மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 30 ஜூலை, 2014

பாக்தாத் வரலாறு 2



இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கா உலகின் வல்லரசு நாடாக உருவாகியது. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் சில நாடுகளுக்கு சாதகமாக அமைந்தது. பண்டுங்க் மாநாடு கூட்டு சேரா நாடுகளின் தலைவர்கள் இந்தோனேஷியாவின் சுகர்னோ, இந்தியாவின் நேரு மற்றும் எகிப்தின் நாசர் ஆகியவர்களுக்கு சாதகமாக அமைந் தது. உலக உற்பத்தி மேற்கத்திய நாடுகளையே சார்ந்தும், உலக அதிகாரம் லண் டன், பாரிசிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்மாறியது. இருபதாம்நூற்றாண்டுகளில் ஐரோப்பியா பொருளாதாரத்தில் முக்கிய இடத்தில் இடம் பிடிப்பதை முஸ்லீம்கள் கணிக்கத்தவறிவிட்டனர். இஸ்லாமிய உலகில் முக்கிய தலைவர்களாக ஜமாலுத் தீன் ஆஃப்கானி, முஹம்மது அப்தூஹ், கெமல் அடாடுர்க், சுகர்னோ, நாசர் மற்றும் போமிடியன் ஆகியோர் உருவெடுத்தனர். அவர்கள் தங்கள் செயல்களினால் உச்சத் தை எட்டினர். மேற்குலகின் பொருளாதாரத்துடன் போட்டியிட அப்போதைய  ஈரா னின் அதிபர் முஸத்தக் 1930 ல் எண்ணெய் நிறுவனங்களிடம் சமமான பங்குக்கு உரிமை கோரினார். ஆனால், அரேபிய ஷெய்குகளின் எண்ணெய் நிறுவனங்களு டனான உறவு அதற்கு பெரும் தடையாகப் போனது. மேற்குலகிலிருந்து விடுத லை பெற நடந்த அல்ஜீரியாவின் உள்நாட்டு கலவரம் இன்றளவும் பேசப்படுகி றது. ஆப்கானிஸ்தானின் தோல்வி ரஷ்யாவை அமெரிக்காவுடனான போட்டியில் இருந்து விலகிவிட்டதாகவே கருத வைத்தது. 1990 களில் அமெரிக்காவின் பொரு ளாதார, அரசியல் மற்றும் இராணுவ சவாலை இதுவரை எந்த நாடுகளாலும் ஏற் றுக்கொள்ளப் படவில்லை. பல முஸ்லீம் நாடுகள் வாங்கிய கடனுக்கு வழி தெரியாமல் திணறினார்கள். பல வாக்குறுதிகளைக் கொடுத்த பாகிஸ்தான் 1971 ல் கைவிரித்து விட்டது. சௌதி அரேபியாவின் எண்ணெய் வள வருமானம் ஈராக் மற்றும் ஈரானிய போர்களில் கரைந்தது. அட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் வரை ஐந்தில் ஒரு நாடு கடனில் மூழ்கின. சீனா மட்டுமே கம்யூனிச கொள்கையாலும், புரட்சி தலைவர்களாலும் மேற்கத்திய வங்கிகளிடமிருந்து தப்பியது. 
                                    அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலால், யாருக்கும் பாதாளத்தில் போய்கொண்டிருக்கும் உலக பொருளாதாரத்தில் கவனம் திருப்பாமல் அமெரிக்கா பார்த்துக் கொண்டது. முழுப்பழியையும் இஸ்லாமியர்க ளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராகத் திருப்பி ருத்ரதாண்டவம் ஆடியது, ஆடிக்கொண்டிருக்கிறது. 3000 பேர் தங்கள் நாட்டில் கோபுரத்தாக்குதலில் இறந்து போனதற்கு, எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்காமல் அதிகபட்சமாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான் இன்னும் சில முஸ்லீம் நாடுகளில் 20 லட்சம் பேர்வரை கொல்லப்பட்டனர். இதில் காரணம் தெரியாமலேயே செத்து மடிந்த திருமணக் கூட்டத்தினர், தொழுகை நடத்திவிட்டுத் திரும்பியவர்கள் அதிகம் பேர். இதில் எங்கிருந்து யாருக்கு பொருளாதார சிந்தனை வரும். ஆப்கானிஸ்தானும், ஈராக்கும் போர் பூமியாகவே ஆக்கப்பட்டன. அமெரிக்கா முஸ்லீம் நாடுகளை தற்போது ஒரு பேக்கரியின் அடுப்புபோல சூடாகவே வைத்திருக்கிறது. அதில் பாக்தாத் தீயின் மையமாக இருக்கிறது          

பாக்தாத் வரலாறு 1



 முதல் உலகப்போர் உச்சத்தில் இருந்தது. 1917 ல் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தலைமையில் இந்தியப்படையின் ஒரு பகுதி தற் போதைய குவைத் நாட்டில் இறங்கி, யூப்ரடிஸ் நதி நோக்கி நகர்ந்தது. பிரிட்டிஷ் காரர்களுக்கு ஈராக்கில் நுழைவது இது ஒன்றும் முதல்முறையல்ல. 1915 ல் அப் போதைய கலீஃபா மற்றும் ஜெர்மனியால் பிரிட்டிஷார்கள் பலமாகத் தோற்கடிக்க ப்பட்டார்கள். இந்த முறை பிரிட்டிஷார் வலிமையான படையுடனும், சக்திவாய்ந்த ஆயுதங்களுடனும் வந்திருந்தார்கள். துல்லியமாக பஸ்ரா மற்றும் நஸரியாஹ் நகரங்களில் கடுமையான போர் நிகழ்ந்தது. ஒரு குறிப்பிட்ட அளவில் அமைக்கப் பட்ட அந்த இந்தியப்படையானது டெல்லி மற்றும் பெஷாவரிலிருந்து வீரர்களைத் தேர்வு செய்திருந்தது. தடுப்புப்போரில் ஈடுபட்ட துருக்கிகளை வென்று இந்தியப் படை 1917 ல் பாக்தாதைக் கைப்பற்றியது.
                                 அதன்பிறகு, 86 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கக் கூட்டுப்படைகள் சதாம்ஹுசேனின் படைகளை முறியடித்து அதே குவைத்திலிரு ந்து முன்னேறி பாக்தாத் நகரத்தை கைப்பற்றியது. மீண்டும்......மீண்டும்.....மீண்டும் பாக்தாத் நகரம் ஒரு கைப்பற்ற நகரமாகவே சரித்தில் இடம் பெற்றுக் கொண்டிரு க்கிறது. இஸ்லாமிய சரித்திரம் அறிந்தவர்களுக்கு இந்த பாக்தாத் நகரத்தின் அரு மை தெரியும். டைக்ரஸும், யூப்ரடீஸ் நதியும் நீர் நிறைந்து புரண்ட அந்த நகரம் இஸ்லாமிய ஆட்சிகாலத்தில் பல பேரரசுகளை மாறி மாறி சந்தித்தது. அந்த நகர மக்கள் இன்பத்தையும், அதைவிட அதிகமான துன்பத்தையும் சரித்திரத்தில் நெடு ங்காலமாக சந்தித்தவர்கள். ஆறாம் நூறாண்டுகளிலிருந்து ஒரு சுழற்சி போல பாக்தாத் நகரம் தொடர்ந்து சோகச் சூழ்நிலைக்கு வந்துவிடும்.
                                   அதற்கு அந்த நகரத்தின் உள்ளேயும், வெளியேயும் உள்ள பிரச்சினைகள்தான் காரணம். நாம் வெளியே இருக்கும் காரணத்தை பார்ப் போம். முதலில் ஓட்டோமான் பேரரசாலும், பிறகு, மங்கோலிய மன்னன் ஹுலகு வாலும் பாக்தாத் என்னும் உலகின் அழகிய கலாச்சாரத்திற்கும், அறிவுக்களஞ்சி யத்திற்கும் பெயர் போன நகரம் நிர்மூலமாக்கப்பட்டது. இன்றைக்கும், எப்போதும் உலகின் மிக அழகிய பெண்கள் பாக்தாதிலும். இஸ்ரேலிலும் தான் உள்ளார்கள். முதலில் பாக்தாத் நகரம் ஓட்டோமான் பேரரசால் வெற்றி கொள்ளப்பட்டு உருக் குலைந்தது. ஏறக்குறைய 200 ஆண்டுகள் இவர்கள் வசம் இருந்ததால்  இஸ்லாமி யர்களின் இதயப்பகுதி நகரமான இதில் ஐரோப்பியர்களின் காலணித் தடங்கள் இங்கு பதியவில்லை. இங்கு அரபியர்கள் தாய்மண் காலனிகளாக மாற்றப்பட் டன. பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் கிலாஃபத் இயக்கத்தால் துருக்கிகள் வெளி யேறினர். அனடோலியாவும், ஈரானையும் தவிர அனைத்து முஸ்லீம் பகுதிகளும் ஐரோப்பியர்களின் அதிகாரத்தில் ஆளப்பட்டது.
                                             அவ்வப்போது பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனால் சொல்லப்பட்ட அமைதி மட்டும் நடக்கவே இல்லை. முடிவு காணாமல் போன முதல் உலகப்போர் 1930 ல் ஹிட்லரின் போராக மீண்டும் வந்தது. அதிகப்படியான இரத்த மும், கொலைகளும் சீனா, ஜப்பானில் நிகழ்த்தப்பட்டன. தவறான பக்கம் சாய்ந்ததில் இஸ்லாமிய உலகம் குழப்பத்திலேயே இருந்தது. லட்சக்கணக் கான முஸ்லீம் நிலங் கள் அடாவடியாக காலனிப்படைகளால் பறித்துக் கொள்ளப் பட்டன. அநியாயங்கள் சாதாரணமாகிப் போயின. இரண்டாம் உலகப்போரிலும் அதைவிட அதிகமான இழப் புகளையே சந்திக்க நேரிட்டது. பிரிட்டன் தன் பங்கு க்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு நகர்ந்து கொண்டது. 1956 ல் இந்திய இராணுவமும் இல்லாததால் பிரி ட்டன் சூயஸ் கால்வாய் விவகாரத்தில் முழு வீச்சில் இறங்கமுடியாமல் போனது. இந்தோனேஷியாவிலும் டச்சு பேரரசு விலகி கொண்டது. பிரான்சும் வியட்நாமில் 1954 ல் தோல்வியுற்று திரும்பியது. ஐரோப் பிய சக்திகள் முறையே விலகிப்போன தால், பாகிஸ்தான்(1947), இந்தோனேஷியா (1948), எகிப்து (1956), மலேஷியா(1960), நைஜீரியா (1960) நாடுகள் சுதந்திரம் அடைந்தன.

டடார்கள்



டடார்கள் எனப்படுபவர்கள் பலவகை உண்டு. வோல்கா டடார்கள், கிரிமியன் டடார்கள், லிப்கா டடார்கள், அஸ்ட்ரகான் டடார்கள், சைபீரிய டடார்கள் இன்னும் சில சிறு பிரிவைச் சேர்ந்த டடார்கள். நாம் பார்க்கப் போவது பழைய துருக்கி டடார்கள். உய்குர் இனத்தைச் சேர்ந்த மத்திய ஆசியாவைச் சார்ந்தவர்கள். சைபீரியா கலந்த துருக்கி மொழி பேசக்கூடியவர்கள். இவர்களின் மொழி 7 ம் நூற்றாண்டிலிருந்து 13 ம் நூற்றாண்டுவரை காலங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் டடர்ஸ்தான் மற்றும் பஷ்கோர்தோர்ஸ்தான் பகுதியிலிருந்த வோல்கான் டடார்கள் ஆவார்கள். இவர்கள் ஏறக்குறைய 6 மில்லியன்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. துருக்கி மொழி பேசும் முஸ்லீம்களும் டடார்களாகவே கணக்கிடப்பட்டனர். இதில் 0.50% மில்லியன் கிரிமிய டடார்களும் அடங்கும். பொதுவாக ஜெங்கிஸ்கானின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும், ருஸ் எனப்படுபவர்களின் ஆக்கிரமிப்பின் மூலம் வந்த டடார்களே அதிகம். டடார் என்றால் துருக்கிய மற்றும் பெர்ஷிய மொழியில் “உயர்ந்த தூதன்” என்று பொருள். ரஷ்ய பேரரசில் இருந்த துருக்கிகள் அனைவருமே டடார்களாக அழைக்கப்பட்டனர். துருக்கிய மோங்கோல் டடார்களின் பலம் 14 மற்றும் 15 ம் நூற்றாண்டுகளில் அதிகமிருந்தது. ரஷ்யாவில் கிரிமிய நோகாய் படையெடுப்பின் மூலம் அதிகமான அடிமைகளை சிறைப் பிடித்து ஓட்டோமான் பேரரசுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இது இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. மேலும் இந்த படையெடுப்புகள் கொசாக்குகளின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவியது.
                                           7 ம் நூற்றாண்டுகளில் வோல்கா நதிக்கரையில் பரவியவர்கள் 922 ல் அஹ்மது இப்னு ஃபத்லான் என்பவரின் உபதேசத்தால் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். பிறகு, மங்கோலிய படையெடுப்புக்குப் பின் வோல்கா பகுதி (கோல்டன் ஹார்டி) தங்க நாடோடிகளுடன் இணைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் துருக்கிய மொழி பேசும் இஸ்லாமிய கிரிமியன் டடார்கள் மத்திய ஐரோப்பாவில் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

தைமூரியர் வரலாறு



இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டுவந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார் கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள்.
                                     1336 ல் இவர்களில் பிரபலமாக ஒருவர் பிறந்தார் அவர் பெயர் தைமூர். மேற்கத்தியர்களால் டாமெர்லேன் என்று அழைக்கப்பட்டார். துருக்கிகள் டிமுர் இ லெங்க் என்று அழைத்தனர். இவர் எப்படியேனும் ஒரு பேர ரசை மீண்டும் நிலைநாட்டிட முயற்சி செய்தார். துருக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டார். இவருக்கு சொந்தமாக பெரிய நிலப்பரப்பு இருந் தது. இவர் தனிச்செல்வாக்காக அவரின் கூட்டத்தினருள் திகழ்ந்தார். சிறந்த கலை ஞராகவும், கட்டிடக்கலை நிபுணராகவும் இருந்தார். மாபெரும் இஸ்லாமிய மார் க்க அறிஞர் இப்ன் கல்தூன் என்பவரின் மாணாக்கராக இருந்தார். 1383 ல் இவரு க்கு அப்போதே 50 வயதாகி இருந்தது. இருபது ஆண்டுகள் விடாது போரிட்டு மேற் கில் பாதி பகுதிகளை வென்றார். முதலில் ஹிராத் என்ற ஆஃப்கானிஸ்தான் மற் றும் ஈரானிய எல்லைப்பகுதியை வென்றார். ஹிராத் பின்னாளில் பெர்ஷிய கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியது. பின் தைமூர் கிழக்கு பெர்ஷியாவையும் வென்றார். 1394 ல் மொத்த பெர்ஷியா, மெஸோபொடாமியா, கருங்கடல், கஸ்பி யன் கடல், அர்மேனியா, அஸெர்பைஜான் மற்றும் ஜியார்ஜியாவை வென்றெடுத் தார். 1396 ல் புயலைப்போல் ரஷ்யாவை வெற்றி கொண்டு ஒரு ஆண்டு கையகப் படுத்தி வைத்திருந்தார்.
                                                                        தைமூரின் ஆட்சி மிகவும் மிருகத்தனமாக இருந்தது. பெர்ஷியாவில் தன்னை எதிர்த்தவர்களை ஜெங்கிஸ்கானைவிட கொடுமையாகத் தண்டித்தார். மக்களை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கினார். கொல்லப்பட் டவர்களின் மண்டை ஓடுகளால் பெரிய கோபுரம் அமைத்து மற்றவர்களுக்கு அதை எச்சரிக்கை ஆக்கினார். ஜெங்கிஸ்கான் தவறிய ஒன்றை 1398 ல் தைமூர் செய்தார். ஆம் அதுதான் இந்தியாவின் மீதான படையெடுப்பு. டெல்லி நகரில் நுழைந்து அதை சூறையாடி, பல மாதங்கள் தங்கி கொள்ளையடித்து, கைது செய்தவர்களை கொன்று, 120 யானைகளையும் கைப்பற்றி திரும்பினார். தனது நகரமான சமர்கண்டை இஸ்லாமிய கலைவடிவத்தில் அமைத்தார். இந்தியாவில் இருந்து கொண்டு வந்த யானைக ளையும், கலை விற்பன்னர்களை வைத்தும் நகரை அழகுபடுத்தினார். 1399 ல் 60 வது வயதிலும் ஆக்ரோஷத்தோடு மேற்கு நோக்கி படையெடுத்தார்.
                                    1401 ல் தைமூர் எகிப்தின் மம்லூக் இராணுவத்தை சிரியாவில் வென்றார். டமாஸ்கஸ் நகரத்தை சேதப்படுத்தினார். அதே ஆண்டு பாக்தாத் மீது தாக்குதல் நடத்தி 20,000 பேரை கொன்று குவித்தார். 1402 ல் அனுப வம் வாய்ந்த வீரர்களுடன் அனடோலியாவை நோக்கி முன்னேறினார். ஓட்டோ மான் பேரரசர் பயேஸெட் என்பவரை அங்காரா என்ற இடத்தில் தோற்கடித்து சுல்தானைக் கொன்றார். மேலும் மேற்காக நகர்ந்து ஏஜியன் மற்றும் ரோட்ஸ் மன்னனை வென்று இஸ்மிர் நகரத்தையும் கைப்பற்றினார். பின் தைமூர் 1404 ல் சமர்கண்ட் திரும்பினார். அப்போது அவருக்கு 68 வயதாகி இருந்தது. அப்போதும் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை. 1404 ல் தைமூர் சீனாவின் மீது ஆக்கிரமித் தார். சிம்கெண்ட் என்ற இடத்தில் இருக்கும் போது 1405 ல் நோயில் விழுந்து இறந்துபோனார். தைமூரின் பிடியிலிருந்து சீனா தப்பித்ததாகவே கருதப்பட்டது. இவருக்குப் பின் இவரது பிரதேசம் தைமூரின் இராணுவ கமாண்டர்களாலும், எதிரிகளாலும் பிரிக்கப்பட்டது.