இந்த சரித்திரங்களில் நுழையும் முன் அறிந்து கொள்ள சில விஷயங்கள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டில் உலக
வரலாற்றுக்குள் மெதுவாக நுழைந்த இஸ்லாமியர்கள் இன்றைய கண்டுபிடிப்புகள் மற்றும்
நடைமுறைகள் பலவற்றுக்கும் முந்தியவர்களாக இருக்கிறார்கள். கணிதம், விஞ்ஞானம்,
அறிவி யல், சமூகவியல் இப்படிச்
சொல்லிக்கொண்டே போகலாம். புவியியல் அமைப்பு, வரைபடம், நீர் எது, நிலம் எது என்று
தெரியாத காலத்திலேயே துல்கருனைன் என்ற நல்லடியார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலில்
உலகைச்சுற்றி வந்திருக்கிறார்கள். குடும்ப அட்டை(RATION CARD), கழிப்பறை பீங்கான் (சிறுநீர்,
மலக்கழிவுகள் உடலில் படக்கூடாது என இஸ்லாம் வலியுறுத்துவதால் அமைக்கப்பட்டது),
உலகின் முக்கிய உபயோக மாகிப் போன காகிதத்திற்கு
முதல் ஆலை, அலுவலக நிர்வாகம் (OFFICE
ADMINIS TRATION), இராணுவ அமைப்பு, முதல்
நீர்மூழ்கி கப்பல், வானில் பறக்கும் அமைப்பு, முதல் அறுவை சிகிச்சை இப்படி நிறைய
சொல்லிக்கொண்டே போகலாம். வரலாறுகளைப் படிக்கும் போது நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
பிற்காலத்தில் மேற்குலகம் நவீனமாக்கியது. பனூ மூஸா சகோதரர்களையும், இப்ன் சினா, அல்
ஜஸரி, அல் ஜஹரவி, மன்சூர் இப்ன் இல்யாஸ், இப்ன் அல் பதூதா மற்றும் இன்னும்
சரித்திர வெளிச்சம் படாத இஸ்லாமிய கண்டுபிடிப்பாளர்களைப் பற்றி நம்மில் எத்தனை
பேருக்குத்தெரியும். அந்தக்கால மக்களின் அறிவு முதிர்ச்சியை தற்போதைய மக்களுடன்
ஒப்பிட முடியாது. இன்றைய நவீன உலகின் கண்டுபிடிப்புகள் எல்லாம் 200 ஆண்டுகால
இடைவெளி யில் வந்ததுதான். இவற்றின் ஆரம் பம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து, பதினேழாம்
நூற்றாண்டுவரை மேற்கில் ஃப்ரா ன்ஸ், ஸ்பெயின் மற்றும் கிழக்கில் பாகிஸ்தான்,
இந்தியா என்று இஸ்லாமிய ஆட்சியின் விரிவுக்கு ஏற்றவாறு பரவியது தான். (நான் எல்லாக் கண்டுபிடிப்பு களும் முஸ்லீம்கள் தான் கண்டு
பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை) யார் எந்த கதை அளந்தாலும் முதலில்
வருடங்களை கவனியுங்கள் அப்போது அந்த காலகட்டத்தில் யார் எந்த ஆண்டு எந்த நாட்டை
ஆண்டார்கள் பின் அது அல்லது அவை எப்படி ஆனது என்று விளங்கும். எல்லா சரித்திரங்களையும் படித்தபின் உங்களுக்கே
சொந்தஅறிவின் மூலம் விளங்கிவிடும்.
ஏதோ போரிட்டார்கள்
என்றால், இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பிய நாடுகளும் நடுக்கடலில் போர் கப்பலை
வைத்துகொண்டு வீடியோகேம் விளையாடுவது போல் ஏதோ நடமாட்டம் தெரிகின்றதென்று,
சர்ரென்று விமானத்தை எடுத்துக்கொண்டு அப்பாவி பள்ளிகள், கல்யாணகோஷ்டிகள் மீது
பத்து நிமிடத்தில் குண்டு வீசிவிட்டு சாம்பெய்ன் என்னும் மதுபாட்டிலைப் பீய்ச்சி
மகிழ்ச்சியைத் தெரிவிப்பதல்ல. அவர்களே போட்ட சர்வதேச போர் சட்டப்படி அது முறையும்
அல்ல. அதேநேரத்தில் அந்த காலங்களில் போர் என்றால் ஏதோ வாசலில் மோட்டார் சைக்கிளில்
அமர்ந்து கொண்டு அழைக்கும் நண்பனிடம் இரு இதோ வருகிறேன் என்று சட்டையை
மாட்டிக்கொண்டு போவது போல வும் அல்ல. போர் என்றால் எதிரியின் பலம், பயணிக்கும்
தூரம், போர் நடக்கப் போகும் இடம், தட்பவெப்ப நிலை இவைகளை தேர்ந்த தளபதிகளு டன்
ஆலோசிக்க வேண்டும். அதேநேரத்தில் போர்கருவிகள், குதிரை, ஓட்டகம், யானை போன்ற போர்
மிருகங்களின் தகுதி, வீரர்களுக்கான உணவு, உடை, கூடாரங்கள் இப்படி கொஞ்சமல்ல நிறைய
விஷயங்கள் இருக்கின்றன. சாதாரண ஒரு போருக்காக ஆறு மாதங்கள் இருநூறு பேர் கொண்ட ஒரு
குழு கத்தி, அம்பு, வாள், ஈட்டி போன்ற வெறும் ஆயுதங்களை கூர்செய்யவே
பயன்படுத்தப்பட்ட வரலாறுகள் உள்ளன. ஒரு போருக்குத் தயாராக அதன் தகுதிக்கேற்ப
குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஆகும்.
இந்த இஸ்லாமிய
சாம்ராஜ்ஜிய வரலாறுகளைப் படித்து விட்டு இப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் கொன்று
பதவிக்கு வந்தார் களா என்று அதிர்ச்சியோ, அருவருப்போ அடையாதீர்கள். அந்த
காலங்களில் ஏன் இந்த காலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்கள் அதைத்தான் செய் கிறார்கள்.
இது இன்னும் 200 ஆண்டுகள் போனால் அப்போதுள்ளவர்களுக்கு இன்றைய ஆட்சி சரித்திரமாகும். சில விஷயங்களில் இஸ்லாமியர்களை உலகம் மிகைப்படுத்தி
வைத்திருக்கிறது, ஏதோ மற்றவர்கள் தூய்மையாக இருந்தவர்கள் போல். கிரேக்க பிரென்சு,
ஐரோப்பிய, இந்திய மன்னர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்தால்
காமத்திற்கும், இரத்தத்திற்கும், அருவருப்புக்கும் பஞ்சமே இருக்காது. ஆனால்,
அவர்களின் வீரத்தையும், காமத்தைக் கூட ஏதோ உலக மகாகாவியமாக
சித்தரித்திருப்பார்கள். அப்போதைய ஆட்சியாளருக்கு எதிராக தீவிரவாதம் செய்த வர்களுக்கும், அருவருப்பானவர்களுக்கெல்லாம்
சில நாடுகளில் சிலைகள் வைத்தும், பேருந்து, இரயில், பாலத்திற்கெல்லாம் அவர்களின்
பெயர்கள் வைத்தும், இன்னும் சில நாடுகளில் பண,
நாணயங்களில் அவர்களின் உருவம் பதித்திருப்பார்கள். ஈத் அமீன் என்னும் சிறப்புமிகும் பெயர் தாங்கி இருந்த
உகாண்டா நாட்டு அதிபரை இடி அமின் என்று ஆக்கி அவர் இதுவரை உலகில் யாருக்குமில்லாத
கை,கால் உறுப்புகளுடன் படைக்கப்பட்டு காமத்திலும், கொடூரத்திலும் உலகின்
முதலிடத்தில் இருப்பதாக சித்தறித்து விட்டார்கள். எதற்காக, மேற்குலகுக்கு
தலைவணங்காமல் போனதற்கும், உகாண்டா என்னும் நாட்டின் இயற்கையான காட்டு வளங்களை
கொள்ளை அடிக்கவும் தான். அப்போதைய காலத்தில் நவீன தொடர்புகள் இல்லாததால்
மேற்கத்தியர்கள் சொன்னதை எல்லாருமே அப்படியே நம்பிவிட்டார்கள். நான் ஈத்
அமீனுக்கோ, கடாஃபிக்கோ, சதாம் ஹுசேனின் பிள்ளைகளுக்கோ வக்காலத்து வாங்கவரவில்லை.
காம வன்முறை எங்கு இல்லை. கட்டிடம் கட்டும் மேஸ்திரி சித்தாள் என்னும்
பெண்ணிடமும், அலுவலகத்தில் கீழ் பணியாற்றும் பெண்களிடம் அதிகாரிகளும்,
விளம்பரத்துறை மற்றும் எல்லா நிலைகளிலும் காமம் விருப்பத்தின் பேரிலும்,
வன்முறையின் வடிவிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவே ஒட்டுமொத்த நாட்டின்
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உச்சபதவியில் இருப்பவர்களுக்கு எப்படி
இருக்கும். தவறு யார் செய்தாலும் தவறுதான் ஆனால் அதை இவர்கள் மட்டுமே செய்தார் கள்
என்று உலகஅரங்கில் அதுவும் நேற்று வரை ஐக்கிய நாட்டு சபைகளிலும், உலக
மாநாடுகளிலும் தங்களுடன் கை குலுக்கிய ஒரு நாட்டு அதிபரை எப்படி கேவலப்படுத்துவது.
இங்கிலாந்து நாட்டு ராணியின் பேரன் திருமணமாகாத பெண்ணுடன் இரவுவிடுதிக்குப்
போனாலும், அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மகள் திருமணமாகாத ஆணுடன் மது அருந்தப்போனாலும்
அது சமூக செய்தி. அட வாந்தியில் புரளும் வக்கிரங்களே மேலும் இந்த சரித்திரங்களைப் படிக்கும் போது இப்போது உலக
அரசியல் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்றும் உங்களுக்கு விளங்கும்.
இஸ்லாமிய
சாம்ராஜ்ஜியங்கள் எப்படி வீழ்ந்தன? சுற்றிலும் பல நூற்றாண்டுகளாக இருக்கும்
இஸ்லாமிய நாடுகளுக்கு நடுவே எப்படி இருபதாம் நூற்றாண்டில் ஒரு யூத இஸ்ரேல் நாடு
வந்தது, யார் எதற்காக கொண்டுவந்து வைத்தார்கள். (உலக
வரலாற்றில் சொத்து வாங்குவது போல் உருவான ஒரே நாடு இஸ்ரேல் தான்).
மிகச்சரியாக திட்டமிட்டு ஆப்கானிஸ்தான், போஸ்னியா, ஈராக், எகிப்து, லிபியா, சிரியா
என்று குறிப்பாக இஸ்லாமிய நாடு கள் மட்டும் சீர்குலைக்கப்பட்டு தினசரி
வெடிகுண்டில் பலி ஆவது எப்படி? அப்படி யானால் உலகின் இஸ்லாமல்லாத அனைத்து நாடுகளும்
தினசரி நிம்மதியாக உணவுண்டு பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? திடீரென்று
இஸ்லா மிய நாடுகளில் ஈரான் மட்டுமே தைரியமான நாடு என்பது போல் ஒரு மாயை யை யார்
எதற்காக உருவாக்குகிறார்கள்? தலைக்கு மேலே சீனா, காலுக்கு கீழே இலங்கை என இரண்டு
புத்த நாடுகளை வைத்துக்கொண்டு நம்மிலிருந்து பிரிந்து போன சகோதரநாடு பாகிஸ்தானை
மட்டும் தீவிரவாத நாடாக தினசரி சித்தரிப்ப தில் யாருக்கு என்ன ஆதாயம்? நீங்கள்
பிறருக்கு கொடுத்த கடன்களில் பழைய கடன் முதலில் வரவேண்டும் என்று
எதிர்பார்ப்பீர்களா அல்லது புதிய கடன் முதலில் வரவேண்டும் என்று
எதிர்பார்ப்பீர்களா? சிந்தியுங்கள்.
தற்போதைய ஆய்வுத்தகவலின் படி உலகில் எல்லாவகையான குற்றங்களின் சராசரி
இஸ்லாமிய நாடுகளில் வெகு குறைவு, இந்த எரிச்சலால் தீவிரவாதிகளாக
சித்தரிக்கிறீர்களா? இஸ்லாமிய நாட்டு அதிபர் கள், மன்னர்கள், சுல்தான்கள் மட்டும்
யோக்கியர்கள் அல்ல. திருடனைவிட திருட னுக்காக சகலத்தையும் திறந்து வைத்திருப்பவன்
எப்படி யோக்கியனாவான். இஸ் லாமிய நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அங்கு வாழும்
மக்களுக்கும் உள்ள வித்தி யாசம் மக்கள் இன்றும், என்றும் தொழுகை, இறையச்சம்,
தானதர்மம், மதக்கட மைகள் என்று இறைவனை மட்டுமே சார்ந்திருப்பது தான். நாம் ஆயிரம்
பேர் களுக்கு மத்தியில் அழகாக ஆடை உடுத்திவர நினைப்போமா அல்லது நான் ஒருவன்
நிர்வாணமாகத்தான் இருப்பேன் நீங்கள் ஆயிரம் பேரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என
நினைப்போமா? இப்போது இஸ்லாம் அல்லாத உலக நாடுகள் இஸ்லாம் நாடுகளுக்கு சொல்வது
பின்னால் உள்ளதைத்தான். இருவருக் குமே சேர்த்து தான் இறைவன் திருமறையில், “அல்லாஹ்வின்
விளக்கை இவர் கள் வாயினால் ஊதி அணைத்து விட எண்ணுகிறார்களா” என்று கேட்கிறான்.
இந்த ப்ளாகில் சில ஐரோப்பிய வரலாறுகளும் உள்ளன. அது இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லை
என்று எண்ணிவிடாதீர்கள். அவர்கள்தான் அன்றும், இன்றும், என்றும் இஸ்லாமியர்களை
எதிரிகளாக்கருதி வேட்டையாடுபவர்கள். அடுத்த வீட்டுக்காரருடன் கூட பகைமையை
வளர்த்துக்கொள்ளாதே என்று அறிவுரை கூறப்பட்ட முஸ்லீம்களுக்கு முன், பின்
மரணிக்கப்போகும் இந்த சாதாரண மனி தர்களோ, ஆட்சியாளர்களோ நிச்சயமாக எதிரியல்ல.
நமக்கெல்லாம் இறுதிநாள் வரை ஷைத்தான் ஒருவன்தான் எதிரி. நம்மை எதிரியாகக் கருதும்
அவர்கள் யார், எங்கிருந்து அவர்கள் வம்சாவழி தோன்றியது, எதற்காக நம்மை எதிரியாக கருதுகிறார்கள். தற்போது அவர்கள் எந்தமாதிரி
நிறம்மாறி இருக்கிறார்கள், யார்யாருடன் கூட்டு என்பதைத் தெரிந்து கொள்ள உதவும்.
இப்பொழுது வாருங்கள் உள்ளே நுழைவோம். உங்களுக்குப்
பிடித்திருந்தால், எனக்கு வைரமோதிரம் தேவையில்லை. ஒரு வரி பாராட்டுபோதும். ஒரு
எழுத்தாளனுக்கோ, கவிஞனுக்கோ, கலைஞனு க்கோ மிக மிக பிடித்தது பாராட்டு ஒன்றுதான்
ஆம் அவன் வறுமையில் இருந்தாலும் கூட. பாராட்டு மேன்மேலும் ஊக்கப்படுத்தும் அதனால்
சமுதாயம் பயன்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக