மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 2



2300 (B.C.E) பல தாக்குதல்களுக்குப் பிறகு, சூசா நகரம் அக்காட் என்னும் மெஸோபொடாமிய மன்னன் வசம் ஆகியது. பின் “உர் பேரரசாக” மாறியது. இலாமைட்டுகள் முன்பு பாபிலோனியர்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்கு பழி வாங்கும் விதமாக தற்போது தென் மெஸோபொடாமியாவின் உர் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி புதிய இலாமைட்டை மீண்டும் உருவாக்குகிறார்கள். இது நாளடைவில் நியோ அஸ்ஸைரியனாக பரவுகிறது. பாபிலோனியர்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பால் சூசா நகரம் கொடுமையான அஸ்ஸைரியன்களின் பலம் வாய்ந்ததாக மாறுகிறது. சூசா நகரம் பெர்ஷியன் அகாயிமெனிட் எம்பயராகப் பெயர் பெறுகிறது.
1737 (B.C.E.) முதல் தனித்துவம் வாய்ந்த தூதுவராகவும், நல்லவை தீயவைகளை பிரிப்பவராகவும், சமாதானத்தை நிலைநாட்டுபவராகவும், மறுமை நாளில் தீர்ப்பளிப்பவராகவும், சொர்க்கம் (PARADISE என்னும் ஆங்கிலச் சொல் பழைய பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது.) நரகங்களை நன்மைக்கு ஏற்ப வழங்குபவராகவும் “ஸராதுஷ்ட்ரா” (ZARATHUSHTRA) என்ற தூதுவர் இருந்ததாக நம்பப்பட்டது. இதே கருத்துகள் தான் பின்னாளில் யூத, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களின் கோட்பாடாக ஆனதாக அவர்கள் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் “ஸோரோஸ்ட்ரியனிஸம்” (ZOROASTRIANISM) என்னும் மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இது நாளடைவில் க்ரீக் மற்றும் ரோமர்களிடம் பரவி இன்றும் உலகில் சில இடங்களில் இருக்கிறது. இந்த ஸராதுஷ்ட்ரா தூதர் இனங்களுக்குள்ளும், மதங்களுக்குள்ளும் அதன் கோட்பாடுகளுக்குள்ளும் வேறுபாடு காண்பதில்லை.
                            இந்த தூதரின் பிறந்த நாள் 1767 (B.C.E.) மார்ச் 26 ல் (பெர்ஷிய நாள்காட்டில் ஃபர்வர்தின் 6) வருகிறது. இந்த நாள் ஸோரோஸ்ட்ரியன்களுக்கு மிகவும் சிறப்பான புனித நாளாக கருதப்படுகிறது. இவர்களைப் பற்றி நிறைய கதைகள் இருக்கிறது. எப்போது இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அல்லாஹுவால் சொல்லப்பட்டுவிட்டதோ நமக்கு இதைப்பற்றி மேல் விவரங்கள் தேவையில்லை.
1600 (B.C.E.) பெர்ஷியர்களின் யால்டா கொண்டாத்தத்தில் இருந்து தான் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததாக சொல்லப்படுகிறது. குளிர்காலத்தில் நீண்ட இரவான யால்டா இரவில் மறுநாள் வரை கண்விழித்து வணங்குவார்கள். அது டிசம்பர் 22 லிருந்து 25 வரை வரலாம். அந்த நாட்களில் மன்னர்களும், ராணிகளும், பெரும் செல்வந்தர்கள் கூட சாதாரண உடையில் அடையாளம் தெரியாத வகையில் மக்களோடு கலந்திருப்பார்கள். அன்று யாரும் யாருக்கும் உத்தரவிட முடியாது. டிசம்பர் 25 ல் பெர்ஷியர்கள் “மித்ரகானா” என்ற தேவதையை வழிபடுவார்கள். பச்சை நிற இலைகளாலான வளையங்களை வீட்டுக் கதவுகளில் வைத்து, அடுத்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கி இரவு முழுதும் விருந்துகளில் மூழ்கி இருப்பார்கள். நிறைய யூதர்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்த மித்ராயிஸம் மற்றும் ஸோரோஸ்ட்ரியத்திலிருந்து வந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இதுவே உலகின் முதல் சமாதானமான, உலகளாவிய தனி மதமாகக் கருதப்படுகிறது. இந்த மித்ரா(MEHR) தேவதையின் பிறந்தநாள் நாளடைவில் பெர்ஷியா, ரோம் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்குப் பரவியது. இது யூதர்களின் ஹனுக்காஹ் (FESTIVAL OF LIGHT) என்னும் பண்டிகையோடு நெருக்கமாக உள்ளது. இந்த யால்டா மற்றும் மித்ரா பண்டிகைகளிலிருந்து தான் கிறிஸ்துமஸின் மரங்கள், தூய அப்பம் மற்றும் அனைத்து சம்பிரதாயங்களும் வந்ததாக நம்பப்படுகிறது.
                             இறுதியாக யால்டா இரவு இந்தோ ஐரோப்பிய வரலாற்றில் 1600 (B.C.E.) யில் நடந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மெர்ரி மித்ரகானா என்பதே பின்னாளில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று ரோமப் பேரரசில் வாழ்த்தும் முறையானது. நாளடைவில் டிசம்பர் 25 மித்ரா தின கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அன்றைய தினமே கிறிஸ்து பிறந்த தினமாக கிறிஸ்தவ பாதிரியார்களால் அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1500 (B.C.E.) இந்த காலகட்டத்தில் நோரூஸ் என்னும் புதிய தினம் பெர்ஷிய வரலாற்றில் உயர்ந்த கலாச்சாரமாக இருந்தது. தற்போதைய அகழ்வாராய்ச்சியிலிருந்து நோரூஸ் விழாவை பெர்ஷியர்கள் ஏறக்குறைய 3500 வருடங்கள் கொண்டாடியதாக கருதப்படுகிறது. பெர்ஷிய புத்தாண்டு வருடந்தோறும் சூரியன் மேஷத்தில் நுழையும் மார்ச் 20 ஆகும். இது மிகச் சரியாக பெர்ஷியர்களின் சோலார் நாட்காட்டி மூலம் புராதன வானாராய்ச்சி வழியாக கணக்கிடப்படுகிறது. நோரூஸ் கொண்டாட்டங்கள் முடிவு மற்றும் மறுபிறப்பு என்ற இரு கோணங்களில் கொண்டாடப்படுகிறது. இதிலும் நிறைய கதைகள் இருக்கிறது. அது தேவையில்லை.
728 (B.C.E.) இளவரசர் டியோசிஸ் என்பவர் முதல் மீடியன் பேரரசில் ராஜாவாக உலகளாவிய ஈரானில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அது ஒரு பெரிய ஒருங்கினைக்கப்பட்ட நிர்வாகமாக இருக்கிறது. அதன் தலைநகரம் எக்படனா (தற்போதைய ஈரானின் ஹமேதான்) ஆகும். ராஜா டியோசிஸுக்குப் பிறகு, அவரின் பேரர் ஹுவக் ஷத்ரா என்பவர் மன்னராகிறார். அவர் காலத்தில் பேரரசு மிகவும் உச்சத்தில் இருக்கிறது.
693 (B.C.E.) மிகவும் புகழப்பட்ட சரித்திரப்புகழ் வாய்ந்த பெர்ஷியர்களின் சூசா நகரம் அஷுர் (B)பானிபல் என்பவரின் இராணுவத்தால் நிர்மூலமாக்கப் படுகிறது. அவர்கள் தலைநகரம் இக்படானா வரை வந்து மிடீயன் பேரரசை நாசமாக்கினார்கள். அஸ்ஸைரியன்கள் பரந்த இராணுவத்தை நிர்மாணித்து மற்ற சமூகங்களிலிருந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வளம் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களால் மீண்டும் நிலைகொள்ள முடியாமல் போனது. அஷுர் பானிபல்லின் இராணுவம் பெரும்பாலானவர்களை யூதர்கள் உட்பட மொத்த ஈரானியர்களையும் அடிமைப்படுத்தினர். அவர்கள் இலாம் பேரரசை சரித்திரத்தில் “எரிந்த நகரம்” ஆக்கினார்கள். 2000 ஆண்டுகால இலாமைட் பேரரசு முடிவுக்கு வந்தது.
678 (B.C.E.) மீடியன்கள் மத்திய வடமேற்கு பகுதியிலும், பார்ஸிகள் தென் மற்றும் தென்மேற்குப் பகுதியிலும், பார்த்தியன்கள் தெற்கு மற்றும் வட தெற்கு பகுதியிலும் மூன்று இனங்களாக பிரிந்து ஒரே பேரரசாக ஐக்கிய மீடியன் பேரரசு என்று உருவாக்கிக் கொண்டு, கொடுமையாளர்களான அஸ்ஸைரியன்களை எதிர்த்தார்கள். மீடியன்களுக்கும், பெர்ஷியர்களுக்கும் இடையேயான கூட்டு அஸ்ஸைரியன்களின் தாக்குதலைத் தவிர்த்தது. அஸ்ஸைரியன்களின் தோல்விக்குப் பிறகு, மீடியன்கள் அஸ்ஸைரியன்களின் பகுதிகளில் குடியேறி மேலும் அவர்கள் வளரவிடாமல் தடுத்தனர். பெர்ஷியாவின் சைரஸ் மீடியன் ஆட்சியைக் கைப்பற்றி ஈரானை பேரரசாக்கி ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, உலகின் மாபெரும் பேரரசாக உயர்த்தினார். தென்மேற்கு பெர்ஷியா பகுதிகள் ஒருங்கிணைந்து அக்காயிமெனிட் பெர்ஷியன் பேரரசாக மாறியது.
                          மீடியன்கள் தான் ஈரானிய மக்கள் அவர்கள் வட, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும், தற்போதைய ஈரானின் டெஹ்ரான், ஹமிதான், அஜர்பைஜான், வட இஸ்பஹான், ஸான்ஜன் மற்றும் குர்திஸ்தான் பகுதிகளில் வாழ்கின்றனர். கிரேக்கர்கள் மத்தியில் இந்த பகுதிகள் “மீடியா” என்று அறியப்படுகின்றன. அஸ்ஸைரியன்களால் நாசமாக்கப்பட்ட சூசா நகரம் மீண்டும் பெர்ஷிய அக்காயிமெனிட் பேரரசால் புதுப்பிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் குளிர்கால தங்குமிடமாகவும், அரசு விழாக்கள், கூட்டங்கள் நடக்கும் இடமாகவும் ஆனது.
584 (B.C.E.)  பெர்ஷியாவின் அக்காயிமெனிட் பேரரசின் சிறந்த அரசராக சைரஸ் தி கிரேச் என்பவர் திகழ்ந்தார். இவர்தான் உலகின் முதல் மனித உரிமைகள் சட்டமான “சைரஸ் சிலிண்டர்” என்ற புத்தகத்தை எழுதினார். மன்னர் அஸ்ட்யாகிஸ் என்பவரின் சரித்திரப் புகழ் வாய்ந்த மகள் மண்டானா என்பவர் இளவரசியாக இருந்தார். பின்னாளில் இவர் அன்ஷானின் கேம்பிசிஸின் ராணியாகவும் இருந்தார். சிறந்த மன்னரான சைரஸ் தி கிரேட்டின் தாயாராகவும் இருந்தார். கிரேக்க ஆராய்ச்சியாளர் ஹிரோடோடசின் தகவல் படி, மன்னர் அஸ்டியாகிஸின் கனவில் மகி என்னும் மந்திரவாதி குறிக்கிட்டு, அவரின் பேரன் அவரை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவான் என்று கூறினான். அவர் தனது பணியாள் ஹர்பகஸை அழைத்து தனது பேரன் சைரஸ் தி கிரேட்டை கொன்று விடுமாறு கூறுகிறார். ஹர்பகஸ் குழந்தை சைரஸ் தி கிரேட்டை கொல்லாமல், மறைத்து ஆடு மேய்க்கும் கூட்டத்தினரிடம் மித்ரிடேட்ஸ் என்னும் பெயருடன் வளர்க்க விடுகிறார். தான் ராஜ வம்சத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமல் சைரஸ் தி கிரேட் வளருகிறார். பின்னாளில் கனவு பலிக்கும் வண்ணம் அதே சைரஸ் தி கிரேட் அஸ்ட்யாகிஸுடன் போரிட்டு வெல்கிறார். ராணி மண்டானா 559 (B.C.E.) யில் இறந்ததாக கூறப்படுகிறது. இன்றும் இவரது பெயரில் நறுமணப் பொருட்கள், உடைகள் மற்றும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. பிறகு, வந்த மன்னன் டேரியஸ் தி கிரேட் தன் மகளுக்கு மண்டானா என்று பெயரிட்டான்.
560 (B.C.E.) சைரஸ் தி கிரேட் அஸ்ட்யாகிஸை வென்று மீடியன் மன்னனாகிய பின் பெர்ஷிய பேரரசை நிறுவுகிறார். ஒரே உலகம் என்ற கோட்பாட்டின் கீழ் எந்த மொழி, இனமானாலும் ஒரு ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
559 (B.C.E.)  மீடியனின் மன்னன் அஸ்டியக் ஷாவின் மகள் அமிடிஸ் ஷாபானு என்பவர் இளவரசி ஆனார். இவரைப்போல பல பாரசீக இளவரசிகளைப் பற்றி கதைகள் உண்டு. அது நமக்கு தேவையில்லை. இவர் பிறகு, சைரஸ் தி கிரேட்டின் மனைவியாகவும், பெர்ஷிய பேரரசின் ராணியாகவும் ஆனார். சைரஸ் தி கிரேட் கலை, மொழி, மதம் ஆகியவை உலகம் முழுக்க பொதுவானவை என்ற கருத்தை கொண்டிருந்தார்.
550 (B.C.E.)  இந்த அக்காயிமெனிட் பெர்ஷியப் பேரரசு மொழி, கலை மற்றும் மதங்களைக் கடந்து மூன்று கண்டங்களிலும், 25 நாடுகளிலும் பரவியது. உலகின் கிழக்கு மேற்கை தொடர்பு கொண்டது. மற்ற பகுதிகளை சிறிய மன்னர்கள் ஆண்டாலும், அனைவரும் ஷாஹன்ஷா என்னும் கிங்க் ஆஃப் கிங்க் என்னும் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்தனர். உலகின் முதல் கூட்டாட்சியாக இருந்தது. சைரஸ் மிக உன்னதமாக அதை நிர்வகித்து தான் கிரேட் என்னும் பட்டத்திற்கு தகுதியானவர் என்பதை நிரூபித்தார். பெர்சிபாலிஸ் என்று மறு நிர்மாணம் செய்தார்.
சைரஸ் தி கிரேட் ஆட்சியில் புகழ் வாய்ந்த பாண்டியா அர்டிஷ்பாத் என்பவள் சிறந்த பெர்ஷிய கமாண்டராக இருந்தாள். அவள் ஜெனரல் அர்யாஸ்ப் என்பவரின் மனைவி ஆவாள். நியோ பாபிலோனிய போரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தாள். புராதன இராணுவ வரலாற்றில் இவருக்கென தனி இடமுண்டு. அன்றைய ஆசியாவின் பேரழகியாக இருந்த இவர் எந்நேரமும் தனது முகத்தை ஆண்களிடமிருந்து மறைத்து அவர்களின் உணர்ச்சியை தூண்டாதவராக இருந்தார். புராதன இராணுவத்தில் சைரஸ் தி கிரேட்டின் இராணுவம் புகழ் வாய்ந்தது. அவர்கள் 7 வயதிலிருந்தே பயிற்சி பெற்றிருந்தார்கள். அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆன பயிற்சியாக இருந்தது. தூதர் ஸராதுஸ்ட்ராவின் கட்டளைப் படி இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை: