மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மருத்துவத்தின் வரலாறு 4



அப்போதைய மக்களின் அறியாமைத் தன்மைக்கு ஏற்ப கசப்பான மருந்துகளில் பன்னீர், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவ ற்றின் சுவை யை மருந்துகளில் ஏற்றினார்கள். மருந்தகத் துறையில் அல் ராஸி, அல் ஸஹ் ராவி, பிரூனி, இப்ன் புட்லான் மற்றும் தமிமி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானது. மருத்துவத் துறையில் இன்னும் அதிகமாக சொல்லிக்கொள்ள இருக்கிறது. இது துறை சம்பந்தமான சொற்களுடன் கூடியதால், உண்மையில் எனக்கும் விளங்காது உங்க ளுக்கும் விளங்காது. மனோதத்துவத் துறையிலும் பல புதுமைகளை அல் ராஸி அறிமுகப்படுத்தினார். ஒருமுறை கலிஃபா ஒருவருக்கு மன நோய் ஏற்பட்டது. அல் ராஸி அவரை குளிக்கச் சொன்னார். கலீஃபா குளியல் தொட்டி யில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அல் ராஸி கத்தியை எடுத்து கலீஃபாவைக் குத்துவது போல் முன்னேறினார். இத னால் கலீஃபா பயந்து போய் எழுந்து ஓட அவரின் இதய இயக்கம் அதிக மாகி நோயின் தன்மை உடனே குறைந்தது. ஒருமுறை ஒரு பெண்மனி குனியமுடியாமல் வலியால் துடித்துக் கொண்டிருந் தார். மருத்துவர் உடனே குனிந்து அந்த பெண்மனியின் கால்களிலிருந்து உடை யை விலக்க அந்த பெண்மனி பதறியடித்து குனிய அவள் வலி குணமானது. அப்போதைய இஸ்லாமிய ஆட்சியில் இரு செயல்களுமே குற்றமாகக் கருதப்பட்டா லும், நவீன வசதியில்லாத அந்த காலத்தில் இந்த சிகிச் சைமுறை நல்ல பலனை தந்ததற்கு பாராட்டப்பட்டது. மனநோய்க்கு நஜபுத்தீன் முஹம்மது என்பவரின் நஃப்காயி மலிகோலியா, குத்ரிப் மற் றும் துவால் குல்ப் ஆகிய படைப்புகள் சிறப் பானது.
                                                 மனநோய் காப்பகங்கள் மொரோக்கோ நகரின் ஃபெஸ் பகுதியிலும், 705 ல் பாக்தாதிலும், 800 ல் கெய்ரோவிலும், டமா ஸ் கஸ் மற்றும் அலிப்போவில் 1270 லும் துவங்கப்பட்டன. உலகின் அப் போதைய மருத்துவ மாணவர்கள் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவம் படிப்பதை தங்கள் லட்சியமாகக் கருதினார்கள். இந்த நிலையை இந்த 21 ம் நூற்றாண்டில் தான் அமெரிக்காவில் மருத்துவத்துறையில் அடை ய முடிந்தது. ஆறாம் நூற்றாண்டு களிலிருந்தே படிப்படியாக முஸ்லீம் ஆட்சியாளர்கல் நிலப்பரப்புகளை வென்று ஐரோப்பா நோக்கி முன்னே றினார்கள். இது பனிரெண்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. போகு மிடமெல்லாம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கலாச்சாரத்தையும், அறி வுக்களஞ்சியங்களையும் கொண்டு சென்றார்கள். இதற்கு பல ஆதாரங் கள் வரலாற்றில் உள்ளன. அடுத்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக கிறி ஸ்தவர்கள் சிலுவைப்போர் நடத்தி முஸ்லீம்களை ஸ்பெயின் மற்றும் வட பிரான்சை விட்டு விரட்டினார்கள். கொண்டுபோன ஆவணங்கள் அழிக்கப்பட்டும், கொள்ளையடிக் கப்பட்டும் மேற்கத்திய நாடுகளிலே யே இருந்தது. காரியங்கள் முடிந்த பிறகு, ஐரோப்பிய நாடுகள் வளமை அடைந்தவுடன் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த ஆவணங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு ஒவ்வொரு கண்டுபிடிப்பும் யூத மற் றும் கிறிஸ்தவர்கள் பெயரால் வெளியிடப்பட்டன அல்லது முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் ஏதோ அவர்களுக்கு உச்சரிக்க வராததுபோல் திட்டமிட்டு யூத, கிறிஸ்தவபெயர்கள் தோற்றமளிப்பது போல் குறிக்கப்பட்டன. மருத்துவம் மட்டுமல்ல பல துறைகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இதை நாம் சிறுகச் சிறுக ஐரோப்பிய, கிறிஸ்தவ ஆசிரியர்கள் எழுதிய ஆதாரபூர்வமான புத்தகங்களின் வாயிலாகவே வெளியிடுவோம். இன்றைய நாட்களில் இறைவன் தன் அருட்கொடை யை அரபு நாடுகளில் திறந்துள்ளான். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவுக்கு செல்வத்தை வழங்கியுள்ளான். கடிகாரத்தின் சுழற்சி போல் நிச்சயமாக மீண்டும் முட்கள் கடந்த எண்ணைத் தொடும். மறுபடியும் இஸ்லாமியர்கள் எல்லாத்துறைகளிலும் முதல் இடத்தில் வருவார் கள்.
இந்த கட்டுரை எழுத ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் :  
க்ரேட் மோமெண்ட்ஸ் இன் மெடிசன் – ஜி.எ. பெண்டர்- பக்கம் 68-74
யூரோலஜி  – இ. டி. வைட்ஹெட் மற்றும் ஆர்.பி. புஷ்- பக்கம் 5
இருபத்தொன்பதாவது இண்டர்நேஷனல் காங்கிரஸ் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எஸ். ஹத்தாத்- பக்கம் 1600- 1607
எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – சி. சிங்கர் மற்றும் எ. எ. அண்டர்வுட்- பக்கம் 76
எ ஹிஸ்டர் அஃப் மெடிசன் – எ. காஸ்டிக்லியானி- பக்கம் 268
தி அராப் ஷார்ட் ஹிஸ்டரி – பி. ஹிட்டி – பக்கம் 143
1001 நைட்ஸ் (ஆறாம் பகுதி) – எல். பர்டன் – பக்கம்- 1886
மேன் கைண்ட் – பி. மில்லர்- பக்கம் 8- 40
தி அராப் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – ஒய். எ. ஷாஹின்- பக்கம் 10
முஸ்லீம் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – எச். என். வாஸ்டி – பக்கம் 5-16
எ மெடிகல் ஹிஸ்டரி ஆஃப் பெர்ஷியா – ஜி. எல்குட்- பக்கம் 278-301
ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எச். காரிசன் – பக்கம் 134
அரேபியன் மெடிசன் – இ. ஜி. ப்ரௌனி – பக்கம் 5-16
இன்னும் பல புத்தகங்கள் உள்ளது.

கருத்துகள் இல்லை: