மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 30 டிசம்பர், 2013

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 3



இருவரும் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்பதுதெரியவில்லை. ஆனால், 800 ல் சார்ல்மாக்னி ரோம் சென்று போப்புக்கு ஆதரவு தெரிவித்தார். செயிண்ட் பீட்டர்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தில் லியோ சார்ல்மாக்னியின் மகனை அடுத்த மன்னனாக தேர்ந்தெடுக்க இருந்தார். ஆனால், பிரார்தனை முடிந்து தலைஉயர்த்திய சார்ல்மாக்னியின் தலையிலேயே போப் மீண்டும் கிரீடத்தைச் சூட்டினார். சார்ல்மாக்னி மகிழ்ச்சியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டான். சட்டப்படி மன்னனாகத் தகுதிவாய்ந்தவர் கான்ஸ்டாண்டிநோபிளைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். மன்னன், போப் மற்றும் மக்களின் விருப்பங்கள் இணைந்து ஜெர்மனிய பழங்குடி வாரிசுதான் மேற்கில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவாகியது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தின் இந்த புதிய முடிவுதான் அன்றிலிருந்து இன்றுவரை போப்களைத் தேர்ந் தெடுப்பதிலும், சிலுவைப்போர் அமைத்து இரக்கமின்றிக் கொல்வதிலும், நேட்டோ படையுடன் சேர்ந்து இஸ்லாமிய நாடுகளை சூறையாடு வதிலும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் தான் இங்கிலாந்தில் அரச குடுப்பத்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளின் வாரிசு வரிசையில் இடம்பிடிக்க முடியும்.  800 ல் சார்ல்மாக்னியின் பதவியேற்பில் முதன்முறையாக பிரமாண உறுதி மொழியில் படிக்கப்பட்ட வாசகம் அப்படி. அதாவது, “சார்லஸ் மிகவும் சாந்தமான அகஸ்டஸ், கடவுளின் பெயரால் பதவி ஏற்கப்படுகிறார். இவர் பசிபிக்கின் மாபெரும் சக்கரவர்த்தி, ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யும் சக்கரவர்த்தி ஆவார்”. என்று முன்மொழிந்தனர்.
                          அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் லியோ சார்ல்மாக்னியை மதச்சடங்கு ஒன்றில் ஜெர்மனியில் சந்தித் தார். 796 ல் ஆசென் நகரில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவு ற்ற சார்ல்மாக்னியின் புதிய தேவாலயத்தின் திறப்புவிழாவில் சந்திக்க நேர்ந்தது. சார்ல்மாக்னியின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசென் நகரம் அர்த்தமுள்ளதாகவும், அவசியமாகவும் இருந்தது. அசென் சாம் ராஜ்ஜியத்தின் வடக்கிலும், ரோமின் எதிர்திசையிலும் இருந்தது. சார்ல்மாக்னி தன் ஒரே மகன் லூயிஸை ஆட்சி அதிகாரத்தில் இணைக்க ஆசைப்பட்டான். 805 ல் வடக்கில் பயணம் செய்த போப் இதனை ஆதரிக்கவில்லை. இதனால் போப் இல்லாமலேயே 813 ல் ஆசென் நகர தேவாலத்தில் மகனுக்கு துணைச் சக்கரவர்த்தியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தான். இந்த ஆசென் நகரம் சார்ல் மாக்னியின் ஒன்றிணைந்த ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தள்ளியிருந்தது. மிகச்சரியாக ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மேற் குக்கும், கிழக்குக்கும் நடுவில் இருந்தது. மேலும், நவீன அமைப்பை வெளிப்படுத்தும் விதமாக பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி யின் எல்லைகளின் மத்தியில் இருந்தது.                  
                           சார்ல்மாக்னி ஆட்சியைப்பரப்பும் எண்ணம் வந்தவுடன் தன் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண் ணினான். கிறிஸ்தவ அறிவு ஜீவிகள் ஆசென் நகரிலிருந்து சார்ல் மாக்னிக்குக்கு வேலையாட்களைத் தேர்ந்தெடுத்தனர். சார்ல்மாக்னி ஆசெனில் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கென நிகழ்ச்சிகளை நடத் தினான். வடக்கின் பார்பேரிய பகுதியில் மட்டுமே கல்விகற்றவர்கள் அதிகம் பேர் இருந்தனர். 780 ல் ஆசென் அரண்மனையில் ஒரு பள்ளி யை ஆரம்பித்து யோர்க் நகரத்திலிருந்து அல்சியன் என்ற சிறந்த ஆசிரியரை அழைத்து வந்தான். தானும் சமயங்களில் தன் குடும்பத் துடன் பாடம் கற்க செல்வான். சிறந்த ஏடுகள் அங்கு அழகாக நகல் எடுக்கப்பட்டன. அவைகளே பிற்காலத்தில் ரோமன் மாதிரி எழுத்து க்கள் ஆகின. மேலும் தனிச்சிறப்பு உண்டாக்குவதற்காக கரோலின் ஜியன்களின் புத்திசாலித்தனமான கலையம்சமுள்ள வாழ்க்கை முறை களைக் கொண்டுவந்தான்.
                         சார்ல்மாக்னி தனக்குப்பிறகு, தன் பாரம்பரிய ஆட்சியை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுக்க விரும்பினான். ஆனால், அவனின் முதல் இரண்டு பிள்ளைகளும் முறையே 810,811 ம் ஆண்டுகளில் இறந்து போயினர். அதனால் எஞ்சிய கடைசி மகன் லூயிஸ் 814 ம் ஆண்டு மொத்த பகுதி களுக்கும் ஒரே சக்கரவர்த்தி ஆனான். லூயிஸ் தந்தையைவிட குணத்தில் வித்தியாசமாக இருந்தான். தெயவபக்தி உள்ள லூயிஸ் என்று பொருள்படும் வகையில் லூயிஸ் தி பியஸ் (LOUIS THE PIOUS) என்று அழைக்கப்பட் டான். தேவாலயத்தின் ஆதரவுடனே இருக்க விரும்பினான். சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் யாரும் நெருங்க முடியாத வண்ணம் இருந்தது. ஆனால், 840 ல் லூயிஸ் மரணமடைந்தவுடன் எல்லாம் மாறியது. சார்ல்மாக்னியின் லெஜெண்ட்(LEGEND) என்ற அவன் புகழும், கலைப்படைப்புகளும் இன்று வரை பெயர் பெற்றவை. சார்ல் மாக்னியின் சாம் ராஜ்ஜியம் வடகிழக்கு ஸ்பெயின், பிரான்ஸ், பெல் ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனியின் சில பகுதிகள், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் வட இத்தாலி இணைந்து இருந்தது. 840 ல் சார் ல்மாக்னியின் மகன் லூயிஸ் இறந்தவுடன் பாரம் பரிய பிரதேசத்தைப் பிரிப்பதில் லூயிஸின் மூன்று மகன்களுக்கு இடையில் சண்டை வந்தது. 843 ல் ஒரு குழுவால் சமாதானம் ஏற்பட்டு வெர்டுன் என்ற இடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், பிரிக்கப்பட்ட அந்த எல்லைகளில் எதிர்கால ஐரோப்பாவின் இருண்ட சரித்திரங்கள் ஆரம்பிக்க இருந்தன.
                              ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பூகோள அமைப்பில் ஒருபுறம் அட்லாண்டிக்கரையும், மற்றொரு புறம் ரினியும் உள்ளது. லத்தீன்களுக்கு தெரியும் செங்குத்தான பாகம்தான் பிரான்ஸ் என்று. ஆனால், பிரிக்கப்பட்டது  மேற்குபிரான்ஸ், மத்திய பிரான்ஸ் மற்றும் கிழக்குபிரான்ஸ் ஆகும். மேற்குபிரான்ஸில் மேலும் சில பிரான்ஸ் பகுதிகள் இணைக்கப்படவேண்டும். கிழக்கு பிரான்ஸில் சராசரி ஜெர்மன் மொழிபேசும் ரினியின் கிழக்குப்பகுதி இணைக்கப்பட வேண்டும். மத்தியபிரான்ஸ் சந்தேகத்திற்கிடமாக இருந்தது, ஏனென்றால் அது மொத்த பிரான்ஸிலும் செல்வம் கொழிக்கும் பகுதி. இது லூயிஸின் மூத்த மகன் முதலாம் லோதயிருக்கு வழங்கப் பட்டிருந்தது. மத்தியபிரான்ஸ் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தி லிருந்து நீண்டு கீழ்பகுதியில் ரினியின் இருபுறமும் ஸ்விட்சர்லாந்தும் இத்தாலியும் இருந்தன. அந்த தவறான பங்கீடின் படியே நூற்றாண்டாக இருந்தது. வடக்குப்பகுதி லோதாரின்ஜியா (லோதர் இன பழங்குடியினர் இருந்ததால்) என்று மாறியது. பிரான்சு லோரியன், ஸ்விட்சர்லாந்து அல்ஸாசி என்று மாறியது. ஆட்சி வலுவடைந்தாலும், வலுவடையா விட்டாலும், மேற்கோ கிழக்கோ மெதுவாக ஃப்ரான்சும், ஜெர்மனியும் இணைந்தன. ரினிலாந்து பிறகு, ஆட்சி மாறியது. சில நூற்றாண்டுகள் பர்கண்டியும், வட இத்தாலியும் கவனிப்பு இல்லாமல் போயின.
                             புராதன கரோலின்ஜியன்களின் பரம்பரை ஒன்பதாம் நூற்றாண்டில் ரினியின் இருபக்கமும் ஆதிக்க சக்தியில் பேரரசை ஆண்டது. ஆனால் 911 ல் ஜெர்மனியையும், 987 ல் ஃப்ரான் சையும் இழந்தார்கள். 919 களில் ஜெர்மனியை ஆட்சி செய்தவர்கள் சாக்ஸனின் வம்சாவழிகள். ஆனால், 987 ல் ஃப்ரான்சில் ஆட்சிக்கு வந்த ஹியூக் கேபெட் ஒரு ஃப்ராங்க். இவரின் வம்சாவழியினர் தங் கள் குலப்பெயரான ஃப்ராங்க் என்பதை மறக்காதிருக்க “ஃப்ரான்ஸ்” என மாற்றி நான்கு நூற்றாண்டுகளாக பார்சிலிருந்து ஆண்டார்கள்.                   

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 2



ஃப்ராங்கிஷின் பாரம்பரிய பூமியை ஆண்டு வந்த சார்லஸ் மார்டெல் தனது வட மற்றும் கிழக்கு எல் லைப் பகுதியில் தொல்லை கொடுத்து வந்த ஜெர்மனிய பழங்குடியி னரான ஃப்ரிஷியன்கள், ஸாக்சன்கள் மற்றும் பவேரியன்களை எதிர் த்து நீண்ட போரை நடத்தினான். இதற்கு செயிண்ட் பானிஃபேஸ் என்ற கிறிஸ்தவ தொண்டுநிறுவனத்தின் ஆதரவும் இருந்தது. காவுல் பகுதியில் இருந்த அந்த பார்பேரியன் (நாகரீகமற்றவர்கள்) களால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொந்தரவுஇருந்தது. ஆனால் தற்போது தென் பகுதியில் சக்திவாய்ந்த புதியவர்களால் தொந்திரவு வர ஆரம்பித்தது. அவர்கள் ஸ்பெயினில் காலூன்றியிருந்த அரபுக்கள். 711 ல் வந்த அரபுகள் ஸ்பெயினிலிருந்து வட பகுதி நோக்கி புயலைப் போல முன்னேறினார்கள். விரைவில் பைரெனீஸுக்கு அருகில் நெருங்கினார்கள். 720 ல் நார்போன்னையும், 725 ல் பர்கண்டியையும் வென்றார்கள். பிறகு, 732 வரை சற்று அமைதியாய் இருந்தனர். பின் மீண்டும் போர்டிவக்ஸ், பாயிஸ்டர்சை வென்று டூர்ஸ் நோக்கி முன்னேறினார்கள். டூர்ஸில் இஸ்லாமிய இராணுவம் சார்லஸ் மார்டெல் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
                              போர் நடந்தது பாயிஸ்டியர்சிலா அல்லது டூர்ஸிலா என்பது சரியாகத் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இரண்டு இடத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சார்லஸ் மார்டெல்லின் வெற்றி இஸ்லாமியப் படைகளை முன்னேற்றத்தை மேற்கில் முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது. இது குறிப்பிடும் படியான திருப்புமுனையாக அமைந்தது. 741 ல் ஸ்பெயினிலிருந்து இதே போன்று பெர்பெர் கூலிப்படைகள் காவுலில் தோற்கடிக்கப்பட்டன. இஸ்லாமிய படைகளை ஐரோப்பாவிலிருந்து திருப்பி விரட்டியதால் சார்லஸ் மார்டெல்லுக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ சரித்திரத்தில் தனி இடம் கிடைத்தது. அவன் தங்கள் பூர்வீக மெரொவின்ஜியன் சக்தி தனக் கிருப்பதாக கற்பனை செய்து வைத்திருந்தான். அதேபோல் தான் அவன் மகன் மூன்றாம் பெபின். இவன் 743ல் சைல்டெரிக் என்னும் ஒரு பொம்மை மன்னனை ஆட்சியில் வைத்திருந்தான். பின் என்ன நினைத்தானோ போப் ஆண்டவரின் ஒப்புதலைப்பெற்று 751 ல் அந்த மன்னனை நாட்டைவிட்டே துறத்தினான். ஃப்ராங்க்ஸ்கள் ராஜ்ஜியத் தில் எது செய்தாலும் போப்பின் தேவஆசி பெற்றே செய்தார்கள். மூன்றாம் பெபின் 768 ல் இறந்தான்.
                       எட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் மார்டெல்லின் பேரனும் மூன்றாம் பெபினின் மகனுமான சார்ல்மாக்னி மன்னனாக பதவியேற்றான். ஆரம்பத்தில் வெறும் சார்லஸ் ஆக இருந்த இவன் பெயர் லத்தீன் மொழியின் வரிசையில் “சார்ல்மாக்னி” (CHARLEMAGNE- சார்லஸ் தி கிரேட்) என்று அழைக்கப் பட்டது. இவனின்  ஃப்ராங்க்ஸ் பேரரசு மட்டுமே பிரான்சையும், ஜெர்மனியையும் இணைத்து (சில ஆண்டுகள் மட்டும் நெப்போலியன் ஆண்டான்) ஒன்றாக ஆட்சி செய்தது. தந்தையின் பாரம்பரிய தேசமான மேற்குப்பகுதி, தென் மேற்கு பிரான்சிலிருந்து கடற்கரைப் பகுதியை ஒட்டி நெதர்லாந்தும், வட ஜெர்மனி பகுதியும் சார்ல்மாக்னிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, சார்ல்மாக்னியின் சகோதரன் கார்லோமான் இறந்த பிறகு, அவனின் பூர்வீக தேசமான மத்திய பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு ஜெர்மனியும் இவன் வசமே வந்தது. இவன் 814 ல் இறக்கும் போது மீதி இருந்த ஜெர்மனி பகுதியும், வட இத்தாலியும் இவன் ஆட்சியின் கீழேயே இருந்தது. சார்ல்மாக்னி பதவிக்கு வந்த முதல் ஆண்டு போப்பின் ஆசி பெற்று வட இத்தாலி மீது படையெடுத்தான். இவன் குழந்தையாய் இருந்த போதிலிருந்து இவன் குடும்பம் ரோமின் போப்பிடம் பலமான உறவை வைத்திருந் தது. செயிண்ட் டெனிஸில் 754 ல் போப் இரண்டாம் ஸ்டீபனிடம் பன் னிரண்டாவது வயதில் தந்தை, சகோதரர்கள் உடனிருக்க சார்ல்மாக் னிக்கு  எண்ணெய் ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடர் ச்சியாக லம்பார்ட்களை எதிர்த்து இத்தாலியின் மீது இருமுறை படையெடுத்தார். 772 ல் வேறொரு போப் முதலாம் அட்ரியன் என்ப வர் மீண்டும் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய கேட்டுக்கொ ண்டார். அதன்படியே செய்து தந்தையைப் போலவே இத்தாலி மீது 773 மற்றும் 774 ல் படையெடுத்தார். இது ஆட்சியின் பரப்பளவை பெரிய அளவில் அதிகரிக்கவும், “கிங் ஆஃப் தி லம்பார்ட்ஸ்” என்ற பட்டம் கிடைக்கவும் வழி செய்தது.
                               சார்ல்மாக்னி தன் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் வடக்கே இருந்து கிழக்குபக்கமாக பவேரியாவையும் சேர் த்து விரிவுபடுத்தினான். ஆனால் ஜெர்மனி சாக்ஸன்களுக்கு எதிராக மாறியது. சாக்ஸன்களும், ஜெர்மனி பழங்குடியினரும் ஃப்ராங்கிஷ் பகுதிகளுக்காக அடிக்கடி தங்கள் காடுகளிலிருந்து வந்து சண்டையி ட்டனர். சார்ல்மாக்னி சாக்ஸன்களை அழித்து, அவர்களின் சிலை வழிபாட்டுப் பழக்கத்தை மாற்றினான். 772 ல் சார்ல்மாக்னி கொடு மையான முறையில் அவர்கள் மீதுபடையெடுத்து, உலகை தாங்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் நம்பப்பட்டு வந்த “இர்மின்சுல்” (IRMINSUL)  என்ற மிகப்பெரிய மரத்தூணை உடைத்து எறிந்து புனிதக் கோயிலைத் தரைமட்டமாக்கினான். சார்ல்மாக்னிக்கு அவர்களை வெல்ல 30 ஆண்டுகளாயின. 804 க்குப் பிறகு, முடிவாக அவர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி இவனின் பேரரசில் குடியேறினர். இது ஒரு கொடூர மான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இராணுவ நட வடிக்கை மூலம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அவனின் சட் டப்புத்தகத்தில் கிறிஸ்தவமதம் மாற மறுத்தால் மரணதண்டனை என்று குறிப்பிட்டிருந்தான். நம்பத்தகுந்த தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் ஒரே நாளில் மதம்மாற மறுத்த 4500 சாக்ஸன்களைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
                     சார்ல்மாக்னியின் முதல் சில போர் நடவடிக்கை கள் தோல்வியடைந்தன. இஸ்லாமியர்களை எதிர்த்து வட ஸ்பெயி னில் நடத்திய போரில் தோல்வியடைந்தான். அப்போதைய கார்டோ பாவின் கலீஃபா சார்ல்மாக்னியின் வரவை எதிர்பார்த்துப் போரிட காத்திருந்தார். மேலும் இவன் பாட்டனாரின் டூர்ஸ் வெற்றியின் வெளிப்பாடு இவனிடம் இல்லாமல் போனது. 778 ல் தெற்கு நோக்கி பாம்ப்லோனா நகரைக் கைப்பற்றி, சரகோஸ்ஸாவை வெல்லத் திட் டமிட்டு எதுவும் சாதிக்காமல் ஏமாற்றமடைந்தார். இதற்காக அவ னின் படை பாரம் பரிய வழியான ரான்செஸ்வல்லீசைக் கடக்கும் போது, பஸ்க்வெஸ் அல்லது காஸ்கன் குழுக்களால் முன்னால் சென்ற படை தாக்கப்பட்டது. சார்ல்மாக்னியின் பெரிய மாவீரரென்ற கற்பனை இந்த தோல்விகளால் இவன் ஆட்சியில் கரைபடிந்த புள்ளி களாய் போனது. 799 ன் மத்தியில் மூன்றாம் முறையாக ஃப்ராங்கிஷ் மன்னனுக்கு போப்பின் எண்ணெய் ஸ்நானம் தேவைப்பட்டது. ரோமின் சாலையில் எதிரிகளால் தாக்கப்பட்டான். (எதிரிகள் இவனைக் குருடாக்கி, நாக்கை அறுத்து ஆளத்தகுதி இல்லாமல் ஆக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.) மூன்றாம் லியோ ஆல்ப்ஸ் வழியாகச் சென்று சார்ல்மாக்னியை பாடெர்பார்னில் சந்தித்தார்.

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 1



                                                                             ஃப்ராங்ஸ்குகள் ஏதோ இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று எண்ணவேண்டாம். இஸ்லாத்தை யூதர்களுக்கு அடுத்து ஆதியிலிருந்து எதிர்த்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜவம்சக்கூட்டம். ஐரோப்பிய நாடுகளில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். பலம் வாய்ந்த அமெரிக்க டாலரை வீழ்த்தி ஈரோ என்ற நாணயத்தை பல எதிர்ப்பு களுக்கிடையில் வெளியிட்ட அறிவாளிகள். டயானா, டோடி படுகொ லையின் மூலக் குற்றவாளிகள். இன்றைய நேட்டோ படையின் கூட் டாளிகள். ஸ்பெயின், ஃப்ரான்சிலிருந்து இஸ்லாத்தை விரட்டியவர்கள். நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்வதற்கும், ஹிஜாப் அணியக்கூடாது போன்ற இஸ்லாத்துக்கு எதிரான சட்டங் களுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யார், இவர்களின் உறவுமுறை என்ன எப்படி ஆட்சிகு வந்தார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே இந்த தொடர்.                                    

                        ஃப்ராங்க்ஸ்கள் எனப்படுபவர்கள் பிரான்ஸும், பிரிட்டிஷும் இணைந்த கூட்டுப்படையினராவர். ஃப்ராங்க்ஸ்கள் தான் முதலில் பிரான்சில் ராஜவம்ச வழியை கொண்டுவந்தவர்கள். அடிப் படையில் ஜெர்மனியின் பழங்குடிப் பிரிவின் ஒன்றிலிருந்து தான் ஃப்ரான்ஸ் என்ற வார்த்தை வந்தது.   ஐந்தாம் நூற்றாண்டில் மெரோ வின்ஜியன் பேரரசில் மெரோவிச் என்ற தலைவர் இருந்தார். ஃப்ராங்க்ஸ்களின் எதிர்காலம் இவரின் பேரன் க்ளோவிஸ் என்பவனில் இருந்து துவங்கியது. 481 ல் க்ளோவிஸ் முடிசூட்டிக்கொள்ளும் போது 15 வயது. அப்போது இந்த மெரோவின்ஜியன் பேரரசின் தலைநகரம் தூர்னை (தற்போதைய தெற்கு பெல்ஜியம்). க்ளோவிஸின் இரண்டு செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் சரித்திரத்தை மாற்றியது. ஒன்று தன் பார்பேரிய (பார்பரியம் என்றால் நாகரீகமற் றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொருள்) மன்னராட்சியை ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி வரை பரப்பினான். இரண்டு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவனாக மதம் மாறினான். மற்ற பார்பரிய ஆட்சியாளர்கள் அரியனிஸம் என்ற மதக்கொள்கையில் இருந்தார்கள். க்ளோவிஸ் சோம்மி என்ற பகுதியில் இருந்து லொய்ரி என்ற பகுதி வரை மனசாட்சியற்ற வகையில், பல சதித்திட்டங்கள் தீட்டி சக பழங்குடியின பகுதிகளைக் கைப்பற்றினார். தென் கிழக்கிலிருந்த பர்கண்டியர்களை தனக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினான். தென் மேற்கில் விசிகோத் என்பவர்களையும் வென்று 507 ல் மெடிட்டரே னியன் கரை தவிர்த்து மொத்த பிரான்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
                           இந்த வெற்றிக்கு அவன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியதும், காவுல் பகுதி மற்றும் ரோமுக்கு மரியாதை செலு த்தும் மற்ற அரிய இன விசிகோத்களும் பெரிதும் உதவியது தான் காரணம். மேலும், சிறந்த கிறிஸ்தவ வம்சத்தை தன்னுடன் இணை த்துக்கொண்டான். கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றதின் மூலம் கெண்டைச் சேர்ந்த பக்திமிகுந்த ஈதெல்பெர்ட் என்பவளை திருமணம் செய்திருந்தான். மீண்டும் பர்கண்டிய இளவரசிகளோ டில்டா என்பவளை மணந்தான். எதிரியான மற்றொரு ஜெர்மனிய பழங் குடியான அலமன்னியை தோற்கடிக்க தன் கணவனின் கிறிஸ்தவ மதமாற்றமே காரணம் என்றுகூறினாள். அலமன்னியை வென்றதின் பிறகு, அவனின் இராணுவத்தினர் 3000 பேரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். க்ளோவிஸ் பாரிஸை தலைநகராக மாற்றிக் கொண்டு கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த புராதன சாலியன் ஃப்ராங்க்ஸ் சட்டங்களை இயற்றினான். இவனின் தலைநகர் மாற்றத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பி கலவரமாகியது. இவனின் சாலியன் சட்டத்தை மட்டும் சில நாள் கழித்து ஏற்றுக்கொண்டனர். வட ஐரோப்பாவிலும், பிரான்சிலும் இவன் மன்னராட்சி புதிய எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறியது.
                               511 ல் க்ளோவிஸ் இறந்த பிறகு இவனது பகுதிகள் இவனின் நான்கு மகன்களால் பிரிக்கப்பட்டது. அவன் நீண்டகாலமாக உருவாக்கிய பேரரசு சமபாகமாக பிரிக்கப்பட்டு வலுவி ழந்தது. சில நாட்களில் மீண்டும் விரிவாக்கப்பட்டு முற்காலங் களில் மரியாதை செலுத்திய பர்கண்டி இணைக்கப்பட்டு 534 ல் ஃப்ரங்கிஷ் மன்னராட்சியானது. ஃப்ரங்கிஷ் மூன்று தனி மன்னராட்சியாக மாறியது. பழைய இடங்களும், நவீன பெல்ஜியம் மற்றும் வட கிழக்கு பிரான்சும் இணைந்து ஆஸ்ட்ரேஷியா ஆனது. க்ளோவிஸால் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய பிரான்சு பகுதி நியூஸ்ட்ரியா என்று அழைக்கப்பட்டு, பர்கண்டி அதன் சொந்த பெயரிலேயே இருந்தது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக க்ளோவிஸின் வழிவந்த வாரிசுகள் ஆண்டுவந்தார்கள். இடையில் நியூஸ்ட்ரியாவும், பர்கண்டியும் இணைக்கப்பட்டன. பின்னாளில் எல்லா பகுதிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே அதிகாரத்திற்கு வந்தது. 613 லிருந்து 639 வரை இரண்டாம் க்ளோடயர் மற்றும் அவன் மகன் முதலாம் டகோபெர்ட் ஆகியோரின் ஆட்சி உதாரணமாக அமைந்தது. டகோபெர்ட் இறந்ததும் ஃப்ரங்கிஷ் மன்னர்கள் மெதுவாக தங்கள் சொந்த அதிகாரத் தை இழக்க ஆரம்பித்து, ஜப்பானின் ஷோகுன் போல் அரண்மனை மேயர் மன்னரின் சமஅந்தஸ்துக்கு வந்தார்.
                               ரோமர்கள் சாம்ராஜ்ஜியத்தில் ‘மஜோர் டோமஸ்’ என்ற பதவியில் ஒருவர் இருந்து கொண்டு அரசு நிர்வாக த்தைக் கவனித்துக் கொள்வார். ஃப்ரங்கிஷ் மன்னர்களும் அதே போன்று பதவிஉருவாக்கி தங்கள் ஆட்சியில் தலைமை நிர்வாக அதிகாரியை ‘மேஜர் பலாட்டி’ என்று அழைத்தனர். மேஜர் பின்னாளில் மேயர் என்று ஆகியது. இந்த மேஜர் பலாட்டிகள் மன்னருக்கும், இளவரசருக்குமான தொடர்புகள், ஆட்சியில் மன்னருக்கான ஆலோசனைகள், இராணுவ உத்தரவுகள் ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டனர். ஏழாம் நூற்றாண்டின் இடையில் ஆஸ்ட்ரேஷியா, நியூ ஸ்ட்ரியா மற்றும் பர்கண்டிக்கான மேயர்களுக்கிடையே அதிகா ரத்தில் குழப்பம் ஏற்பட்டது. 679 ல் இரண்டாம் பெபின் என்ற ஆஸ்ட்ரேஷியாவின் மேயர் ஒரு மேயரின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் செயல்படவேண்டும் என்று விடாமல் போராடி மூன்று அரசுக்கும் தானே முதல்முறையாக மேயரானார். இவரின் அதிகாரத்தில் புதிய கம்பீரமான பேரரசு உதயமானது. 714 ல் இரண்டாம் பெபின் மரணமடைந்தவுடன் கலவரம் வெடித்தது. இரண்டாம் பெபினுக்கு முறையான குழந்தைகள் இல்லை. தவறான உறவுகளின் மூலம் பிறந்த மகனும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். உள்நாட்டு கல வரத்தில் இரண்டாம் பெபினின் முறையற்ற மகன் சார்லஸ் வென்று நாட்டை கைப்பற்றினான். இவனின் இராணுவத்திறமையால் சார்லஸ் மார்டெல் “தி ஹாம் மர்” என்று ஐரோப்பியர்களால் பின்னாளில் புகழப்பட்டான். இவனின் கிறிஸ்தவப் பெயர் கரோலஸ் (CARO LUS) என்பதால் இவனின் கீழ் வந்தவர்கள் கரோலின்ஜியன்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மங்கோலியர்கள் வரலாறு 4



1259 ல் ஹுலகுவால் அலிப்போ மற்றும் டமாஸ்கஸ் நகரம் கைப்பற்றப்பட்டது. இதனால் தென்கடற்கரைப் பகுதியில் எகிப்தின் வழி அவர்களுக்கு திறக்கப்பட்டது. 1260 ல் எகிப் தின் மம்லுக் சுல்தானின் ஜெனரல் ஒரு வரால் பைபர்களால் நாஸ ரெத் நகரத்திற்கருகில் அய்ன் ஜாலூத் என்ற இடத்தில் எதிர்கொள்ள ப்பட்டது. மிகக் கடுமையான உலகப்போர்களில் ஒன்றான இதில் பைபர்கள் மங்கோலியர்களை வென்றார்கள். மங்கோலியர்கள் அய்ன் ஜாலூத் தில் மம்லூக் என்னும் சாதாரண அடிமைப்படைக ளிடம் தோற்றார்கள். பைபர் என்னும் எகிப்தின் இராணுவக் கமாண் டரை சில ஆண்டுகளுக்கு முன் தான் மங்கோலியர்கள் கைது செய்து அடிமைச் சந்தையில் விற்றிருந்தார்கள். அவர் தன் திறமை யால் எகிப்து இராணுவத்தில் உயர்பதவியில் இருந்து இன்று அதே மங்கோலியர்களை எதிர்த்தார். 50 ஆண்டுகளான போர்களில் முதல் முறையாக ஜெங்கிஸ்கானின் வம்சம் தோல்வியுற்றது. அய்ன் ஜாலூத் தோல்வி மங்கோலி யர்களின் அதிகாரத்தை மேலும் வளரவிடாமல் தடுத்தது. பாலஸ்தீனமும், சிரியாவும் எகிப்தின் மம் லூக்குகளின் பேரரசுடனே இருக்கவும், மெஸோபோ டாமியாவும், பெர்ஷியாவும் மங்கோலிய பேரரசுடன் இருந்தது.
                     அய்ன் ஜாலூத் தோல்விக்குப் பிறகு, ஹுலகுவும், அவர் சந்ததியினரும் கருங்கடலின் கிழக்கே வாணிபவழியான தப் ரிஸ் என்ற இடத்தை தலைநகராக்கிக் கொண்டார்கள். ஹுலகு மம் லூக்குகளிடமிருந்து சிரியாவையும், பாலஸ்தீனத்தையும் கைப்பற்ற எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், பேரரசின் மேற்கு எல்லை யாக யூப்ரடிஸ் நதிக்கு மேல் முன்னேற முடிய வில்லை. கிழக்கில் இந்துஸும், அமுதர்யாவிலிருந்து கீழ் வடக்கில் இந்தியப் பெருங்க டல் வரை கான்களின் பேரரசு இருந்தது. ஹுலகுகான் 1335 ல் மரண மடைந்தார். பெர்ஷியாவில் சிறிய ஆட்சியாளர்களின் வெற்றியா லும், மத்திய ஆசியாவின் மலைப்பகுதியிலிருந்து கிளம்பிய இன் னொரு கூட்டத்தினரின் வருகையாலும், ஜெங்கிஸ்கான் என்னும் தனிமனிதனின் சந்ததி முடிவுக்கு வந்தது. சீனாவிலும் 1368 ல் யூவன் பேரரசு முடிவுக்குவந்து மிங்க் ஆட்சி துவங் கியது. 1383 ல் தைமூரி யர்கள் வடக்கு பெர்ஷியாவில் நுழைந்தனர். ரஷ்யாவிலும் அடுத்த கால்நூற்றாண்டுகளில் தங்க நாடோடிகளின் ஆட்சி சரிவை நோக்கி நகர் ந்தது. 1380 ல் மாஸ்கோவின் இளவரசர் குலிகோவோ என்ற இடத்தில் தோற்கடி த்தனர். 1395 ல் தைமூரியர்கள் சராய் பெர்கே நகரை அழித்தனர். ரஷ்ய சரித்தி ரத்தில் டடார்கள் என மங்கோலி யர்கள் அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் அதிகார த்தில் போட்டியிட்ட ஒரே இனம் மங்கோலிய இனம் மட்டுமே. மங்கோலியாவின் உலா ன்பாடர் நகரில் உள்ள ஜெங்கிஸ்கானின் குதிரையில் வீற்றிருப்பது போன்ற சிலை மிகவும் உயரமானது. கீழிருந்து இயந்திரத்தில் (லிப்ட்) சென்று பின்பு கழுத்துப் பகுதியிலிருந்து ஏணியில் செல்ல வேண்டும்.
                                 சரித்திரத்தில் மிக குறுகிய காலத்தில் பிரமாண்ட வெற்றிபெற்று வெகு விரைவில் அதிகாரம் இழந்தது மங்கோலியர்கள் தான். மங்கோலியர்களின் வெற்றி இணையற்ற திறமையால் பெற்றது. ஜெங்கிஸ் கானின் கல்வியறிவில்லாத கால த்திலிருந்து வந்த இவர்கள் பின்னாளில் துருக்கியர்களின் எழுத்தை பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பழக்கப்படுத்திக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட மதமும் ஷாமானிஸம் (ஷாமானிஸக் கொள்கை யானது இயற்கையை வணங்குவதாகும்) என்ற கொள் கையைக் கொண்டது. மங்கோலியர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய கார ணமாகக் கருதுவது அவர்கள் ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் க்ரே ட் கானால் மூன்று பகுதிகளுக்கு திசை மாறி வெற்றி கொண்டதே என்பதாகும். சீனாவில் அவர்கள் திபெத்துடன் பலமான உறவு வைத் திருந்த காரணத்தால் புத்தமதத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குஆசியாவில் அவர்கள் வெற்றிகொண்ட பகுதிகள் முஸ்லீம் கலீஃபாக்கள், லத்தீன் ஜெருசலம் மற்றும் பைஸாந்திய பேரரசின் எல்லைகளை ஒட்டி இருந்ததால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவமதத்தை சார்ந்திருக்க வேண்டியதாகி இருந்தது. 1255 ல் பெர்கே தான் முதலில் இஸ்லாத்தைத் தழுவினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 1258 ல் ஹுலகு (இவர் மனைவி நெஸ்டோரியன் கிறி ஸ்தவர்) பாக்தாதை அழித்து (இஸ்லாமிய உலகுக்கு இன்றுவரை ஈடு செய்யவே முடியாத ஒரு இழப்பு) இஸ்லாமிய கலீஃபாவைக் கொன்றார்.
                              இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கி ஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டு வந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள்.
                                குப்ளாய்கான் சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, சீனாவில் மிங்க் பேரரசு ஆட்சி செய்து வந்தது. யூவான் பேர ரசு சீனாவில் தூக்கி எறியப்பட்ட பிறகு, குப்ளாய்கான் மிங்க் பேரர சுடன் போரிட்டார். 1380 ல் மிங்க் இராணுவம் மங்கோலியர்களின் கரகோரம் நகரை சேதப்படுத்தியது. ஆனால், மங்கோலியர்கள் விடா மல் தங்களின் பிறப்பிலேயே அமைந்த புராதன தாக்குதல் முறை யில் தொடர்ந்து சீனாவின் எல்லைகளை தாக்கிக் கொண்டிருந்தார் கள். குப்ளாய்கான் சீன பாரம்பரியத்திலான அரண்மனையிலேயே தங்கி இருப்பதை விரும்பினார். இதனூடே சீனாவில் திபெத்தியர்க ளுடனும், மன்சூஸ்களுடனும் மங்கோலியர்கள் நல்ல உறவைப் பேணி வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தலாய்லாமாவு டன் இருந்த நெருக்கமான உறவால் மங்கோலிய பழங்குடிகள் புத் தமதத்தை தழுவினார்கள். குப்ளாய்கான் ஜெங்கிஸ்கான் பரம்பரை யிலேயே சற்று வித்தியாசமாக இருந்தார். கலைரசிகராகவும், நிர் வாகத் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். நிறைய சீன கலாச் சாரமுள்ள கட்டிடங்களை நிர்மாணித்தார். சீன நாட்காட்டியை பய ன்படுத்தினார். மத்திய கிழக்கு முஸ்லீம் மருத்துவர்களை வரவ ழைத்து மருத்துவமனைகளைக் கட்டினார். 36 பகுதி இஸ்லாமிய மருத்துவபுத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்க வைத்தார். முஸ் லீம், கிறிஸ்தவ, சீன, லத்தீன் போன்ற பல மத தலைவர்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.      
                           90 ஆண்டுகால மங்கோலிய சீன ஆட்சியில் பல நன்மைகள் விளைந்தாலும், நாட்டுக்குள்ளேயே உள்நாட்டு குழ ப்பங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. புத்த மதக்கோட்பாடு இரத்தம் சிந்துவதற்கு எதிராக இருந்த தால் மங் கோலியர்களுக்கு போரிடு வதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இராணுவத்திலும் முறை கேடுகள் நடந்தன. ஜப்பான், வியட்நாம் மற்றும் ஜாவா தீவுகளுக்கு அனுப்பப்பட்ட மங்கோலிய இராணுவம் தோல்விகண்டு திரும்பின. குப்ளாய்கானின் மனைவி சாபியின் மரணமும், அடுத்த ஐந்தாம் ஆண்டில் அவர் மகன் மரணமும் அவரை நிலைகுலைய செய்தன. தன் ராஜகம்பீரமான வாழ்க்கை தரத்தை வெறுக்க ஆரம்பித்தார். நாட்டில் ஊழல் தலை தூக்க ஆரம்பித்தது. நாட் டின் நடைமுறை செலவுகளுக்கு வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயமாகியது. மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் மங்கோ லிய குடும்பங்கள் மத்திய ஆசியாவை நோக்கி சென்றன. நாட்டில் அமைதி ஏற்படவேண்டி மக்களிடையே மிகவும் பிரபலமான குடும் பத்தைச் சேர்ந்த ஜு யூவான்ஸ்ங்க் என்பவர் தலைமையேற்று மிங்க் பேரரசை நிறுவி மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டார்.
                              பதினாறாம் நூற்றாண்டில் மங்கோலியர் களின் கிழக்குப்பகுதி மன்சூஸ்கள் சற்று பலம் பெற்றார்கள். இத னால் அந்த பகுதி மங்கோலியர்கள் மன்சூஸ்களின் பிரதேச மக்க ளாகிப் போனார்கள். அவர்கள் இரு பிரிவுகளுக்குள்ளும் திருமண உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு நட்பாகிப் போயினர். 1644 ல் மன்சூஸ்கள் மிங்க் பேரரசை எதிர்த்து போரிட்டு கிங்க் பேரரசு என்ற ஒன்றை புதியதாக உருவாக்கினார்கள். அந்த பகுதி மங்கோலிய மக் கள் சீனாவாசிகளாகவே ஆகிப்போனார்கள். 1691 வரை வெகு தொலைவில் இருந்த சில மங்கோலியர்கள் மட்டும் சீனப் பேரரசி லேயே வெளி மங்கோலியர்களாய் இருந்தார்கள். பதினேழாம் நூற் றாண்டுகளில் மன்சூஸ் பேரரசுடன் இருந்த மங்கோலியர்கள் 1912 ல் மன்சூஸ் பேரரசு வீழ்ந்து சீனா விடுதலை (ரிபப்ளிக் ஆஃப் சீனா) அடைந்ததில் சீன மக்கள் ஆகினார்கள்.
                        சீனாவின் வெளிப்புறத்தில் இருந்த மங்கோலி யர்கள் சீனாவால் முற்றிலும் கைவிடப்பட்டு தனியாகிப் போனார் கள். 1912 ல் ரஷ்யாவின் உதவியால் வெளி மங்கோலியர்கள் சீனா, ரஷ்யா என்ற இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையில் தனியாக செயல்பட்டு வந்தது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த பல னையும் அளிக்கவில்லை. இறுதியில் 1946 ல் மங்கோலியா சுதந்திர நாடாக அங்கீகாரம் பெற்றது. (மங்கோலியன் பீப்பிள்ஸ் ரிபப்ளிக்) சர்வதேச நாடுகளின் ஐக்கிய நாட்டு சபை 1961 ல் அங்கீகாரம் அளித்தது.