மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 13



பாகம் : 13
சிரிய மக்களே கை நீட்டி தன்னிடம் உதவி கோருவதை கண்டு ஸலாவுத்தீன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிரிய மக்களே சரியான தீர்ப்பு தந்தபின் அவர் அல்லாஹ்வின் நம்பிக்கையுடனும், தன் படைபல உதவியுடனும், தன்னம்பிக்கையுடனும் ஃப்ராங்க்ஸுக்கு சிறிதும் பயப்படாமல் டமாஸ்கஸ் புறப்பட்டார். முதலில் அவர் பஸ்ரா நகருக்கு பயணித்தார். அதன் இளவரசர் நல்ல முறையில் ஸலாவுத்தீனை வரவேற்றார். பின் ரபி அல் அவால் 570 A.H. ல் (1174 C.E. ) டமாஸ்கஸ் வந்தடைந்தார். அங்கு கோட்டை சரணடையும் வரை அவர் தன் தந்தையின் பழைய முந்நாள் வீட்டில் தங்கினார். பின் அரசுக் கருவூலங்களைக் கைப்பற்றினார். சுயநலத்திற் காகவோ, தவறான ஆடம்பர வழிமுறைக்காகவோ அவர் அப்படிச் செய்யவில்லை. இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு விளக்கு சுழளும் ஆடம்பர வாகனத்தில் பயணித்துக் கொண்டும், மேலும் எண்ணிலடங்கா பல விலை மதிப்பில்லா ஆடம்பர வாகனங்களை பெருமைக்காக அரண்மனை யில் அடுக்கி நிற்க வைத்து விளம்பரம் தேடிக்கொள் பவர்கள் போலில்லாமல், அவரின் அன்றாட வாழ்க்கை சாதாரண குடி மக்களின் வாழ்வு போலவே இருந்தது.
அரசுப் பணத்தை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கேற்ப வறுமையை போக்குவதற்கும், நோய்களைத் தடுப்பதற்க்கும், இல்லை என்று வருபவர்களுக்கும் தாராளமாக வழங்கினார். ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் வந்ததை மக்கள் டமாஸ்கஸ் நகரில் பெரும் திரளாக கூடி ஊர்வலமாக்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர். ஒரு நாள் இவர் ஜெருசலத்தை மீட்டி, நாட்டை ஒன்று படுத்தி உலகில் இஸ்லாமிய ஒளியை பரவச் செய்வார் என்று நம்பினர். கவிஞர்கள் ஸலாவுத்தீனை ஜிஹாத் வழியில் போராடி வெற்றி கொள்ள வந்த வீரர் என கவிதைகள் புனைந்தனர். இன்றும் அரபு நாட்டு நூலகங் களில் இவர் மீது வாஜிஷ் அல் அஸாதி, நஷூ அத் தௌலாஹ் அபுல் ஃபத்ல், ஸா அதாஹ் இப்னு அப்துல்லாஹ் ஆகிய கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் இருக்கின்றன. ஸாலாவுத்தீன் டமாஸ்கஸ் நீதித்துறை யில் இருந்து மக்களுக்கு நியாமும், அவர் களின் உரிமைகளையும் கிடைக்கச் செய்து முன் ஆட்சியாளர்கள் விதித்த அநியாய வரிகளை நீக்கினார். டமாஸ்கஸில் ஆட்சியை நிலைப்படுத்திய பின், அலிப்போ நகரின் நடுநிலையாளருக்கு, ‘நான் இந்த நாட்டுக்கு வருகை தந்தது அல் மாலிக் அஸ் ஸாலிஹிக்கு எனது ஆதரவை தெரிவிக்கவும். இஸ்லாமிய கோட்பாடுகளை ஒருமைப் படுத்துவதற்க்கும், எதிரிகளைத் தடுத்து, மக்களை நேர்வழிப் படுத்தவும், அல் மாலிக்குக்கு ஆட்சி முறையை கற்றுக் கொடுக்கவே அன்றி வேறு காரணமில்லை’ என்று கூறினார்.
ஹாம்ஸ், ஹமாஹ் மற்றும் அலிப்போ
டமாஸ்கஸை அடக்கி சிறிது நாள் அங்கு தங்கி அதன் அரசு காரியங்களை சரிப்படுத்தினார். பின் தனது சகோதரர் ஸைஃப் அத்தீன் டக்டகின் என்பவரை அதன் ஆட்சியாளராக்கி விட்டு ஹாம்ஸ் என்னும் நகரை நோக்கிச் சென்றார். அதை வெற்றி கொண்டு தன் தளபதிகளை கோட்டையை முற்றுகை இடச் செய்து ஹாம்ஸ் நகரை பாதுகாப்பாக்கி விட்டு ஹமாஹ் நகரம் நோக்கி நகர்ந்தார். ஸலாவுத்தீன் எகிப்தில் மூன்றாம் முறை போர் செய்யும் போது தளபதிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்ஸத் தின் ஜுர்திக் என்பவன் ஹமாஹின் ஆட்சியாளராக இருந்தான். அவன் இப்போது ஸலாவுத்தீனுக்கு அடி பணியாமல் முரண்டு பிடித்தான். ஸலாவுத்தீன் அவனிடம், தான் ஃப்ராங்க்ஸிடமிருந்து ஹமாஹை பாதுகாக்கவும், மோஸூலின் ஆட்சியாளர் ஸைஃப் அத்தீன் பிடியில் இருந்து அல் ஜஸீராஹ் நகரைக் கைப்பற்றவே வந்திருப்பதாகவும், தான் என்றுமே இளவரசர் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் அவர்களை ஆதரிக்கிறேன் என கூற அதை ஒப்புக் கொண்டு இஸ்ஸத் தின் ஜுர்திக் ஸலாவுத்தீனிடம் சரணடைந்தான். மேலும், ஸலாவுத்தீனுக்கும் அலிப்போ நகரின் ஆட்சியாளர் ஸா அத்தீன் கமஷ்தகினுக்கும் இடையே தூதுவராக சேவை செய்வ தாகவும் கூறினான்.

கருத்துகள் இல்லை: