மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

இஸ்மாயிலிக்கள் வரலாறு



                                                 இஸ்மாயிலிக்கள் என்பவர்கள் “ஷியா” பிரிவிலிருந்து இமாம்களின் வரிசைப்போட்டியால் பிரிந்து போனவர்கள். எட்டாம் நூற்றாண்டில் ஏழாவது இமாமைத் தொடர்வதில் ஷியாக்களுக்கும், இஸ்மாயிலி களுக்கும் பிரிவு வந்தது. ஷியாக்கள் ஏழாவது இமாம் அந்தஸ்தை மூஸா என்பவ ருக்கு அளித்தார்கள். ஆனால், இஸ்மாயிலிக்கள் அவரின் மூத்த சகோதரர் இஸ் மாயில் என்பவரை ஆதரித்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் இவர்கள் பிரபல்ய மாகி சிரியாவில் பலமாக தளம் அமைத்து அப்பாஸிட் ஆட்சியாளர்களை எதிர்த் தார்கள். பத்தாம் நூற்றாண்டில் அப்பாஸிட் ஆட்சியின் ஒரு பகுதியான வட அப்பி ரிக்காவின் கடற்கரை நகரங்கள் அத்தனையும் ஆண்டார்கள். இஸ்மாயிலிக்களின் தலைவர் உபைதுல்லா என்பவர் 909 ல் வட ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதி மற்றும் அக்லாபித்கள் ஆண்ட கைரொவன் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் தனது பகுதிகளை “ஃபாத்திமிட்” பேரரசு என்று அழைத்து தான் ஷியாக்களின் கலீஃபாவும், அலி(ரலி) மற்றும் ஃபாத்திமா(ரஅ) அவர்களின் வழியில் வந்தவர் என்றும் அறிவித்துக்கொண்டார்.
                                          அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபாத்திமிட் இராணுவம் எகிப்தை வென்று தளமாக்கி வட ஆப்பிரிக்க கரைப் பகுதிகளை வென்றது. நைல் நதியின் கரையில் முஸ்லீம்களின் ஒற்றர்கள் நகரத்தை ஒட்டி “அல் கஹிரா” (கெய்ரோ) என்ற நகரை புதிய தலைநகராக ஆக்கிக்கொண்டனர். 970 ல் கெய்ரோவில் அல் அஸார் பல்கலைக்கழக மசூதியைக் கட்டி இஸ்லாமிய மதக்கல்வி பயிலும் கல்லூரி ஆக்கினார்கள். இவர்களின் ஆட்சியின் உச்சத்தில் பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவைத் தலைநகரமாக்கி சிஸிலி, மேற்கு அரேபியா(மக்கா, மதீனா உள்ளடக்கியது) மற்றும் மெடிட்டரேனியன் கரையைத் தொடந்து சிரியா வரை ஃபாத்திமிட் பேரரசாக ஆண்டார்கள். 1171 ல் இஸ்மாயி லிய பேரரசு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற சுல்தானாக ஸலாவுத் தீன் அவர்கள் கிளர்ந்தெழுந்து சிலுவைப்போராளிகளை எதிர்த்தபோது, இவர் களின் பேரரசும் நொறுங்கியது. ஸலாவுத்தீன் பெயர் பாக்தாதிலும், வெள்ளிக் கிழமை தொழுகை உரையில் கலீஃபாவின் பெயராகக் கூறும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனது. இஸ்மாயிலிக்கள் குறுக்கிடும் போது எகிப்து மீண்டும் இஸ்லாமிய சுன்னி பிரிவுக்கு மாறியிருந்தது.
                                         நிஸாரி இஸ்மாயிலிக்கள் என்ற ஒன்று தனி அமைப்பாக முன்னேறியது. அவர்கள் அலி(ரலி) மற்றும் ஃபாத்திம(ரஅ) அவர்களின் வழியில் வந்த நிஸார் என்பவரின் தொடர்ச்சியாளர்கள் என்றார்கள். பதினொன் றாம் நூற்றாண்டின் இறுதியில் வட பெர்ஷி யாவைக் கைப்பற்றினர். அவர்கள் சரித்திரத்தில் தீவிரவாததிற்கும், இரகசிய கொலைகளுக்கும் பெயர் போனவர்கள். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷி யாவில் பலமாக இவர்கள் இருந்தபோது தகர்க்க முடியாத அலமுத் கோட்டையை பிடிக்கும்போது இவர்களின் இரகசியக் கொலைத்திட்டம் வெளியே தெரியவந்தது. இந்த கொலைகளுக்காக முகாம்கள் அமைத்து பயிற்சி கொடுத்தார்கள். உளவா ளிகளை எதிரிகளின் நகரத்திலும் நடமாடவிட்டு கண்காணித்தார்கள். இவர்களின் எதிரிகள் பெரிய சாம்ராஜ்ஜி யத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். செல்ஜுக் துருக்கி மற்றும் பாக்தாத் கலீஃபாக்களை இந்த இரகசிய கொலையாளிகள் கொன்றார்கள். பயிற்சி பெற் றவர்கள் எப்படியாவது ஒரு பிரபலமானவரைக் கொன்றுவிடுவார்கள். சில சம யங்களில் கெய்ரோவில் இஸ்மாயிலைச் சேர்ந்தவர்களையே கொன்றார்கள். இருமுறை இந்த கொலையாளிகள் சுல்தான் ஸலாவுத்தீன் அவர்களைக் கொல்ல திட்டமிட்டு தவறினார்கள். இந்த கொலைகார நிஸாமி இஸ்மாயிலிகளை அழிக்க முடியாமல் திணறியபோது பனிரெண்டாம் நூற்றாண்டில் எகிப்து மம்லுக் சுல்தா னாலும், மங்கோலிய மன்னர் ஹுலகு வாலும் அழிக்கப்பட்டனர். இவர்களில் 1818 ல் பெர்ஷியாவின் ஷா ஒருவருக்கு அகா கான் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
                                               1840 ல் அடுத்த ஷாவால் பிரச்சினை வர முதல் ஷா அகா கான் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அங்கிருந்து அவரும் அவர் வழிவந்தவர்களும் இஸ்மாயிலி சமுதாயத்தின் தலைவர்களாக இருந்து இந்தியா, சிரியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் உலகமெங்கும் லட்சக்கணக்கில் பரவினர். தற்போதைய அகா கான் 1936 ல் பிறந்த நான்கு வரிசையைச் சேர்ந்தவ ராவார். பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் பெர்பெர் பேரரசு சிதைந்து கொண்டிருந்தபோது மதிப்பு வாய்ந்த கடற்கரைப் பகுதியான வட ஆப்பிரிக்கா சக்திவாய்ந்த இரு நகரங்களை மேற்கில் ஸ்பெயினையும், கிழக்கில் துருக்கியை யும் ஈர்த்தன. ஸ்பெயின் துருக்கியின் பகை உணர்வு பதினாறாம் நூற்றாண்டில் ஒரு முடிவுக்கு வந்து வட ஆப்பிரிக்கா கடற்கரைப் பகுதியை துருக்கி கைப்பற்றி யது. துருக்கி கடற்கொள்ளையர்கள் அந்த கடற்கரைப் பகுதியை கையாண்டார் கள். பின் அந்தப் பகுதிகள் ஓட்டோமான் பேரரசால் அவர்களுக்கு பாதுகாப்பளிக் கப்பட்டது. 1512 ல் அல்ஜீரியாவின் கடற்கரைப் பகுதியில் தான் முதல் கடற்கொள் ளையர்கள் பரவினார்கள். 1551 ல் லிபியாவில் இரண்டு கடற்கொள்ளைக் கூட்டங் கள் பரவின. 1534 ல் துனீஷியாவில் புகழ்பெற்ற கடற்கொள்ளையராக கைர் அத் தீன் என்பவர் இருந்தார். ஐரோப்பியர்கள் இவரை பார்பரொஸ்ஸா என்று அழைத் தனர். இறுதியில் 1574 ல் துனீஷியா ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் வந் தது.
                                        ஆனாலும், துருக்கியின் பகுதிகளுக்கு கடற் கொள்ளை நல்ல வருமானத்தைத் தந்ததால் தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் வட ஆப்பிரிக்க கரையோரங்களில் இருந்தார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரான்சின் அல்ஜீரிய படையெடுப்பின் மூலம் கடற்கொள்ளை முடிவுக்கு வந்தது. ஐரோப்பியர்கள் அந்த பகுதிகளைக் காவல் காத்ததால் துருக்கிய கடற் கொள்ளையர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1881 ல் துனீஷியாவும், 1912 ல் மொரோக்கோவும் பிரான்சின் வசம் போனது. துருக்கிகளிடமிருந்து லிபி யாவை இத்தாலி கைப்பற்றியது. சுதந்திரம் அடையும் வரை கடற்கரைப் பகுதிகள் கொள்ளையர்கள் பகுதியாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத போதகரான அல் செனுஸ்ஸி அல் கபீரின் கட்டாய மதக்கோட்பாடுகளும் சாதா ரண இஸ்லாமிய சுன்னிப் பிரிவு வாழ்க்கையும் பிதோயின் பழங்குடியினரிடம்  பிரபல்யமானது. இவரின் வழிதொடர்ந்த இன்னொரு செனுஸ்ஸி என்பவரிடம் கிழக்கு மாகாணமான சைரினைகா முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.
                                     துருக்கிகளை வெளியேற்றியதால் மட்டும் அந்த பிராந்தியங்களில் பிரச்சினை தீர்ந்து விடவில்லை. பின்னால் வந்த இத்தாலியர் கள் அந்த வட ஆப்பிரிக்கா பகுதியில் குறிவைத்திருந்தார்கள். இருபதாம் நூற்றா ண்டின் முதல் பத்தாண்டுகளில் அல்ஜீரியாவும், துனீஷியாவும் பிரான்சின் வசமும்  எகிப்து பிரிட்டன் வசமும் இருந்தது. லிபியா பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் மத்தி யில் இருந்தது. இத்தாலி வட ஆப்பிரிக்காவில் வாணிபத்தை அபிவிருத்தி செய்வ தில் ஆர்வமாக இருந்தது. 1900 ல் பிரான்சும், இத்தாலியும் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு பிரான்ஸ் மொரோக்கோவையும், இத்தாலி லிபியாவை யும் எடுத்துக்கொண்டு இருவரும் ஒருவர் பகுதியில் மற்றொருவர் சுலபமாகக் கையாள முடிவு செய்து கொண்டனர்.           

கருத்துகள் இல்லை: