மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 10



பாகம் : 10
வெளிப்புற சூழ்ச்சிகளை முறியடித்தல்
ஸலாவுத்தீன் எகிப்தின் ஆட்சியை ஏற்ற பிறகு, ஃப்ராங்க்ஸ் இவரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. மக்கள் ஸலாவுத்தீன் மீது வைத்திருக்கும் அன்பும், தங்கள் நாட்டின் மீது வைத்துள்ள பாசமும் ஃபராங்க்ஸுக்கு எப்படியாவதாவது ஸலாவுத்தீனை வெற்றி கொண்டு விரட்ட தயாராகி காத்திருந்தது.
ஃப்ராங்க்ஸ் முதல் காரியமாக, நமது ஜெருசலம் கை நழுவி போய் விடுமுன் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஸ்பெயினுக்கும், சிஸிலிக்கும் செய்தி அனுப்பியது. அவர்கள்  பாதிரியார்களையும், மதபோதகர்களையும் ஆள்பலம், ஆயுதங்கள் மற்றும் பெரும் பணத்துடன் ஒரு படையை அனுப்பினர். அந்த படை 564 A.H. ல் டமெய்ட்டாவை முற்றுகையிட்டனர். ஸலாவுத்தீன் வெடி மருந்துகள், ஆயுதங்கள் அடங்கிய படையொன்றை நைல் நதி வழியாக டமெய்ட்டாவுக்கு அனுப்பினார். மேலும் ஃப்ராங்க்ஸை விரட்ட நூருத்தீனிடம் உதவி கோரினார்.
நூருத்தீன் இசைந்து பெரும் படைப் பிரிவை எகிப்துக்கு அனுப்பி, தானும் சொந்த படையுடன் லீவண்ட் மற்றும் பாலஸ்தீனின் சிலுவைப் போராளிகளின் முக்கிய தளங்களை நோக்கி படை எடுத்தார். நூருத்தீனின் படை எகிப்து வருவதை அறிந்த ஃப்ராங்க்ஸ் ஏமாற்றத்துடன் தன் படைகளை பின் வாங்கி ஐம்பது நாட்களாக டமெய்ட்டாவில் தங்கியது. பின் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 569 A.H. ல் சிஸிலியிலிருந்து வந்த சிலுவைப் படைகளுடன் ஃப்ராங்க்ஸ் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியாவை தாக்கியது. அவர்களின் கடற்படை 15 ஆயிரம் குதிரைகள், 30 ஆயிரம் போர் வீரர்கள், எண்ணற்ற குதிரை மற்றும் காலாட்படை வீரர்கள், சக்தி வாய்ந்த ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், படகுகள், சிதைக்கும் இயந்திரங்கள் என்று வந்திரங்கியது. அவர்கள் கரை அடைந்தவுடன் 7 முஸ்லீம் வீரர்களைக் கொன்று, சில படகுகளை மூழ்கடித்து 300 கூடாரங்களைத் தீயிட்டு அலெக் ஸாண்டிரியாவில் கால் பதித்தனர்.
அப்போது ஸலாவுத்தீன் ஃபாகுஸ் என்னும் நகரத்தில் இருந்தார். அலெக்ஸாண்டிரியாவை எதிரிகள் சூழ்ந்துள்ளனர் என்பது மூன்று நாட்கள் கழிந்த பின்பு தான் அவருக்கு தெரிய வந்தது. உடனடியாக ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் நிறைந்த மாபெரும் படையொன்றை அனுப்பி ஏராளமான எதிரிகளைக் கொன்றும், அவர்களின் படகுகளை மூழ்கடித்தும், அவர்களின் ஆயுதங்கள், பொருட்களைக் கைப்பற்றி வெற்றி கொண்டார். தப்பிய சிலுவை வீரர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் நாடு திரும்பிச் சென்றனர்.
ஸலாவுத்தீன் சிலுவைப் போராளிகளிடமிருந்து இரண்டு முறை அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து எகிப்தை காப்பாற்றினார். இது சிலுவைப் போராளிகளுக்கு அவமானத்தையும், என்றிருந்தாலும்  சிலுவைப் போராளிகளின் கழுத்துக்கு இவர் தான் கத்தி என்பதையும் தெளிவாக உணர்த்தியது. மேலும், இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களை எதிர்ப்பவர்களை சிங்கம் போல் சீறிட்டு தடுப்பவ ராகவும் உலகுக்கு காட்டியது.

1 கருத்து:

Unknown சொன்னது…

உங்கள் தொடர் பிரமாதம் வாழ்த்துக்கள்
சாதிக்