மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 25 ஜனவரி, 2014

வைக்கிங்குகள் வரலாறு 3



வைக்கிங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது கொள்ளை அடிப்பது. இந்த கொள்ளை இவர்களை கடல்வழியே ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ரஷ்யா கொண்டு சேர்த்தது. அங்கு வியாபாரம் செய்ய துவங்கினார்கள். இயற்கை யாகவே கிழக்கு ஐரோப்பாவின் ஆறுகள் வடக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் அமைப்பைக் கொண்டிருந்தது. இது பால்டிக் கடலுக்கும், கருங்கடலுக்கும் நடுவே வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. வினா, நெய்பெர் மற்றும் வோல்கா ஆறுகள் மிக அருகாமையில் இருந்தன. அவற்றின் அருகே இல்மென் என்ற ஏரி தான் பிரதானமான வியாபாரத்தலமாக இருந்தது. பால்டிக், கருங்கடல் மற்றும் கஸ்பி யன் கடல் வந்து சேரும் கப்பல்களிலிருந்து, சிறிய படகுகளுக்கு மாற்றி வியா பாரப் பொருள்களை இங்கு கொண்டுவருவார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இந்த பகுதி வியாபார வைக்கிங்குகள் நோவ்கோராட் என்ற இடத்தில் மையம் கொண்டு “ரஸ்” என்று அழைக்கப்பட்டனர். இந்த ரஸ்களின் பெயரில் தான் பின்னால் ரஷ்யா என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நெய்பெர் ஆற்றின் கீழ்ப்புறத்தில் தான் வியாபாரம் பரவலானது, இதுவே ரஷ்யா என்ற தேசம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.
                                   882 ல் ஓலெக் என்ற ஒரு வைக்கிங்க் தலைவன் தன் வியாபாரத் தலைமையகத்தை நெய்பெர் ஆற்றின் கீழ் பகுதியில் மாற்றி னான் பின் அருகிலிருந்த கீவ் என்ற நகரத்தைக் கைப்பற்றினான். 911 ல் இங்கு பைஸாந்திய பேரரசுடன் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ரஷ்ய கீவ் நகரம் இரண்டு தலைமுறைக்குப் பின் தென்பகுதி மக்கள் பெருக்க முள்ள பைஸாந்தியம், மத்தியில் பசுமையான ரஷ்ய பூமி, வடக்கில் இருண்ட காடுகள் என்ற அமைப்பில் இருந்தது. இங்கு கிரேக்கத்திலிருந்து தங்கம், துணி கள், மதுவகைகள் மற்றும் பழங்களும், செக்கோஸ்லாவேக்கியாவிலிருந்து வெள்ளி மற்றும் குதிரைகளும், மெல்லிய உரோமங்கள், மெழுகு, தேன் மற்றும் அடிமைகள் ரஷ்யாவிலிருந்தும் விற்பனைக்கு வந்தன. பத்தாம் நூற்றாண்டு வரை கீவ் நகரம் வைக்கிங்குகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 980 ல் வ்லாடிமிர் எதிரிகளிடமிருந்த கீவ் நகரத்தை வெற்றி கொண்டு மொத்த ரஷ்யாவின் இளவரச ராக ஆனார். வைக்கிங்குகள் என்ன நினைத்தார்களோ அவர்களும் தங்களை ரஷ்யர்களாகவே மாற்றிக்கொண்டார்கள்.
                                   வ்ளாடிமிரின் ஆரம்பகாலம் காட்டுமிராண்டிகளைப் போல் இருந்தது. எந்நேரமும் சண்டையும், பெண்வேட்கையுமாக இருந்தது. சரித் திர ஆதாரமாக சுமார் 800 பெண்களுடன் காம தொடர்பு வைத்திருந்தாராம். 988 ல் இவர் ரஷ்யாவுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார். தானும் துறவிபோல் மாறி, தூதுவர்களை நான்கு திசைகளிலும் அனுப்பி எது நல்ல மதம் என்று அறிந்து வரச்செய்தார். அறிந்து வந்தவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் கிரேக்க ஆர்தொடக்ஸை ரஷ்யாவுக்கான ஆட்சி மதமாகத் தேர்ந்தெடுத்தார். பழைய அரசர்கள், அவர்களின் வயதான இளவரசர்கள் என்று ரஷ்யா மிகவும் பழமை தோய்ந்திருந்தது. இடையில் வந்த ஸ்காண்டிநேவியா சாதனை (நாம் முன்பு பார்த்த) இளவரசனால் இடைவிடாமல் 600 ஆண்டுகள் ஆண்வாரிசுடன் ஆட்சி தொடர்ந்தது. ரஷ்யாவின் ராஜவம்சம் வைக்கிங்குகளுடன் நெருங்கிய தொடர்புடையது. நார்மன்களின் இங்கிலாந்து படையெடுப்பின் மூலமாகவோ அல்லது ஐஸ்லாந்து, கிரீன்லாந்து குடியேற்றத்தினாலோ இணைந்திருக்கலாம்.
                                  உயர்ந்த நிலப்பரப்பைக் கொண்ட ஐஸ்லாந்துக்கும், சிகரமுள்ள கிரீன்லாந்துக்கும் நடுவில் 175 மைல் மறைப்பில்லாத நீர் இருந்ததால் சில நேரங்களில் பார்க்கமுடியும். இது 981 ல் வைக்கிங்க் சாதனையாளன் எரிக் தோர்வல்ட் சன்னை (எரிக் தி ரெட்) கவர்ந்தது. இவன் ஒரு மனிதனை வெட்டிக் கொன்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தான். எரிக் நீண்ட கப்பலில் தன் குடும்பத்தினர், அவர்களின் வேலைக்காரர்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய வற்றை ஏற்றிகொண்டு தூரத்தில் தெரிந்த அந்த சிகரத்தை நோக்கி பயணித்தான். அந்த தீவின் தென் பகுதியில் தற்போதைய ஜூலியன்ஹாப் பகுதியை அடைந் தான். அவர்கள் அங்கு மூன்று ஆண்டுகள் தங்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. பின் ஐஸ்லாந்து திரும்பி மேலும் குடியேற்றவாசிகளை தன்னுடன் அழைத்துக் கொண்டான். துல்லியமாக சிந்தித்து மக்களுடன் தொடர்பு ஏற்பட வேண்டும் என்று அந்த இடத்திற்கு கிரீன்லாந்து எனப் பெயரிட்டான். பின் மீண்டும் ஐஸ் லாந்து திரும்பி 25 நீண்ட கப்பல்களில் மக்களை அழைத்துவந்தான். அவர்களில் 12 கப்பல்கள் விருப்பமில்லாமல் பாதி வழியில் திரும்பிவிட 13 கப்பல்களில் 350 பேரும், கால்நடைகளும் வந்து சேர்ந்தன. அவர்கள் அங்கே நானூறு ஆண்டு களாக சிறந்த தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ்ந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண் டுக்குப் பிறகு, கிரீன்லாந்து முற்றிலும் மனிதர்களற்று கைவிடப்பட்டது. ஆனால் கிரீன்லாந்தை விட்டுத் தள்ளி வட அமெரிக்காவில் ஒரு குடியேற்ற பூமி நிறுவப் பட்டது.
                                 பதிமூன்றாம் நூற்றாண்டின் ஐஸ்லாந்து வாசிகளின்  சாதனைச் சரித்திரம் லீஃப் எரிக்சனைப் பற்றி பலவிதமாகக் குறிப்பிடுகிறது.   எரிக்கின் மகன் லீஃப் என்பவன் வழக்கமாக குளிர் காலங்களைக் கழிக்க கிரீன் லாந்தின் மேற்குப் பகுதிக்குச் செல்வான். அப்படி வழக்கமாகச் சென்ற பகுதிக்கு வின்லாந்து என்று பெயரிட்டான். வின் என்ற சொல்லுக்கு வைன் என்னும் மதுவோ அல்லது சம அளவிலான பச்சைப்புல் நிரம்பிய பூமியோ காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இன்னொன்றில் ஒருமுறை லீஃப் நார்வேயி லிருந்து வரும் போது கடலில் வழி தவறிப் போனான். அவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜார்னிஹெர் ஜோல்ஃப்சன் சொன்ன பாதையில் சென்று விட்டதாகக் கூறுகிறது. அதன்படி 1000 ல் லீஃப் எரிக்சன் வட அமெரிக் காவில் மூன்று தீவுகளை இனம்கண்டு ஹெல்லுலாந்து, மார்க்லாந்து, வின் லாந்து என பெயரிட்டான். மற்றவர்களைப் பற்றி சரியான தகவல் இல்லை. அவர்கள் பஃப்ஃபின் தீவு, லேப்ரடார் அல்லது நியூஃபவுண்ட்லாந்து ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது. லீஃப் மீண்டும் தென்பகுதி நோக்கி பயணமானான்.
                                     அடுத்த ஆண்டு லீஃப் கிரீன்லாந்து திரும்பினான். கொஞ்ச வருடங்கள் கழித்து போர் ஒன்று நடந்ததென்றும், அப்போது தோர்ஃபின் கர்ல்செஃப்னி என்பவனால் புதிய குடியேற்றம் நடந்ததென்றும், அவர்கள் வெறும் மூன்றாண்டு காலம்தான் அங்கு வாழ்ந்தார்கள் என்றும், சேவேஜெஸ் (SAVAGES) என்ற சொந்த அமெரிக்கர்கள் அவர்களை விரட்டி விட்டனர் என்றும் சாதனைப் புத்தகத்தில் உள்ளது. வடஅமெரிக்காவில் லான்ஸ் ஆக்ஸ் மேடோவ்ஸ் என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி, நியூஃபௌண்ட்லேண்டில் நீண்ட வீடு கள், மாபெரும் வராண்டா அமைப்புகள் வைக்கிங்குகள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரியப்படுத்துகின்றன. ஆனால், வின்லாந்தின் வரைபடம் போலி என்பதை நிரூபிக்கிறது. நார்மன்களுக்கு பரவுவதற்கு ஃப்ரான்சின் ஃப்ராங்கிஷ் பேரரசு மிகவும் வலிமையாக இருந்தது. ஆனால், வைக்கிங்குகளுக்கு இயற்கை யிலேயே உண்டான சாதிக்கும் ஆர்வம் அவர்களை விவசாயிகளாக அங்கே குடி யேறச் செய்தது. சக்திவாய்ந்த கடல்கொள்ளையர்களாக இருந்த அவர்கள், ஃப்ராங்க்ஸ்களிடமிருந்து கற்ற மிகச்சிறந்த சக்திகொண்ட குதிரைப்படையை அமைத்துக்கொண்டு எதிர்த்தார்கள். பெயர்பெற்ற குடும்பத்திலிருந்து ஆர்வமுள்ள ஒரு இளைஞனை போர்பயிற்சி கொடுத்து இராணுவக் கூலியாக வைத்து கொண்டார்கள்.
                                1017 ல் நார்மன்கள் வட இத்தாலிக்கு வந்து போப்பின் எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டனர். மெடிட்டரேனியனில் ரோமன் கத்தோலிக் கத்தைச் தழுவியிருந்த நார்மன்களுக்கு இரண்டு விதமான எதிரிகள் இருந்தனர். ஒன்று இத்தாலியின் தென்பகுதியில் இருந்த பைஸாந்திய பிரதிநிதிகள் கிரேக்க வைதீக (GREEK ORTHODOX) கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர்கள். சிசிலியில் இஸ்லாமியர் கள் வசமிருந்த முஸ்லீம்கள். 1059 லிருந்து போப் இரு பிரதேசத்திலும் நார்மன்கள் ஆள்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் நார்மன் களுக்கு ஆசையைத் தூண்டிய வாய்ப்பு அருகிலேயே கிடைத்தது. 1066 ல் ‘நார்மன் போர்’ என்ற ஒன்றை இங்கிலாந்தின் மீது திணித்தார்கள். இந்த 66 வது வருடம் உலக வரலாற்றில் ஐரோப்பாவைத் திருப்பிப்போட்டது. நீங்கள் இப்போதும் டட்டூஸ் என்னும் சனியனை உடலில் வரைவதிலும், ஆங்கில சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் இந்த 66 வது வருடத்தை சகுனித்தனமாகப் பயன்படுத்தப் படு வதைப் பார்க்கலாம். தங்களின் பூர்வீக ஸ்காண்டிநேவிய சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி போரிட்டார்கள்.                      

கருத்துகள் இல்லை: