மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஓட்டோமான்கள் வரலாறு 1



உஸ்மான் என்பவரது பெயர் துருக்கியில் ஒத்மான் என்றாகியது, அதையே பின்னால் ஐரோப்பியர்கள் “ஓட் டோமான்” என்று ஆக்கினார்கள். சுல்தான் இரண்டாம் மெஹ்மூத் என்பவர் 1453 ல் கான்ஸ்டாண்டி நோபிளை (இன்றைய இஸ்தான் புல்) வென்றார். பைஸாந்திய பேரரசிலும், துருக்கியிலும் பல போரா ளி குழுக்கள் இருந்தன. இவர்களை ‘காஸி’ (GHAZIS- புனித போராளி கள்) என்று அழைத்தனர். இந்த காஸிகள் ‘ஹாஜி பெக்டஷ்’ என்பவ ரின் வழியை தொடர்ந்தார்கள். இவரின் அடக்கவிடம் கைசெரியா என்ற இடத்தில் இருக்கிறது. இவர்கள் முஸ்லீம்களுக்கெதிரான கிறிஸ்தவர்களைத் தாக்குவார்கள். அப்போதிருந்த ரோம சுல்தானா ல் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இந்த போராளி குழுக்கள் நிறைய சாதித்தது செல்ஜுக்கு மற்றும் பைஸாந்தியர்களுக்கு தொல்லையாக இருந்தது. அதில் ஒரு குழுவின் தலைவர்தான் ஓஸ்மான். ஓஸ்மானின் தலைமையும், வீரமும் பல துருக்கி வீரர்களை கவர காஸி மாநிலம் உருவாக்கி பைஸாந்தியர்களுட னும், அருகிலிருந்த நாடுகளுடனும் போரிட்டார். போரின் போதே கொள்ளையடித்தும், நிலப்பரப்புகளையும் கைப்பற்றினார்கள். இத னால் எல்லா காஸி போராளி குழுக்களும் ஓஸ்மானிடம் வந்து சேர்ந்தன. மேலும் பல வெற்றிகளையும், இடங்களையும் பிடித்தார் கள்.
                             செல்ஜுக் சுல்தானேட் ஆஃப் ரோம் அழிந்த பிறகு, 1300 ல் அனடோலியா காஸி (GHAZI EMIRATES) குடியரசுகளாகப் பிரிந்தது. பலவீனமடைந்த பைஸாந்திய சாம்ராஜ்ஜியம் பத்து மாகா ணங்களை இந்த காஸிகளிடம் இழந்திருந்தார்கள். இந்த காஸிகளி ன் ஒரு மாகாணத்தைத் தான் உஸ்மான் என்பவர் ஆண்டுவந்தார். இவரின் பெயரில் தான் மேற்சொன்ன பெயர் மருவி “ஓட்டோமான்” என்று ஆனது. உஸ்மான் மேற்கு அனடோலியாவில்  எஸ்கிசெஹி ல் (முன்னாள் பெயர்- டோரிலியான்) என்ற பகுதியைச் சேர்ந்த எர்து க்ருல் என்பவரின் மகன் ஆவார். இவர்கள் ஆரம்பத்தில் இரண்டாயி ரம் வீரர்கள் நானூறு கூடாரங்களில் தங்கிக் கொள்வார்கள்.  
                                புராதன துருக்கியில் உஸ்மானைப்பற்றி வாய்மொழி யாக ‘உஸ்மானின் கனவு’ என்று ஒரு கதை ஒன்று உண்டு. இளம்வயது உஸ்மான் ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றதாக வும், அது அவருக்கு பெரிய மரமாகத் தோன்றியதாகவும், அந்த மரத் தின் கிளைகள் மூன்று புறமாக வானத்தைப் பரவி மூன்று கண்டங் களுக்கு அவர் ஆட்சி பரவும் என்றும், அதன் கிளைகள் நான்கு புறம் படர்ந்து டிக்ரிஸ், யூப்ரடிஸ், நைல் மற்றும் தனூப் ஆறுகளைக் குறிப்பதாகவும், அந்த மரம் காகசஸ், டாரஸ், அட்லஸ் மற்றும் பால்கன் ஆகிய நான்கு மலைகளை நிழலிட்டதாகவும் கதை சொல்லப்பட்டது. எர்துக்ருல் ஒருநாள் வானத்தில் அடர்த்தியான புழுதி பறப்பதைக் கண்டார். அது புழுதியல்ல மங்கோலியர்கள் மத்திய அனடோலியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தார். உடனடியாக தனது கூட்டத்தைக் கூட்டி அவர் களை தாம் எதிர்த்துத் தடுப்பது என்று முடிவெடுத்தார். ஆம் அது உலக வரலாற்றில் எடுக்கப் பட்ட மிக முக்கியமான முடிவாகிப் போனது. வந்தவர்களை எர்துக்ருலின் காஸி கூட்டத்தினர் வெற்றி பெற்று விரட்டினார்கள். இது மக்களிடையே அவர்களுக்கு தனி மரியாதையை உண்டாக்கியது. இதனால், மகிழ்ச்சி அடைந்த அப் போதைய் செல்ஜுக் சுல்தான் இரண்டாம் கைஹுஸ்ரெவ் அவர் களுக்கு தனியாக ஒரு நிலப்பரப்பை பரிசாக எர்கிசெரில் என்ற பகுதியில் தந்தார். எர்துக்ருல் கொஞ்சம் விரிவுபடுத்தி சகரியா என்ற இடம்வரை அமைத்துக்கொண்டார். இந்த சகரியா செல்ஜுக் குகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ரோமர்களிடமிருந்து கைப்பற் றியது. ஏறக்குறைய பிதைனியா என்ற இடத்திற்கு அருகில் தொடர் புள்ள இடமாக சகரியா இருந்தது. எர்துக்ருலுக்குப் பிறகு அவர் மகன் ஒஸ்மான் அதை தனிப் பேரரசாக ஆக்கி “மெமாலிக் ஒஸ்மானியா” (ஒஸ்மானின் ஒழுங்கமைப்பு) ஆள ஆரம்பித்தார். மேலும், 1305 ல் புஸ்ராவை தலைநகரமாக்கிக் கொண்டார். 1326 ல் ஜெம்லிக்கையும் கைப்பற்றி ஒட்டோமான் பேரரசுக்கு வித்திட்டார்.  
                                     தனது ஆட்சியின் போது உஸ்மான் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தின் முன்னே வளர்ச்சி கண்டார். ஒஸ் மானுக்குப் பிறகு, அவர் மகன் சுல்தான் ஓர்ஹன் ஆட்சிக்கு வந்தார். இவர் பேரரசர் நான்காம் ஜோஹன்னஸ் கண்டகுஸேனோஸ் என்ப வருடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொண்டு அவர் மகளையும் மணந்தார். ஓர்ஹன் பல வெற்றிகளைப் பெற்றார். ஓட்டோமான் பேரரசுக்காக முதல்முதலில் நாணயம் வெளியிட்டார். 1360 இவர் மரணமடைந்த பின் இவர் மகன் முராத் சுல்தான் பதவிக்கு வந்தார். இவர் எந்த ஒரு பிரதேசம் வெற்றிகொண்டபோதும் இத்தோடு பேர ரசு போதும் என்று இருக்கவில்லை. பேரரசை விரிவுபடுத்துவதில் மிக ஆர்வம் கொண்டிருந்தார். முராத் செர்பிய பழங்குடி ஒன்றை வென்றபின் அதன் ஆட்சியாளர் சரணடைந்து 50 உக்காஸ் வெள்ளி கள் கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முராத் தன் மகன் பயேஸித்துக்கு சுலைமான் ஷாவின் மகளை மணமுடித்தார். அதற்கு ஈடாக குடல்யா, டவ்ஷன், சிமாவ் மற்றும் எமிட் ஆகிய பகுதிகள் திருமணப்பரிசாக கிடைத்தது. இதன் பிறகு, முராத் நேரடியாக செர்பிய மன்னன் லாஸரை கொஸோவோ போரில் எதிர்த்தார். பலமான உயிர்பலிகளுக்குப் பிறகு, செர்பியா வை வெற்றி கொண்டார். மன்னர் லாஸரைக் கைது செய்து கூடா ரத்தில் அடைத்து வைத்திருந்தார். இதனால் ஆத்திரமுற்ற மிலோஸ் ஒபிலிக் என்பவர் பத்து நபர்களை அழைத்துக்கொண்டு சுல்தான் முராதின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரை மார்பில் குத்திக் கொன்றான். இறக்கும் முன் பதிலுக்கு முராத் செர்பிய மன்னர் லாஸரை தன் முன்னே அழைத்து வரச்செய்து கொல்லச்சொன்னார். 
                          முராத் இறந்த அன்றே அவர் மகன் பயேஸித் சுல்தான் ஆனார். இந்த சூழ்நிலையை பயன் படுத்தி கொள்ள நினை த்த மெண்டெஸ்க் மற்றும் ஹமித் ஓகௌல்லரி என்ற இரண்டு பழ ங்குடி குழுவினர் ஓட்டோமான் பேரரசின் மீது போர்தொடுத்தனர். ஆனால், பயெஸிட் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை வெற்றி கொண்டார். தன் தந்தையின் கொல்லப்பட்ட உடலை எடுத்து வந்து புஸ்ரா மசூதியில் அடக்கம் செய்தார். பயேஸிட் காலத்தில் தான் அனடோலியாவில் கோட்டை கட்டப்பட்டது. மந்திரி அலி பாஷா தலைமையில் கோனியாஹ், புரானுத்தீன் மற்றும் மலாடியா போன் ற பகுதிகள் வெல்லப்பட்டன. ஓட்டோமான்களின் வெற்றிகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் இராணுவம் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகச்சிறந்த இராணுவமாக இருந்தது. தேனீக்களின் கூட்டம்போல் நிறைய வீரர்கள் இருந்தார் கள். போரில் பிடிக்கப்பட்டவர்களையும், அடிமைகளை விலைகொடு த்தும், அடிமைக்கப்பல்களை சிறைப்பிடித்தும் பிடிக்கப்பட்டவர்களை வைத்து ‘ஜானிசர்ஸ்’ (JANISSARS) என்ற ஒரு இராணுவ பிரிவையே வைத்திருந்தார்கள். இவர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்ட வர்கள், எந்த நிலையிலும் உயிருக்கு பயப்படாதவர்கள். மேலும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டார்கள். பெர்ஷியாவிலிருந்து கிழ க்கு ஐரோப்பா வரையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஓட்டோமான் அரசின் நிர்வாகம் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிரு ந்தது. சுல்தானுக்கு அடுத்த நிலையிலிருந்தவர்கள் குலாம் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் காஸி போராளி குழுவிலிருந்து இஸ்லாமுக்காக போரிட்டதால், ஆளும் சுல்தான்கள் மதத்தலைவர் களாகவும் இருந்தார்கள். பிற் காலத்தில் புனிதநகரமான மக்கா, மதீ னாவையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 1345 ல் ஐரோப்பாவி ல் பைஸாந்தியப் பேரரசுக்கு எதிராக உள்நாட்டுப்போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அப்படிப்போனவர்கள் ஐரோப்பாவில் தங்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள். அது அவர்களை சரித் திரத்தில் 400 வருடங்களுக்கு மேலாக ஆண்ட பேரரசாக ஆக்கியது.  
                           பயேஸிட் கிழக்குப் பகுதியின் எல்லைகளை பலப்படுத்தினார். மன்னன் சிஜிமுண்ட் ஆட்சியிலிருந்த ஹங்கேரியு டன் போர் தொடுத்தார். ஹங்கேரிய இராணுவம் பலம் வாய்ந்ததாக, பிரென்சு மன்னரால் பகுதியாக பிரிக்கப்பட்டு கையாளப்பட்டது. 1396 ல் நிகோபோலிஸ் என்ற இடத்தில் பலமாகத் தோற்கடிக்கப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட பிரென்சு மன்னன் உடனே போரைத்துவக்கி, ’எங் கள் மண்ணில் துருக்கிகளின் முகத்தில் எச்சில் துப்ப முடியவில் லை என்றால், அந்த சொர்க்கம் இடிந்து விழுந்துவிடும்’ என்று கொக்கரித்தான். அதற்கு பயேஸிட் அமைதியாக, ‘நிறுத்து ஆடம்பரப் பேச்சுக்காரனே, விரைவில் தூய பீட்டரின் பலிபீடத்தில் எனது குதி ரைக்கு நான் ஓட்ஸ் அருந்தக் கொடுப்பேன்’ என்றார். போரில் பத்தா யிரத்துக்கும் அதிகமான ஹங்கேரிய வீரர்கள் ஓட்டோமான் களால் கைது செய்யப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை: