மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 4



490 (B.C.E.) பெர்ஷியர்கள் எப்போதுமே க்ரீக்குக்கு மிரட்டலாக இருந்ததில்லை. ஆனால், கிரேக்கர்கள் பெர்ஷிய பூமியில் தாக்குதல் செய்பவர்களாக இருந்தார்கள். பெர்ஷிய நகரங்களையும், கோவில்களையும், வியாபார பாதைகளையும், பாஸ்ஃபோரஸை கடக்கும் கப்பல்களை தாக்குவதாகவும் இருந்தார்கள். பெர்ஷியாவுக்குள் புரட்சியாளர்களை ஊடுருவ விட்டார்கள். சர்தீஸ் என்னும் பெர்ஷிய பெருநகரத்தில் ஏதென்ஸ்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினார்கள். லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றார்கள். இவ்வளவுக்குப் பிறகும் பெர்ஷியர்கள் கிரீஸ் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. மூன்று கண்டங்கள் விரிந்திருந்த பெர்ஷியாவில் கிரேக்கர்களும் இருந்தார்கள். கிரேக்க தத்துவவாதிகளை மதித்தார்கள். அதிகமான கிரேக்கர்கள் பெர்ஷிய அரசில் பணியிலிருந்தார்கள். ஆனாலும், மேலும் பெர்ஷியா மீதான தாக்குதலை பொறுக்க முடியாமல் தெர்மோபைலாயி என்ற இடத்தில் போரிட்டார்கள். அதில் பெர்ஷியா வென்றதும் பழிவாங்கும் விதமாக மன்னர் ஸெர்செக்ஸ் அரண்மனைகளையும், அரசாங்க தலைமையகங்களையும் தீயிட்டு கொளுத்தி கிரேக்கர்களை கடுமையாக எச்சரித்தார். பிறகு, அவைகளை சீர்படுத்தி ஏதென்ஸ் மக்களை வந்து அங்கு குடியேற அழைத்தார். அவர்களும் வந்தார்கள். பெர்ஷிய மன்னர்கள் எப்படி குடிமக்களிடம் நடந்து கொண்டார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.
485 (B.C.E.) பெர்ஷிய பேரரசின் காலனி ஆதிக்கத்திலிருந்த கிரேக்க நகரமான ஹலிகர்னாஷியஸை கிராண்ட் அட்மிரல் அர்டிமிசியா என்ற பெண்மனி ஆட்சி செய்தார். பெர்ஷிய கடற்படைக்கும் அட்மிரலாக இருந்து ஸெர்செக்ஸுக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தார். மிக சக்தி வாய்ந்தவராகவும், சுதந்திரமானவராகவும், புத்திகூர்மையுள்ளவராகவும் இருந்தார். அக்காயிமெனிட் பேரரசில் பல போர்களை வென்றார். கிரேக்கர்களை எதிர்த்து ஸெர்செக்ஸ் போரிடும் போது சலாமிஸ் என்னும் இடத்தில் தனது கடற்படையின் மூலம் பெரிதும் உதவினார். கிரேக்கர்கள் அர்டிமிசியாவின் தலைக்கு 10,000 ட்ராச்மஸ்கள் பரிசு விதித்தார்கள். ஆனால், யாராலும் அதைச் செய்ய முடியவில்லை. எந்த நேரமும் கிரேக்கர்களுடன் சண்டை இருந்து கொண்டே இருந்தது. சில நகரங்கள் பெர்ஷியர்களுக்கு ஆதரவாகவும், சில எதிர்ப்பாகவும், சில பொதுவாகவும் இருந்தன. அட்மிரல் அர்டிமிசியா பெர்ஷிய பேரரசில் பொது மக்களுக்கும் ஒரு மாதிரியாகவும், வாழும் சாதனையாளராகவும் இருந்தார். இதிலிருந்து வெறும் பெண்மனிகளின் வரலாறுகள் சில ஆண்டுகள் வருவதால் அவைகளை நாம் தவிர்த்து விடுவோம்.
பல ஆயிரமாண்டுகளாக ஈரானிய பழங்குடியினரின் இடமாக மத்திய ஆசிய மலைப்பகுதி இருந்தது. அஸ்ஸைரியன்களின் காலத்தில் இரண்டாம் சர்கான் என்பவர் ஆளும்போது ஈரானிய ஸைத்தியன்கள் என்ற பிரிவு இருந்தது. இராணுவத்திலிருந்த இவர்கள் கிழக்கு ஈரானிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது தற்போது சிஸ்டான் என்னும் பகுதியாகும். இன்றைய ஈரானிய வரலாறுபடி “சகெஸ்டான்” (THE LAND OF SAKS) ஆகும். ஸைத்தியன்களின் பிறப்பிடமாகும்.
334 (B.C.E.) ஜனவரி மாதத்தில் மாசிடோனியாவின் மன்னன் அலெக்ஸாண்டர் பெர்ஷியாவை வெற்றி கொண்டு அதன் தலைநகரமான பெர்சிபாலிசை அடைகிறார். அலெக்ஸாண்டர் பெர்ஷிய மன்னர் சைரஸ் தி கிரேட் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவர் பெர்ஷியாவை வென்றார். ஆனால் பெர்ஷியாவின் கலாச்சாரம் அவரை வென்றது. பெர்ஷிய மன்னன் மூன்றாம் டேரியசின் மகள் இளவரசி ரோக்ஸானாவை அலெக்ஸாண்டர் மணந்து கொண்டார். தனது ஜெனரல்களையும், 10,000 வீரர்களையும் திருமண மரியாதை செய்ய வைத்தார். பெர்ஷிய, ஹெல்லெனிஸ்டிக் கலந்த கலாச்சாரத்தை பெர்ஷியாவில் முயற்சி செய்தார்.
அலெக்ஸாண்டரின் இராணுவம் பெர்ஷியாவில் கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும் செய்து, பலரைக் கொன்றும் பெர்சிபாலிஸ் நகரை தீயிட்டும் கொளுத்தினர். அவர் பல கட்டிடங்களைத் தகர்த்தும், பெர்சிபாலிஸ் நகரத்தின் நூலகத்தைக் கொளுத்தியும், ராஜ பொக்கிஷங்களையும் கொள்ளையடித்தார்.
334 (B.C.E.) அலெக்ஸாண்டர் சைரசின் கல்லறையில் மரியாதை செலுத்தினார். எதிரியாக இருந்தாலும் சைரசின் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதை இது வெளிப்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வரும் போது, அவர் பெர்சிபாலிஸ் நகரைக் கண்டு பெரிதும் வருந்தினார்.
323 (B.C.E.) அலெக்ஸாண்டரின் மறைவிற்குப் பிறகு, அவரின் ஜெனரல்கள் பேரரசை பல துண்டாக்கினார்கள். அலெக்ஸாண்டரின் பெர்ஷியா மீதான போர் பெர்ஷிய கலாச்சாரத்தை மேற்கில் அறிமுகப்படுத்துவதற்காக இருந்ததாக கருதப்படுகிறது. பின்னாளில் பெர்ஷிய சட்டம் ரோமப் பேரரசில் அறிமுகப்படுத்தப்பட்டது. அலெக்ஸாண்டரின் ஜெனரல் ஒருவரால் துண்டாடப்பட்ட பெர்ஷியாவில் ‘செல்யூசிட் பேரரசு’ என்று ஒன்று உருவானது. அது முழுக்க கிரேக்கர்களைச் சார்ந்ததாக இருந்தது. அவர்கள் பெர்ஷிய கலாச்சாரத்தின் மீது வெறுப்பு கொண்டு கிரேக்க கலாச்சாரத்தை கொண்டு வந்தனர். சில நல்லவையாக இருந்தன. கிரேக்க கலாச்சாரம் மிகவும் பணக்காரத் தனமாக இருந்தது. இது ஒரு வெளிநாட்டு கலாச்சாரமாக இருந்த காரணத்தால், தோல்வியையே தழுவியது. மீண்டும் பெர்ஷியர்கள் ஒருங்கிணைந்து செல்யூசிட்களைத் தோற்கடித்து பெர்ஷிய கலாச்சாரத்தை நிறுவினார்கள்.
247 (B.C.E.) பார்த்தியன்கள் (அஷ்கானியன்கள்) எனப்பட்ட வடகிழக்கு கடற்கரையோர பழங்குடியின பெர்ஷிய மக்களே போராடி மாசிடோனிய கிரேக்க செல்யூசிட்களைத் தோற்கடித்து மீண்டும் பெர்ஷிய பேரரசை கொண்டு வந்தார்கள். பார்த்தியன்கள் ஈரானிய மண்ணைச் சேர்ந்தவர்கள். ஸோரோஸ்ட்ரியர்களைப் போல் அக்காயிமெனிட் பெர்ஷியர்கள். ரோமப் பேரரசில் எப்படி மன்னர்கள் சீசரின் பெயரை பயன்படுத்தினார்களோ அதே போல் பார்த்தியன்கள் பேரரசை நிறுவிய அர்சாசிஸ் மன்னர் பெயரைப் பயன்படுத்தினார்கள். பார்த்தியன்களும் பலமுறை ரோமர்களுடன் போரிட்டார்கள். அவர்களின் ரோம வெற்றி பார்த்தியன்களை அந்த காலத்தில் பலம் வாய்ந்தவர்களாக அறிய வைத்தது. ஐந்நூறு ஆண்டுகளாக இருந்த இவர்களின் நாகரீகம் கொஞ்சமாக சுருங்கியது.
171 (B.C.E.) சில பார்த்தியன்கள் கிழக்கு கஸ்பியன் கடலின் கரையோரத்திலிருந்த பார்னி பழங்குடியினராவார்கள். அவர்கள் நாடாண்ட காரணத்தால் தாங்கள் அக்காயிமெனிட் பேரரசை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். பல கலாச்சாரங்களில் பார்த்தியன்கள் அக்காயிமினிட்களை ஒத்து தொடர்ந்தார்கள். பார்த்தியன்களின் அரசியல் கட்டமைப்பு அக்காயிமினிட்களை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. அவர்கள் பல பழங்குடியினத்தவர்கள் இணைந்து இருந்ததனால் சரியான ஒத்துழைப்பு அவர்களுக்குள் இல்லை. பெர்ஷிய சரித்திரத்தில் பார்த்தியன்களின் காலம் வளமானதாகவும், நிறைய கட்டிடங்களையும் கட்டினார்கள். ஆசியா மற்றும் மெடிட்டரேனியன் மூலம் நல்ல வாணிப வருமானமும் கிடைத்தது. உள் நாட்டு பாதுகாப்பில் வடகிழக்கில் எப்போதும் பிற பழங்குடியினரின் தாக்குதல் இருந்து கொண்டிருந்தது. மேலும், பல இடங்களில் தொடர்ந்து செய்தியன் களின் தாக்குதலும் இருந்தது.

கருத்துகள் இல்லை: