மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 30 அக்டோபர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 2



பாகம் : 2
வம்ச வழி
சுல்தான் ஸலாவுத்தீன் எகிப்து, அகன்ற சிரியா (தற்போதைய சிரியா, லெபனான்,பாலஸ்தீன் அடங்கியது). உள்ளடக்கிய  அய்யூபிட் மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர். இவரின் குடும்ப வம்சாவழி ஹஸியான் என்ற பகுதியை சேர்ந்த (அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த தெவின் என்ற கிராமத்தில் தான் ஸலாவுதீனின் தந்தை அய்யூப் இப்னு ஷாதி பிறந்தார்) பிரபலமான அர் ரவாதியா என்ற குர்திஷ் மலைவாழ் இனத்தை சேர்ந்தது. இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள்தான் மிகப் பெரிய அதிக அளவில் குர்திஷ்கள் நிறைந்த கூட்டம். சில சரித்திர ஆய்வாளர் கள் இவர் வம்ச தொடர் அத்னான் கூட்டத்தின் முதார் வரிசையை சேர்ந்தது என உறுதியாக கூறுகிறார்கள்.
சுல்தான் ஸலாவுத்தீன், குர்த் நஜ்முத்தீன் அய்யூப் இப்ன் ஷாதி இப்ன் மர்வான் என்பவரின் மகன் ஆவார்.
பிறப்பு
532 A.H. (1132 C.H.) ம் ஆண்டு பாக்தாதின் கோட்டை நகரமான திக்ரிதில் சுல்தான் யூஸூப் ஸலாவுத்தீன் பிறந்தார். திக்ரித் நதியின் கரையில் பாரசீக மன்னர்கள் போர்தளவாடங்கள் சேமித்து வைக்கவும், எதிரிகளை கண்காணிக்கவும் பெரிய கோட்டையை கட்டி இருந்தனர். முஸ்லீம்கள் 16 A.H. ல் கலீஃபா உமர் இப்ன் கத்தாப் காலத்தில் திக்ரித்தை வென்றனர். இதன் பின் திக்ரித்தை பல முஸ்லிம் மன்னர்கள் ஆண்டனர்.
செல்ஜுக் துர்க் ஆட்சியின் போது தந்தையார் நஜ்முத்தீன் அய்யூபுக்கு செல்ஜுக் காவல்துறையின் பெரும்புள்ளியான முஜாஹித்தீன் பஹ்ரூஸ் என்பவரின் தொடர்பு ஏற்பட்டது.அவர் நஜ்முத்தீன் அய்யூபை திக்ரித் கோட்டையின் கமாண்டராக நியமித்தார். நஜ்முத்தீன் தனது சகோதரர் ஷிர்குஹ் அஸாத்தீனை தனக்கு உதவியாக அழைத்துக் கொண்டு அஜர்பைஜானை விட்டு இராக்குக்கு குடி பெயர்ந்தார்.
ஒரு நாள் முஜாஹித்தீன் பஹ்ருஸ் அவர்களுக்கு, சகோதரர்கள் நஜ்முத்தீன்,ஷிர்குஹ் இருவரையும் நாடு கடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் என்னவென்றால், ஒரு கிராமத்து பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு வருகிறது. அது சம்பந்தமாக பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்த பெண் உதவி கோரியதன் பேரில் ஒரு கோட்டைக் காவலாளியை சித்தப்பா ஷிர்குஹ் கொன்று விடுகின்றார். அந்த வழக்கில் முதலில் இரு சகோதரர்களையும் ஒன்றும் செய்யாமல் விட்டு விடத்தான் பஹ்ருஸ் இருந்தார். ஆனால் இறந்துபோன காவலாளியின் பலம் வாய்ந்த குடும்ப பிண்ணனியினால் சகோதரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இருவரையும் இரவோடிரவாக நாடு கடந்து தப்பிச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். மிகச் சரியாக அன்றிரவுதான் சரித்திர நாயகன் உலகம்  வியக்கும் மாவீரர் யூஸுஃப் ஸலாவுத்தீன் அல் அய்யூப் பிறந்தார். குடும்பம் இராக்கின் மோஸுல் நகரை நோக்கி இரவோடிரவாக இடம் பெயர்ந்தது.
தப்பிச் செல்லும் போது குழந்தை யூஸுஃப் ஸலாவுத்தீனின் அழுகுரல் தொடர்ச்சியாக மிக சத்தமாக இருந்தது. எவ்வளவோ தாயும், தந்தையும் மற்றவர்களும் போராடியும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரு குழந்தைக்காக அனைத்து குடும்பமும் மாட்டி அழிந்து விடக் கூடாது என்பதற்காக தந்தையார் நஜ்முத்தீன் அய்யூப் அவர்கள் குழந்தையை கொன்று விடக்கூட நினைத்தார். உடன் இருந்தவர்கள்,ஒன்றும் அறியாத இந்த பச்சை குழந்தை எப்படி இந்த சூழ்நிலையை அறியும், நாளை இது எப்படியாக இருக்கும் என்று யார் அறிவார் ஆகவே ஒன்றும் செய்யாமல் விட்டு விடுமாறு தடுத்து விட்டனர். அதற்கு பதில் அழுகுரல் எதிரிகளை எட்டாத வண்ணம் தப்பிக்கும் வேகத்தை அதிகப் படுத்தினர்.

கருத்துகள் இல்லை: