மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 9



பாகம் : 9
இமாராஹ் அல் யமானியின் சூழ்ச்சி
ஸலாவுத்தீனுக்கு எதிராக மிகப் பெரிய குழப்பத்தை சரித்திரத்தில் விளைவித்தவன் காலத்தால் நன்கு பதியப்பட்ட இமாராஹ் அல் யமானி. இவன் பலமான ஆதரவு கூட்டத்தை கெய்ரோவில் கூட்டி ஃபாத்திமிட்களின் கடைசி மன்னன் அல் அதீதின் ஒரு மகனின் தலைமையில் ஸலாவுத்தீனை விரட்டி விட்டு மீண்டும் ஷியா பிரிவின் ஃபாத்திமிட் ஆட்சியைக் கொண்டு வர திட்டம் தீட்டினான். அந்த செய்தியை உடனே ஃப்ராங்க்ஸுக்கு தெரியப் படுத்தி தனக்கு ஒத்துழைப்பு தர வேண்டினான். மிக குரோத எண்ணமும், வெறுக்கத்தக்க குணம் கொண்டவர்களும் இமாராஹ்வுடன் இணைந்தனர்.
அவர்களிலிருந்து ஒரு குழப்பவாதி ஸைன் அத்தீன் இப்னு நஜா என்பவன் பிரிந்து வந்து ஸலாவுத்தீனிடம் சேர்ந்து பரிசும், நல்ல பெயரும் வாங்க வேண்டும் என்று நம்பிக்கை துரோகம் செய்யும் விதமாக ஸலாவுத்தீனுக்கு காட்டிக் கொடுத்தான். ஸலாவுத்தீன் அவனையும் கூட்டாளிகளையும் கொன்று நாட்டில் கேடு விளை விப்பவர்களுக்கு இது தான் பாடம் என்று உதாரணமாக்கினார். இது நடந்தது 569 A.H.
கன்ஸ் அத் தௌலாஹ்வின் சூழ்ச்சி
570 A.H. ல் மீண்டும் ஓரு குழப்பம் அஸ்வான் மற்றும் குஸ் பகுதியில் தோன்றியது. இதன் காரணகர்த்தா அஸ்வான் பகுதியை ஆண்ட கன்ஸ் அத் தௌலாஹ். இவன் அரபியர்கள், சூடானியர் களை ஒன்று கூட்டி ஃபாத்திமிட் ஆட்சியை மீண்டும் கொண்டு வர உத்தேசித்து நேரடியாக கெய்ரோவிற்குள் நுழைந்தான்.அதை நிறை வேற்றுவதற்காக பெரும் பணம் செலவு செய்தான். மேலும் ஒரு குழுவை இணைத்துக் கொண்டு பத்து ஸலாவுத்தீன் ஆதரவு இளவரசர்களைக் கொன்றான். மேலும் துட் என்னும் கிராமத்திலிருந்து வந்த கியாஸ் இப்னு ஷாதி என்பவன் குஸ் பகுதியின் வளத்தை சூறையாடினான். ஸலாவுத்தீன் தன் சகோதரர் அல் மாலிக் அல் ஆதில் மூலம் பெரும் படை அனுப்பி கியாஸ் இப்னு ஷாதியைக் கொன்று அவன் படைகளை சிதறடித்தார். பின் அல் மாலிக் அல் ஆதில் கன்ஸ் அத் தௌலாஹ்வின் பெரும் படைகளைக் கொன்று தப்பிச் சென்ற தௌலாஹ்வையும் கொன்று கெய்ரோ திரும்பினார். இவைகள் எல்லாம் ஸலாவுத்தீன் குழப்பங் களை வேரறுத்து, நேர்மையற்றவர்களையும், அநீதியாளர்களையும், சூழ்ச்சியாளர்களையும் களையெடுத்து தன் புத்திசாலிதனத்தையும், ஆர்வத்தையும் அரசியல் அரங்கில் காட்டச் செய்தது.

கருத்துகள் இல்லை: