793 ல் இங்கிலாந்தின் வடகிழக்கில் துறவிகளின் தீவான
லிண்டிஸ்ஃபார்னியில் துறவிகள் தியானத்திலும், இறைவணக்கத்திலும்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும் சத்தம், அலைகளை மீறிய சத்தம் ஆவேச மாக,
வெறித்தனமாக வந்திரங்கியது ஒரு மிருகக்கூட்டம். துறவிகளின் துரதிஷ் டம் அவர்களுக்கு
முடிவாகவும், வந்திரங்கியவர்களுக்கு உலக சரித்திரத்தில் சாதிக்க இருப்பதற்கு முதல்
நாளாகவும் ஆகியது. வந்திறங்கியவர்களின் சொந்த பூர்வீக இடம் கோத்ஸ் மற்றும்
வண்டல்ஸ். ஸ்காண்டிநேவியாவிலிருந்து வந்த அந்தக் கூட்டம் “வைக்கிங்குகள்”
ஆவார்கள்.
ஸ்காண்டிநேவிய மொழியில் “விகிங்க்ர்”(VIKINGR) என்றால் கடற்கொள்ளையர்கள்
என்று அர்த்தம். இந்த வைக்கிங்குகள் பிரிட்டன் கரைகளையும், வடமேற்கு ஃப்ரான்சையும்
சரியாக இரு நூற்றாண்டுகளாக தாக்கி இருக்கிறார்கள். இந்த ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகளில்
சிலர் வட அட்லாண் டிக்கிலும், பிரிட்டிஷ்
தீவுகள் சிலவற்றிலும், நார்மண்டி, சிசிலி மற்றும் ரஷ்யா வின் இதயப் பகுதியிலும்
குடியேறினர். எல்லா வைக்கிங்குகளும் அதே பூர்வீக இடத்திலிருந்து வந்தவர்கள் என்று
மிகச்சரியாகச் சொல்லமுடியாது. ஆனால், வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து
கரையிலிருந்து அயர்லாந்து வரை நார்வேயிலிருந்து வந்த கூட்டம்தான் தாக்கியது.
ஸ்காண்டிநேவிய வைக்கிங்கு கள் ஸ்காட்லாந்து தீவுகள்,ஐஸ்லாந்து மற்றும்
அயர்லாந்தின் சில பகுதிகளிலும் குடியேறினார்கள்.
டென்மார்க்கிலிருந்தும்
வந்த சில வைக்கிங்குகள் சண்டையிட்டு பின் கிழக்கு பிரிட்டன், வடமேற்கு
ஃப்ரான்ஸிலும் தங்கினார்கள். ஸ்வீடனிலிருந்து வந்தவர்கள் பால்டிக் வழியே தாக்குதல்
நடத்தி ரஷ்யாவின் மையப்பகுதியில் வியாபாரிகளாக ஆனார்கள். பிரிட்டனின் கடலோரங்களில்
அக் காலத்தில் சிறு சிறு ஆட்சியாளர்கள் சில பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தார் கள்.
மிகச்செழிப்பாக இல்லாவிட்டாலும் வளமோடு
இருந்தார்கள். இது கொள் ளைக்கார வைக்கிங்குகளை ஈர்த்தது. இதில் மிகவும் புகழ்பெற்ற
லோனா என்ற தீவை தொடர்ந்து 795, 802, 805 ஆகிய ஆண்டுகளில் மூன்றுமுறை கொள்ளை
அடித்தார்கள். பிரிட்டிஷ் தீவுகள் உள்ளுக்குள்ளேயே ஆறுகள் ஓடும்படியான
பாதுகாப்போடு இருப்பது போல் தோன்றினாலும், வைக்கிங்குகளின் நீண்ட படகு கள் உள்
நுழைந்து தாக்குவதற்கு வசதியாக இருந்தன. வழக்கமான தாக்குதலு க்குப் பிறகு, ஒன்பதாம்
நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அங்கேயே தங்கிப்போனார்கள்.
வெகு
விரைவில் ஸ்காட்லாந்தின் அனைத்து தீவுகளையும் கைப்பற்றினார்கள். பின் பிரிட்டன்
மற்றும் அயர்லாந்தின் முக்கிய தரைப்பகுதிகளையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள்.
இவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் உத்தி எதிரிகளைப் பயமுறுத்தி நிலைகுலையச்
செய்தது. 838 ல் நார்வேனிய வைக்கிங்குகள் டப்ளின் நகரைக் கைப்பற்றி அயர்லாந்தில்
நார்ஸ் மன்னராட்சியை அமைத்துக்கொண்டார்கள். டென்மார்க் வைக்கிங்குகள் முப்பது
ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து கொள்ளை அடித்தும், போரிட்டும் 838 ல் கிழக்கு
இங்கிலாந்தில் குடியேறினார்கள். மேலும், டென்மார்க் வைக்கிங்குகள் ஒவ்வொரு
வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்புகளை சித்திரவதை செய்தும் துன்புறுத்தியும்
வாங்கினார்கள். 866 ல் யோர்க், 867 ல் நாட்டிங்காம், 869 ல் தெட் ஃபோர்ட்டையும்
வரிசையாகக் கைப்பற்றினார்கள். நார்தும்ப்ரியா, மெர்சியா மற்றும் கிழக்கு அங்கிலியா
மன்னர்கள் வைக்கிங்குகளிடம் பயந்து ஒப்பந்தம் செய்ய சமாதானம் பேசினார்கள். 870 ல்
டென்மார்க் வைக்கிங்குகள் வெஸ்ஸெக்ஸை நோக்கி முன்னேறினார்கள். படிக்கும் நீங்களே
புரிந்து கொண் டிருப்பீர்கள் இறுதியில் எங்கே மோதவந்தார்கள் என்று ஆம் அதுதான்
இங்கிலா ந்து. கடுமையான ஒன்பது போர்களுக்குப் பிறகு 871 ல் ஆஷ்டவுனில் நடந்த
போரில் வைக்கிங்குகளின் மன்னனும், ஒன்பது பிரபுக்களும் போர்களத்திலேயே
கொல்லப்பட்டு வெல்லவே முடியாதவர்களாக இருந்த வைக்கிங்குகளை ஆங்கி லேயர்கள் முதல்முறையாக
வென்றார்கள். இது வெஸ்ஸெக்ஸ் மட்டுமல்லாமல் எந்த ஆங்கில மன்னர்களையும் அவ்வளவு
சுலபமாக வெல்ல முடியாது என்பதை உணர்த்தியது. டேனிஷ்கள் (வைக்கிங்குகள்) அமைதி
ஒப்பந்தம் செய்துகொண்டு குளிர்காலத்தில் லண்டனை விட்டு வெளியேறினார்கள். ஆஷ் டவுன்
வெற்றி ஆங்கிலேயர்கள் சரித்திரத்தில் புதியமுகமாக வெஸ்ஸெக்ஸ் மன்னனின் சகோதரன் ஆல்ஃப்ரடை
அறிமுகப்படுத்தியது. இராணுவ வீரர்கள் இவனை வெஸ்ஸெக்ஸ் வீதியில் ஊர்வலமாக தூக்கி
வந்தனர்.
இங்கிலாந்தில்
மறுக்கப்பட்ட மிகவும் பாரம்பரியமான கதை இந்த ஆல்ஃபிரட் இடமிருந்து தான்
ஆரம்பித்தது. அவனின் வீரத்திற்கு தகுதி யானதாக அந்த வெற்றி அமைந்தது. ஆல்ஃபிரட் தான்
முதல் ஆங்கிலோ-சாக்ஸன் ஆட்சியாளன். இவனை இங்கிலாந்தின் தேசிய தலைவனாக
ஏற்றுக்கொண்டார் கள். அந்த பகுதிகளில் டேனிஷ்களை தடுக்க இவனேயே தகுதியானவனாக
ஆங்கிலேயர்கள் கருதினார்கள். இவன் தான் முதல்முறையாக ‘தி கிரேட்’ என் னும் தகுதியை
இங்கிலாந்தில் பெற்றான். மன்னனுக்குண்டான தகுதிகளை கற்றான். முப்பது ஆண்டு
சிக்கல்களுக்குப் பிறகு, டேனிஷ்களை வென்று இந்த தகுதிகளை அவன் அடைந்தான்.
வெற்றிபெற்ற அதே 871 ம் ஆண்டு மூத்த சகோ தரன் இறந்துவிட ஆல்ஃபிரட் வெஸ்ஸெக்ஸின்
மன்னனாகப் பதவி ஏற்றான். முதல் காரியமாக ஆங்கிலேய கப்பல்படையை நிறுவினான்.
டேனிஷ்கள் தங் களை பலப்படுத்திக்கொண்டு சுழலும் நீண்ட வைக்கிங்க் கப்பல்களுடன்
வந்தார் கள். ஆங்கிலோ-சாக்ஸன் தீவு இனமக்கள் பயத்திற்கு பதில் எதிர்க்க
ஆரம்பித்தார் கள். 875 ல் ஆல்ஃபிரட் தன் கப்பல்படை மூலம் தானும் ஒரு கப்பலில்
சென்று, முற்றுகை இட்ட ஏழு டேனிஷ் படகுகளில் ஒன்றை சிறைப்பிடித்தான். இந்த வெற்றி
மேலும் அவன் புகழ்பெற உதவியது.
தரையிலும் சில
வெற்றிகள் பெற்றான். டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு விரட்டினான். எப்போது சமாதான
உடன்படிக்கை ஏற்பட் டாலும், அதை ஒவ்வொரு முறையும் டேனிஷ்கள் மீறினார்கள். 878 ல்
திடீரென்று டேனிஷ்கள் தாக்குதல் நடத்த, ஆல்ஃப்ரட் மேற்கு நோக்கி சோமர்செட் சதுப்பு
நில பரப்புகள் உள்ள பகுதிக்கு தள்ளப்பட்டான். ஏதெல்னிய் என்ற கோட்டையில் உள் ளூர்வாசிகளுடன்
சேர்ந்து டேனிஷ்களை எதிர்த்தான். ஆனால் மட்டரகமான முறையில் தோல்வியடைந்தான். இதன்
மூலம் டேனிஷ்கள் வெஸ்ஸெக்ஸைக் கைப்பற்றி மொத்த இங்கிலாந்தையும் அவர்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுத்த சில மாதங்களில் சற்று பலத்துடன்
மீண்டும் கிழக்கில் வில்ட் ஷயர் பகுதியில் எடிங்க்டன் என்ற இடத்தில் டேனிஷ்களை
வென்றான். இரண்டு வாரங்களாக தொடர்ந்த தாக்குதலில் ஈஸ்ட் ஏன்ஜிலியா என்ற இடத்தையும்
ஆல்ஃப்ரட் கைப்பற்றினான். டேனிஷ் மன்னன் குத்ரும் அவன் கூடாரத்தில் சுற்றி
வளைக்கப்பட்டான். தான் வெஸ்ஸெக்ஸை விட்டு விலகுவதாக மீண்டும் வழக் கம் போல்
உறுதியளித்தான். மேலும் தான் கிறிஸ்துவ மதததைத் தழுவுவதாக வும் வாக்களித்தான். குத்ருமின்
மதம் மாறும் விழா பார்ரேட் ஆற்றின்கரையில் ஆல்ஃப்ரடின் தலைமையில் 878 ல் நடந்தது.
இரு கிறிஸ்தவ மன்னர்களும் வெட் மோர் என்ற இடத்தில் பனிரெண்டு நாட்கள் விருந்தும்,
கொண்டாட்டமுமாகக் கழித்தனர். இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தம் டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை
விட்டு விலக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக