மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மருத்துவத்தின் வரலாறு 2



 636 ல் பெர்ஷிய நகரமான ஜுண்டி ஷபூர் (தமிழில்- அழகிய பூங்கா) முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவம் பயில் பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் கட்டி னார்கள். இது அப்போ தைய அப்பாஸிட் மன்னர் அலி இப்ன் உல் அப் பாஸ் அவர்களின் உத்தரவுப்படி கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு தொழிலைப்போல மருத்துவம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக் கப்பட்டது. 850 க்குப் பிறகு இருந்த ராஸி என்பவர் மாணவர் களுக்கு நோயாளியின் நோய் அறிந்து அதன் கிருமித்தன்மைக்கு ஏற்றவாறு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார். புகழ்பெற்ற மருத்துவர்களாக அப்போதிருந்த அல் ராஸியும், இப்ன் சினா (அவி சென்னா) வும் மருத்துவ மனையின் இயக்குனர்களாகவும், நிர்வாகி களாகவும் இருந்தனர். ஜுண்டி ஷாபூர் மற்றும் பாக்தாத் கல்லூரிகள் அடிப்படை மருத்துவத்தை போதித்தன. மனித தலை மற்றும் எலும்பு கள் சம்பந்தமாகக் கற்க பாக்தாதில் தனி கல்லூரி இருந்தது. அப்போது பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருந்தன.
                                                அடிப்படை மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவமனைகளில் தொழிலாளியாக பணியில் அமர்த்தப்பட்டனர். அங்கு மேலும் அவர்களுக்கு கலந்துரையாடல், விளக்கங்கள் கொடு க்கப்பட்டன. தேர்வு களில் நோயாளிகளின் நடவடிக்கை, வலி உணரப் படும் பகுதிகள், வீக்கங்கள் மற்றும் அளிக்கப்பட்ட மருந்துகள் சம்பந்த மான கேள்விகள் கேட்கப்பட்டன. ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்னும் எலும்பு சம்பந்தமான மருத்துவம் பத்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லா மிய நாடுகளில் இருக்க, மேற்கத்தியர்கள் புதுமை போல் 1852 ல் தான் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கண் மருத்துவம் சர்வ சாதா ரணமாக இருந்தது. இப்ன் சினாவும், ஹாஸி என்பவரும் மனநோய் பற்றி வகுப்பெடுத்தார்கள்.
                                931 ல் பாக்தாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறால் ஒரு நோயாளி இறந்துவிட, அப்போதைய மன்னர் அல் முக் ததிர் மூத்த மருத்துவர் சினன் இப்ன் தபித் பின் குர்ராஹ் என்பவரை அழைத்து மருத்துவர் களின் தரத்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கச் சொல்லி உத்தரவிட்டார். முதல் மருத்துவ மாணவர்கள் குழு 860 பேர் பாக்தாதில் தேர்வு செய்யப்பட்டனர். இப் போது அமெரிக்காவில் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை அப்போதே பாக்தாதில் செய்தார்கள். மருத்துவர்களின் தரம் அறி ந்து அவர்கள் தொழில் செய்யவும், மருந்தகம் வைக்கவும் உத்தரவு அளித்தனர். ஐரோப்பிய மருத்துவ கல்லூரிகள் இஸ்லாமிய மருத்து வக் கல்லூரி யின் நடைமுறைகளையே தொடர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பங் களில் கூட சார்பன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இப்ன் சினாவின் கானுன் (கேனன்) என்னும் பாடத்தைப் படிக்காமல் மருத்துவப்பட்டம் பெற முடியாது.
                              ராஸி அவர்கள் மருத்துவத்தின் ஆரம்ப காலத்தையும், நவீனத்தையும் தெரிந்து கொள்ளாமலும், மருத்துவமனையில் துவக் கப் பணியில் அமராமலும் ஒருவரால் சிறந்த மருத்துவராக ஆக முடி யாது என்று கூறுகிறார். இஸ்லாமிய ஆட்சியில் மருத்துவம் வசதி, நிறம், வயது, மதம் என்ற எந்தவித வித்தியாசம் காணாமலும் பார்க் கப்பட்டது. மருத்துவமனைகள் ஆண், பெண் இரு வருக்கும் தனிப் பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது. 872 ல் அமைக்கப்பட்ட கெய்ரோவின் துலூம் மருத்துவமனையின் ஹத்தாத் என்பவர், மருத்துவமனையின் நூலகத்தில் 100,000 மருத்துவ புத்தகங்கள் இருந்ததாகக் கூறுகிறார். மேலும், பாக்தா தின் முஸ்தான்சிர்ரிய்யா பல்கலைக்கழகத்தில் 80,000 புத்தகங்களும், கார்டோபா வில் 600.000 புத்தகங்களும், கெய்ரோவில் 2,000,000 புத்தகங்களும், திரிபோ லியில் 3,000,000 புத்தகங்களும் இருந் ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பதிப்புத் துறை யில் நவீனம் இல் லாத அந்தக்காலத்தில் இவ்வளவு புத்தகங்களை கையாண்டது பெரிய சாதனையாகும், தற்போது அமெரிக்கா பாக்தாதைத் தாக்கியபோது கூட முதலில் நூலகங்களில் நுழைந்து பெருவாரியான அறிவுக்களஞ் சியங்களை கொள்ளையடித்ததாக சமீபத்தில் கூட செய்திகளில் அறிந் திருப்பீர்கள். அப்போதே துலூன் மருத்துவமனையில் நோயாளிக்கென பிரத்தியேக ஆடை வழங்கப்பட்டது. டமாஸ்கசில் தொழுநோயாளிக ளுகென தனியாக மருத்துவமனை இருந்தது. அந்த மருத்துவமனை இருக்கும்போதே ஐரோப்பாவில் அடுத்த ஆறு நூற்றாண்டுகளாக தொழுநோயாளிகளை அரசு சட்டமாக தீயிலிட்டு கொளுத்தினார்கள்.
                                      துனிஷியாவில் 830 ல் கைரவான் மருத்துவமனை பெரிய சிகிச்சை அறைகளும், காத்திருப்பு அறைகள், பார்வையாளர் அறைகளும் உள்ளடங்கிய வண்ணம் கட்டப்பட்டது. முதல்முதலில் மருத்துவத்துறையில் செவிலிகள் (நர்சுகள்) சூடான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு பயிற்சி கொடு த்து பயன்படுத்தப்பட்டனர். 981 ல் பாக்தாதில் அல் அதுதி மருத்துவமனை அப்போ தைய நவீன கருவி களுடன் திறக்கப்பட்டது. அப்பாஸிய மந்திரி அலி இப்ன் இசா அரசு மரு த்துவர் சினன் இப்ன் தாபித்தை சிறந்த நிர்வாகம் அளிக்க வேண்டி னார். முதல்முறையாக சிறை கைதிகளுக்கும் மருத்துவ வசதி தரப்பட் டது. இராணுவ வீரர்களைக் கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட நடமாடும் மருத்துவமனை கள் நடத்தி வந்தார்கள்.

கருத்துகள் இல்லை: