பாகம் : 18
இன்றளவும் உலகின் மிகமோசமான தீவிரவாத உரையாக கருதப்படும் போப் இரண்டாம் அர்பன்
பிரான்சின் கிளர்மாண்ட் சபையில் நிகழ்த்திய குரோதம் நிறைந்த உரையாகும். “இந்த போர்
ஏதோ ஒரு நகரத்தை வெற்றி கொள்வதல்ல, மொத்த ஆசியாவையும் வெற்றி கொண்டு அதன் எண்ணற்ற
வளங்களை கைப்பற்றுவதாகும். நீங்கள் புனித பயணம் போகும் ஜெருசலத்தை வஞ்சகர்களிடம்
இருந்து மீட்டெடுக்க வேண்டும். நபி மூசாவின் தோராஹ் வேதத்தில் தேனும், பாலும்
ஊர்வதாக சொல்லப்பட்ட அந்த மண்ணை வெல்ல வேண்டியது நமது கடமையாகும்” என்று வெறி
ஏற்றும் வண்ணம் கூறினார். 488 A.H. ல் (1095 C.E.) உலகின் இறுதி நாள் வரை நல்ல உள்ளம்
படைத்த எவருமே மறக்க முடியாத மிகைப்படுத்தி நடந்த கொடுமைகள் நிறைந்த அந்த சிலுவைப்
போர் துவங்கியது.
ஒழுக்கமற்ற கலவையான முதல் சிலுவைப் போராளிகள் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து
மைனர் ஆசியாவைக் கடந்தனர். செல்ஜுக் ஆட்சியாளர் கலிஜ் அர்சலன் என்பவர் பெரிய
போரின் மூலம் கான்ஸ்டாண்டிநோபிளை ஒட்டிய நிகாயீ என்ற இடத்தில் அவர்களைத்
தோற்கடித்தார். இரண்டாவது இராணுவம் இளவரசர்களாலும், கட்சித் தலைவர்களாலும் வட,
தென் பிரான்சிலிருந்தும் (இதனாலேயே இவர்கள் ஃப்ராங்க்ஸ் என அழைக்கப் பட்டனர்.),
தென் இத்தாலியிலிருத்தும் அமைக்கப் பட்டது. இவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து
மைனர் ஆசியாவை கடந்தனர். மீண்டும் கலிஜ் அர்சலன் குறுக்கிட போர் நடந்தது. எட்டு
மாதங்கள் நடந்த போரில் இந்த முறை சிலுவைப் போராளிகள் வெற்றி பெற்று ஆண்டியாக் நகரை
கைப்பற்றினர். பின் முன்னேறிச் சென்று ஒரு மாதத்திற்க்கு ப் பிறகு 492 A.H. ல் ( 1099 C.E. ) ஜெருசலத்தைக் கைப்பற்றினர். அவர்கள் முஸ்லீம் களுக்கு எதிரான எல்லாவிதமான மனித உரிமை மீறல்கள், கொடுமைகளை
கட்டவிழ்த்து விட்டனர். ஏறக்குறைய 70,000 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள்
முழங்கால் அளவு இரத்தத்தில் நடமாடியதாக ஐரோப்பிய சரித்திர ஆசிரியர் களே பதிவு
செய்திருக்கின்றனர். சிலுவைப் போராளிகள் முழங்கால் அளவு இரத்தத்தில் நடந்ததாக
மாற்று மத சரித்திர ஆசியர்களும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். முஸ்லீம் களின்
இரத்தக்கறை அல் அக்ஸா மஸ்ஜிதிலும், குடியிறுப்பு காலனிகளிலும் நீண்ட நாட்கள்
படிந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
இப்னு அல் அதிர் அவர்கள் முஸ்லீம்களின் ஆத்திரத்தை வெளிப் படுத்தும் விதமாக :
புனித ரமலான் மாதத்தில் மக்கள் அல் கதி அபு ஸா இத் அல் ஹர்வியின் தலைமையில்
சிரியாவிலிருந்து பாக்தாதுக்கு ஓடி வந்தனர். சிலுவைப் போராளிகளின் நடுங்க வைக்கும்
தாக்கு தலையும், சட்டத்திற்கு புறம்பான அதிபயங்கர குற்றங்களையும் கண்டு கண்ணீர்
சிந்தி, இதயம் நொருங்கியதாக கூறுகிறார். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையில் அவர்கள்
நோன்பை விட்டு விட்டு இறந்து போன முஸ்லீம்களுக்காகவும், சிறைப் பிடித்து
செல்லப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகளுக்காகவும், சூரையாடப்பட்ட தங்கள்
பணத்திற்காகவும் இறைவனிடம் கண்ணீர் சிந்த பிரார்த்தித்ததாக கூறுகிறார்.
492 A.H. (1099
C.E. ) ல் எதிரிகள் முஸ்லீம்கள் மீது தொடுத்த சிலுவைப்
போரின் விளைவுகளை சரித்திரம் மதவேறுபாடற்று பதிவு செய்து வைத்திருக்கிறது.
பிரிட்டிஷ் சரித்திரவாளர் மில், மிஷுத் விவரத்தில் குறிப்பிட்டிருப்பதாக இளவரசர்
அலி சொல்வது: எதிரிகள்
ஜெருசலத்தில் நுழைந்த போது, முஸ்லீம்கள் வீதி யிலும், வீடுகளிலும் கேள்வி
முறையற்று கொல்லப்பட்டனர். இதை கண்ணுற்ற பலர் அந்த படுகொலையில் இருந்து தப்பிக்க
உயரமான சுவர்களிலிருந்து குதித்து இறந்தனர். சிலர் கோபுரங் களிலும்,
அரண்மனைகளிலும், மசூதிகளிலும் ஓடி ஒளிந்து கொண்டனர். எப்படி இருந்தாலும் கிறிஸ்தவ
பீரங்கிகளும், வீரர்களும் முஸ்லீம்களின் பிணங்கள் மீது கடந்து சென்று தப்பி
ஓடியவர்களை விரட்டி கொன்றனர். ஆம், வெறி வெறி மதபோத கர்களால் ஏற்றப்பட்ட வெறி.
வசதி படைத்த முஸ்லீம்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு பின் வெட்டி கொல்லப்
பட்டனர். சிலரை உயிரோடு எரித்துக் கொல்வதைக் காணச் செய்து, பலரை
கட்டிடங்களிலிருந்து தாங்களாகவே விழுந்து சாகச் செய்தனர். ஒளிந்திருந்தவர்களை
பிடித்து வந்து இறந்த பிணங்களின் மீதே வைத்து கொன்றனர். முஸ்லீம் பெண்கள் கதறினர்,
குழந்தைகள் அழுதனர். அந்த இடத்தின் சூழ்நிலை ஏதோ ஏசு நாதர் ( ஈஸா நபி ) இதைப்போல்
கொலைகள் மூலம் தான் எதிரிகளை மன்னித்தார் என்பது போல் இருந்தது. கொன்றவர்கள்
கொஞ்சம் கூட அனுதாபமோ, வருத்தமோ படவில்லை. ஏதோ தொழிற்சாலைப் பணி செய்வது போல்
செய்தார்கள்.
சிலுவைப் போராளிகள் சிரியாவின் பகுதியில் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.
அலெக்ஸாண்டிர்யா முதல் வட அர்ருஹா( தற்போதைய உருஃபா) வரை தலைமையகங்களை உண்டாக்கிக்
கொண்டனர். அந்த கால கட்டத்தில் சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை ஆக்கிரமித்துக்
கொள்ள காரணமாய் அமைந்தது. இந்த அவல நிலைக்கு முஸ்லீம் நாடுகளிடையே ஆன
குழப்பங்களும், ஒப்பந்த மீறல்களும், ஒற்றுமையின்மை யுமே ஆகும். எதிரிகள் இந்த
பலவீனங்களை அறிந்திராவிட்டால் நிச்சயமாக ஜெருசலத்திற்குள் ( முஹம்மது நபிகள் (ஸல்லல்
லாஹு அலைஹி வஸல்லம்) மிஹ்ராஜ் என்னும் சிறப்பு பயணம் முடிந்து இறங்கிய) ஊடுருவி
இருக்க முடியாது.
அந்த சூழ்நிலையில் முஸ்லீம் சமுதாயத்தில் நிலவிய போக்கை சரித்திர ஆசிரியர்கள் கீழ் வருமாறு பதிவு
செய்திருக்கிறார்கள்:
·
சிலுவைப்
போராளிகள் ஜெருசலத்தை ஆக்கிரமிக்கும் போது,
முஹம்மது இப்னு மலிக் ஷா என்பவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் பர்கியாருக்குடன்
சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
·
சிரியாவின்
மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள சத்தமில்லாமல் ஃப்ராங்க்ஸ் அக்ரா
நகரை அபகரித் துக் கொண்டது.
·
முஸ்லீம்
நாடுகள் பிரிந்து ஒருவரை ஒருவர் அழிக்க திட்டம் தீட்டினர். அதிலும் உச்ச கொடுமை
முஸ்லீம்களை கருவருக்க வந்த ஃப்ராங்க்ஸிடமே அடுத்தவரை அழிக்க உதவி கோரினர்.
இறைவன் திருமறை குர் ஆனிலே சொன்னது போல் அவர்கள் தங்கள் கைகளாலேயே அழிவை
தேடிக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக