கள் அடிமைகளாக்கப்பட்டனர். கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர். வறுமையில் இருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அடிமைகளாக விற்றுவிட்டனர். சில எஜமானர்கள் அடிமைகளை குடும்பமாக இருக்க விடமாட்டார்கள். அடிமைகளுக்கென்றே சட்டங்கள் இயற்றிய அரசாங்கங் கள் இருந்தன.

கருத்துகள் இல்லை: