மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மருத்துவத்தின் வரலாறு 3



 ஒருமுறை அல் ராஸி பாக்தாத் வருகைதந்த போது அரசால் புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்கக் கேட்டுக்கொண் டார். அவர் முற்றிலும் சுகாதாரமான இடத்தைத் தேர்வுசெய்ய புதிய இறைச்சித் துண்டை நகரின் பல பகுதிகளில் கட்டித்தொங்கவிட்டு அதன் கெடும் தன்மைக்கு  ஏற்றவாறு இடத்தைத் தேர்வு செய்தார்.
இப்ன் சினா மற்றும் இப்ன் காதிமா ஆகி யோரின் மருத்துவசேவை மனிதகுலத்துக்கு ஈடுஇணையற்ற பங்களிப்பாகும். இப்ன் காதிமா தான் நோயின் தொற்றை முதலில் கண்டுபிடித்தார். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் “கருப்பு மரணம்” என்ற வடி வில் புதிய நோய் பல உயிர்களைத் தாக்கியது. கிறிஸ்தவ உலகம் செய்வதறியாது திகைத் தனர். அப்போது கிரானாடாவில் இப்ன் அல் காதிப் அவர்கள். “நோய் தொற்று உள்ளவர்களை மதம் தடுக்கும்போது எப்படி நாம் அனுமதிக்க முடியும் என்று கேட்கிறார்கள்? நோயின் தொற்று ஆராய்ச்சிகளின் மூலமும், அனுபவங்களின் மூலமும், ஆதாரங்களின் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டப்பிறகு, அதற்கு மதத்தின் சாயம் பூசுவது எப்படி சரியாகும். உங்களின் பாத்திரங்கள், நகைகள், உடைகள் மூலமாகவே பரவுகிறது” என்று அறிவுபூர்வமான பதிலளித்தார்.
                                   அல் ராஸிதான் முதல்முறையாக சிற்றம்மைக்கான நோயின் குறிப்பு எழுதினார். இப்ன் சினா மார்பகசளி நோயின் இயற் கைத் தொடர்பை பற்றி எழுதினார். சல்ஃபூரிக் அமிலத்தின் தயாரிப்பை யும், தன்மையையும் பற் றியும் எழுதினார். கல்வியறிவு இல்லாத அந் தகாலத்தில் இப்ன் சினாவின் காயத் திற்கு வைன் (மது வகை) மிகச் சிறந்த நிவாரணி என்ற கண்டுபிடிப்பு மிகவும் புகழ் பெற்றது. அல் ராஸியும் ஆல்கஹால் ஒரு சிறந்த நோய்கிருமியின் எதிர்ப்பு என்பதை க் கண்டறிந்து கூறினார். இப்ன் சினா ஓப்பியம் ஒரு அருந்தத்தக்க மறு த்துப்போகச் செய்யும் ஒரு மருந்து என்பதைக் கண்டறிந்தார். மேலும், மிதமாக மறுத்துப்போவதற்கு மன்ட்ரகோரா, கஞ்சா விதை, ஹெம்லா க், ஹிஸ்சயாமுஸ், லெட்டூஸ் விதை, பனி மற்றும் குளிர்ந்த நீர் ஆகிய வையும் ஏதுவானது என்பதையும் கண்டறிந்து கூறினார். அன்றைய காலங்களில் மறுத்துப்போவதற்கு அரபு நாடுகளில் நார்கோடிக் மற் றும் நறுமணங்களில் ஊறவைத்த பஞ்சுகளைப் பயன் படுத்தினார்கள். அப்போது ஐரோப்பாவில் அறுவை சிகிச்சைகளை செய்யும் போது மறு த்துப் போகச்செய்யாமல் காட்டுமிராண்டித் தனமாக நாவிதர்களை வைத்தும், முறையற்ற முறையிலும் செய்தார்கள்.
                                                      அல் ராஸி அவர்கள் தான் முதல்முதலில் மிருகங்களை வைத்து அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். இஸ்லா மிய மருத்துவத்தில் அபு அல் காசிம் கலாஃப் இப்ன் அப்பாஸ் அல் ஸஹ்ராவி     (மேற்கத்தியர்களுக்கு அபுல் காசிஸ்) மற்றும் அல் ஸஹ்ரவியஸ் ஆகியோர் மிகவும் பிரபலமான அறுவைசிகிச்சை நிபு ணர்களாக இருந்தனர். அல் ஸஹ்ரவி யஸ் ஹீமோஃபீலியா சம்பந்த மாக முதலில் அல் தஸ்ரிஃப் என்ற புத்தகத்தை எழுதி மருத்துவ உலக த்துக்கு அர்ப்பணித்தார். அதில் 200 வகையான அறுவை சிகிச்சை ஆயு தங்களை வடிவமைத்திருந்தார். அல் ஸஹ்ராவி உடற்கூறு பற்றி ஆரா ய்ந்து மட்டுமல்லாமல், பசுவின் எலும்பிலிருந்து மனிதனின் விழுந்து போன பற்களுக்கு மாற்றுப்பல் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்தினார். இதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் முதல் ஜனா திபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பல் பொருத்தப்பட்டது. முதல்முதலில் அறுவை சிகிச்சைக்கு பஞ்சை பயன்படுத்தியவரும் அல் ஸஹ்ராவிதான். இவர்தான் கிட்னியில் ஏற்படும் கல்லை நீக்க சிறுநீர் பையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நரம்பை வெட்டும் முறையை கண்டுபிடித்தார். இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த மனிதஎலும்பின் தோள்பட்டை மாற்று சம்பந்தமான சிகிச்சையை 1937 ல் ப்ரூக்கும், கோச்சாரும் கண்டுபிடித்தனர்.
                                 இப்ன் சினாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான புற்றுநோய் சம்பந்தமான விளக்கங்கள் இன்றும் ஒப்புக்கொள்ளப்பட் டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அல் ஸஹ்ராவியால் கடை பிடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை முறைகளை இன்றளவும் அறியப் படாமலே உலகமெங்கும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்கிறார் கள் என்ற கருத்து நிலவுகிறது. இப்ன் ஸுஹ்ர் அவர்களால் அரிப்பு நோய், தூக்கவியாதி நோய்க்கு கல்கஷண்டி ஆகியோர் குறிப்புகள் தந்துள்ளனர். அல் அஷ் அத், அபு ஷல் அல் மசிஹி, இப்ன் அல் நஃபிஸ் ஆகியோரின் மருத்துவத்துறையின் பங்கும் சிறப்பானது. இப்ன் சினா வின் அல் கானுன் (CANON) என்ற புத்தகம் மருத்துவ உலகின் ஒரு மைல் கல்.
                                                   கண் நோயில் ரெடீனா, கேடராக்ட் போன்ற வார்த்தைகள் அரபுச்சொல்லின் மூல வார்த்தைகள். பத்தாம் நூற்றா ண்டில் இப்ன் அல் ஹைதம் அவர்களின் (மேற்கில்- அல் ஹாஸென்) “ஆப்டிகல் தெசாரஸ்”  (OPT ICAL THESAURUS) என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இதிலிருந்து ரோஜர் பேகன், லியனார்டோ டா வின்சி மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் போன்றோர் சில பகுதிகளை எடுத்து கையாண்டிருக்கிறார்கள். இந்த புத்தகம் அதுவரை இருந்த ஒளிக்கற் றை, கண் பார்வை சம்பந்தமான கிரேக்கர்களின் கருத்தை உடைத்தது. இதை அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஒப்புக் கொண்டது. அல் ராஸி ஒளியைகண்டவுடன் கண்ணில் ஏற்படும் மாற்றங்களையும், இப்ன் சினா கண்விழியின் மொத்த நரம்புகளின் எண்ணிக்கையையும் முதல் முதலில் தெரியப்படுத்தினார்கள். பத் தொன்பதாம் நூற்றாண்டுகளில் கண் சிகிச்சைக்கென ஐரோப்பாவில் கண்டு பிடிக்கப்பட்ட ஹாலோ மெட்டாலிக் ஊசியை ஈராக்கின் மோசூ லைச் சேர்ந்த அம்மார் பின் அலி பத்தாம் நூற்றாண்டுகளில் கண்டுபிடி த்து விட்டார். 
                                                நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்புகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் யூஹன்னா பின் மசவய்யும் அவர் மாணவர் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதி யும் பல நோய்களுக்கான மருந்துகளை அப் பாஸிட்கள் காலத்தில் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். மசாயில் ஹுனைன் என்ற புத்தகத்தில் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதி அவர்கள் விவரமாக மருந்துகளை பற்றி குறிப்புகள் தந்திருக் கிறார். மருந்தகங்கள் அப்போதைய ஆட்சியாளர்களால் தரம் சோதிக் கப்பட்டன. அரபு நாடுகளில் பணிபுரிபவர்களைக் கேட்டுப்பாருங்கள் இன்றும் மருத்துவத்துறையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். பெரு ம்பாலான மருந்தக சொற்கள் அரபுமொழியின் மூலமே. உதாரணத்தி ற்கு, ட்ரக், அல்கலி, அல்கஹால், அல் டிஹைட்ரேட், அல் எம்பிக் மற் றும் எலிக்ஸிர் போன்றவை.

கருத்துகள் இல்லை: