மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

செல்ஜுக்குகள் வரலாறு 2



அந்த நாடோடிக் கூட்டத்திலேயே செல்ஜுக் நாடோடிகள் தான் உயர் அந்தஸ்தில் இருந்தார்கள். பின் அங்கிருந்து ட்ரான்ஸாக் சியானா (தற்போது சமர்கண்ட்) என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆரம்பத்தில் ஷாமானி சம் என்ற ஒரு மதப்பிரிவில் இருந்த இவர்கள் இஸ்லாமிய மதக் கோட்பாடு       களால் கவரப்பட்டு ‘சுன்னி’ ப்பிரிவு முஸ்லீமாக மதம் மாறினார்கள். தந்தைக்குப் பிறகு அந்தக் கூட்டத்தின் தலைவராக மிகவும் திறமையாக செல்ஜுக் செயல்பட் டார். அவர்களின் சாம்ராஜ்ஜியம் இவரின் பெயரையே தாங்கி நின்றது. அந்த ட்ரான்ஸாக்சியானா என்ற இடத்திற்காக இவர்கள் அப்போதிருந்த கரஹனித்கள், சமானித்கள் மற்றும் காஸ்னிவித்கள் பேரரசுகளுடன் போட்டியிட்டார்கள். அவர் கள் தங்கியிருந்த பகுதி ஓக்ஸுஸ் நீர்வளம் மிக்கதாக இருந்தது. இருபுறமும் சிர்தர்யா மற்றும் அமுதர்யா ஆறுகளின் உதவியால் அந்த பகுதியில் விவசாயத் திற்கு ஏற்ற ஒரே இடமாகவும் இருந்தது. செல்ஜுக் அவர்களுக்கு மூஸா, மிக்காயீல், அர்சலன் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். அதில் மிக்காயீல் ஒரு போரில் இறந்து போனார். அவருக்கு துக்ருல் பெக், சக்ரி பெக் என்று இரு மகன்கள் இருந்தார்கள். மாபெரும் வீர்ர் செல்ஜுக் தனது நூறாவது வயதில் இறந்து போனார். செல்ஜுக்குகள் வட இந்தியா, கோராசன் மற்றும் ஈரானிலிருந்த காஸ்னிவித்களை பலமுறை தோற்கடித்தார்கள். இறுதியில் 1035 ல் சக்ரிபெக் ஈரானின் வடமேற்கு பகுதியான கோராசனைக் கைப்பற்றினார். ஆனால், உண்மை யில் இவரது சகோதரர் துக்ருல்பெக் தான் செல்ஜுக்கின் விரிவான ஆட்சிக்கு வித்திட்டார். முக்கியமான நகரங்களான நிஷாப்பூர்(1038), க்வாரெஸ்ம்(1042) ஆகியவற்றைக் கைப்பற்றினார். ஈரானுக்குள் நுழைந்து ஹமதான் மற்றும் ஹிஸ் பஹானைக் கைப்பற்றினார். 1051 ல் ஹிஸ்பஹானை தலைநகரமாக ஆக்கி கொண்டார். 1055 ல் பாக்தாதின் கலீஃபா அவசரமாகக் கலவரங்களை அடக்கவும், மற்ற பணிகளுக்காகவும் துக்ருல்பெக்கின் உதவியை நாடி பாக்தாதுக்கு அழைத் தார். துக்ருல்பெக் பிரச்சினைகளை சமாளித்து பாக்தாதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவரின் வீரத்தையும், சாமர்த்தியத்தையும் மெச்சி அப்பாஸிட் கலீஃபா ‘சுல்தான்’ என்று பட்டப் பெயரிட்டு அழைத்தார்.
                              1063 ல் துக்ருல்பெக் மரணமடைந்த பின் இவருடைய      சகோதரர் சக்ரிபெக்கின் மகன் அல்ப் அர்சலன் (அல்ப்-போர்வீரன்,அர்சலன்-சிங்கம்) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் பைஸாந்தியர்களை எதிர்த்துப் போரிட்டு மேற்குப் புறமாக முன்னேறினார். அப்போது கிழக்கு அனடோலியாவில் அவ்வள வாக மக்கள் தொகை இல்லை, பைஸாந்திய சக்கரவர்த்தி இரண்டாம் பாசில் அங்கு வசித்த 40,000 அர்மேனிய மக்களை வெளியேற்றி சிவாஸ் மற்றும் கைசெரி யில் தங்க வைத்தார். அல்ப் அர்சலன் 1064 ல் அர்மேனியாவையும், 1070 ல் அன டோலியா மற்றும் அலிப்போவையும் கைப்பற்றினார். 1071 ல் ஜெருசலத்தையும் இவர் கைப்பற்றிய பின் தான் ஐரோப்பியர்கள் சிலுவைப்போருக்கான ஆரம்ப த்தை ஆராய்ந்தார்கள். 1071 ல் பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன்டியாகினிஸ் அர்மேனியாவைத் திரும்ப வெற்றி கொள்ள ‘வான்’ ஏரியிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள மன்ஸிகர்ட் என்ற கோட்டையில் அல்ப் அர்சலனால் தந்திர மாகத் தோற்கடிக்கப்பட்டார். தோற்றுப்போன பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன் டியாகினிஸுக்கு தனது மாளிகையில் விருந்து வைத்து கௌரவித்து ‘தினசரி ஆயிரம் தினார்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பைஸாந்தியர்கள் செலுத் தவும், கைது செய்யப்பட்ட செல்ஜுக்குகளை விடுவிக்கவும், கைப்பற்றப்பட்ட பகுதிகள் செல்ஜுக்குகளின் எல்லையுடன் இணைக்கவும், எப்போது அழைத்தா லும் உதவிக்கு வருவதாகவும்(FEUDEL SYSTEM), பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன் டியாகினிஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.  இந்த வெற்றிக்குப் பிறகே அனடோலியாவில் துருக்கியர்களின் ஆட்சி நிலை பெற்றது. 1072 ல் அல்ப் அர்சலன் தனது கூடாரத்தில் படுகொலை செய்யப்பட்டார. அல்ப் அர்சலனின் மரணத்தால் பெர்ஷியாவின் மாபெரும் செல்ஜுக்குகள் கிழக்கு அனடோலியாவின் நிலப்பரப்பை செல்ஜுக்குகளின் ஒரு பகுதியாக மட்டுமே விட்டு விட்டு விலக வேண்டியதாகியது.
                          அடுத்ததாக அல்ப் அர்சலனின் மகன் மாலிக் ஷா 1072 ல் ஆட்சிக்கு வந்தார். செல்ஜுக்குகளில் இவர் மிகவும் பலம் வாய்ந்தவராகவும், புத்தி சாலியாகவும் இருந்தார். இவர் 1079 ல் ட்ரான்ஸ்க்சியானா மற்றும் கிர்மான் பகுதி களைக் கைப்பற்றினார். இவரின் ஆட்சியில்தான் மாபெரும் செல்ஜுக் சாம்ராஜ்ஜி யம் பல திசைகளிலும் விரிவடைந்து மைனர் ஆசியாவிலிருந்து துருக்கிஸ்தான் வரை நீண்டது. இவர் தலைநகரை ரெய்யிலிருந்து இஸ்ஃபஹானுக்கு மாற்றிக் கொண்டார். மாலிக் ஷாவின் ஆட்சிகாலம் செல்ஜுக்குகளின் பொற்காலமாகும். இவரது ஆட்சி “கிரேட் செல்ஜுக்” என்று புகழப்பட்டது. அப்பாஸிட் கலீஃபா இவரை “கிழக்கு,மேற்கின் சுல்தான்” என்று புகழாரம் சூட்டினார். மாலிக் ஷாவின் ஆட்சி யில் இராணுவம், விஞ்ஞானம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகளில் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தது மெலிக் ஷாவின் வலதுகரமாய் இருந்த நிர்வாகத் திறன் மிக்க பெர்ஷிய மந்திரி நிஜாம் அல் முல்க் என்பவராவார். பின்னாளில் இவர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்னும் ஒரு பெயர் பெற்ற மந்திரி தாஜ் அல் முல்க் என்பவர். பெர்ஷிய சரித்திரத்தில் செல் ஜுக்குகளின் திறமைக்கு சிறப்புண்டு. இஸ்ஃபஹானி லுள்ள ‘மஸ்ஜித் இ ஜாமி’ மசூதி இவர்கள் கட்டியது. கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கினார்கள். நீலமும் கருப்பும் கலந்த பளிங்கு கற்கள் வேலைப்பாடு இவர்களின் சிறப்பம்சம். இஸ்லாமியர்களின் ஆட்சியில் செல்ஜுக்குகளின் கலை, சிலை வடிவமைப்புக்கு தனி சிறப்புண்டு. 1092 ல் மாலிக் ஷா மரணமடைந்த பின் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் குடும்ப சண்டையினால் பல பகுதிகளாக சிதறி மத்திய ஆட்சியின் கட்டுப்பாடு இல்லாமல் போனது. உள் மாநிலங்களை சிரிய செல்ஜுக்குகளும், ஈராக்கை கோரசான் செல்ஜுக்குகளும், கிர்மான் செர்ஜுக்குகள், அனடோலியா செல்ஜுக்குகள் என்று பிரிந்து போயினர். ஷியா பிரிவினரின் இடையூறுகள், சிலுவைப் போர்கள் மற்றும் மத்திய ஆசியா விலிருந்து குடியேறிய துருக்கி பழங்குடியினரின் தொல்லைகள் என்று பல குழப்பங்களுக்கு நடுவே மாபெரும் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் மேலும் ஒரு நூற்றாண்டைக் கடந்து ஆண்டது.

கருத்துகள் இல்லை: