மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 15



பாகம் : 15
இதனால் ஏமாற்றமடைந்த ஸா அத்தீன் கமஷ்தகின் சிலுவைப் போராளிகளின் உதவியை நாடினான். அவர்கள் மூன்றாம் ரெய்மண்ட் தலைமையில் ஒரு படையை அனுப்பினர். ஸலாவுத்தீன் அலிப்போ நகருக்கு சுதந்திரம் வழங்கி ஹாம்ஸ் நகர் திரும்பி சிலுவைப் போராளிகளை எதிர்க்க வந்தார். ஸலாவுத்தீன் வருகையை அறிந்த சிலுவைப் போராளிகள் போரிடாமல் ஓடி விட்டனர். பின் ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் திரும்பி “பா அல்பக்” நகரைக் கைப்பற்றினார். இதனிடையே ஸலாவுத்தீன் நூருத்தீனின் இளவரசர்களாலெயே தன்னைக் கொல்ல திட்டமிட்ட சதிகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. ஸலாவுத்தீன் மேலும், மேலும் சிரியாவின் நகரங்களை வெற்றி கொள்வதை கண்டு மற்ற நகரங்களின் ஆட்சியாளர்கள் மோஸூலின் ஆட்சியாளர் ஸைஃப் அத்தீன் காஸியிடம், அல் மாலிக் அஸ் ஸாலிஹிக்கு உதவி செய்து ஸலாவுத்தீனை தடுக்கு மாறு கூறினர். அவர் போர் வீரர்கள், ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் என பெரும் படையை தயார் படுத்தினார். ஸைஃப் அத்தீன் காஸி பெரும் படையுடன் ஸலாவுத்தீனை நோக்கி வந்தார்.  ஸலாவுத்தீன் போரைத் தவிர்க்க அவரிடம், அவரை சிரியாவின் துணை ஆட்சியாளராக்குவதாகவும் அல் மாலிக்கிடம் இருந்து சிரியாவைப் பார்த்துக் கொள்ளவும் கூறினார். மேலும் தங்களிடையே உண்டாகும் போர் நிறைய உயிர் சேதங்களை விளைவித்தும், ஃப்ராங்க்ஸுக்கு ஆதாயமாகவும் ஆகிவிடும் என்று கூறினார். ஆனால், ஸா அத்தீன், ஸலாவுத்தீனை வெற்றி பெற்ற நகரங்களைத் தங்களிடம்  ஒப்படைத்து விட்டு அவரை வந்த வழியே எகிப்து திரும்பிச் செல்லுமாறு கூறினார். போர் புரிவதைத் தவிர ஸலாவுத்தீனுக்கு வேறு வழியில்லாமல் போனது. அவர் போருக்கு தயாராகி ஹாமாஹ் என்னுமிடத்தில் 570 A.H. ல் ஒரு போர்வீரன் காயம்பட்ட மற்ற போர்வீரனுக்கு உதவக்கூட முடியாத வண்ணம் மிகக் கடுமையாக அவர்களுடன் போரிட்டு வென்றார். ஸா அத்தீன் காஸியின் எஞ்சிய படைகள் தப்பித்து அலிப்போ நகருக்கு ஓடியது. ஸலாவுத்தீன் அவர்களைத் தொடர்ந்து வேட்டை ஆடிய வண்ணம் அலிப்போவில் அவர்களைச் சுற்றி வளைத்து அவர்களின் உடமைகளைக் கைப்பற்றினார். விடாமல் மோஸூல் வரை சென்று சுல்தான் மலைப் பகுதியில் எஞ்சியவர்களை வளைத்தார். அதன் பிறகு, வரிசையாக சிரியாவின் நகரங்கள், கோட்டைகளான பஸாஹ், மன்பஜ், அஸாஸ் ஆகியவைகளைக் கைப்பற்றினார்.
அவர் திரும்பி அலிப்போ வந்த போது, நூருத்தீனின் இளைய மகளும், அல் மாலிக் அஸ் ஸாலிஹின் சகோதரி அவரை சந்திக்க வந்தாள். அவளை நல்ல முறையில் மரியாதையாக வரவேற்று விலையுயர்ந்த பரிசுகளை அளித்தார். அந்த இளவரசி தங்களுக்கு அஸாஸ் நகரை திரும்ப தருமாறு வேண்ட உடனே அதை திருப்பி அவர்களுக்கே அளித்து, அவர்களின் தந்தை நூருத்தீனின் பேரில் தான் கொண்ட நன்றி விசுவாசத்தின் காரணமாக அலிப்போ நகரின் எல்லை வரை வந்து இளவரசியை வழியனுப்பினார்,
தடைகள் நீங்கி சமாதானம் ஏற்பட்ட பின், உண்டான உடன்படிக் கைக்கு அல் மாலிக் அஸ் ஸாலிஹ் உடன்பட்டார். ஸலாவுத்தீ னால் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களின் ஆட்சி உரிமை அவருக்கென்றும். அதாவது, டமாஸ்கஸ், ஹாம்ஸ், ஹமாஹ், அல் ம அர்ராஹ் நகரங்கள் மற்றும் சில சிறிய நகரங்கள், கோட்டை களின் ஆட்சி உரிமை ஸலாவுத்தீனுக்கும், அலிப்போ நகரமும் அதைச் சுற்றி உள்ள நகரங்களின் ஆட்சி உரிமை அல் மாலிக் அஸ் ஸாலிஹுக்கு என்றும் முடிவானது.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு, 576 A.H. ல் ஸலாவுத்தீன் தனது விடுபட்ட அரசு பணிகளை கவனிக்க எகிப்து திரும்பி வந்தார். எகிப்து வந்த அதே வேகத்தில், தனது 19 வயதில் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் மரணமடைந்த செய்தியும், அவரின் கட்டளைப் படி அவரின் நெருங்கிய உறவினரும், மோஸூலின் ஆளுநருமான இஸ் அத்தின் மஸ் வூத் ஆட்சிப் பொறுப்பேற்றார் என்ற செய்தியும் கிடைத்தது.
இஸ் அத்தீன் மஸ் வூத் தனக்கு அலிப்போவின் ஆட்சி உரிமை கிட்டி இருப்பது அறிந்து உடனே மோஸூலை விட்டு அலிப்போ விரைந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சன்ஜார் நகரின் ஆட்சியாளராக இருந்த அவரின் சகோதரர் இமாத் அத்தீன், இஸ் அத்தீன் மஸ் வூதிடம் தனக்கு அலிப்போ ஆட்சியைத் தந்து விட்டு அவரை சன்ஜாரின் ஆட்சியை எடுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். அதன் படி 578 A.H. முஹர்ரம் 13 ல் இமாத் அத்தீன் அலிப்போவின் ஆட்சியாளரானார். இவரின் ஆட்சியை அலிப்போ மக்கள் விரும்பவில்லை. 570 A.H. ல் இமாத் அத்தீனை அடக்கி ஸலாவுத்தீன் அலிப்போவைக் கைப்பற்றிய போது அம் மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் ஸலாவுத்தீனை வரவேற்றனர். கவிஞர்களும் நேர்மையாளர்களும் அவரைப் பாராட்டினர். அதில் டமாஸ்கஸின் உச்ச நீதிபதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகியின் கவிதை மிகவும் புகழ் பெற்றது. ஏனென்றால், அவர் சபர் மாதத்தில் அலிப்போவை வென்ற நீங்கள் ரஜப் மாதத்தில் ஜெருசலத்தை வெல்ல வேண்டும் என புகழ் பாடி இருந்தார். ஆம் நான்கு வருடங்களுக்குப் பிறகு சரித்திரத்தில் ரஜப் மாதம் அது நடந்தது. மேலும், யூஸுஃப் அல் பரா இ, அபு தை அந் நஜ்ஜார் ஆகியவர் களும் கவிதை எழுதியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: