மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஓட்டோமான் கள் வரலாறு 3



செலிம் மற்றும் சுலைமான் ஆட்சியில் கடற்படை வலுவாக இருந்து மொத்த மெடிட்டரேனியன் கடல்பகுதி யும் ஓட்டோமான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சுலைமானின் ஆட்சி யில் ‘பார்பரொஸ்ஸா ஹைரெத்தீன் பாஷா’ என்பவர் ஓட்டோமான் கடற்படைத் தளபதியாக இருந்தார். பல கிறிஸ்தவ கடற்படைக்கு சிம்மசொப்பனமாக இருந்து, அவர்களைப் பலமுறை வெற்றிப் பெற் றார். ஓட்டோமான் கடற்படைகளின் வெற்றிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 1516 மற்றும் 1529 அல்ஜீரியா, 1534 மற் றும் 1574 ல் ஸ்பெயினிடமிருந்து துனீஷியா, 1522 மற்றும் 1551 நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜான் என்பவரிடமிருந்து ரோட்ஸ் தீவு மற்றும் திரிபோலி, 1538 ல் பிர்வேஸா போர், 1552 ல் பொன்ஸா போர், 1560 ல் ஜெர்பா போர், ரோமப்பேரரசிடமிருந்து 1543 ல் நைஸ், ஜினோவாவிடமிருந்து 1553 ல் கோர்சிகா, 1558 ல் ஸ்பெயினிடமிரு ந்து பலியாரிக் தீவுகள், இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்களி டமிருந்து 1548 ல் ஏடன், 1552 ல் மஸ்கட், 1565-67 ல் அசெ ஆகியவை ஆகும். ஓட்டோமான்கள் கடற்படை என்றால் அந்தகாலகட்டத்தில் அலற வைத்தார்கள்.
                                     சுலைமானின் மிகப்பெரிய தோல்வி என்றால், 1565 ல் 50,000 வீரர்களுடன் கோடைகாலத்தில் சென்று நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜான் என்பவருடன் மெடிட்டரேனியன் பகுதியில் மால்டா போரில் ஈடுபட்டார். வெறும் 6000 மால்டா வீரர் கள் கடுமையாக போரிட்டுத் தடுத்து அந்த வருட செப்டம்பர் மாதம் வரை போரை நீட்டித்தனர். கோஸோ தீவு, செயிண்ட் எல்மோ கோட் டையைக் கைப்பற்ற வாய்ப்பு கிட்டியும் இறுதியில் முடியாமல் தோல்வி அடைந்து திரும்பினார்கள். 1556 ல் சுலைமான் இறந்து போனார். இவரின் பெருமை என்னவென்றால், சிறப்பான இஸ்லா மிய நகரங்கள் மக்கா, மதினா, ஜெருசலம், டமாஸ்கஸ், கெய்ரோ, துனிஸ் மற்றும் பாக்தாத் ஆகிய நகரங்கள் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மிகச்சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்தார் என்று இவரைப் புகழ்கிறார்கள். குறிப்பாக சட்டத்துறை முழுமையாக ஷரி யத் அடிப்படையில் பாரபட்சமின்றி நேர்மையாக இருந்தது. இவரது ஆட்சியின் போதுதான் ஐரோப்பியர்கள் முதல்முதலாக இஸ்லாமிய ஆட்சிக்கு பயந்தது. கலை கலாச்சாரங்களைப் பேணிப்பாதுகாத்தார்.
                                 சுலைமான் அவர்கள் தன்னைத்தானே பணிவோடு, இறைவனின் அடிமை, சக்திவாய்ந்த இறைவனின் சக்தி யாளன், பூமியில் இறைவனின் பணியாள், குர்ஆனின் வழிநடப்பவ னும் அதை உலகம் முழுவதும் எத்திவைப்பவனும், மொத்த பூமி யின் ஆட்சியாளன், சீஸர், அலெக்ஸாண்டரின் பூமியின் வெற்றி யாளன், அனைத்து இஸ்லாமிய நாடுகளில் என் பெயர் கூறப்படு கிறது, ஹங்கேரியர்களின் கிரீடத்தை வெற்றி கொண்டு எனது கடைசி அடிமைக்குப் பரிசளித்தேன் என்று கூறிக்கொள்வார். இவ ரைப் பார்த்து அந்த காலகட்டத்தில் பொறாமைபடாத மன்னர்களே உலகில் அப்போது இல்லை. ஆம் உண்மை அதுதான் இறைவன் அப்போது சுல்தான் சுலைமானை ஆள்வதற்கென தேர்ந்தெடுத்திரு ந்தான். இன்றும் கூட பல இஸ்லாமிய நாடுகளில் இவர் பெயரில் தெருக்கள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் உள்ளன. ரோமப் பேரரசை தன் காலத்திலேயே மீண்டும் வெற்றி கொள்ள வேண்டும் என்று மிக ஆர்வமாய் இருந்தார். அதில் வியன்னா, க்ரீஸ், ஹங்கேரி என்று பாதி வெற்றிதான் அடைந்தார். ஐரோப்பிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களிலிருந்து ப்ராட்டெஸ்டண்ட் கிறிஸ்தவர் கள் பிரிந்தபோது, சுல்தான் சுலைமான் அவர்கள் ப்ராட்டெஸ்டண்ட் களின் ஆதரவைப் பெற வேண்டி நிறைய நிதியுதவிகள் செய்தார். இன்றும் கத்தோலிக்கர்கள் சொல்வார்கள் சுலைமானின் உதவி இல் லாவிட்டால்,  ப்ராட்டெஸ்டண்டை நாங்கள் வளரவிட்டிருக்க மாட் டோம் என்று. போர்ச்சுகல் கிழக்கு ஆப்பிரிக்காவில் நிறைய முஸ் லீம் நாடுகள் மீது படையெடுத்த போது, துணிந்து அந்நாடுகளுக்கு ஆதரவாக நின்றார். உண்மையாகவே இணைவைப் பாளர்களுக்கு எதிராக திரண்டு நின்று நேர்மையான இஸ்லாமிய மன்னராக வாழ் ந்தார். சுலைமான் ஐரோப்பியர்களுக்கு எதிராக போரிடும் போது, சுலைமானால் கைப்பற்றப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட இஸ்லா மிய நாடுகள் போதிய ஆதரவைத்தரவில்லை. ஏனென்றால், அவர் தீவிர இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்திய காரணத்தால்.
                      சுல்தான் சுலைமான் அவர்கள் இஸ்தான்புல்லை இஸ்லாமிய தலைமையகமாக மாற்றத் தீர்மானித்தவுடன், அங்கு கட்டிடங்கள், பாலங்கள், மசூதிகள், அரண்மனைகள் மற்றும் உல கின் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார். இவரின் ஒப்பற்ற பணியாள் ‘சினான்’ என்பவர் மிக அற்புதமாக வடிவமைத்த மசூதியைக் கண்டு உலக வரலாற்றில் ஒரு மனிதனின் அதிகபட்ச கலைத்திறமை இதுதான் என்று உலகம் பாராட்டிக் கொண்டிருக்கி றது. இவரின் பணி உலகின் சிறந்த பொறியாளர்களைத் திணறடித் தது. சுலைமான் அவர்கள் கவிதையில் சிறந்து விளங்கினார். இஸ் தான்புல்லில் ஓவியங்கள், இசை, எழுத்து மற்றும் தத்துவம் போன்ற வற்றை சிறந்தமுறையில் உருவாக்கி இஸ்லாமிய உலகத்திற்கு கிடைக்கச் செய்தார்.       
                  1543 ல் நைஸ் மற்றும் 1553 ல் கோர்ஸிகா போர்கள் பிரான்சின் மன்னர் முதலாம் ஃப்ரான்சிஸ் மற்றும் சுலைமான் கூட்டு டன், ஓட்டோமான் தளபதிகள் பார்பரோஸ்ஸா ஹைரெத்தின் பாஷா மற்றும் துர்குத் ரெய்ஸ் தலைமையில் நடந்தது. 1543 ல் ஓட்டோமா ன்கள் எஸ்டெர்கோம் போரில் ஈடுபட்டபோது ஃப்ரான்ஸ் பீரங்கிப் படையில் ஓட்டோமான்களுக்கு உதவியது. தென், மத்திய ஐரோப்பா வின் பகுதியில் ஓட்டோமான் பேரரசும், ஃப்ரான்சும் இணைந்தே போரிட்டன. இது அவர்களிடையே இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் பெரிதும் பயன்பட்டது. ஓட்டோமான் பேரரசு வரிசெலுத்தா மல் ஃப்ரான்சின் பொருட்களை பேரரசின் பகுதிகளில் வாணிபம் செய்ய அனுமதித்தது. ஓட்டோமான் பேரரசு ஃப்ரான்ஸ் மற்றும் டச்சு டன் இராணுவரீதியாக இணைந்து ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரி யா ஹாப்ஸ்பர்குக்கு எதிராக போரிட்டது.                                        
                                சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி இரண்டாம்செலிம் ஆட்சியில் ஆர்வமில்லாதவராகவும், மது மற்றும் பெண்உறவுகளில் ஆர்வமாய் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ் லாமிய சரித்திரமும் இதையே தான் வெளிப்படுத்துகிறது. அவர் மதுப் பழக்கம் உள்ளவராகவும், போர்களின் போதும், அரசு நிர்வாக த்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆற்றல் இல்லாதவராகவும் இருந்தார். இதற்கு அடிப்படைக் காரணம் சுல்தான் முதலாம் சுலை மானுக்கு முஸ்தபா, பயேஸித் மற்றும் செலிம் என்று மூன்று மகன் கள் இருந்தார்கள். சுல்தான் பதவிக்கு வருபவர்கள் ஆரம்பத்திலிரு ந்து இராணுவம் மற்றும் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியை முஸ்தபாவும், பயேஸித்தும் முறையே பெற்றிருந் தார்கள். ஆனால், அவர்கள் போரில் இறந்து போனார்கள். செலிம் டாப்காபி என்ற சுல்தானின் அரண்மனையில் ஆடம்பரத்திலும், பொழுதுபோக்கிலேயும் காலத்தைக் கழித்தார். இராணுவம், அரசி யல் எதுவும் தெரியாதவர். சுலைமானே இவர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை. தன் கடைசி காலத்தில் முடியாத தளர்ந்த நிலை யில் சுலைமான் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை மூத்த மந்திரியிடம் ஒப்படைத்திருந்தார். காலத்தின் கட்டாயம் சுலைமானுக்குப் பிறகு, இரண்டாம் செலிம் பதவிக்கு வரவேண்டியதாயிற்று. இவர் எட்டா ண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.   
                                   தெற்கு ஐரோப்பாவில் ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகளின் கூட்டுடன் 1571 ல் லிபாண்டோ போரில் ஓட்டோமான் கடற்படை யைத் தோற்கடித்து, வெல்ல முடியாதவர்கள் என்று இருந்த ஓட்டோ மான்களை வென்றனர். நவீன மயமாகிக் கொண்டிருந்த ஐரோப்பிய இராணுவத்துடன் ஓட்டோமான் பேரரசு போட்டிபோட வேண்டிய நிலைக்கு ஆளாகியது. 1593 லிருந்து 1606 வரை ஆஸ்ட்ரியாவுடன் நடந்த நீண்ட போரானது வெடிமருந்துகளுடன் கூடிய மிகப்பெரிய படையின் அவசியத்தை பேரரசுக்கு உணர்த்தியது. ஐரோப்பியர்கள் பீரங்கிப்படையையும், வெடிமருந்து கையாளும் முறையையும் நவீ னப்படுத்தி இருந்தார்கள். ஓட்டோமான்களின் தற்போதைய பொரு ளாதாரநிலையில் இராணுவத்தின் தரத்தைஉயர்த்த முடியவில்லை.
                                 பதினேழாம் நூற்றாண்டில் பேரரசுக்கு நாட்டில் உள்ளும் புறமும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 1648 லிருந்து 1656 வரை சிறு வயது சுல்தான்களின் சார்பில் அவர்களின் தாய்மார்களின் தலை யீடு அரசியலில் நுழைந்தது. வெனிஷியன் பைலோவில் முதல் வலீத் சுல்தானாக இருந்த நூர்பானு என்பவருக்குப் பிறகு, ஹூர் ரும் சுல்தான் என்பவர் ஆட்சி செய்தார். இந்த பெண்களின் ஆட்சி யில் கூசெம் சுல்தானும், அவர் மருமகள் துர்ஹன் ஹதிஸும் பெய ர்பெற்றவர்களாக இருந்தார்கள். கூசெம் சுல்தான் அரசியல் எதிரி களால் கொலை செய்யப்பட்டார். பல ஒட்டோமான் பகுதிகள் சுல் தானின் கட்டுப்பாட்டிலிருந்து மந்திரிகள், நீதி மன்றங்கள், திவான் களின் அதிகாரத்திற்கு மாறின. சுல்தான் பதவிக்கு குடும்ப உறுப்பி னர்கள் அனைவருமே தகுதியானவர்கள். இதனால் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அடுத்தவரை கொன்று விடு வார்கள் அல்லது போராளி குழுக்கள் வாரிசுகளைக் கொன்றுவிட்டு தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அரண்மனைக்குள்ளேயே உயிரைக் காத்துக்கொள்ள அடைபட்டு வாழ்வார்கள். இதனால், ஓட்டோமான் பேரரசு உறவுக்கொலைகளு க்கு கடுமையான சட்டம் கொண்டுவந்து தடை செய்தது. இது ஜானி ஸ்ஸரீஸ் இராணுவப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்து ஆட்சி அவர் கள் கையில் மாறியது. சுல்தான் சுலைமானுக்குப் பிறகு வந்த எந்த சுல்தான்களும் பலமில்லாதவர்களாக இருந்தார்கள். மேலும், ஜானி ஸ்ஸரி என்ற பேரரசின் இராணுவப்பிரிவும் பல காரணங்களுக்காக அரசுடன் ஒத்துழைக்காமல் கலகத்தில் இறங்கியது. இந்த ஜானிஸ் ஸரிகள் என்ற சுல்தானின் முன்னணிப்படை போர்புரியும் அழகு அக் காலத்தில் மிகவும் புகழப்பட்டதும், மற்ற நாட்டவர்களால் பார்த்து கையாளப்பட்டதும் ஆகும். அதாவது முன்னணியில் நான்கு அல்லது ஐந்து வரிசை வீரர்கள் மட்டுமே எதிரிக்குத் தென்படுவார்கள். மீதி பெருவாரியான வீரர்கள் அந்த வரிசைகளுக்கு பின்னால் மறைந்து உட்கார்ந்திருப்பார்கள். போர்தொடங்கியவுடன் திடுமென்று எழுந்து மாபெரும் கடல் அலைபோல் எதிரி வீரர்கள் மீது பாய்ந்து கண்ணி மைக்கும் நேரத்தில் பல ஆயிரம் பேரைக் கொன்றுவிடுவார்கள். ஜானிஸ்ஸரிகள் பதினேழாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ் சமாக நிர்வாகத்திலும் நுழைந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தேவை ப்பட்டவர்களுக்கு சலுகைகளைப் பெற்றுத்தந்தார்கள். ஆரம்பத்தில் இருந்த பேரரசின் தனித்தன்மை மறைய ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை: