மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

செல்ஜுக்குகள் வரலாறு 5



 முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் நிறைய கட்டிடங்களைத் தன் ஆட்சியின் போது கட்டினார். அதில் 1206 ல்  செல்ஜுக்கு களின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்ட மான மருத்துவமனையும், தனது சகோதரி கெவ்ஹிர் நெசிபி ஹாதுன் நினை வால் கைசெரியில் கட்டப்பட்ட ‘சிஃப்டி மதரஸா’வும் மிகவும் புகழ் வாய்ந்தது. குறிப்பிடத்தக்க பல கட்டிடங்களை குருசெஸ்மி, டோகுஸ் டெர்பெண்ட் ஆகிய இடங்களில் கட்டினார். இஸ்னிக்கின் பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் தியோ டர் லாஸ்கரிஸ் என்பவரிடம் அலாசஹிர் என்ற இடத்தை கைப்பற்ற நடந்த போரில் 1211 ல் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் மரணமடைந்தார்.
                               இவருக்குப் பின் இவர் மகன் இஸ்ஸத்தின் கெய்கவுஸ் தந்தையின் வழியில் ஆட்சியை விரிவுபடுத்தியும், வாணிபத்தில் முன்னேற்றத் தையும் ஏற்படுத்தி ஆட்சி நடத்தினார். இவரும் இவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாதும் நடத்திய நாற்பதாண்டு கால ஆட்சியில் செல்ஜுக் மாகாணம் அதிக பட்ச முன்னேற்றத்தைக் கண்டது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் 1214 ல் நிரந்தரமாக கைப்பற்றிய கருங்கடலின் துறைமுக நகரமான ‘சினோப்’ பில் கப்பல் கட்டுமான வாணிபத்தை நிறுவினார். இதனால் சீனா, இந்தியா, பெர்ஷியா, க்ரீமியன் பகுதி கள் மற்றும் மேற்குப் புறங்களில் வாணிபத்தைப் பெறுக்கினார். சிலுவைப்போரா ளிகளால் கைப்பற்றப்பட்ட அண்டாலியா நகரம் மீண்டும் இஸ்ஸத்தின் கெய்கவு ஸால் வெல்லப்பட்டது. செல்ஜுக்குகள் கருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும், துணைகடல்களின் வழியாக வியாபாரங்களும் பெருகின.
                                  இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஆட்சியில் செல்ஜுக்குகள் பல துறைகளில் முண்ணனியில் இருந்தனர். இராணுவம் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தது. அரசியல் நிர்வாகம், வாணிபம் மற்றும் சிற்பக்கலை சிறந்தோங்கியது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஒரு கவிஞராக இருந்தார். மேலும் பெர்ஷிய இலக்க ணம், சூஃபியிஸத்தில் மிகவும் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். மஞ்சள் காமா லை நோயினால் மரணமடைந்து சிவாஸ் பகுதியில் தான் கட்டிய மருத்துவ மனை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
                                     இஸ்ஸத்தின் கெய்கவுஸ் இறந்த பிறகு, அவரால் அங்காரா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாத் விடுவிக்கப்பட்டு 1219 ல் மன்னரானார். இவரும் சகோதரர் போல் எல் லாத் துறைகளிலும் முன்னிலை வகித்து ஆட்சி நடத்தினார். அலாவுத்தீன் கெய் குபாத் சிறந்த ஓட்டப்பந்தய வீரராகவும், ஓவியராகவும், தச்சுத் தொழில் தெரிந்த வராகவும், சிறந்த பலமான இராணுவ கமாண்டராகவும் இருந்தார். இவரது இரா ணுவம் பதினைந்து ஆண்டுகளில் தியர்பாகர் பகுதி தவிர மொத்த அனடோலியா வையும் வெற்றி கொண்டது. அலாவுத்தீன் கெய்குபாத் விவசாயத்தை ஊக்கப் படுத்தினார். சர்க்கரை ஆலைகளை உண்டாக்கியும் மொத்த லீவண்ட் பகுதியின் வியாபாரத்தலமாக சிவாஸ் நகரை உருவாக்கினார். இவரின் முதல் வெற்றி லெஸ்ஸர் அர்மேனியாவின் சிலிஷியன் மன்னராட்சியிலிருந்து  மெடிட்டரேனி யன் துறைமுக நகரமான கொலோனோரோஸ் (அலன்யா) நகரமாகும். வெற்றிக்கு பிறகு இதை ‘அலைய்யே’ என்று பெயர் மாற்றி கடற்படை தளமாகவும், கோடை காலத்தில் தான் தங்கும் விடுமுறை தலமாகவும் ஆக்கிக்கொண்டார். பின்பு படை நடத்தி கஹ்டா(1222), எர்ஸின் கன்(1230), எர்ஸுரும்(1230), செமிஸ்கிஸிக் கோட்டை களையும், மேலும் ஹர்புத் மற்றும் அஹ்லத் ஆகியவற்றையும் வென்றார்.
                                 அலாவுத்தீன் கெய்குபாத் பெரும்பாலும் முன்னேற்ற பாதையிலேயே உயர்ந்த எண்ணத்தில் சிந்தித்தார். எதிரிகளாக இருந்தவர்களிடம் நல்ல உறவைப்பேணும் வகையில் 1221 ல் அர்மேனியன் இளவரசி மஹ்பெரி ஹுவாண்டையும், 1227 ல் அய்யுபிட் ராணி மெலிகி ஹதூனையும் மணந்து கொண்டார். இவரின் கட்டிட நிர்மாணங்களும் மிகவும் புகழப்பட்டது. கைசெரி, சிவாஸ் நகரங்களின் சுற்றுச்சுவற்றைப் பலமாக்கினார். கொன்யா நகரின் சுவர் களையும் பலப்படுத்தி, சுடுநீர் குளியலறை அடங்கிய ஆடம்பரமான அரண்மனை யைக் கட்டினார். இராணுவ நடவடிக்கைக்காக 1221 ல் இவர் கட்டிய சிவப்பு கோபு ரம், அலன்யாவின் இராணுவ மையம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எண்ணற்ற கட்டிடப்பணிகளைச் செய்தார். 1229 ல் கொன்யா மற்றும் அக்சராய் இடையிலும்,  1232 ல் கைசெரி மற்றும் சிவாஸுக்கும் இடையிலும் சுல்தான் அரண்மனை, கர தாய் அரண்மனைகளையும், மேலும் அலாரா, ஸஸதின், கார்டக், கதின், எர்டோ குஸ், எக்ரிதிர், இஷாப் இ கெய்ஃப் போன்ற சிறப்பு மிக்க கட்டிடங்களைக் கட்டி னார். கைசெரிக்கருகிலும், குபாதாபாத்தில் பெய்செஹிர் ஏரியின் மீதும் இவர் கட்டிய பாலங்கள் இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. புகழின் மிக உச்சத்தில் இருந்த போது ரமலான் மாதத்தின் முடிவில் மாமன்னன் மங்கோ லிய கான் அளித்த விருந்தில் விஷம் வைக்கப்பட்டு மூன்று நாள் கழித்து இறந்து போனார். ஏற்கனவே கிழக்கில் மங்கோலியர்களால் துவக்கப்பட்டு விட்ட தன் தேசத்தின் அழிவைக் காணாமலேயே சென்றுவிட்டார்.
                                 அலாவுத்தீன் கெய்குபாதுக்குப் பின் அவரின் பிள்ளை களுக்குள் நடந்த பல படுகொலைக்குப் பின் அவரின் ஒரு மகன் இரண்டாம் கியா ஸுத்தீன் கெயுஸ்ரெவ் ஆட்சிக்கு வந்து அமைதியை கொண்டு வந்தார். தன் தந் தையின் மூலம் வந்த மைனர் ஆசியாவின் முழு நிலப்பரப்பையும் ஆண்டார். உடன் தியர்பாகிரின் அருகாமை இடத்தையும் கைப்பற்றி ஆண்டுவந்தார். ஆனால், விரைவில் எல்லாம் அழிவை நோக்கி சென்றது. 1241 ல் பாபா இஷாக் என்னும் மத பிரச்சாரகர் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ்வை எதிர்த்து உள்நாட் டில் கலவரம் செய்தார், இது மத, சமூக, அரசியல் கலவரமாக உருவெடுக்க இறுதி யில் பாபா இஷாக்கை தூக்கிலிட்டு அடக்கினார். இந்த கலவரம் உள்நாட்டில் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. இது மட்டுமல்லாமல் வெளியே செல்ஜுக் கின் எல்லையோரத்தில் மங்கோலியர்களின் படையெடுப்பு அத்துமீறியது. 1241 ல் மங்கோலியர்களின் திறமையான தளபதி ஒருவர் எர்ஸுருமைக் கைப்பற்றினார். இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் கூட்டு இராணுவமாக பைஸாந்தியர்கள், அர்மேனியர்கள் மற்றும் ஃப்ராங்கிஷின் கூலிப்படைகளை இணைத்து மங்கோலி யர்களை எதிர்த்தார். சிவாஸ், எர்ஸிங்கன் அருகில் கோசிடாக் என்ற இடத்தில் 1243 ல் நடந்த போரில் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் படுதோல்வி அடைந்தார். பிறகு மங்கோலிய படைகள் சிவாஸ், கைசெரி போன்ற பகுதிகளை யும் கைப்பற்றி கொள்ளையடித்தனர். மங்கோலியர்கள் பரவலாக போரிட்டு அனடோலியாவின் பிற நகரங்களை நாசப்படுத்தினர். இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் எவ்வளவோ முயற்சி செய்து தங்கள் சுதந்திரப் பகுதிகளை மீட்க முனைந்தார். இறுதியில் மங்கோலியர்களுக்கு ஆண்டு வருவாய் செலுத்த ஒப்புக் கொண்டு செல்ஜுக்குகள் மங்கோலியர்களின் வேலைக்காரர்கள் போல் ஆனார் கள். இந்த காலகட்டம் செல்ஜுக்குகளின் இல்கானித் காலம் என்றழைக்கப்பட் டது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் காலத்தில் அக்சிகரா அரண்மனை, இன்சிர், கிர்கோஸ், பஸார், சிம்சிம்லி சுல்தான் அரண்மனை, சிஃப்ட் லிக், கர்கி, சுசுஸ், ககால்லி, இன்சிர், செகிரிக்சு மற்றும் சரஃப்சா அரண்மனைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. 1246 ல் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடைந் தார்.

கருத்துகள் இல்லை: