மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 30 டிசம்பர், 2013

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 2



ஃப்ராங்கிஷின் பாரம்பரிய பூமியை ஆண்டு வந்த சார்லஸ் மார்டெல் தனது வட மற்றும் கிழக்கு எல் லைப் பகுதியில் தொல்லை கொடுத்து வந்த ஜெர்மனிய பழங்குடியி னரான ஃப்ரிஷியன்கள், ஸாக்சன்கள் மற்றும் பவேரியன்களை எதிர் த்து நீண்ட போரை நடத்தினான். இதற்கு செயிண்ட் பானிஃபேஸ் என்ற கிறிஸ்தவ தொண்டுநிறுவனத்தின் ஆதரவும் இருந்தது. காவுல் பகுதியில் இருந்த அந்த பார்பேரியன் (நாகரீகமற்றவர்கள்) களால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொந்தரவுஇருந்தது. ஆனால் தற்போது தென் பகுதியில் சக்திவாய்ந்த புதியவர்களால் தொந்திரவு வர ஆரம்பித்தது. அவர்கள் ஸ்பெயினில் காலூன்றியிருந்த அரபுக்கள். 711 ல் வந்த அரபுகள் ஸ்பெயினிலிருந்து வட பகுதி நோக்கி புயலைப் போல முன்னேறினார்கள். விரைவில் பைரெனீஸுக்கு அருகில் நெருங்கினார்கள். 720 ல் நார்போன்னையும், 725 ல் பர்கண்டியையும் வென்றார்கள். பிறகு, 732 வரை சற்று அமைதியாய் இருந்தனர். பின் மீண்டும் போர்டிவக்ஸ், பாயிஸ்டர்சை வென்று டூர்ஸ் நோக்கி முன்னேறினார்கள். டூர்ஸில் இஸ்லாமிய இராணுவம் சார்லஸ் மார்டெல் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
                              போர் நடந்தது பாயிஸ்டியர்சிலா அல்லது டூர்ஸிலா என்பது சரியாகத் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இரண்டு இடத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சார்லஸ் மார்டெல்லின் வெற்றி இஸ்லாமியப் படைகளை முன்னேற்றத்தை மேற்கில் முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது. இது குறிப்பிடும் படியான திருப்புமுனையாக அமைந்தது. 741 ல் ஸ்பெயினிலிருந்து இதே போன்று பெர்பெர் கூலிப்படைகள் காவுலில் தோற்கடிக்கப்பட்டன. இஸ்லாமிய படைகளை ஐரோப்பாவிலிருந்து திருப்பி விரட்டியதால் சார்லஸ் மார்டெல்லுக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ சரித்திரத்தில் தனி இடம் கிடைத்தது. அவன் தங்கள் பூர்வீக மெரொவின்ஜியன் சக்தி தனக் கிருப்பதாக கற்பனை செய்து வைத்திருந்தான். அதேபோல் தான் அவன் மகன் மூன்றாம் பெபின். இவன் 743ல் சைல்டெரிக் என்னும் ஒரு பொம்மை மன்னனை ஆட்சியில் வைத்திருந்தான். பின் என்ன நினைத்தானோ போப் ஆண்டவரின் ஒப்புதலைப்பெற்று 751 ல் அந்த மன்னனை நாட்டைவிட்டே துறத்தினான். ஃப்ராங்க்ஸ்கள் ராஜ்ஜியத் தில் எது செய்தாலும் போப்பின் தேவஆசி பெற்றே செய்தார்கள். மூன்றாம் பெபின் 768 ல் இறந்தான்.
                       எட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் மார்டெல்லின் பேரனும் மூன்றாம் பெபினின் மகனுமான சார்ல்மாக்னி மன்னனாக பதவியேற்றான். ஆரம்பத்தில் வெறும் சார்லஸ் ஆக இருந்த இவன் பெயர் லத்தீன் மொழியின் வரிசையில் “சார்ல்மாக்னி” (CHARLEMAGNE- சார்லஸ் தி கிரேட்) என்று அழைக்கப் பட்டது. இவனின்  ஃப்ராங்க்ஸ் பேரரசு மட்டுமே பிரான்சையும், ஜெர்மனியையும் இணைத்து (சில ஆண்டுகள் மட்டும் நெப்போலியன் ஆண்டான்) ஒன்றாக ஆட்சி செய்தது. தந்தையின் பாரம்பரிய தேசமான மேற்குப்பகுதி, தென் மேற்கு பிரான்சிலிருந்து கடற்கரைப் பகுதியை ஒட்டி நெதர்லாந்தும், வட ஜெர்மனி பகுதியும் சார்ல்மாக்னிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, சார்ல்மாக்னியின் சகோதரன் கார்லோமான் இறந்த பிறகு, அவனின் பூர்வீக தேசமான மத்திய பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு ஜெர்மனியும் இவன் வசமே வந்தது. இவன் 814 ல் இறக்கும் போது மீதி இருந்த ஜெர்மனி பகுதியும், வட இத்தாலியும் இவன் ஆட்சியின் கீழேயே இருந்தது. சார்ல்மாக்னி பதவிக்கு வந்த முதல் ஆண்டு போப்பின் ஆசி பெற்று வட இத்தாலி மீது படையெடுத்தான். இவன் குழந்தையாய் இருந்த போதிலிருந்து இவன் குடும்பம் ரோமின் போப்பிடம் பலமான உறவை வைத்திருந் தது. செயிண்ட் டெனிஸில் 754 ல் போப் இரண்டாம் ஸ்டீபனிடம் பன் னிரண்டாவது வயதில் தந்தை, சகோதரர்கள் உடனிருக்க சார்ல்மாக் னிக்கு  எண்ணெய் ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடர் ச்சியாக லம்பார்ட்களை எதிர்த்து இத்தாலியின் மீது இருமுறை படையெடுத்தார். 772 ல் வேறொரு போப் முதலாம் அட்ரியன் என்ப வர் மீண்டும் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய கேட்டுக்கொ ண்டார். அதன்படியே செய்து தந்தையைப் போலவே இத்தாலி மீது 773 மற்றும் 774 ல் படையெடுத்தார். இது ஆட்சியின் பரப்பளவை பெரிய அளவில் அதிகரிக்கவும், “கிங் ஆஃப் தி லம்பார்ட்ஸ்” என்ற பட்டம் கிடைக்கவும் வழி செய்தது.
                               சார்ல்மாக்னி தன் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் வடக்கே இருந்து கிழக்குபக்கமாக பவேரியாவையும் சேர் த்து விரிவுபடுத்தினான். ஆனால் ஜெர்மனி சாக்ஸன்களுக்கு எதிராக மாறியது. சாக்ஸன்களும், ஜெர்மனி பழங்குடியினரும் ஃப்ராங்கிஷ் பகுதிகளுக்காக அடிக்கடி தங்கள் காடுகளிலிருந்து வந்து சண்டையி ட்டனர். சார்ல்மாக்னி சாக்ஸன்களை அழித்து, அவர்களின் சிலை வழிபாட்டுப் பழக்கத்தை மாற்றினான். 772 ல் சார்ல்மாக்னி கொடு மையான முறையில் அவர்கள் மீதுபடையெடுத்து, உலகை தாங்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் நம்பப்பட்டு வந்த “இர்மின்சுல்” (IRMINSUL)  என்ற மிகப்பெரிய மரத்தூணை உடைத்து எறிந்து புனிதக் கோயிலைத் தரைமட்டமாக்கினான். சார்ல்மாக்னிக்கு அவர்களை வெல்ல 30 ஆண்டுகளாயின. 804 க்குப் பிறகு, முடிவாக அவர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி இவனின் பேரரசில் குடியேறினர். இது ஒரு கொடூர மான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இராணுவ நட வடிக்கை மூலம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அவனின் சட் டப்புத்தகத்தில் கிறிஸ்தவமதம் மாற மறுத்தால் மரணதண்டனை என்று குறிப்பிட்டிருந்தான். நம்பத்தகுந்த தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் ஒரே நாளில் மதம்மாற மறுத்த 4500 சாக்ஸன்களைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
                     சார்ல்மாக்னியின் முதல் சில போர் நடவடிக்கை கள் தோல்வியடைந்தன. இஸ்லாமியர்களை எதிர்த்து வட ஸ்பெயி னில் நடத்திய போரில் தோல்வியடைந்தான். அப்போதைய கார்டோ பாவின் கலீஃபா சார்ல்மாக்னியின் வரவை எதிர்பார்த்துப் போரிட காத்திருந்தார். மேலும் இவன் பாட்டனாரின் டூர்ஸ் வெற்றியின் வெளிப்பாடு இவனிடம் இல்லாமல் போனது. 778 ல் தெற்கு நோக்கி பாம்ப்லோனா நகரைக் கைப்பற்றி, சரகோஸ்ஸாவை வெல்லத் திட் டமிட்டு எதுவும் சாதிக்காமல் ஏமாற்றமடைந்தார். இதற்காக அவ னின் படை பாரம் பரிய வழியான ரான்செஸ்வல்லீசைக் கடக்கும் போது, பஸ்க்வெஸ் அல்லது காஸ்கன் குழுக்களால் முன்னால் சென்ற படை தாக்கப்பட்டது. சார்ல்மாக்னியின் பெரிய மாவீரரென்ற கற்பனை இந்த தோல்விகளால் இவன் ஆட்சியில் கரைபடிந்த புள்ளி களாய் போனது. 799 ன் மத்தியில் மூன்றாம் முறையாக ஃப்ராங்கிஷ் மன்னனுக்கு போப்பின் எண்ணெய் ஸ்நானம் தேவைப்பட்டது. ரோமின் சாலையில் எதிரிகளால் தாக்கப்பட்டான். (எதிரிகள் இவனைக் குருடாக்கி, நாக்கை அறுத்து ஆளத்தகுதி இல்லாமல் ஆக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.) மூன்றாம் லியோ ஆல்ப்ஸ் வழியாகச் சென்று சார்ல்மாக்னியை பாடெர்பார்னில் சந்தித்தார்.

கருத்துகள் இல்லை: