மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மங்கோலியர்கள் வரலாறு 3



வட சீனாவும், பெர்ஷியாவின் பகுதிகளும் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்ப பிரதேசமாக அறிவிக்கப்பட் டது. ஒகிடாய் கரகோரத்தை மங்கோலியர்களின் நவீன தலைநகர மாக்கினார். கரகோரம் நகரம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. 1253 ல் அங்கு வருகைதந்த ஒரு கிறிஸ்தவ துறவி (அவர் வில்லி யமாகவோ அல்லது ருப்ருகிஸ் ஆகவோ இருக்கலாம்) கர கோரத் தில் நகரத்தின் சுவர்கள் பலமாக உயர்வாக அமைந்திருந்ததாகவும், செவ் வகவடிவத்தில் பெரிய அரண்மனையும், செங்கற்களால் கட்ட ப்பட்ட வீடுகள், அழ காக அமைக்கப்பட்ட தெருக்கள், பனிரெண்டு ஷாமானிஸ்ட் புனித ஸ்தலங்கள், இரண்டு மசூதிகள் மற்றும் நெஸ் டோரியன் கிறிஸ்தவதேவாலயம் ஒன்றும் இருந்ததாகக் கூறுகிறார் ஜெங்கிஸ்கான் கொள்ளையடிப்பதிலும், நகரங்களைத் தாக்கி தனது வீரத்தை பரப்புவதிலுமே வாழ்நாளை செலவழித்தார். ஆனால், ஒக் டாய் தலைநகரத்தை மையமாக்கி ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்தி னார். மேலும் சீனாவின் பகுதி களையும் கொரியாவையும் வென்றார். ஜெங்கிஸ் கானுக்கு மூத்த மகன் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஜுச்சி. ஜுச்சியை ஐரோப்பாவை வென்றெடுக்க வேண் டும் என்று உயிரோடிருக்கும் போது கேட்டுக்கொண்டார். ஆனால், ஜுச்சி ஜெங்கிஸ்கானுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். ஒகி டாய் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஜுச்சியின் மகன் படுவை மேற்கு நோக்கி சென்று ஐரோப்பாவை வெல்ல கேட் டுக்கொண் டார். படு 1236 ல் வடக்காகச் சென்று ரஷ்யாவில் வோல் கா என்ற இடத்தை வென்றார்.
                                 1237 ல் சென்ற மங்கோலியப் படைகள் ரஷ்யாவில் 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. ரஷ்யர்கள் மங் கோலியர்களை தங்க நாடோடிகள் (ZOLOTAYA ORDA-GOLDEN HORDE) என்று அழைத்தனர். ஏனென்றால், படு தங்குவதற்கு தங்க கூடாரத்தைத் தான் பயன்படுத்துவார். பெரும்பாலான ரஷ்ய நகரங்களைக் கொள் ளையடித்தார்கள். இந்த தோல்வியை ரஷ்யா சரித்திரம், ‘இறந்தவர் களுக்காக அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அளிக்கவில்லை’ என்று கூறுகிறது. மங்கோலியர்கள் சேற்றில் குதிரையில் சண்டையிட மிக வும் சிரமப்பட்டார்கள். அதனால் வலுக்கட்டாயமாக பின்வாங்கினர். மீண்டும் குளிர் காலத்தில் போரிட வந்தார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த கீவ் நகரின் சுவர்கள் மங்கோலியர்க ளால் இடித்து நொறுக்கப்பட்டது. இரக்கமில்லாமல் மக்கள் கொல்ல ப்பட்டனர். 1238 ல் மாஸ்கோவையும், 1240 ல் கீவ் நகரத்தையும் கைப் பற்றினார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் மங்கோலியர்கள் ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, தென்பகுதி நோக் கி சென்றனர். இதற்கிடையில் மங்கோலியர்கள் என்னும் இஸ்லா மிய இராணுவம் கிறிஸ்தவ ரஷ்யாவை வென்று விட்டது என்று ஐரோப்பியர்களுக்கு செய்தி எட்டியது. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராகினார்கள். மங்கோலியர்கள் ஒரு ஆங்கில தூதுவரை ஹங்கேரியின் மன்னர் பேலாவிடம் அனு ப்பி சரணடைய வேண்டினார்கள். அவர் தான் ஒரு நாட்டின் மன்னர் சாதாரணமாக எங்கிருந்தோ வரும் நாடோடிக்கொள்ளைக் கூட்டத் துடன் சரணடைவதா முடி யாது என்று மறுத்து விடுகிறார். ஒரு நாடோடி இராணுவப்படை 1241 ல் போலந்தை நோக்கி முன்னேறி யது. போலந்தும் ஜெர்மனியும் கூட்டு சேர்ந்து லெக்னிகா என்ற இட த்தில் மங்கோலியர்களை எதிர்த்து போரிட்டுத் தோற்றனர். அதே நேரத்தில் இன்னொரு நாடோடி இராணுவம் மொஹ்லி என்ற இடத் தில் ஹங்கேரியை வெற்றி கொண்டது. முதலில் 70,000 கிறிஸ்தவ வீரர்களும், அடுத்து 40,000 வீரர்களும் ஐரோப்பிய தரப்பில் கொல்லப் பட்டனர். அந்த கோடை காலத்தை மங்கோலியப் படைகள் ஹங் கேரியின் திறந்த வெளிகளில் கழித்தது. அவர்களின் புல் நிறைந்த பூமியின் வாழ்க்கைச் சூழலுக்கு அது ஒத்துவரவில்லை என்றாலும், வெற்றி அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. அந்த வெற்றி மேலு ம் ஐரோப்பிய நகரங்களை வெல்லஏதுவாக இருந்தது. மங்கோலிய நாடோடிகளின் படை அப் போது ஐரோப்பாவை பயத்தில் ஆழ்த்தி யது. அந்த வருட டிசம்பரில் மாவீரன் ஒகி டாய் மரணமடைந்து விட் டதாகவும், உடனே வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி திரு ம்பிவர செய்திவந்தது. படுவும் அடுத்த நிலை பெரிய மனிதர்களும் கலந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஹங்கேரியை விட்டு பழங்குடி இடமான வோல்காவுக்கு திரும்பினார்கள்.
                                  ரஷ்யாவில் நிறைய சிறிய மன்னர்கள் சிறிய பிரதேசங்களை ஆண்டுவந்தவர்கள் தங்ககூடார மாவீரன் ஒக் டாயிக்கு மிகுந்த மரியாதையும், ஆண்டு கப்பமும் செலுத்தி வந்தார் கள். பின் படு ஆட்சிக்கு வந்து வோல்காவிலேயே ஒரு பகுதியை தலைநகராக்கி தன் பெயர் வருமாறு சராய்படு என்று மாற்றி ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பிறகு, இவரின் சகோதரர் பெர்கி 1255 ல் ஆட்சிக்கு வந்தார். பெர்கி தன் பழங்குடியின மக்கள் அனைவரையும் இஸ் லாம் மதத்தைத் தழுவச்செய்தார். நவீன வோல்காக்ராடுக்கு கிழக்கில் சராய் பெர்கி என்ற நகரத்தை உருவாக்கி தலைநகராக் கிக் கொண்டார். அங்கு நகர் முழுதும் மசூதிகளையும், பொதுக்கழிப் பிடங்கள் போன்றவற்றைக் கட்டினார். 600,000 மக்கள் அங்கு வசித்த னர். 1395 ல் தைமூரியர்கள் அழிக்கும் வரை அந்நகர் மிகவும் சிறப் பாக இருந்தது. இடையில் படுவிடமிருந்து ஆட்சி வாரிசு பிரச்சினை யால் இறந்துபோன அவரின் விதவை மனைவி டோரிகினியிடம் வந்து நான்கு ஆண்டுகள் அவர் ஆண்டார். அவர் அடுத்து மகன் கூயூக்குக்கு பதவி கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு செயல்பட்டார். கூயூக் ஆட்சிசெய்த இரண்டே ஆண்டுகளில் 1246 ல் இறந்து போனா ர். மீண்டும் ஆட்சி கூயூக்கின் விதவை மனைவி ஓகுல் கைமிஷ் வசம் போனது. ஆனால் உயர் பதவியில் இருந்தவர்கள் முறையாக ஆட்சிக்கு அதிகாரம் உள்ளவர் ஜெங்கிஸ்கானின் பேரர் அதாவது மூன்றாவது மகன் துல்யூவின் மகன் மாங்கு தான் என்று அவரை ஆட்சியில் அமர்த்தினர்.
                                 மாங்கு (மோங்கே என்றும் அழைக்கப் பட்டார்) தன் இரு சகோதரர்கள் உதவியுடன் கிழக்கிலும், மேற்கிலும் வடசீனாவின் பகுதி கள், ரஷ்யா, பெர்ஷியா மற்றும் மத்திய கிழக் கின் சில பகுதிகளை வென்றார். 1252 ல் மாங்கு கிழக்கில் வென்ற சில பகுதிகளுக்கு தன் சகோதரர் குப்ளாய்கானை ஆட்சியாளராக்கி னார். பின் 1255 ல் இன்னொரு சகோதரர் ஹுலகுகானை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய நாடுகளை வெல்லச் சொன்னார். குப்ளாய் கான் மேற்கு சீனாவில் ஷெஸ்வான் மற்றும் யூன்னன் பகுதிகளை வென்று முன்னேறிக் கொண்டிருக்கும் போது, சகோதரர் மன்னன் மாங்கு 1259 ல் இறந்து விட திரும்பி விடுகிறார். அனைவரும் கூடி குப்ளாய்கானையே மன்னராகத் தேர்ந்தெடுக்கிறார் கள். ஆனால், கரகோரத்தில் கடைசி சகோதரர் அரிக் போகி தான் மன்னராக வேண்டும் என்று உரிமை கோருகிறார். ஒரு வழியாக 1264 ல் குப் ளாய்கான் சகோதரரை வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். தற் போது முழுகவனத்தை யும் சீனாவின் மீது திருப்பினார். தலைநகர் கரகோரத்திலிருந்து தன் பாட்டனார் 1215 ல் சீரழிக்கப்பட்டிருந்த பெய்ஜிங்க் நகரத்தை வென்றார். தானே கவனம் செலுத்தி பெய்ஜி ங்க் நகரத்தை சீரமைத்தார். 24 மைல் நீளத்திலும், 50 அடி உயரத்தி லும் நகரைச்சுற்றி பிரமாண்டமான சுவர் எழுப்பினார். அந்நகரத்தி ற்கு “கான் பாலிக்” (கான்களின் நகரம்) என்று பெயரிட்டார். அந்நக ரம் ஐரோப்பியர்கள் மத்தியிலும் மிகவும் புகழப்பட்டது. அவர்கள் சற்று பெயர்மாற்றி கம்பலூக் (CAMBALUC) என்று அழைத்தனர்.
                              குப்ளாய்கான் இந்த நகரத்தை மையமாக வைத்து தான் ஸங்க் பேர்ரசை வெற்றி கொண்டார். 1271 ல் தாங்கள் கொள்ளையர்களாக அங்கு பிரவேசித்தவர்கள் என்ற எண்ணம் ஏற்ப டாத வண்ணம் உண்மையாக அங்கு ஒரு சீனப்பேரரசை நிறுவினார் அதே ஆண்டு அந்த பேரரசுக்கு “தா யூவன்” என்று பெயர் சூட்டினார். சீனாவில் மூதாதையர்கள் சந்ததியினரை பெரிதும் மதிப்பார்கள் அதை மனதில் கொண்டு தனது பாட்டனார் ஜெங்கிஸ்கானுக்கு மரி யாதை செய்யும் விதத்தில் “ட் ஆய் ட்சூ” (GRAND PROGENITOR- மதிப்புமி க்க மூத்த சந்ததியினர்) என்று அழைத்தார். குப்ளாய்கான் 1276 ல் ஹாங்க்ஸூவில் ஸங்க் பேரரசைக் கைப்பற்றி அதன் இளம் பேரர சரையும், அவர் தாயாரையும் மரியாதை யுடன் நடத்தினார். 1279 ல் மங்கோலியர்களுக்கு சீனாவில் எதிர்ப்பில்லாமல் போனது. சீனச் சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி முதல்முதலாக வெளியில் இருந்து சீனா வந்து ஆட்சி செய்தவர்கள் யூவன் பேரரசு மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால், குப்ளாய்கான் தான் என்றுமே வெளி யிலிருந்து வந்து ஆட்சிசெய்பவர் என தோன்றாமல் இருந்தார். சீனா வின் நிர்வாகத்தையே தன் ஆட்சி யிலும் கடைபிடித்தார். ஒரேஒரு வேற்றுமை பணியாளர்களாக வெளிநாட்டினரை நியமித்தார். இடை யில் மின்னல்போல் பிரகாசமாக வந்துசென்றவர் மார்கோ போலோ ஆகும்.
                                   குப்ளாய்கான் இதற்கு முன்னிருந்த சீன ஆட்சியாளர்களை விட சிறப்பான முறையில் சீனப் பிரதேசங் களை ஆட்சி செய்தார். மங்கோலியா, திபெத், மன்சூரியா, கொரியா மற்றும் தென் சீனக் கடல் பகுதி கள் அனைத்தையும் தன் நேரடி நிர் வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். இவரின் ஆளுமையிலிருந்து தப் பியது ஜப்பான் மட்டும்தான். அதுகூட 1274 ல் மாபெரும் அழிவிற்கு ண்டானது, பின்பு மீண்டும் 1281 ல் மார்கோபோலோவால் மீண்டும் அழி விற்குண்டானது. குப்ளாய்கானை ஜெங்கிஸ்கான் போல் கொள் ளையடிக்க சென்ற நாடோடிக் கூட்டத்தலைவன் போலல்லாமல் சரி த்திரம் “தி க்ரேட் கான்” என்று புகழுரைக்கிறது. இவர் தன் பழங்குடி யின மக்களை வென்ற இடத்தில் குடியமர்த் தினார். வென்ற இடங் களை சுதந்திரப்பிரதேசமாக அறிவித்தார். குப்ளாய்கானின் பேரரசு மிகப் பெரியது. சகோதரர் மகன்கள் படு மற்றும் பெர்கேவை ரஷ்யா வின் தங்கநாடோடிகள் நகரத்தின் அட்சியாளர்களாக்கி, தன் சொந்த சகோதரர் ஹுல குவை பெர்ஷியாவிலும், மெஸோபொடாமியாவில் மங்கோலியர் பேரரசை நிறுவி ஆட்சியாளராக்கினார்.
                         ஹுலகு 1256 ல் அமு தர்யா ஆற்றைக்கடந்து இஸ்லாமிய பெர்ஷியாவில் மங்கோலிய பேரரசை நிறுவ தொடங்கி னார். அப்போது அந்த பகுதி பல அரசியல் கொலைகளுக்காளாகி இருந்தது. அதற்கு காரணமாய் இருந்த ‘இஸ்மாயிலி’ என்ற அமை ப்பு ஏறக்குறைய மங்கோலியர் களின் நடைமுறை முறைக்கு ஒத்து போனதாய் இருந்தது. ஹுலகுவும் ஒவ்வொரு கோட்டைகளாக கொலைகளின் மூலம் கைப்பற்றத் தொடங்கினார். 1257 ல் மேலும், மேற்கு நோக்கி வளமான பகுதியை நோக்கி முன்னேறினார். ஹுல குவும், அவரின் நாடோடிப் படையும் வெளிப்படையில் மட்டும் இஸ் லாமின் மையமாகத் தோன்றிய கலீஃபாவின் ஆட்சிக்கு கீழுள்ள மேஸோபொடாமியாவை நோக்கி நகர்ந்தன. அப்போதைய பாக் தாதின் கலீஃபா அல் முஸ்தாஸிம் 1258 ல் மங்கோலியர்களுக்கு எதி ராக படையை அனுப்பினார். ஹுலகுவால் முஸ்லீம்படை அடக்கப் பட்டு, கலீஃபாவை தன் முன்னேவந்து சரணடைந்து நகரத்தின் சுவர் களை இடிக்கச்சொன்னார். கலீஃபா அல் முஸ்தாஸிம் மறுத்துவிட, ஹுலகு பாக்தாதை வெற்றிகொண்டு, நகரை சின்னாபின்னப்படுத் தினார். ஏறக்குறைய 800,000 மக்களைக் கொன்றார். இது சுன்னி பிரிவு முஸ்லீம்களிடத்தில் நூறாண்டு களுக்கும் மேலாக மிகவும் பயத்தை விளைவித்தது. மங்கோலியப் படைகள் பல கோட்டை களை நகரங்களை அழித்தனர். கலீஃபாவையும் அவர்குடும்ப வாரிசு களையும் கொன்றனர். இஸ்லாமிய வரலாற்றில் மறக்கமுடியாத அழிவு. பல கலை ஆவணங்கள், அறிவுக்களஞ்சியங்களின் மதிப் பறியாமல் தீக்கிரையாக் கப்பட்டன. அந்தகால கட்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் இப்ன் அல் அதிர் என்பவர், “வெறும் ஒரு ஆண் டுகாலத்தில் எவ்வளவு பேரழிவு ஏற்படுத்த முடியுமோ, எப்படியெல் லாம் அழகைச் சிதைக்க முடியுமோ, குணத்தாலும், நாகரீகத்தாலும் சிறந்திருந்த பெருவாரியான மக்களை எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். அவர்கள் அங்கிருந்த இர வுகளை இனி யாரும் இந்த உலகில் சந்தித்திருக்க மாட்டார்கள். முஸ்லீம்களும், இஸ்லாமும் சற்று இயங்காமல் போனது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: