மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 30 அக்டோபர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 4



பாகம் : 4
கல்வி
இவரின் வாழ்க்கை பல நகரங்களில் கழிந்ததால் இவர் கல்வியும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. இளமையில் எல்லாக் குழந்தைகளையும் போல் பா அல்பக்நகரில் குர் ஆனை திறம்பட ஓதவும், அரபியில் எழுதவும், படிக்கவும் கற்று தேர்ந்தார். ஸலாவுத்தீன் ஹதீஸ்களை அல் ஹஃபீஸ் அல் சலஃபீ, இப்னு அவ்ஃப், அந் நைஸபுரி மற்றும் அப்துல்லாஹ் இப்னு பர்ரி ஆகியோரிடம் கற்று தேர்ந்தார் என்று ஆசிரியர் தபகத் அஷ் ஷஃபியாஹ் கூறுகிறார். அந்த கால கட்டத்தில் சமர்கந்த், கார் டோபா மற்றும் நாற்திசைகளிலிருந்தும் டமாஸ்கஸ் நகருக்கு மதபோதகர்கள் வந்து பள்ளிவாசல்களிலும், கல்வி நிறுவனங் களிலும் தீவிரமாக இஸ்லாமிய மத, பொது கல்வியை போதித் தனர். ஸலாவுத்தீன் அவர்கள் எல்லாரிடமும் கல்வி கற்றுக் கொண்டார். குறிப்பாக நூருத்தீன் அவர்கள் டமாஸ்கஸிலும், சிரியாவிலும் பல பள்ளிவாசல்களையும், கல்விக் கூடங்களையும் நிறுவி சிறந்த அறிஞர்களை அழைத்து வந்து மக்களிடையே அறிவு வளர்த்தார். புகழ்பெற்ற அப்துல்லாஹ் இப்னு அபி அஸ்ருன் அவர்களை டமாஸ்கஸுக்கு அழைத்து வந்து டமாஸ்கஸின் தலைமை நீதிபதியாக நியமித்தார். கண் பார்வை குறைந்த இவரை ஸலாவுத்தீன் அவர்கள் கண்ணியமாக நல்ல முறையில் கவனித்து இவரிடமிருந்து நிறைய நீதித்துறை விஷயங்களைக் கற்றுக் கொண்டார்.
ஸலாவுத்தீன் குதிரையேற்றம், ஈட்டி எறிதல், வேட்டையாடுதல் மற்றும் இராணுவ நுணுக்கங்கள் போன்றவற்றை தானிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆர்வத்துடன் சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தார். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியாகவும் இருந்தார். உதாரணத்திற்கு சிரியா வெற்றியின் போது தன் சகோதரர்கள் தாஜ் அல் முல்க் மற்றும் அல் மாலிக் அல் முஸ்ஸஃபர் இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்த போது கூட துயரத்தை வெகுவாக வெளிப்படுத்தாமல் இராணுவப் பொறுப்புடன் கோட்டையை பலப் படுத்தும் ஆலோசனையில் ஈடு பட்டார். இவரைப் போல் ஒரு பிள்ளை வேண்டும் என தாய்மார்கள் பொறாமைப் படும் வண்ணம் ஹத்தீன் போரில் ஈடு பட்டு தனது நிகரற்ற தைரியத்தையும், பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த நபிமார்களின் மண்ணை மீட்க வேண்டும் என்ற உறுதியையும் காட்டினார். ஆம் இஸ்லாமிய சரித்திரத்தில் முஸ்லீம்கள் என்றென்றும் நினைவு கூறத்தக்க தன்னிகரற்ற வீரர் இவர்.

கருத்துகள் இல்லை: