மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 21



பாகம் : 21
ஸடீவன்சன் என்பவர், ஸலாவுத்தீன் பெரும்பாலானவர்களை ஈட்டுத் தொகை இல்லாமல் விடுதலை செய்தார் என சொல் கிறார். அர்னால்ட் என்பவர், ‘சுல்தான் குறிப்பிட்ட ஒரு நாளில் ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும் தொகை பெறாமல் விடுதலை செய்தார். புத்திசாலிகளையும், வசதிபடைத் தவர் களையும் அவர்களின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள கூறினார். அவர்களால் கொண்டு செல்ல முடியாத பொருட்களை முஸ்லீம்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அனுமதித்தார். ஸலாவுத்தீனின் சகோதரர் அல் மாலிக் அல் அதில் ஏழாயிரம் ஊனமுற்றவர்களை ஈட்டுத் தொகை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டுகோள் வைத்தார். ஸலாவுத்தீன் பத்தாயிரம் பேருக்கு அனுமதியளித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஸலாவுத் தீனின் இரக்க குணத்தால், இரண்டாம் சிலுவைப் போரில் ஹத்தீன் வெற்றிக்குப் பிறகு ஃப்ராங்க்ஸின் குரோதமும், பழி வாங்கும் குணத்தின் போக்கும் முதல் போரை விட சற்றுக் குறைந்திருந்தது.
பிரிட்டிஷ் சரித்திர ஆய்வாளர் மில், “ஜெருசலத்தை விட்டு வெளி யேறிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஆண்டியாக் நகரை  அடைந் தனர். அவர்களின் பரிதாபம் அதன் இளவரசர் போர் பாதிப்பி லிருந்து வந்த அவர்களுக்கு எந்த உதவியும், ஈடும் தராமல், ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டினார். அவர்கள் அருகே உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு செல்ல முஸ்லீம்கள் அவர்களை வரவேற் றனர்”. என்று கூறுகிறார். மேலும் இளவரசர் அலி கூறுவதாவது:    ஜெருசலத்தை விட்டு வெளியேறிய கிறிஸ்தவர்களை, அவர் களின் கிறிஸ்தவ சகோதரர்களாலேயே அவர்கள் நடத்தப் பட்ட அவலத்தைப் பற்றியும் மிஷுத் என்பவர் விவரிப்பதாவது, ‘அவர் கள் பசியினாலும், வறுமையாலும் வாடினர். சிரியா மனிதாப மற்று நடந்து கொண்டது. இவர்கள் வரும் முன் திரிபோலி தனது எல்லைகளை மூடிக்கொண்டது. ஒரு பெண்மனி கிறிஸ்தவ மக்களை சபித்த வண்ணம் வலுக்கட்டாயமாக தன் குழந்தையை கடலில் தூக்கி வீசினார்’ எனக் கூறுகிறார்.
ஒரு பரம்பரை பணக்காரன்  பெரும் பொருட்களுடன், தன் இன ஏழை கைதி ஒருவனைக் கூட கருணை அடிப்படையில் தொகை செலுத்தி விடுதலை செய்யாமல் சென்றான். ஸலாவுத்தீனிடம், “தாங்கள் ஏன் அவன் பொருட்களை பறிமுதல் செய்து அதை முஸ்லீம்களின் நன்மைக்காக செலவிடக் கூடாது?” எனக் கேட்க, அவர்,” நான் எப்போது 10 தினார் வசூலிக்க முடிவெடுத்து விட்டோனோ ஏன் அவனை மற்றவர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும்?” எனக் கூறினார். சுல்தான் கிறிஸ்தவ மத குருக்கள் என்றால் பொதுநலமும், தூய்மையும் கொண்டவர்கள் என்று நினைத்திருந்தார்.
இதே சிலுவைப் போராளிகள் முஸ்லீம்கள் மீது நடத்திய கொடுமைகளுக்கு பிறகு, அவர்கள் மீது ஸலாவுத்தீன் காட்டிய  மன்னிப்பைப் பாருங்கள். ஒரு கவிஞரின் வரிகளாவது :
எப்போது நாங்கள் ஜெருசலத்தை ஆண்டோமோ நீதியை பரவச் செய்தோம்.                                                        எப்போது நீங்கள் (எதிரிகள்) ஆண்டீர்களோ இரத்தத்தை பரவச் செய்தீர்கள்.                                              பிடிபட்டவர்களை கொல்வதை அனுமதி அளிக்கப் பட்டதாக ஆக்கிக் கொண்டீர்கள்.                                         நாங்கள் மன்னிப்பையும், கருணையையும் கடமையாக்கிக் கொண்டோம்.                                                       ஆம், நம்மிடையே ஆன வேற்றுமைகளில் நாம் திருப்தி கொண்டோம்.
ஹத்தீன் போர் முஸ்லீம்கள், எதிரிகளின் பொதுமக்களை நடத்திய விதமும், முன்னர் சிலுவைப் போராளிகள், முஸ்லீம் பொதுமக்களை நடத்திய விதத்திலும் உள்ள வித்தியாசத்தைக் காட்டியது.
சிலுவைப் போரை வெல்வதற்கான காரணம்
நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெறுப்பாக எதிரிகளால் சூறை யாடப்பட்டும், ஊழல் செய்யப்பட்டும், சின்னா பின்னப்பட்ட ஜெருசலத்தை மீட்டு மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்பதே ஸலாவுத்தீனின் முக்கிய காரணமாக இருந்தது. போரின் வெற்றி வெறும் வீரர்களாலும், திட்டமிடுத லாலும் மட்டுமே வந்ததல்ல. உண்மையான காரணம் நபிகளார் பத்ர், அஹ்ஸாப் போர்களில் வகுத்த திட்டத்தை அப்படியே நடை முறைப்படித்தியதே. கதிஸியாஹ், யர்முக் போர்களில் அமைந் தது போல் நல்ல படைத்தோழர்கள் அமைந்ததும் ஒரு காரணம். அல்லாஹ் திருக்குர் ஆனில் தான் அதிகாரம் அளிக்கும் ஆட்சி யாளர்கள் பற்றியும், ஜிஹாத் பற்றியும் ( அல் ஹஜ் 22:40-41/அந் நூர் 24:55/அல் அன்ஃபால் 8:10-12-13) என்று பல இடங்களில் கூறு கிறான்.
அக்ராவில் மூன்றாம் சிலுவைப் போர்              
ஹத்தீன் போருக்கு பிறகு, அமைதியும், சமாதான அடிப்படைக்குப் பிறகு, முஸ்லீம் படைகள் எதிரிகளை லெபனானிலுள்ள டயர் நகரத்திற்கு பாதுகாப்பாக சென்று விட்டு விட்டு வந்தது. ஆனால், நன்றி கெட்டத்தனமாக சமாதான உடன்படிக்கையை முறிக்கும் செயலாக அவர்கள் மீண்டும் அக்ராவின் மீது படை எடுத்து வந்தார்கள். அந்த செயல் சரித்திரத்தில் பலமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இரண்டாண்டுகள் போர் நீடித்தது. அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த உணவு, புதிய படையுடன் இணைந்து மீண்டும் வந்தார்கள். இரு படைகளும் இணை யில்லாத வீரத் தையும், பலத்தையும் காட்டின.                                                    எதிரிகள் 582 A.H. ல் (1189 C.E.) ரஜப் மாதம் 7 ந் தேதி அக்ராவை தரை மற்றும் கடல் மார்க்கமாக வந்து தாக்கினர். இது முஸ்லீம் களுக்கு பின்னரே தெரிய வந்து தரை மார்க்கத்தில் சென்று எதிர்த்துத்தாக்கினர். ஸலாவுத்தீன் டல் கிஸான் என்னும் மலைப் பகுதியில் கூடாரம் அமைத்திருந்தார். எதிர்ப்பும், சிறு சிறு தாக்கு தல்களும் இரு படைகளுக்கிடையே நடந்து கொண்டிருந்தன. ஸலாவுத்தீன் தலைநகருக்கு சில படைவீரர்களை அனுப்பி மக்களை ஜிஹாத் வழியில் போரிட அழைத்தார். இரண்டாண் டாக ஐரோப்பா உணவையும், வீரர்களையும் தொடர்ந்து அனுப்பி சலிப்படைந்தது.
பலமுறை தோல்வியுற்றும் தொடர்ந்து அக்ராவில் எதிரிகள் தாக் குதல் நடந்து கொண்டிருக்கும் போதே ஐரோப்பிய மாமன்னர் களால் மூன்றாவது சிலுவைப் போர் தொடங்கப்பட்டது. ஜெர்மன் சக்கரவர்த்தி ஃபிரடரிக் பார்பரொஸ்ஸா, பிரான்ஸ் மன்னன் பிலிப் அகஸ்டஸ், சிங்க இருதயம் (LION HEART) படைத்த ஆங்கில மன்னன் ரிச்சர்ட் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜெர்மனி சக்கரவர்த்தியின் ஒரு லட்சம் படைவீரர்கள் ஹங்கேரியில் இருந்து கான்ஸ்டாண்டி நோபிள் சென்றனர். இடையில் தங்களுக்கு உதவவும், வழி நடத்தவும் மறுத்த பைஸாந்திய சக்கரவர்த்தி இரண்டாம் இஸாக்கை இந்த படை பயமுறுத்தியது. இஸாக் பிரம்மாண்ட ஜெர்மன் படை வருவதையும், தான் அவர்களுக்கு உதவ மறுத்ததையும் ஸலாவுத்தீனுக்கு தெரியப் படுத்தினார். ஜெர்மன் படைகள் மைனர் ஆசியாவைக் கடந்தன. வழியில் அர்மேனிய மலையில் சலீஃப் ஆற்றைக் கடக்கும் போது ஜெர்மன் சக்கரவர்த்தி தவறி விழுந்து மூழ்கினார். அதனால், படை நடத்த தலைமை இல்லாததால் படைக்குள் பிளவு ஏற்பட்டது. சிலர் ஜெர்மன் திரும்பி சென்றனர். சிலர் கப்பல் ஏறி அக்ரா சென்றனர். சிலர் இறந்து போன சக்கரவர்த்தியின் மகன் தலைமையில் லெபனானின் டயர் நகரம் அடைந்தனர். எதிர்பாராத விதமாக மன்னனின் மகனும் இறந்துவிட எஞ்சிய சிறுபடை மட்டும் அக்ரா வந்தடைந்தது. ஒரு வேளை திட்டமிட்ட படி முழு படையும் வந்திருந்தால் இருபுறமும் தாக்குதல் பலமாக இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: