பாகம் : 23
ஸலாவுத்தீனின் முடிவு
ஸலாவுத்தீன் தன் ஆட்சியை இஸ்லாமிய முறையிலேயே ஆக்கிக் கொண்டார்.
தடுக்கப்பட்டவைகளை தடுத்து, வெறுக்கத் தக்கவைகளை நிறுத்தினார். எகிப்து
ஆட்சியாளரான பின் வீண் படுத்துவதையும், வெட்ககரமானதையும் தடை செய்தார். இவருக்கு
முன் எகிப்தில் பண்டிகை, விழாக்காலங்களில் ஆடம் பரமும், மூடவழக்கமும் வழக்கமானதாய்
இருந்தது. அதில் ஒன்று ஃபாத்திமிட் ஆட்சியில் நடந்து கொண்டிருந்த நைருஸ் விழா.
வசதியானவர்களிடம் வரி வசூலித்து நைருஸ் இளவரசர் மக்கள் சூழ்ந்திருக்க, அருவருக்கத்
தக்கவகையில் முத்து மாளிகையில் கூடி நடனமாடுவர். அதை ஃபாத்திமிட் கலீஃபா
வேடிக்கைப் பார்ப்பார். பெரும் கூச்சலுடன் தெருவெல்லாம் வைன் என்னும் மதுவகையை நடனமாடி
அருந்துவார்கள். எங்கும் வைனும், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படும். மதிப்புமிக்க
மனிதர்கள் போனால் அவர்களின் உடைகள் அழுக்காக்கப்படும். அது போன்ற அருவருப்புகளை சுல்தான்
ஸலாவுத்தீன் தடை செய்தார். குர்ஆன் ஓதப்பட்டால், உன்னிப்பாக கேட்டு கண்ணீர்
வடிப்பார். மத சம்பந்தமான காரியங்களுக்கு மதிப்பளிப்பார். தத்துவவாதிகளையும்,
இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பேசும் பழமைவாதிகளையும் வெறுப்பார். அவர்
ஆட்சிப்பகுதியில் அப்படி யாரும் பேசித் தீர்ப்பளிப்பதை அறிந்தால் கொன்றுவிட
ஆணையிட்டார். இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தவறாமல் ஐந்து வேளை தொழுகையை
கடைபிடித்தார். இமாம் வரத் தவறினால், அதற்கு ஈடான ஒருவரை முன்னிறுத்தி தொழுது
கொள்வார். கடமை தொழுகைகளுடன் சேர்த்து கூறப்பட்டுள்ள முன்,பின் சுன்னத் வகை
தொழுகைகளையும், இரவுத் தொழுகைகளையும் தொழுவார். அபு ஷமாஹ் என்பவர், ‘சுல்தான்
உடல்நலம் இல்லாத போது கூட தொழுது கொண்டிருந் தார். கடைசி மூன்று நாட்கள் நினைவற்று
போனதும் தான் தொழுகையை நிறுத்தினார். பயணங்களின் போது கூட நிறுத்தி தொழுது வந்தார்’
என்று கூறுகிறார்.
பூல் என்பவரின் அறிக்கைப் படி, ஸலாவுத்தீன் தன் குழந்தை களிடமும்,
கவர்னர்களிடமும், நீதியுடனும், நேர்மையுடனும்,
மக்களை சரியான வழியிலும், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்தும் நடக்க
வேண்டும் என்றும் கூறினார். ஒரு முறை தனது மகன் அஸ் ஸாஹிரை நோக்கி, ‘நான் உனக்கு
அல்லாஹ் விடம் பயந்து கொள்வதற்கு சிபாரிசு செய்கிறேன், ஏனென்றால் அது தான் நல்ல
செயல்களை திறப்பதற்கான சாவி. அல்லாஹ் வின் கட்டளைக்கு கீழ்படிய
உத்வேகப்படுத்துகிறேன், ஏனென் றால் அது ஒன்றுதான் மறுமைக்கான வழி. இரத்தம் சிந்தப்
படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இரு, எனென்றால் சிந்த ஆரம்பித்தால் நிறுத்துவது
கடினம்’ எனக் கூறியதாக கூறுகிறது.
ஆம், இவைகள் நாம் ஏற்கனவே சிறு வயதில் ஆரம்பத்தில் பார்த்த அவரின் ஆசிரியர்களிடம்
இஸ்லாமிய, அரசியல், போர்ப்பயிற்சி போன்ற வற்றைக்கற்று, தான் ஒரு சாம்ராஜ்ஜிய
சக்கரவர்த்தியாக நேரிலும் கண்ட பாடங்கள். அர்த்தமுள்ள பாடங்கள். அதுதான் அவரின்
குணமும், நடைமுறையுமாக இருந்தது. தன் இன மக்களாலாலேயே கொல்லப்பட வேண்டிய
சதிகளிலிருந்து தப்பித்தார். ஒவ்வொரு பிரதேசமாக அலைந்து திரிந்து முஸ்லீம்
ஆட்சியாளர்களை ஒன்றிணைத்தார். தன் பலம் கொண்ட மட்டும் எதிர்களை எதிர்த்தார். இதுவே
அல்லாஹ் அவரை மோசமான சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்கவும், சோதனைகளிலிருந்து
சுலபத்தில் வெளியேற்றவும் போதுமான தாக இருந்ததோ?
அல் கதி இப்னு ஷத்தாத், அவருக்கு எதிர்கள் முஸ்லீம்களை தோற்கடித்து விட்டார்கள்
என்று சொல்லப்பட்ட போது, தொழுது “ஓ அல்லாஹ்வே நான் உனது மார்க்கத்தை
வென்றெடுப்பதில் இருந்து பொய்த்துப் போனேன். உனது உதவியுமின்றி போனேன். உனது
கயிறுகளை வேகமாக பிடிப்பாய் யா அல்லாஹ், நீயே சிறந்த நம்பிகையாளன், உனது கருணையையே
சார்ந்திருக் கிறேன் என்று கண்ணீர் மல்க வேண்டினார். அவர் தாடியும் நனைந்து
தரைவிரிப்பும் ஈரமாகியது. இன்று முஸ்லீம்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று
கூறப்பட்டது. இந்த முறை பிரார்த்தனை செய்பவர்களில் யாருடையதாவது நிறைவேறும் என்று அவர்
வெள்ளிக்கிழமையிலும் போரிடச் சொன்னார்.. ஒரு வேளை அதற்கான பதில்தான் இந்தமுறை
வெற்றியாக இருக்க லாம். தனக்கு முன் நேர்மையான வழியில் நடந்த கலீஃபாக் களின்
சுவடுகளை தொடர்ந்தார். அவர்கள் எப்படி வீரர்களை அல்லாஹ்வுக்கு பயப்படும் படி
கட்டளையிட்டார்களோ அதே முறையில் நடத்தினார். உதாரணத்திற்கு, பெர்ஷியாவை வெல்ல
சென்ற ஸாத் இப்னு அபி வக்காஸுக்கு, உமர் இப்னு அல் கத்தாப் எழுதியதைப் போல.
ஸலாவுத்தீன் ஜெருசலத்தை வெல்ல தீவிரம் காட்டினார் என்று சரித்திர ஆசிரியர்கள்
ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த தீவிரத்தில் அவர் மனைவி, குழந்தைகளை கூட பல நாட்கள்
பிரிந்திருந்தார். அவர் இராணுவம், பொருளாதாரத்தில் காட்டிய அதே அக்கறையை மத
விவகாரங்களிலும், ஒழுக்கத்திலும் காட்டினார் உதாரணத்திற்கு, ஒரு துறையை ஏற்படுத்தி
இராணுவத்தினர் ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு இடம் பெயரவும், குதிரைகளின்
பாதுகாப்பை மேற்பார்வையிடவும், ஆயுதங்களின் திறன், வீரர்களின் எண்ணிக்கை, உடைகள்
போன்றவற்றை கண் காணிக்கச் செய்தார். ஆயுதத் தொழிற்சாலை, கப்பல் கட்டுதல், வெடி
மருந்துகள் தயாரிப்பு, சுரங்க அமைப்பு போன்றவற்றையும் கவனித்தார். கப்பற்படையிலும்
தீவிரம் காட்டினார். அதற்காக ஒரு தனி அமைப்பை துவங்கி நிர்வாகத்தை கவனித்தார்.
அதன் தலைமையாளர் ‘எமிர் ஆஃப் ஸீ’ என்று அழைக்கப்பட்டார்.
இதைப் போல் விஷயங்களில் ஆய்வும், முழு கவனம் செலுத்தியதாலேயே எதிரிகளை நம்பிக்கையுடனும்,
உண்மை யுடனும் போரிட்டு இழந்த பகுதிகளை மீட்டி இஸ்லாத்துக்கு மதிப்பும், மரியாதையையும்
கிடைக்கச் செய்தார்.
நாம் முன்னர் பார்த்த படி 567 A.H.ல் ஃபாத்திமிட் கலீஃபா இறந்த போது சுல்தான் ஸலாவுத்தீன் எகிப்தை ஆண்டு
கொண்டிருந்தார். தெற்கு எகிப்து (நுபியா), ஏமன், ஹிஜாஸ் போன்ற பகுதிகளை வென்று தன்
ஆளுமையை விரிவு படுத்தினார். செங்கடலை சுற்றி உள்ள பகுதிகள் அவரின் ஆட்சிக்கு கீழ்
வந்தது. நூருத்தீன் இறப்புக்கு பின் சிரியாவில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்த போது
டமாஸ்கஸ், அலிப்போ மற்றும் சில பகுதிகளை இணைத்துக் கொண்டார். அதனால் வட ஈராக்,
குர்திஸ்தான், அகன்ற சிரியா, ஏமன், எகிப்து, பர்காஹ் மற்றும் சில பகுதிகளை இணைத்து
ஒருங்கிணைந்த பெரிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்கினார். சந்தேகமில்லாமல் இப்படியொரு
கூட்டமைப்பே நூறாண்டு களுக்கும் மேலாக எதிரிகளின் பிடியிலிருந்த ஜெருசலத்தை
சுதந்திரம் பெற வைத்தது. உண்மையில், முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்தின் பேரில்
இணைந்ததும், அரசியல் ரீதியாக நம்பிக்கை கொண்ட தலைவர்களும், அனுபவம் வாய்ந்த
வீரர்களாலும், உண்மையான இளவரசர்களாலும் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி
சாத்தியமானது.
ஸலாவுத்தீனின் சீரிய தலைமை மட்டுமே முஸ்லீம்கள் முன்னோக்கி தொழுகை நடத்தும்
முதல் மசூதியான அல் அக்ஸா மசூதியையும். ஈஸா (ஏசு நாதர்) அலைஹி வஸ்ஸலாம் பிறந்த
பூமியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஹ்ராஜ் என்னும் பயணத்தின் போது இறங்கிய
இடமும் ஆகிய ஜெருசலத்தை மீட்க வைத்தது.
அல் கதி இப்னு ஷத்தாத் தனது ‘அந் நவாதி அஸ் ஸுல்தானியா’ என்ற புத்தகத்தில்,
சுல்தான் அவர்கள் 584 A.H. துல்கதாஹ்
மாதத்தில் சகோதரர் அல் மாலிக் அல் அதிலின் கீழ் செயல் பட்ட எகிப்து
இராணுவத்தினருக்கு விடுமுறை அளித்தார். ஜெருசலத் தில் ஈத் தொழுகைக்குப் பிறகு,
நாங்கள் சகோதரருடன் சென்று விடுமுறை செல்லும் வீரர்களைக் காண சென்றோம். திரும்பும்
வழியில் கடற்கரை நகரங்களை கண் காணித்தவாறு வந்தார். அவருடன் பயணித்தவர்கள்
அப்படிச் செயய வேண்டாம் என்றும், நமது எகிப்து வீரர்கள் விடுமுறையில் புறப்பட்டு
விட்ட இந்த நேரத்தில் எதிரிகள் டயர் நகரில் தாக்கக்கூடும் என்று அறிவுறுத் தினர்.
இது மிகப் பெரிய அபாயம் என்றும் கூறினர். அவர் அதற்கு மதிப்பளிக்காமலும்,
பயப்படாமலும் கடற்கறை நகரமான அக்ரா சென்றோம். குளிர்காலமானதால் கடல் அலை மிக
ஆக்ரோஷ மாக இருந்தது நான் அந்த சூழ்நிலையை ரசித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது,
அவர் என்னைப் பார்த்து சொன்னார். “நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு
வேளை அல்லாஹ் எஞ்சியுள்ள இந்த கடற்கரை நகரங்களை வெற்றி கொள்ள உதவினால், பகுதிகளாக
பிரித்து என் மகன்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு, தங்களையும்
அழைத்துக் கொண்டு அந்த சிலுவைப் போராளிகளையும், இறை நம்பிக்கை யற்றவர்களையும்
எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைவேன்” என்றார். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
நான் சொன்னேன், நீங்களோ, வீரர்களோ அதைப் போல் ஒரு ஆபத்தில் ஈடுபட முடியாது.
ஏனென்றால், அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்றேன். அதற்கு அவர், “நான்
சட்டபூர்வமான ஒன்று கேட்கி றேன். எந்த இரு மரணங்கள் மர்யாதையானது?” என்று
கேட்டார். நான் சொன்னேன், அல்லாஹ்வுக்காக மரணிப்பது என்று. ஆம் எனது காரணமும்
அல்லாஹ்வுக்காக மரணிப்பது தான் என்றார். என்ன ஒரு அற்புதமான காரணம். என்ன ஒரு
சுயநலமான தைரியம். அப்படித்தான் வாழ்ந்தார். அனைத்துப் போர்களிலும் அவர் இறைவனின்
உதவியைக் கோராமல் இருந்ததில்லை. மேலும், மேற்கத்திய, கிழக்கத்திய, இஸ்லாமிய
மற்றும் அனைத்து சரித்திர ஆசிரியர்களின் பதிவின் படி வெற்றிக்குப் பிறகு,
எதிரிகளிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் இன்று
யூதர்களால் பாலஸ் தீனில் நடத்தப்படும் மனிதாபமானமற்ற செயல்களாலும், படுகொலை களாலும்
இந்த இருபதாம் நூற்றாண்டில் முஸ்லீம் உலகம் வெட்கி தலைகுனிந்து கிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக