மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 25 ஜனவரி, 2014

வைக்கிங்குகள் வரலாறு 2



885 ல் டேனிஷ் வைக்கிங்குகள் கெண்ட் பகுதியில் நுழைந்தனர். இது ஆல்ஃப்ரடுக்கு கிழக்கில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு 886 ல் டேனிஷ்களை விரட்டி லண்டன் நகரைக் கைப்பற்றினான். இந்த வெற்றிக்குப் பிறகு, மீண்டும் குத்ருமுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஆங்கிலோ-சாக்ஸன்களும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டேனிஷ்களும் இருப்பதாக முடிவானது. டேனிஷ் களின் பகுதி டேன்லா என்று அழைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் நார்வே மன்னர்கள், அயர்லாந்து மன்னர்களுடன் போரிட்டார்கள். பல படையெடுப்புகளின் மூலம் பெரும் துயரத்தை இருவரும் சந்திக்க நேர்ந்தது. பத்தாம் நூற்றாண்டு களின் ஆரம்பத்தில் சூழ்நிலை வைக்கிங்குகளுக்கு ஆதரவாக மாறியது. அவர்கள் அயர்லாந்தின் பலமான முக்கிய ஆறுகளைக் கைப்பற்றினார்கள். 914 ல் வாட்டர் ஃபோர்டும், 920 ல் லைம்ரிக் நகரையும் கைப்பற்றினார்கள். கார்க் பகுதி வைக்கிங் குகளால் பலமுறை கைப்பற்றப்பட்டது. வெக்ஸ்ஃபோர்டும் நார்வே வைக்கிங்கு கள் வசமானது. அயர்லாந்தின் பெயர்பெற்ற மன்னன் பிரைன் போரு திருப்பி போரிட்டான்.
                     அயர்லாந்து மன்னன் பிரைன் போரு ஷன்னான் என்னும் ஆறு ஓடும் பகுதியில் பிறந்தவன். சிறிய பகுதியை ஆட்சி செய்த ஆட்சியாளர் ஒருவரு க்கு மகனாகப்பிறந்த இவன் போரு என்றே அறியப்பட்டான். இவன் குடும்பத்தினர் ஒரு முறை வைக்கிங்குகளை எதிர்த்து வெற்றி பெற்றதால் ஆட்சி கிடைக்கப் பெற்றனர். 964 ல் போருவின் மூத்த சகோதரன் அயர்லாந்தின் மதிப்பும், சக்தியும் வாய்ந்த முன்ஸ்டர் பேரரசை எதிர்த்தான். அவர்களின் பலமான கேஷெல் என்ற பகுதியை வெற்றி கொண்டான். பின்னாளில் முன்ஸ்டர் பேரரசின் மன்னனாகி, தென் அயர்லாந்தில் வைக்கிங்குகளை அடக்கும் படைக்குத் தலைவனாகவும் ஆகினான். 976 ல் போரு இரு பதவிகளையும் வெற்றிகரமாக அடைந்தான். போரு வைக்கிங்குகளை ஷன்னானிலிருந்து விரட்டினான். 1002 ல் போரு மொத்த அயர் லாந்துக்கும் மன்னன் ஆனான். 1013 ல் இவனின் போரால் நார்வே வைக்கிங்குகள் இடம் பெயர ஆரம்பித்தார்கள். 1013 ல் டப்ளினின் நார்வே வைக்கிங்க் மன்னன் ஓர்க்னிய்ஸ் என்ற நகரில் வேறொரு உள்ளூர் வைக்கிங்க் ஆட்சியாளருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடத்தில் இருந்தான். அப்போது இருவரும் ஒரு திட்டம் தீட்டினர். ஓர்க்னிய்ஸ் நகரின் ஆட்சியாளர் ஒரு கப்பலையும், இராணுவத்தின ரையும் ஈஸ்டருக்கு முன் டப்ளினிக்கு அழைத்துவந்து அயர்லாந்து மன்னன் போருவை வெல்ல நார்வே வைக்கிங்க் மன்னனுக்கு உதவுவதாகத் திட்டம் இருந்தது.
                                       குறிக்கப்பட்ட நாளில் ஏப்ரல் 23 1014 ல் டப்ளின் நகரின் கிழக்கிலிருந்து க்ளோண்டர்ஃப் என்ற இடத்தில் நார்வே வைக்கிங்குகளு டன் போரு போர்புரிந்தார். அவருக்கு அப்போது வயது 73 ஆனதால், படைகளுக்கு வெறும் உத்தரவு மட்டும் செய்துகொண்டிருந்தார். அவர் மகன் முர்சட் என்பவன் நேரடியாக களத்திலிருந்து போரிட்டு ஓர்க்னெய்ஸ் ஆட்சியாளனால் கொல்லப் பட்டான். இருந்தாலும் நார்வே வைக்கிங்குகள் தோல்வியுற்றனர். வைக்கிங்கு களின் தலைவன் போர்க்களத்தை விட்டு நழுவி, போருவின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரைக் கொன்றான். அயர்லாந்தின் க்ளோண்டர்ஃப் வெற்றி நார்வே வைக்கிங்குகளை மீண்டும் அயர்லாந்துக்குள் நுழையவிடாமல் செய்தது. ஆனால் வைக்கிங்குகள் டப்ளிங்கின் கடற்கரைப் பகுதிகளையும், வாட்டர்ஃபோர்டையும் விட்டுவிடவில்லை. மன்னர் போரு மற்றும் அவர் மகன் மரணங்களால் அயர் லாந்தும் சரியான ஆட்சியாளர் இல்லாமல் தடுமாறியது. இந்த தடுமாற்றத்துடனே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சக்திவாய்ந்த “நார்மன்கள்” அயர்லாந்தின் கரைப் பகுதிக்கு வரும் வரை ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
                                          சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கள் நீண்ட கப்பல்களில் ஐரோப்பிய வட கடலோரப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்த நார்வே வைக்கிங்குகள் நியோதிக் (ஓர்க்நெய்ஸ் மற்றும் ஷெட்லாந்து பகுதி) களை ஒட்டி உள்ள தீவுகளிலும், தங்களைச் சேர்ந்த சிலர் இருநூறு ஆண்டுகளு க்கும் மேலாக தங்கி இருக்கும் சிறு இடங்களிலும் தங்கியிருந்து தங்களுக்கான நிரந்தர இடத்தினைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில்பட்டது துறவிகளின் தீவான ஐஸ்லாந்து. துறவிகளை விரட்டி விட்டு ஐஸ்லாந்தைப் பிடித்த வைக்கிங்குகளுக்கு அங்கிருந்து மேலும் மேற்கு நோக்கி பரவ வசதியாக கிரீன்லாந்து அமைந்தது. ஆனால் இவர்களுக்கு முன் எஸ்கிமோக்கள் முந்திவிட் டார்கள்.
                             874 ல் வைக்கிங்குகளின் நீண்ட கப்பல்கள் ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் வந்து நங்கூரமிட்டது. நார்வே வைக்கிங்குகள் தங்கள் தலைவனாக இன்கூல்ஃபுர் அர்னர்சன் என்பனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்துடன், கால்நடைகளையும் கொண்டுவந்திருந்தனர். முதல் குழு புதிய இடத்தில் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலையும், ஆடு வளர்த்தலை யும் அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள். மற்ற குழுக்களும் பின்னால் வந்து அருகிலுள்ள தீவுகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அவர்களின் மக்கள் தொகை 75,000 ஆக இருந்தது. இந்த ஐஸ்லாந்திலிருந்து சென்ற நார்வே வைக்கி ங்குகள் தான் அமெரிக்க கண்டத்தில் முதல் ஐரோப்பிய குடியேற்ற நாடுகளாக கிரீன்லாந்து மற்றும் வின்லாந்தை ஆக்கிக்கொண்டார்கள்.
                                     ஐரோப்பாவின் வடமேற்கின் எல்லா பகுதிகளை யும் கொள்ளையடித்தனர். ஃப்ரான்ஸின் கரையோரங்களிலும் கொள்ளையடித்து நாளடைவில் அந்தந்த இடங்களை குடியேற்ற பிரதேசங்களாக ஆக்கிக்கொண்ட னர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வட்டப்பகுதியாக சியானின் கீழ் புறத் தில் டேனிஷ்களின் ஒரு பகுதி இருந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் ஸ்காட்லாந்திலும், அயர்லாந்திலும் பல சாதனைகளைப் புரிந்து தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு நார்வே நாட்டினன் அவர்களுடன் வந்து சேர்ந் தான். அவன் பெயர் ஹ்ர்ஊல்ஃப்ர் ஆகும். மேற்கத்திய சரித்திரத்தில் இவன் பெயர் ரோல்லோ தி கேங்கர். குறுகிய காலத்தில் ரோல்லோ சியானி வைக்கிங்குகளின் தலைவனாகி ஃப்ரான்சு நகரமாகிய சார்ட்ரெஸ் மீது போர் தொடுத்தான். ஃப்ராங்கி ஷின் மன்னன் மூன்றாம் சார்லஸ் என்பவன் செயிண்ட் க்ளெய்ர் சுர் எப்டி என்ற இடத்தில் தனக்கு சேவையின் அடிப்படையில் உதவும் வகையில் (ஆங்கிலத்தில் FEUDEL SYSTEM) ரோவனைச் சுற்றியுள்ள பகுதிகளை ரோல்லோவுக்கு தருவதாக சமாதானம் செய்துகொள்ள போர் நின்றது.
                          வைக்கிங்கு என்ற வார்த்தைக்கு ஸ்காண்டிநேவியனில் நார்த்மேன் என்ற அர்த்தமாகும். புராதன ஃப்ரென்சுகள் நார்மண்ட் என்று அழைத் தனர். ரோல்லோவும், அவன் வழிவந்தவர்களும் ஒப்பந்தத்தை மீறி வேகமாக தங்கள் பகுதிகளை விரிவுபடுத்தி “நார்மன்”கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் ராஜ்ஜியம் எல்லைகளைத் தாண்டி விரிந்து கொண்டே போனது. ஆரம்பத்தில் கொலையிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வந்த சிறு குழு, இரக்கத்திற்கும், துரோகத்துக்கும் அடையாளமான அந்த கூட்டம் உலக சரித்திரத்தில் “நார்மண்டி” கள் என்ற அழியாத பெயரைப் பெற்றது. இந்த நார்மன்கள் தான் சிலுவைப்போரில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தது. இன்றுவரை இங்கிலாந்தில் ராஜவம்சமுமாய், மற்ற ஐரோப்பிய மன்னர்கள் பரம்பரையுமாய் இருப்பவர்கள் இவர்கள் தான். நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், இன்று இவர்கள் கூட்டுப்படை அமைத்து ஆப்பிரிக்க கடற்கொள் ளையை அடக்குகிறார்களாம். இந்த ரோல்லோவின் ஆண் சந்ததி இரு நூற்றா ண்டுகளாக முதலாம் ஹென்றி என்பவன் 1135 ல் இறக்கும் வரை ஆண்டது. இதற் கிடையில் ரோல்லோ கிறிஸ்தவனாக மதம் மாறி இருந்தான். அவன் மகன் முத லாம் வில்லியம் பிறப்பால் கிறிஸ்தவனான முதல் நார்மன் மன்னன் ஆவான்.

கருத்துகள் இல்லை: