மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 26



பாகம் : 26
மக்கா புனித பயணம் முடித்து திரும்பும் யாத்திரிகர்களை வரவேற்க சென்றார். தன்னால் முடியுமென்று அவர்களை நோக்கி நகர முற்பட்டார். ஆனால், அவரால் முடியவில்லை. அங்கிருந்து திரும்பியவுடன் அவரை மஞ்சள் ஜுரம் தாக்கி யிருந்தது. மருத்துவர்கள் அவரை குணமாக்க சிகிச்சை கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே நோய் தீவிரமடைந்தது. மக்களுக்கு அவரின் நோய் அறிவிக்கப்பட்ட போது, கவலை யுடன், பயமும் அடைந்தார்கள். மக்கள் பெரும் கூட்டமாக எந்நேரமும் டமாஸ்கஸின் அரண்மனை முன் கூடி அவர் உடல்நலத்தை விசாரித்த வண்ணம் இருந்தனர். சிலர் இறைவனிடம் பிரார்த்தித்தனர். அல் கதி இப்னு ஷத்தாத், அல் கதி அல் ஃபத்ல் மட்டும் ஸலாவுத்தீனிடம் அனுமதிக்கப் பட்டனர்.
ஆறாம் நாள் பணியாட்கள் ஷத்தாத் மூலம் சுல்தானுக்கு மருத்துக்கு பிறகு குடிக்க குளிர்ந்த தண்ணீர் கொடுத்தார்கள். அவர் அது சூடாக இருப்பதாக கூறினார். பின்னர் வேறு ஒரு தண்ணீர் கொடுத்தனர். இப்போது குளிர்ந்ததாக இருப்பதாக கூறி, ”இறைவனை மெச்சுகிறேன் யாரும் நீரை மாற்ற வில்லை.” என்று கோபப்படாமல் கூறினார். தானும் அல் ஃபத்லும் அறையை விட்டு வெளியே வந்து அழுததாக கூறுகிறார். அல் ஃபத்ல், “நாங்கள் அவரைப் போல் உயர்ந்த குணம் உள்ளவரை கண்டதில்லை, அந்த இடத்தில் வேறு ஒரு மன்னன் இருந்திருந் தால் நீர் வழங்கிய பாத்திரத்தை பணியாள் மீது வீசி இருப்பான்” என்று கூறுகிறார்.
பத்தாம் நாள், ஊசி மூலம் இரண்டு முறை மருந்து செலுத்திய பிறகு, சிறிது முன்னேற்றமடைந்து கொஞ்சம் பார்லி நீர் அருந்தி னார். மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அவர் கால்களில் வியர்வை வர ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டு நாங்கள் அல்லாஹ்வுக்கு மிகுந்த நன்றி கூறினோம். பதினோராம் நாள் அவரின் வியர்வை அதிகமாகி படுக்கையை நனைத்து தரை மற்றும் விரிப்புகளில் வழிந்தது. மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
ஸலாவுத்தீனின் மூத்த மகன் அல் மாலிக் அல் அஃப்தல் நூருத்தீன் அலி, மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தன் தந்தை அதிலிருந்து குணமாகப் போவதில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார். அவர் மக்கள் முன்னிலையில், தன் தந்தை எவ்வளவு காலம் உயிரோடு இருக்கிறாரோ அதுவரை அவரே மன்னராக இருப்பாரென்றும், அதன் பிறகு, தான் மன்னராக பொறுப்பேற்பதாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது பற்றி அல் கதி இப்னு ஷத்தாத் “ அந் நவாதிர் அஸ் ஸுல்தானியா” என்ற நூலில் குறிப்பிடுவதாவது: உண்மையில் கூறுவதென்றால், நான் மன்னருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தேன். நாட்டைக் காக்க என் பொருளாதாரத்தையும், நேரத்தையும் செலவிட்டேன். என் வாளும், வீரர்களும் அவரின் உத்தரவுக்காக காத்திருந்தனர். அல்லாஹ்வின் நாட்டப்படி அதைப் போலவே இனிமேலும் அவரின் மகன் அல் அஃப்தல் நூருத்தீன் அலி அவர்களின் தலைமையின் பின்னால் தொடர்வேன். எனது உள்நோக்கமும், வெளிநோக்கமும் ஒன்றே. இதற்கு அல்லாஹ்வே சாட்சி.
அவர் நோய்வாய் பட்ட பனிரண்டாம் நாள் இரவு மேலும் உடல் நலம் சீர் கெட்டு கோமா என்னும் நினைவு இழக்கும் நிலைக்கு சென்றார். திருக்குர்ஆன் ஓதக்கூடியவரை அழைத்து வந்து ஓதச் செய்தனர். ஓதக்கூடியவர், “அல்லாஹ்வை தவிர நம்பிக்கையான இறைவன் வேறு இல்லை”. எனும் வரிகளை ஓத கோமா நிலையிலிருந்த ஸலாவுத்தீன் அவர்களின் முகம் பிரகாசமானது. 589 A.H.ல் 27 சபர் மாதத்தில் ஃபஜர் (முஸ்லீம்களின் அதிகாலை தொழுகை)தொழுகைக்குப் பின் அவரின் உயிர் படைத்தவனிடம் திரும்பி சென்று விட்டது.
ஸலாவுத்தீனின் மரணம் உலக முஸ்லீம் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. முஸ்லீம்களின் வருத்தத்தை ஷத்தாத், அந்த நாள் வருத்தத்தின் நாளாக இருந்தது. தங்களை நேர்வழி யில் ஆட்சி செய்த கலீஃபாவை இழந்த சோகத்தில் இருந்தனர். துக்கமும், இருளும், அரண்மனையிலும், நாட்டிலும், உலகம் முழுவதும் பரவி இருந்தது. அல்லாஹ்வின் சாட்சியாக, சிலர் தங்கள் உயிரையே அவருக்காக தியாகம் செய்ய தயாராய் இருந்தனர். நான் இதற்கு முன் அதைப் போல் கேள்விப்பட்ட தில்லை. ஒரு அப்படி ஒரு அனுமதி இருந்தால் அவர் காப்பாற்ற பட்டிருப்பார். அவரின் மகன்கள் இளவரசர்கள் என்றும் பாராமல் தெருவில் சென்று அழுதனர். மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரின் உடல் அஸ்ர் (மாலை சூரியன் சாயத்தொடங்குவதற்கு ஆரம்பிக்கும் நேரம்) தொழுகைக்கு முன் அடக்கம் செய்யப் பட்டது. மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த அவர் மகன் அல் மாலிக் அஸ் ஸாஃபிரை சில மனிதர்கள் சமாதானப் படுத்தி னார்கள். அல் கதி அல் ஃபத்லால் கொண்டு வரப்பட்டு துணியால் மூடப்பட்ட சுல்தானின் உடல் ஊர்வலமாக சென்ற போது, ஊரெங்கும் அமைதி அமைதி அப்படியொரு அமைதி. அவரை டமாஸ்கஸின் அரண்மனையிலேயே அடக்கம் செய்தனர். மூன்று வருடங்கள் கழித்து அவர் மகன் அல் மாலிக் அல் ஃபத்ல் அவர்கள் நல்லவர் ஒருவருக்கு சொந்தமான அல் உமவை மசூதியை அடுத்துள்ள ஒரு இடத்தை வாங்கி முஹர்ரம் மாதம் அஷூரா என்னும் 10ம் நாளில் சமாதி எழுப்பி உடலை மாற்றி அடக்கம் செய்தார். அல் உமவை மசூதியில் மூன்று நாட்கள் மக்களும், அதிகாரிகளும் கூடி துக்கம் அனுஷ்டித்தனர் என்று கூறுகிறார்.
முஸ்லீம் தேசங்கள் மாபெரும் சரித்திர நாயகனை இழந்து விட்டது. அவருக்கு இறக்கும் போது 57 வயது ஆகி இருந்தது. நம்புங்கள் (வரைபடம் எடுத்து பாருங்கள்) இன்றைய ஆப்கானிஸ் தானை அடுத்து, திரிபோலி வரை எல்லை பரப்பிய சாம்ராஜ்ஜிய மன்னனுக்கு சொந்தமாக ஒரு நிலமில்லை, தோட்டமில்லை, பண்ணை இல்லை. அவருக்கு ஒரே ஒரு எஸ்டேட் சொத்து ஐம்பத்து ஏழு திர்ஹம் ஒரு தினார் மதிப்பிலான அளவில் சொந்தமாக இருந்தது. சர்வகாலமும் சிலுவைப் போராளிகளை எதிர்த்துக் கொண்டும், எதிரிகளுடன் துரோகம் செய்து காட்டிக் கொடுத்துக் கொண்டிருத்த முஸ்லீம்களை சமாளித்துக் கொண்டும் ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உலகில் இருந்தார் என்றால் ஸலாவுத்தீன் அவர்கள் ஒருவர் தான். கலீஃபாக்கள் ஆட்சிக்கு பிறகு, மக்களை வெளிப்படையாக ஜிஹாத் வழியில் போரிட அழைத்த ஒரே முஸ்லீம் மன்னர் ஸலாவுத்தீன் தான். ஆம் அடக்கமாய் சொன்னாலும் ஆர்ப்பாட்டமாய் சொன்னாலும் இஸ்லாமிய உலகில் தனித்தன்மையுடன் கலிஃபாக்களுக்குப் பிறகு விளங்கும் மாமன்னர் சுல்தான் ஸலாவுத்தீன் ஒருவர்தான். உலகில் மிகவும் குரூர எண்ணமும், தீய குணங்களும் கொண்டவர்களை நேருக்கு நேர் நின்று போரில் வென்ற ஒரே மன்னர் ஸலாவுத்தீன் தான்.  யூதர்களை கூட சிறை பிடித்து அவர்கள் இயலாத நிலையில் தான் ஹிட்லர் கொத்துக் கொத்தாகத் தான் கொலை செய்தான். வெற்றி பெற்று தந்த இஸ்லாமியர்கள் கூட ஸலாவுத்தீன் அவர்களை மறந்து விட்டார் கள். ஆனால் அவரிடம் தோல்விப் பாடம் பயின்ற ஐரோப்பியர் கள் இன்றளவும் நினைவு வைத்திருக்கிறார்கள்.
இந்த வரலாற்றுக்காக கையாளப்பட்ட புத்தகங்கள் வருமாறு :
·         அல் கமில் ஃபீ அத் தரிக்
·         வஃபாயத் அல் அயான்
·         ரிஹ்லத் இப்ன் ஜுபைர்
·         கிதாப் அர் ரவ்ததைன் ஃபீ அக்பர் அத் தௌலதைன்
·         அந் நவாதிர் அஸ் ஸுல்தானியாஹ்
·         அல் மஹசின் அல் யூசுஃபியாஹ்
·         அந் நுஜும் அஸ் ஸஹிராஹ் ஃபீ முலுக்
·         மிஸ்ர் வ அல் கஹிராஹ்
·         முஜம் அல் புல்தான்
·         அஸ் ஸுலுக் லி மரிஃபத் திவால் அல் முலுக்
·         அர் ரமதி
·         ஸலாஹ் அத் தீன் அல் அய்யூபி
·         ஹயாத் ஸலாஹ் அத் தின்
·         ஸலாஹ் அத் தின் பைன ஷுரா
·         அஸ்ரிஹி வ குத்தபிஹ்
·         அந் நஸிர் ஸலாஹ் அத் தின்
·         அய்யாம் ஸலாஹ் அத் தின்
·         அல் ஹுருப் அஸ் ஸலிபியாஹ் ஃபீ அல் மஸ்ரிக் வ அல் மக்ரிப்
·         தாரிக் அல் இஸ்லாம் அஸ் ஸியாஸி
·         மவாகிஃப் ஹசிமாஹ் ஃபீ தாரிக் அல் இஸ்லாம்
·         அத் த அஸுப் வ அத் தஸமுஹ் பைன அல் மஸிஹியாஹ் வ அல் இஸ்லாம்
·         அல் இமான் தரிக்னா இலா அந் நஸ்ர்
·         தர்ஸ் அந் நக்பாஹ் அத் தானியாஹ்
·         தவா இலா அல் இஸ்லாம் 

கருத்துகள் இல்லை: