மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மங்கோலியர்கள் வரலாறு 3



வட சீனாவும், பெர்ஷியாவின் பகுதிகளும் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்ப பிரதேசமாக அறிவிக்கப்பட் டது. ஒகிடாய் கரகோரத்தை மங்கோலியர்களின் நவீன தலைநகர மாக்கினார். கரகோரம் நகரம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. 1253 ல் அங்கு வருகைதந்த ஒரு கிறிஸ்தவ துறவி (அவர் வில்லி யமாகவோ அல்லது ருப்ருகிஸ் ஆகவோ இருக்கலாம்) கர கோரத் தில் நகரத்தின் சுவர்கள் பலமாக உயர்வாக அமைந்திருந்ததாகவும், செவ் வகவடிவத்தில் பெரிய அரண்மனையும், செங்கற்களால் கட்ட ப்பட்ட வீடுகள், அழ காக அமைக்கப்பட்ட தெருக்கள், பனிரெண்டு ஷாமானிஸ்ட் புனித ஸ்தலங்கள், இரண்டு மசூதிகள் மற்றும் நெஸ் டோரியன் கிறிஸ்தவதேவாலயம் ஒன்றும் இருந்ததாகக் கூறுகிறார் ஜெங்கிஸ்கான் கொள்ளையடிப்பதிலும், நகரங்களைத் தாக்கி தனது வீரத்தை பரப்புவதிலுமே வாழ்நாளை செலவழித்தார். ஆனால், ஒக் டாய் தலைநகரத்தை மையமாக்கி ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்தி னார். மேலும் சீனாவின் பகுதி களையும் கொரியாவையும் வென்றார். ஜெங்கிஸ் கானுக்கு மூத்த மகன் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஜுச்சி. ஜுச்சியை ஐரோப்பாவை வென்றெடுக்க வேண் டும் என்று உயிரோடிருக்கும் போது கேட்டுக்கொண்டார். ஆனால், ஜுச்சி ஜெங்கிஸ்கானுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். ஒகி டாய் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஜுச்சியின் மகன் படுவை மேற்கு நோக்கி சென்று ஐரோப்பாவை வெல்ல கேட் டுக்கொண் டார். படு 1236 ல் வடக்காகச் சென்று ரஷ்யாவில் வோல் கா என்ற இடத்தை வென்றார்.
                                 1237 ல் சென்ற மங்கோலியப் படைகள் ரஷ்யாவில் 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. ரஷ்யர்கள் மங் கோலியர்களை தங்க நாடோடிகள் (ZOLOTAYA ORDA-GOLDEN HORDE) என்று அழைத்தனர். ஏனென்றால், படு தங்குவதற்கு தங்க கூடாரத்தைத் தான் பயன்படுத்துவார். பெரும்பாலான ரஷ்ய நகரங்களைக் கொள் ளையடித்தார்கள். இந்த தோல்வியை ரஷ்யா சரித்திரம், ‘இறந்தவர் களுக்காக அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அளிக்கவில்லை’ என்று கூறுகிறது. மங்கோலியர்கள் சேற்றில் குதிரையில் சண்டையிட மிக வும் சிரமப்பட்டார்கள். அதனால் வலுக்கட்டாயமாக பின்வாங்கினர். மீண்டும் குளிர் காலத்தில் போரிட வந்தார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த கீவ் நகரின் சுவர்கள் மங்கோலியர்க ளால் இடித்து நொறுக்கப்பட்டது. இரக்கமில்லாமல் மக்கள் கொல்ல ப்பட்டனர். 1238 ல் மாஸ்கோவையும், 1240 ல் கீவ் நகரத்தையும் கைப் பற்றினார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் மங்கோலியர்கள் ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, தென்பகுதி நோக் கி சென்றனர். இதற்கிடையில் மங்கோலியர்கள் என்னும் இஸ்லா மிய இராணுவம் கிறிஸ்தவ ரஷ்யாவை வென்று விட்டது என்று ஐரோப்பியர்களுக்கு செய்தி எட்டியது. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராகினார்கள். மங்கோலியர்கள் ஒரு ஆங்கில தூதுவரை ஹங்கேரியின் மன்னர் பேலாவிடம் அனு ப்பி சரணடைய வேண்டினார்கள். அவர் தான் ஒரு நாட்டின் மன்னர் சாதாரணமாக எங்கிருந்தோ வரும் நாடோடிக்கொள்ளைக் கூட்டத் துடன் சரணடைவதா முடி யாது என்று மறுத்து விடுகிறார். ஒரு நாடோடி இராணுவப்படை 1241 ல் போலந்தை நோக்கி முன்னேறி யது. போலந்தும் ஜெர்மனியும் கூட்டு சேர்ந்து லெக்னிகா என்ற இட த்தில் மங்கோலியர்களை எதிர்த்து போரிட்டுத் தோற்றனர். அதே நேரத்தில் இன்னொரு நாடோடி இராணுவம் மொஹ்லி என்ற இடத் தில் ஹங்கேரியை வெற்றி கொண்டது. முதலில் 70,000 கிறிஸ்தவ வீரர்களும், அடுத்து 40,000 வீரர்களும் ஐரோப்பிய தரப்பில் கொல்லப் பட்டனர். அந்த கோடை காலத்தை மங்கோலியப் படைகள் ஹங் கேரியின் திறந்த வெளிகளில் கழித்தது. அவர்களின் புல் நிறைந்த பூமியின் வாழ்க்கைச் சூழலுக்கு அது ஒத்துவரவில்லை என்றாலும், வெற்றி அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. அந்த வெற்றி மேலு ம் ஐரோப்பிய நகரங்களை வெல்லஏதுவாக இருந்தது. மங்கோலிய நாடோடிகளின் படை அப் போது ஐரோப்பாவை பயத்தில் ஆழ்த்தி யது. அந்த வருட டிசம்பரில் மாவீரன் ஒகி டாய் மரணமடைந்து விட் டதாகவும், உடனே வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி திரு ம்பிவர செய்திவந்தது. படுவும் அடுத்த நிலை பெரிய மனிதர்களும் கலந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஹங்கேரியை விட்டு பழங்குடி இடமான வோல்காவுக்கு திரும்பினார்கள்.
                                  ரஷ்யாவில் நிறைய சிறிய மன்னர்கள் சிறிய பிரதேசங்களை ஆண்டுவந்தவர்கள் தங்ககூடார மாவீரன் ஒக் டாயிக்கு மிகுந்த மரியாதையும், ஆண்டு கப்பமும் செலுத்தி வந்தார் கள். பின் படு ஆட்சிக்கு வந்து வோல்காவிலேயே ஒரு பகுதியை தலைநகராக்கி தன் பெயர் வருமாறு சராய்படு என்று மாற்றி ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பிறகு, இவரின் சகோதரர் பெர்கி 1255 ல் ஆட்சிக்கு வந்தார். பெர்கி தன் பழங்குடியின மக்கள் அனைவரையும் இஸ் லாம் மதத்தைத் தழுவச்செய்தார். நவீன வோல்காக்ராடுக்கு கிழக்கில் சராய் பெர்கி என்ற நகரத்தை உருவாக்கி தலைநகராக் கிக் கொண்டார். அங்கு நகர் முழுதும் மசூதிகளையும், பொதுக்கழிப் பிடங்கள் போன்றவற்றைக் கட்டினார். 600,000 மக்கள் அங்கு வசித்த னர். 1395 ல் தைமூரியர்கள் அழிக்கும் வரை அந்நகர் மிகவும் சிறப் பாக இருந்தது. இடையில் படுவிடமிருந்து ஆட்சி வாரிசு பிரச்சினை யால் இறந்துபோன அவரின் விதவை மனைவி டோரிகினியிடம் வந்து நான்கு ஆண்டுகள் அவர் ஆண்டார். அவர் அடுத்து மகன் கூயூக்குக்கு பதவி கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு செயல்பட்டார். கூயூக் ஆட்சிசெய்த இரண்டே ஆண்டுகளில் 1246 ல் இறந்து போனா ர். மீண்டும் ஆட்சி கூயூக்கின் விதவை மனைவி ஓகுல் கைமிஷ் வசம் போனது. ஆனால் உயர் பதவியில் இருந்தவர்கள் முறையாக ஆட்சிக்கு அதிகாரம் உள்ளவர் ஜெங்கிஸ்கானின் பேரர் அதாவது மூன்றாவது மகன் துல்யூவின் மகன் மாங்கு தான் என்று அவரை ஆட்சியில் அமர்த்தினர்.
                                 மாங்கு (மோங்கே என்றும் அழைக்கப் பட்டார்) தன் இரு சகோதரர்கள் உதவியுடன் கிழக்கிலும், மேற்கிலும் வடசீனாவின் பகுதி கள், ரஷ்யா, பெர்ஷியா மற்றும் மத்திய கிழக் கின் சில பகுதிகளை வென்றார். 1252 ல் மாங்கு கிழக்கில் வென்ற சில பகுதிகளுக்கு தன் சகோதரர் குப்ளாய்கானை ஆட்சியாளராக்கி னார். பின் 1255 ல் இன்னொரு சகோதரர் ஹுலகுகானை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய நாடுகளை வெல்லச் சொன்னார். குப்ளாய் கான் மேற்கு சீனாவில் ஷெஸ்வான் மற்றும் யூன்னன் பகுதிகளை வென்று முன்னேறிக் கொண்டிருக்கும் போது, சகோதரர் மன்னன் மாங்கு 1259 ல் இறந்து விட திரும்பி விடுகிறார். அனைவரும் கூடி குப்ளாய்கானையே மன்னராகத் தேர்ந்தெடுக்கிறார் கள். ஆனால், கரகோரத்தில் கடைசி சகோதரர் அரிக் போகி தான் மன்னராக வேண்டும் என்று உரிமை கோருகிறார். ஒரு வழியாக 1264 ல் குப் ளாய்கான் சகோதரரை வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். தற் போது முழுகவனத்தை யும் சீனாவின் மீது திருப்பினார். தலைநகர் கரகோரத்திலிருந்து தன் பாட்டனார் 1215 ல் சீரழிக்கப்பட்டிருந்த பெய்ஜிங்க் நகரத்தை வென்றார். தானே கவனம் செலுத்தி பெய்ஜி ங்க் நகரத்தை சீரமைத்தார். 24 மைல் நீளத்திலும், 50 அடி உயரத்தி லும் நகரைச்சுற்றி பிரமாண்டமான சுவர் எழுப்பினார். அந்நகரத்தி ற்கு “கான் பாலிக்” (கான்களின் நகரம்) என்று பெயரிட்டார். அந்நக ரம் ஐரோப்பியர்கள் மத்தியிலும் மிகவும் புகழப்பட்டது. அவர்கள் சற்று பெயர்மாற்றி கம்பலூக் (CAMBALUC) என்று அழைத்தனர்.
                              குப்ளாய்கான் இந்த நகரத்தை மையமாக வைத்து தான் ஸங்க் பேர்ரசை வெற்றி கொண்டார். 1271 ல் தாங்கள் கொள்ளையர்களாக அங்கு பிரவேசித்தவர்கள் என்ற எண்ணம் ஏற்ப டாத வண்ணம் உண்மையாக அங்கு ஒரு சீனப்பேரரசை நிறுவினார் அதே ஆண்டு அந்த பேரரசுக்கு “தா யூவன்” என்று பெயர் சூட்டினார். சீனாவில் மூதாதையர்கள் சந்ததியினரை பெரிதும் மதிப்பார்கள் அதை மனதில் கொண்டு தனது பாட்டனார் ஜெங்கிஸ்கானுக்கு மரி யாதை செய்யும் விதத்தில் “ட் ஆய் ட்சூ” (GRAND PROGENITOR- மதிப்புமி க்க மூத்த சந்ததியினர்) என்று அழைத்தார். குப்ளாய்கான் 1276 ல் ஹாங்க்ஸூவில் ஸங்க் பேரரசைக் கைப்பற்றி அதன் இளம் பேரர சரையும், அவர் தாயாரையும் மரியாதை யுடன் நடத்தினார். 1279 ல் மங்கோலியர்களுக்கு சீனாவில் எதிர்ப்பில்லாமல் போனது. சீனச் சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி முதல்முதலாக வெளியில் இருந்து சீனா வந்து ஆட்சி செய்தவர்கள் யூவன் பேரரசு மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால், குப்ளாய்கான் தான் என்றுமே வெளி யிலிருந்து வந்து ஆட்சிசெய்பவர் என தோன்றாமல் இருந்தார். சீனா வின் நிர்வாகத்தையே தன் ஆட்சி யிலும் கடைபிடித்தார். ஒரேஒரு வேற்றுமை பணியாளர்களாக வெளிநாட்டினரை நியமித்தார். இடை யில் மின்னல்போல் பிரகாசமாக வந்துசென்றவர் மார்கோ போலோ ஆகும்.
                                   குப்ளாய்கான் இதற்கு முன்னிருந்த சீன ஆட்சியாளர்களை விட சிறப்பான முறையில் சீனப் பிரதேசங் களை ஆட்சி செய்தார். மங்கோலியா, திபெத், மன்சூரியா, கொரியா மற்றும் தென் சீனக் கடல் பகுதி கள் அனைத்தையும் தன் நேரடி நிர் வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். இவரின் ஆளுமையிலிருந்து தப் பியது ஜப்பான் மட்டும்தான். அதுகூட 1274 ல் மாபெரும் அழிவிற்கு ண்டானது, பின்பு மீண்டும் 1281 ல் மார்கோபோலோவால் மீண்டும் அழி விற்குண்டானது. குப்ளாய்கானை ஜெங்கிஸ்கான் போல் கொள் ளையடிக்க சென்ற நாடோடிக் கூட்டத்தலைவன் போலல்லாமல் சரி த்திரம் “தி க்ரேட் கான்” என்று புகழுரைக்கிறது. இவர் தன் பழங்குடி யின மக்களை வென்ற இடத்தில் குடியமர்த் தினார். வென்ற இடங் களை சுதந்திரப்பிரதேசமாக அறிவித்தார். குப்ளாய்கானின் பேரரசு மிகப் பெரியது. சகோதரர் மகன்கள் படு மற்றும் பெர்கேவை ரஷ்யா வின் தங்கநாடோடிகள் நகரத்தின் அட்சியாளர்களாக்கி, தன் சொந்த சகோதரர் ஹுல குவை பெர்ஷியாவிலும், மெஸோபொடாமியாவில் மங்கோலியர் பேரரசை நிறுவி ஆட்சியாளராக்கினார்.
                         ஹுலகு 1256 ல் அமு தர்யா ஆற்றைக்கடந்து இஸ்லாமிய பெர்ஷியாவில் மங்கோலிய பேரரசை நிறுவ தொடங்கி னார். அப்போது அந்த பகுதி பல அரசியல் கொலைகளுக்காளாகி இருந்தது. அதற்கு காரணமாய் இருந்த ‘இஸ்மாயிலி’ என்ற அமை ப்பு ஏறக்குறைய மங்கோலியர் களின் நடைமுறை முறைக்கு ஒத்து போனதாய் இருந்தது. ஹுலகுவும் ஒவ்வொரு கோட்டைகளாக கொலைகளின் மூலம் கைப்பற்றத் தொடங்கினார். 1257 ல் மேலும், மேற்கு நோக்கி வளமான பகுதியை நோக்கி முன்னேறினார். ஹுல குவும், அவரின் நாடோடிப் படையும் வெளிப்படையில் மட்டும் இஸ் லாமின் மையமாகத் தோன்றிய கலீஃபாவின் ஆட்சிக்கு கீழுள்ள மேஸோபொடாமியாவை நோக்கி நகர்ந்தன. அப்போதைய பாக் தாதின் கலீஃபா அல் முஸ்தாஸிம் 1258 ல் மங்கோலியர்களுக்கு எதி ராக படையை அனுப்பினார். ஹுலகுவால் முஸ்லீம்படை அடக்கப் பட்டு, கலீஃபாவை தன் முன்னேவந்து சரணடைந்து நகரத்தின் சுவர் களை இடிக்கச்சொன்னார். கலீஃபா அல் முஸ்தாஸிம் மறுத்துவிட, ஹுலகு பாக்தாதை வெற்றிகொண்டு, நகரை சின்னாபின்னப்படுத் தினார். ஏறக்குறைய 800,000 மக்களைக் கொன்றார். இது சுன்னி பிரிவு முஸ்லீம்களிடத்தில் நூறாண்டு களுக்கும் மேலாக மிகவும் பயத்தை விளைவித்தது. மங்கோலியப் படைகள் பல கோட்டை களை நகரங்களை அழித்தனர். கலீஃபாவையும் அவர்குடும்ப வாரிசு களையும் கொன்றனர். இஸ்லாமிய வரலாற்றில் மறக்கமுடியாத அழிவு. பல கலை ஆவணங்கள், அறிவுக்களஞ்சியங்களின் மதிப் பறியாமல் தீக்கிரையாக் கப்பட்டன. அந்தகால கட்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் இப்ன் அல் அதிர் என்பவர், “வெறும் ஒரு ஆண் டுகாலத்தில் எவ்வளவு பேரழிவு ஏற்படுத்த முடியுமோ, எப்படியெல் லாம் அழகைச் சிதைக்க முடியுமோ, குணத்தாலும், நாகரீகத்தாலும் சிறந்திருந்த பெருவாரியான மக்களை எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். அவர்கள் அங்கிருந்த இர வுகளை இனி யாரும் இந்த உலகில் சந்தித்திருக்க மாட்டார்கள். முஸ்லீம்களும், இஸ்லாமும் சற்று இயங்காமல் போனது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மங்கோலியர்கள் வரலாறு 2



ஜெங்கிஸ்கானின் வெற்றிகள் இவரை உலகத்தின் முதல் மாவீரனாக சித்தரிப்பதில் அழுத்தமான உண்மை கள் பலவுள்ளன. நெப்போ லியன், அலெக்ஸாண்டர் எல்லாம் வழக் கம்போல் மேற்கத்தியர்களால் மிக அள வுக்கதிமாக புகழப்பட்டவர் கள். அவர்களும் வீரர்கள்தான் சந்தேகமில்லை. ஆனால், ஜெங்கிஸ் கான் அளவுக்கு இல்லை. ஜெங்கிஸ்கான் எந்த நவீன ஆயு தங்க ளும் பயன்படுத்தியதில்லை. இயற்கையான அப்பழுக்கற்ற வீரம் அது. பழங்குடியினராதலால் மலைகளில் சர்வசாதாரணமாக குதி ரை விளையாட்டு, ஒப்பற்ற வேகம், தப்பாத குறி இவையெல்லாம் தான் அவருக்கு வெற்றிகளைத் தேடித் தந்தன. இவருக்கு அமைந்த வீரர்களும் தனி சிறப்பு வாய்ந்தவர்கள். குதிரைவீரர்கள் சர்வசாதார ணமாக எந்தவிதமான பயணப் பாதையிலும் பய ணித்து ஒரு நாளைக்கு 200 மைல் தூரத்துக்கு செய்தி கொண்டு செல்வார்கள். பருந்துகளும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டன. இவருக்கு அமைந்த வீரர்கள் இராஜவிசுவாசத்திற்கும், பயத்திற்கும் பணிந்த வர்கள். மிகவும் தந்திர மாகவும், உயர்தரத்திலும் தமது பழங்குடி மக்களுக்கு நகரங்களில் இருப்பிடம் அமைத்துக்கொடுத்தார். வீரர் கள் குதிரைகளில் விரைந்த வண்ணம் எறிஈட்டி களை எரிவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அந்தகால கட்டத்தில் ஆங்கில படைகள் 250 யார்டு தூரத்தில் எரிவதை மங்கோலிய வீரர்கள் 400 யார்டு தூரத்தி ற்கு குறிதப்பாமல் எரிவார்கள். உலகில் இந்த மங் கோலிய வீரர்களுக்கு இணை யான வீர்ம் அப்போது எங்கும் காண ப்படவில்லை என சரித்திரம் சொல்கிறது. முதலில் தோல்வியுற்றது போல் மலைகளுக்குப் பின்னால் திரும்பி ஓடுபவர்கள் மீண்டும் புய லைப்போல் பன்மடங்காக அம்பெய்த வண்ணம் வருவார்கள். அவர் கள் வந்தால் எதிரிப்படை இருந்த இடம் துடைத்தெறியப்பட்டது போல் இருக்கு மாம். போர்புரிவதை காதலித்துச் செய்தார்களாம்.
                        இவர்கள் பெரும்பாலும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்ய செல்வதால் போகுமிடமெல் லாம் உணவுக்கும், உடமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள். வெற்றி இல்லை என்றால் உணவில்லை அதனாலே யே மிகவும் கொடூரமாக போரிடுவார்கள். இவர்களின் காட்டுமிரா ண்டித் தனமான பழங்குடி பழக்கவழக்க போர்முறை, முரட்டுத்த னம், உளவுபார்க்கும் நூதனம் இவையெல்லாம் மிகவும் புதுமை யாக இருந்தது அப்போது. இவரிடம் இருந்த ‘ஜெபி’ என்ற இராணுவ கமாண்டர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரை “தி ஏரோ” என்றும் புகழுரைத்தார்கள். ஜெங்கிஸ்கான் தன்னுடன் தைரியமாக போரிட்டு தோற்கும் எதிரியை மன்னித்து மங்கோலியப் படையில் சேர்த்துக் கொள்வார். ஆனால், தங்கள் பழங்குடியினரை அவமதிப்பவர் களை யும், துரோகிகளையும் மன்னிக்காமல் உடனே தண்டனை கொடுப் பார். தான் செல்லும் நகரங்களை முன்னாலேயே உளவாளிகளை வைத்துக் கண்காணிப்பார். அவர்களுக்கு தேவைப்பட்ட பொருள் களை லஞ்சமாகக் கொடுப்பார். மங்கோலி யர்கள் ஒரு இடத்தில் கால் வைத்தால் அது 100% வெற்றியாக வேண்டும் என்பதில் குறி யாக இருப்பார். எதிரிக்கு நேரடியாக இரண்டே வாய்ப்புதான் கொடுப் பார். ஒன்று தன்னுடன் போரிடவேண்டும் அல்லது சரணடைந்து விடவேண்டும். இவர் ஒரு பகுதியை வெற்றி கொண்டால் அந்த செய்தி உடனே அடுத்துள்ள பகுதிகளு க்கு விரைவில் தெரியப் படு த்தி விடுவதில் குறியாக இருப்பார். ஒருவேளை ஏதாவது ஒரு எதிரி தன்னுடன் தைரியமாகப் போரிட்டால், இறுதியில் அவர்களை பொது மக்களின் முன்னிலையில் வைத்து கடுமையான முறையில் தண்டி த்து பார்ப்பவ ருக்கு பயத்தை ஏற்படுத்துவார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக மலை சூழ்ந்த பகுதிகளுக்குள்ளேயே வாழ்ந்த ஒரு கூட்டத் தின் மனிதனிடத்திலிருந்து வந்த வீரம் கண்டு உலகம் இன்றளவும் வியக்கிறது. ஆனால், அது ஆத்திரத் தாலும், அவமானத்தினாலும் வந்த சமுதாயத்தின் மீது வந்த கோபம். நாடோடிக் கூட்டத்தின் தலைவனான தன் தந்தையைக் கொன்று, இளவயதிலேயே தன்னை அனாதையாக்கிய வேதனையின் வெளிப்பாடு. அந்த கோபத்தையும், வேதனையும் இறக்கி வைக்க அவர் தேர்ந்தெடுத்த இடம் அந்த மலைசூழ்ந்த பகுதியின் வெளிப் புறத்தில் பூமி எங்கும் பரவியிருந் தது.
                                   மற்ற இராணுவங்கள் இரும்பாலான பீரங்கியை பயன்படுத்தி வந்த நேரத்தில் ஜெங்கிஸ்கான் பித்தளை யாலான பீரங்கியை எந்த விதமான தட்பவெப்ப சூழ்நிலையிலும் பயன்படுத்தச்செய்தார். மங்கோலியர்கள் எந்த ஒருநகரத்தில் நுழை யும் முன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் போல் நுழைவார்கள். நகரத் தின் உள்ளே இருக் கும் உளவாளிகளால் சரணடைந்து விடுவது நல் லது என்பதுபோல் ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்லப்படும். பெரு ம்பாலும் ஐரோப்பிய வைக்கிங்குகள் போல் கொள்ளையடித்து விட் டுத் திரும்பி விடுவார்கள். தன் ஆட்சியின் போது ஒன்றரை மில்லி யன் பழங்குடியின் மக்களுக்கும், தன்னாள் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு மில்லியன் மற்ற நாடோடிக் கூட்ட மக்களுக்கும் ஆட்சியா ளராக இருந்தார். நீண்ட மேற்கத்திய தாக்குதலுக்குப் பிறகு, 1225 ல் மங்கோலியா திரும்பினார். பின் தனது கவனத்தை மீண்டும் வட சீனாவின் மீது திருப்பினார். ஏற்கனவே ஸி ஸியா மாகாணம் வெற் றி கொள்ளப் பட்டபோது ஒப்புக்கொண்ட ஆண்டுகப்பத் தொகையை ஸி ஸியா மன்னன் கட்ட மறுத்தான். மேலும் இம்முறைப் போரிட் டால் மங்கோலியர்கள் வெல்லமுடியாது என்ற கருத்தில் இருந்தா ன். ஜெங்கிஸ்கான் இந்த முறை எப்படியாவது ஸி ஸியா வை குறையில்லாமல் வெற்றி கொள்ள எண்ணினார். 180,000 வீரர்களு டன் கடுமையான குளிரில் உறைந்து போயிருந்த மஞ்சள் ஆற்றில் போரிட்டார். மிகுந்த உயிர் சேதம் ஏற்படுத்தி, பல நகரங்களை அழி த்து வெற்றி பெற்றார். 1227 ல் ஒரு வேட்டையின்போது குதிரையிலி ருந்து முறையில்லாமல் விழுந்ததில் பலத்த காயமுற்று சிறிது நாளில் இறந்து போனார். ஜெங்கிஸ்கானின் இறப்பிற்குப் பிறகு, மங் கோலியர்கள் கூடி அடுத்த தலைவராக ஜெங்கிஸ்கானின் இரண்டா வது மகன் ஒகிடாய் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர். ஜெங்கிஸ்கா னும் இறப்பதற்கு முன இவரையே தேர்ந்தெடுக்க கூறியிருந்தார்.

மங்கோலியர்கள் வரலாறு 1



அமைதியாக இருக்கும் அருகாமை மக்களைக் கொள்ளையடித்து, தங்கள் உணவை தேடிக்கொண்டிருந்த பழங்குடி யினர் மீது போர் தொடுத்து ஸ்காண்டிநேவியன்கள் கைப்பற்றிய பூமி. மங்கோலியப் பீடபூமி. இதை ஸ்காண்டிநேவியன்கள் கடற்கொ ள்ளைக்கும், அடிமை வாணிபத்திற்கும் பயன்படுத்தி வந்தார்கள் அது தனி கதை. இந்த மங்கோலியா தான் துருக்கிகளுக்கும், மங் கோலியர்களும் உண்மையான தாய் பிரதேசம். ஆண்டாண்டாக பழங்குடி யினராக இங்கு வாழ்ந்த இந்த இரு சமூகமும் உலக சரித்திரத்தில் மகத்தான இடம் பிடித்தனர். இவர்களின் மொழி ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். ஆளுய ரத்திற்கு வளர்ந்திருக் கும் காட்டுப்புல், கரடுமுரடான மலைகள் எல்லாம் தாண்டி அமை ந்த பிரதேசம். இவைகளைக் கடந்தால் நேராக கொண்டு போய் ஐரோப்பாவில் விடும். குதிரைகளில் பயணித்தால் விரைவில் எட்ட லாம். தென் பகுதியில் உயர்குடி வகுப்பினர் வசித்து வந்தார்கள். அமெரிக்க இந்தியர்கள், சைபீரிய பழங் குடியினர்கள் மற்றும் வட க்கு மங்கோலியர்கள் அனைவரும் ஒரே வழிமுறையில் வந்தவர் கள் என்று இறுதியான மனித ஆய்வு சமீபத்தில் தெரிவிக்கிறது.
                                      இந்த மங்கோலிய பீடபூமியைப் பற்றி கொஞ்சம் ஆதியிலிருந்து பார்ப்போம். காட்டுமிராண்டி கூட்ட ங்களாய் 100 ஆம் ஆண்டுகளில் பல பிரிவு மக்கள் சேர்ந்த இனம் மங்கோலிய இனம். பின்னாளில் ஸோன்ங்க்யூ, ஸியான்பி, ரூரன், கூக்துர்க் அல்லது ஹூன் மாகாணம் என்று அடையாளம் காணப் பட்டது. இன்றும் சரித்திர ஆசிரியர்கள் இவர்கள் மங்கோலிய பழங் குடியி னரா அல்லது துருக்கி பழங்குடியினரா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார் கள். இந்த ஹூன் மாகாணம் மத்திய ஆசியா வில் “ஷன்யூ” என்ற பேரரசாக மாறி யது. ஷன்யூ மோடுன் என்பவர் இதை விரிவுபடுத்தினார். ஷன்யூ பேரரசு சீனா வின் ஹான் பேரரசு டன் போட்டியிட்டது. ஷன்யூவின் பிரமாண்ட படை முன்னால் தாக் குபிடிக்க முடியாமல் ஹான் பேரரசின் சீனா மன்னர் ஷன்யூவை தனிப்பேரர சாக ஒத்துக்கொண்டார். ஷன்யூவுடன் திருமண உறவு களை வளர்த்துக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்தவும் ஒப்புக்கொ ண்டார். மோடுன் ஆட்சியில் ஷன்யூ பேர ரசு நிர்வாகத்திறமையி லும், இராணுவத்திலும் பலமாகஇருந்து “ஷாமானிஸம்” என்ற மதக்கொள்கையை கடைபிடித்து வந்தது. (இங்கு நிறைய குறிப் பிடவரலாறு உள்ளது. தேவையில்லை என்ற காரணம் கருதி தவிர்த்துவிடுகிறேன்.) நாளடை வில் சரித்திரம் ஸியன்பிஸ்கள் என்பவர்கள் தான் மங்கோலியர்கள் என்று முடிவு க்கு வந்தது. 2006 ல் நடந்த அகழ் ஆராய்ச்சியில் மங்கோலியாவின் அல்டாய் மலைப் பகுதியில் 2,500 ஆண்டு கள் பழமைவாய்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஸைத்திய போர்வீரன் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. மங்கோலியர் களின் புராதனம் கொய்ட் செங்கெரீன் அகூய் பகுதியில் வட நீலவ ண்ண குகை ஓவியங்கள், பயன் கோங்கார் பகுதியில் ஸகான் அகூய் வெள்ளை குகை ஓவியங்கள் மூலமும் கண்டறியப்பட்டுள் ளன. ஸியன்பிஸ்களின் இளம்தலைவர் தன்ஷி ஹுயூ சிறு நாடோடிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஹூன் மற்றும் சீன அரசு டன் அவ்வப் போது மோதிக்கொண்டிருந்தார்.
                               ஒரு வழியாக ஸியான்பி மாகாணத்தை உருவாக்கினார். அதுவும் சிறிது நாளில் சிதறுண்டு போனது. பல சிறு அரசர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக்கொண்டார்கள். ஸியான்பி மாகாணம் தன் தலை மையை ‘கான்’ என்று அழைத்தது. இவர்கள் துருக்கி நாடோடிகளாகவும் அறியப் பட்டனர். ஆனால், நவீ ன துருக்கிகள் இதிலிருந்து மரபு ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் மாறுபட்டவர்கள். சரித்திரத்தில் முதல் கானாக காபுல்கான் என்ற வர் கியாத் பழங்குடியினரிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறார். காபுல்கானின் மகன் ஹோடுலாகான் எதிரிக்கூட்டத்தலைவனான அம்பகைகானுடன் பலமுறை போரி ட்டார். ஹோடுலாகான் இறந்த வுடன் கூட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க திணறினார்கள். இறு தியில் காபுல்கானின் பேரர் ஒருவரான யெஸுகெய் பகாதூர் என்ப வரை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.   
                                 மங்கோலியாவின் கிழக்கில் அல்டாய் மலைப் பகுதி. அந்த தாய் தகப்பனில்லாத தன் குழந்தைகளுக்கு உணவளிக்க மிகவும் சிரமப்பட்டாள். சில சமயம் காட்டுத் தாவரங்க ளையும், சிறிய மிருகங்களையும், சுண்டெலிகளையும், அவர்கள் கூட்டத்துக்குள்ளேயே திருடியும் உணவளித்து வந்தாள். அவர்களின் சிறிய கூட்டத்தின் தலைவராக இருந்த அந்த குழந்தையின் தந்தை யை அந்தக் கூட்டத்தார்கள் தலைமைப் போட்டியில் விஷம் வைத் துக் கொன்றுவிட்டார்கள். அவர் தான் யெசுகெய் பகாதூர். ஆறு குழ ந்தைகளின் தந்தை ஆவார். அந்த குழந்தைகளில் ஒரு சிறுவனுக்கு தந்தை இறந்தபோது எட்டு வயது. அந்த சிறுவனின் பெயர் தெமு ஜின். வழக்கமாக தந்தைக்குப் பின் தலைமைக்கு வர வேண்டிய தெமுஜின்னை அவர்களின் கூட்டத்திலேயே யாரும் ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் ஒருகுழு சேர்த்து முரண்டுபிடித்த அந்த சிறுவன் தெமுஜின்னை மரக்கூண்டுக்குள் பலநாட்களாக சிறைவைத்தனர். ஒருநாள் இரவில் தெமுஜின் தப்பித்து தன் தாய் தம்பிகளுடன் வெளியேறி நீண்ட தூரம் பயணித்து வேறு ஒரு நாடோடிக்குழுவு டன் சேர்ந்து கொண்டார். தன் தந்தையின் சகோதரர் தூரில் கானு டனும், தனது இன்னொரு சகோதரர் ஜமுகாவுடனும் சேர்ந்து சிறிய கூட்டங்களை வெற்றி கொண்டார். அந்த கூட்டங்களில் ஒன்றான மெர்ஜித்பழங்குடியினர் தெமுஜினின் வீட்டைஅழித்து அவர் மனைவி பூர்டேயை சிறைப்பிடித்துச் சென்றனர். இது ஏற்கனவே முன்பு தெமு ஜினின் தந்தை யெஷுகெய் மெர்ஜித் தலைவனின் மனைவி ஹூலு னை சிறைப்பிடித்து சென்றதற்கு பழிவாங்குவதாக இருந்தது. தந் தையால் சிறைபிடித்து வரப்பட்ட ஹூலுன் தான் தெமுஜின் தாயார். மனைவியை மீட்க மெர்ஜித் கூட்டத்தின் மீது தெமுஜின் படையெடு த்து வென்றார். இந்த சிறுவன் தெமுஜினின் கதை உலகின் அனை த்து மொழிகளிலும் சினிமாப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனா ல், இவரின் கதை என்று சொல்லப்படுவதில்லை. அந்த சிறுவன் தந்தையைக் கொன்ற தன் கூட்டத்துக்குள்ளேயே அதிகாரத்திற்கு வர இருபத்தைந்து ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. தனது நாற்பதாவது வயதில் தங்கள் பழங்குடியின குழுவுக்குத் தலைவ னாகி, இன்றளவும் உலகம் வியக்கும் “ஜெங்கிஸ்கான்’ என்று பெயர் பெற்றார். ஜெங்கிஷ் என்றால் ‘எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்’ என்று பொருள். இவர் தனி மனித இராணுவம் என்று புக ழப்பட்டார்.
                                 சரித்திரத்தில் எவருடைய ஆரம்பமும், முடிவும் ஜெங்கிஸ்கானுடையது போல் அல்ல. இவர் தோராயமாக 1167 ல் பிறந்தார். இவர் தங்களுடைய மூதாதையர்கள் போல் அதே இடத்தில் பிறந்தோம் வளர்ந்தோம் மரணித்தோம் என்றுவாழ விரு ம்பவில்லை. வேற்றுமனிதர் அறியா மலைகளுக்கு பின் வாழ்ந்து கொண்டிருக்கும் தமது கூட்டம் உலகம் அறியப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் நாடோடி கூட்டமக்களை தன் தலைமையின் கீழ் திரட்டி இரத்தம் இரத்தமாக போகுமிடமெல்லாம் சிதறடித்து முன்னேறினார். மங்கோலிய இனத்தில் குழந்தைப் பருவத்திலேயே மலையேறுவது, குதிரை விளையாட்டு போன்றவை கட்டாயமாகிப் போனது. பயம் என்றால் என்ன என்றே அறியாத ஒரு கூட்டம். கம் யூனிஸ சீனா மங்கோலிய சரித்திரத்தை காட்டுமிராண்டிகள் என்று வருணிக்கின்றன. இரத்தத்தாலேயே பசிபிக்கடலின் வழியைத் திற ந்து ஐரோப்பாவில் நுழைந்தார். முதல்முதலில் ஸி ஸியா என்ற வட சீனப் பகுதியைக் கைப்பற்றினார். பின் சக்திவாய்ந்த கின் பேர ரசைத் தாக்கினார். 1209 ல் வடக்கில் சீனா நோக்கி நகர்ந்து 1215 ல் பெய்ஜிங்க் நகரத்தைப் கைப்பற்றினார். 1219 ல் இவரின் வாழ்வின் அதிமுக்கிய திட்டமாகிய மேற்கை நோக்கி நகர்ந்தார். க்வாரஸெம் என்ற மாகாணத்தின் துருக்கி ஆட்சியாளர் இரண்டாம் முஹமது ஷா என்பவரை சரனடையச் சொல்லி தூது அனுப்பினார். சாதாரண பழங்குடிப் படை யினர் மன்னரை சரணடையச் சொல்வதா? முஹ மது ஷாவின் ஆட்கள் வந்த தூதுவரைக் கொன்று, மீதி ஆட்களை தலை மழித்து அவமானப்படுத்தி அனுப் பினர். வெகுண்டெழுந்த ஜெங்கிஸ்கான் போரில் குதித்தார். பலமான கடுமையான எதிர்ப் புக்குப் பிறகு, ஜெங்கிஸ்கான் வெற்றிபெற்றார். 1220 ல் சமர்கண்ட் மற்றும் புகாரா நகரங்களை கைப்பற்றினார். முஹமது ஷா கஸ்பி யன் கடலின் ஏதோ ஒரு தீவில் மறைந்து இறந்து போனார். முஹ மது ஷாவின் இராணுவத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான குதிரைப்படை வீரர்கள் மங்கோலியப் படையில் சேர்ந்தனர். அங்கி ருந்து தெற்காக திசைதிரும்பி இந்தியாவை நோக்கி வந்தார். ஆனா ல், இந்துஸ் ஆறுவரை வந்தவர் அறியப்படாத காரணத்தால் திரும் பி விட்டார். பின்னர் 1223 ல் கஸ்பியன் கடல் மற்றும் காகசஸ் மலைகளின் வாயிலாக படைகளுடன் பயணித்து க்ரீமியா மற்றும் தென் ரஷ்யா பகுதிகளில் கொள்ளையடித்தார். அலெக்ஸாண்டரின் மனோதத்துவ ரீதியான போருக்கு முன்வரை ஜெங்கிஸ்கானின் வேகத்திற்கும், வெற்றிக்கும் இணையான வீரர் எவரும் இல்லை.

ஓட்டோமான் கள் வரலாறு 5



பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு களில் ஓட்டோமான் பேரரசும், ரஷ்யாவும் நிறைய போர்களை சந்தி த்தன. மேலும் வெளி நாட்டு அர்சுகள் ஓட்டோமான் பிரதேசங்க ளைக் கைப்பற்ற ஆவல்கொண்டன. இதனால், பேரரசு ஐரோப்பிய நாடுகளுடன் இராணுவக்கூட்டு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய கட் டாயமானது. இடையில் போனபார்ட் எகிப்திலிருந்து மம்லுக்குக ளை வென்று அங்கு எகிப்தியர்களின் ஆட்சியை கொண்டு வர விரு ம்பினார். அதற்காக கெய்ரோவில் தாக்குதல் நடத்தி கொள்ளையடித் தார். மம்லுக்குகளை 1798 ல் பைரமிட் என்ற இடத்தில் வெற்றி பெற் றார். இராணுவ ஜெனரல்கள் இப்ராஹிமும், முராதும் எகிப்தின் சினாய் தீபகற்பத்திற்கு தப்பி ஓடினார்கள். போனபார்ட் கெய்ரோ வைக் கைப்பற்றினார். அங்கிருந்து நைல் நதியின் பகுதிகளைக் கட்டுப்படுத்த எண்ணினார். ஆனால், தொடர்ந்து மம்லுக்குகள் பிதூ யின் பழங்குடியினரின் உதவியுடன் எதிர்த்து வந்தார்கள். 1799 ல் போனபார்ட் மாஸிடோனியாவைச் சேர்ந்த மெஹ்மெத் அலி என்ற ஓட்டோமான் அதிகாரியிடம் எகிப்தை மம்லுக்குகளிடமிருந்து முற் றுலும் கைப்பற்றக் கூறிவிட்டு பிரான்சுக்கு திரும்பிச் சென்றார்.  
                                 பேரரசில் முதல் தபால் நிலையம் 1840 ல் துவங்கப் பட்டது. 1876 ல் முதல் சர்வதேச தபால் பட்டுவாடா செய்யப்பட்டது. 1901 ல் முதல் பணபட்டுவாடா தபால்நிலையம் மூலம் செய்யப்பட்டது.
                                                                    ஓட்டோமான் பேரரசின் பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆர்வமாய் இருந்தன. பிரிட்ட னும், ஃப்ரான்சும் ஓட்டோமான் பேரரசுக்கு ரஷ்யாவை எதிர்ப்பதற்கு ஆதரவு அளித்தன. கருங்கடலின் கட்டுப்பாட்டைப்பிடிக்க ரஷ்யா வின் க்ரிமியன் தீபகற்பத்தில் போர்நடந்தது. அதல்லாமல் பல சிறிய தாக்குதல்கள் மேற்கு அனடோலியா, காகசஸ், பால்டிக் கடல், பசி ஃபிக் கடல் மற்றும் வெள்ளை கடல் ஆகிய பகுதிகளில் நடந்தன. இந்த போர்கள் முற்றிலும் நவீன முறையில் நடந்தன. அதாவது முதல் முறையாக போரில் இரயில்வே துறை மற்றும் தபால் துறை கள் பயன்படுத்தப்பட்டன.  1856 ல் பாரிஸ் உடன்படிக்கை ஏற்படுத்த ப்பட்டபின் பால்கன் தீபகற்பம் மற்றும் கருங்கடல் பகுதிகள் ஓட் டோமான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. க்ரிமியன் போரி னால், க்ரிமியன் டடார் பிரிவினர் 300,000 மக்கள்தொகையில் 200,000 பேர் டாரைட் மாகாணத்திலிருந்து ஓட்டோமான் பேரரசின் பகுதிக்கு அகதி களாக ஓடினார்கள். அதேபோல் காகசஸ் போரிலும் 90% சத விகித சிர்காஸியன் பிரிவு மக்கள் சொந்த இடங்களைவிட்டு ஓட் டோமான் பேரரசின் பகுதிக்கு குடி யேறினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பால்கன், காகசஸ், க்ரிமியா மற்றும் க்ரீட் தீவு கள் போன்றவற்றிலிருந்து வந்து குடியேறிய பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தான் தற்போதைய துருக்கியில் அடிப்படை மாற் றத்தை உண்டாக்கினார்கள். பொதுவாக இவர்களை “முஹாசிர்” என்று அழைத்தார்கள். 1922 ல் ஓட்டோமான் ஆட்சி முடிவுறும் போது பாதிக்கும் துருக்கிய மக்கள் ரஷ்யாவிலிருந்து வந்த முஸ் லீம் அகதிகள் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் க்ரி மியன் டடார்கள் துருக்கியில் நவீன கல்விக்கு பாடுபட்டார்கள்.
                             எல்லா தேசங்களிலும் எழுந்த தேசியமய மாக்கல் எழுச்சி ஓட்டோமான் ஆளும் மாகாணங்களிலும் எழுந்தது. இவர்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப கலாச்சாரம் சார்ந்த தேசியமாக் கல் வேண்டி, மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி (அதாவது கிறிஸ்தவ) செய்துகொண்டார்கள். எல்லை தாண்டி வந்த இந்த கலாச்சாரத்திற்காக பல உள்ளூர் அரசியல் கட்சிகள் இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பம் வரை புரட்சி செய்தன. 1804 ல் செர்பியர்கள் பேர ரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட ஓட்டோமான்கள் பால்கனை விட் டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே சமகாலத்தில் நெப்போலியன் படையெடுப்பும் நடந்தது. 1817 ல் செர்பிய புரட்சி முடி வுக்கு வர தனியாக ஆட்சி அமைத்து பெயரளவில் சுஸெரியண்டி ஓட்டோமான் இருந்தது. 1821 ல் ஓட்டோமான் பேரரசிலிருந்து முதல் முறையாக ஹெல்லெனிக் முழு சுதந்திரம் அடைந்தது.
                                   தான்ஸிமட்களின் மாற்றம் தனூப் மற்றும் செர்பிய பிரிவினரின் தேசியமாக்கும் எண்ணத்தை தடுக்க வில்லை. அவர்கள் 60 ஆண்டுகளாகவே பாதி சுதந்திரமாகத்தான் இருந்தார்கள். 1875 ல் மோண்டினிக்ரோ, வல்லாச்சியா, மோல்டாவி யா மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் பெயரளவில் பேரரசுக்கு கட்டுப் படுவது போன்ற சுதந்திரத்தை அறிவித்தார்கள். 1877 ல் ரஷ்யா துரு க்கிப்போரின் போது ஓட்டோமான் பேரரசு மேற்சொன்ன  பிரதேசங் களுக்கும், பல்கேரியாவுக்கும் சுதந்திரம் அறிவித்தது. பல்கேரியா போரின் போது தேசிய புரட்சிக் குழுவுக்கு ஆதரவாக இருந்தது. 1878 ல் பெர்லின் காங்கிரசின் பெரியதலைவர் அதிகாரமிக்க ஐரோப் பியாவையும் ஓட்டோமான் பேரரசையும் சந்தித்தார். வெற்றி பெற் றிருந்த ரஷ்யாவையும் ஆர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களையும் பால் கனில் நிலையான ஒரு அரசை நிறுவ அவசரப்படுத்தினார். ஜெர்ம னியின் அதிபர் ஓட்டோ வான் பிஸ்மார்க், எதிர்காலத்தில் பெரிய போர் ஏற்படாமலும், அதேநேரத்தில் ஓட்டோமான் அதிகாரத்தைக் குறைத்து, மற்றவர்களின் அதிகாரம் அதிகம் இருப்பதுபோல் பல்கே ரியாவை அமைத்தார். ஓட்டோமான் பேரரசுக்குள்ளேயே பல்கேரியா ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் நிலப்பரப்பு முழுமையாக கொடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்கேரியா ருமேலியா பகுதியை இழந்தது. ருமேலியாவை ஓட்டோ மான் பேரரசு தனி நிர்வாகம் அமைத்து பார்த்துக்கொண்டது. அதே போல் மாசிடோனியாவுக்கும் தனி நிர்வாகம் அமைப்பதாகக் கூறி யது. ருமேனியாவும் சுதந்திரம் அடைந்தது. ஆனால், பெஸ்ஸராபி யா என்ற பகுதி ரஷ்யாவிடம் சேர்ந்தது. செர்பியாவும், மோண்டினிக் ரோவும் குறைவான பகுதிகளுடன் முழுச் சுதந்திரம் பெற்றன.
                                  1878 ல் ஆஸ்ட்ரியாவும், ஹங்கேரியும் தாமதம் காட்டாமல் ஓட்டோமான் மாகாணங்களான போஸ்னியா ஹெர்ஸிகோவினா மற்றும் நோவிபஸர் பகுதிகளை ஆக்கிரமித்தன. ஓட்டோமான் பேரரசு அதைத் தடுத்து தனது படைகளை நிறுத்திக் கண்காணித்தது. ஆஸ்ட்ரியாவும், ஓட்டோமானும் ஏறக்குறைய 30 ஆண்டுகள் 1908 வரை அந்த மாகாணங்களில் படைகளை நிறுத்தி இருந்தன. ஆஸ்ட்ரியா ஓட்டோமான் பேரரசில் அரசியல் அதிகாரம் பெற்றபோது, இளம் துருக்கி புரட்சிப்படையுடன் போஸ்னியாஹெர் ஸி கோவினா சேர்ந்து கொண்டது. ஓட்டோமானுடன் போரைத் தவி ர்க்க உடன் நோவிபஸரிலிருந்து இராணுவத்தை பின் வாங்கிக் கொண்டது. 1878 ல் பெர்லின் தலையீடு ஓட்டோமானில் இருக்கும் போது, பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி சைப்ரஸ் நிர்வாகத் திற்காக ஓட்டோமானை ஆதரித்தார். அதேபோல் 1882 ல் ஓட்டோ மான் பேரரசு முதல் உலகப்போரில் மத்திய சக்தியை ஆதரிக்க விரு ப்பம் தெரிவித்திருந்ததால் எகிப்தில் ஏற்பட்ட ‘உராபி’ கலவரத்திற் கும் பிரிட்டன் படைகளை அனுப்பி உதவியது. 1881 ல் பிரான்சு தன் பங்குக்கு துனிஷியாவை அபகரித்துக்கொண்டது.
                        இந்த சுதந்திரமயமாக்கப்பட்ட மாகாணங்களின் விவகாரம் ஆரம்பத்தில் பெரிய சாதனையாகவும், அமைதிக்கும், நிர ந்தர ஆட்சிக்கும் வழி ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், பங்கு பெற்றவர்களின் அதிருப்தி 1914 ல் உலகப்போரில் எதிரொலித் தது. செர்பியா, பல்கேரியா மற்றும் க்ரீஸ் பயன்பெற்றிருந்தாலும், அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்கள். அப்போதைய ஓட்டோ மானின் பேரரசர் ‘ஐரோப்பாவின் நோயாளி’ (SICK MAN OF THE EUROPE) என்று வருணிக்கப்பட்டு, அமைதியற்ற உள்நாட்டு நிலவரம், கடும் தாக்குதல்கள், பலவீனமான அரசு என்று ஆகிப்போனார். ஆஸ்ட்ரி யா-ஹங்கேரி மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த நீண்டநாள் பகை பால்கனின் தேசியமயமாக்கலுக்கு தடையாகவே இருந்தது.  பெர்லின் காங்கிரஸ் இஸ்தான்புல்லை ஓட்டோமான் பேரரசில் இணப்பதில் வெற்றிகண்டது. பெர்லின் காங்கிரஸ் இதற்கு முன் பல்கேரியா உடன்படிக்கை மூலம் சுதந்திரம் பெற்றிருந்த பகுதி களை ஓட்டோமான் பேரரசிடமே, குறிப்பாக மாசிடோனியாவை திரும்ப ஒப்படைத்தது. இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பி முதல் பால்கன் போர் நடந்தது. இதில் ஓட்டோமான்கள் தோல்வி அடை ந்து பெரும்பாலான ஐரோப்பிய பிரதேசங்களை இழந்தார்கள்.
                           இதனால், ஓட்டோமான் பேரரசு நிலப்பரப்பு, இராணுவம், வளமை ஆகியவற்றில் சுருங்கியது. அதிகமான பால் கன் முஸ்லீம் கள் சுருங்கிப்போன ஓட்டோமான் பகுதிகளிலும், அனடோலியாவின் முக்கிய பகுதிகளையும் நோக்கி குடிபெயர்ந் தனர். ஓட்டோமான் பேரரசில் முஸ்லீம்கள் க்ரீமியா, பால்கன், காக சஸ், தென் ரஷ்யா மற்றும் ருமேனியாவின் சில பகுதிகளில் அதிக மாக இருந்தனர். இதில் பலவற்றை பத்தொன்பது, இருபதாம் நூற்றா ண்டுகளில் ஓட்டோமான் இழந்திருந்தது. அனடோலியாவும், கிழக்கு த்ரேசும் மட்டும் முஸ்லீம் பிரதேசமாக இருந்தது. 1880 எகிப்தில் அர சியல் குழப்பம் ஏற்பட்டது. 1882 ல் பிரிட்டன், பிரான்சு போர்க்கப்பல் கள் அலெக்ஸான்ட்ரியா துறை முகத்தின் அருகில் இருந்து ‘கேதிவ்’ என்ற பிரிவினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு ஐரோப்பாவின் எதிர்ப்பாளர்களை தடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் எகிப்தைக் ஆக்கிரமித்து சீரமைப்பதாகக் கூறியது.
                                 அர்மேனியர்கள் தங்களுக்கும் ஒத்துக் கொண்டது போல் சுதந்திரம் அளிக்கவேண்டுமென்று ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அழுத்தம் கொடுத்தன. இதனால், சுல்தான் இரண்டாம் ஹமீத் என்பவர் கிழக்கு அனடோலியாவில் ஹமீதியா பகுதியில் படை நிறுத்தினார். முறையற்ற குர்து இனத்தவரைப் படையில் சேர்த்து 1894 லிருந்து 1896 வரை 100,000 லிருந்து 300,000 அர்மேனியன்கள் வரை கொல்லப்பட்டு சரித்திரப்புகழ் பெற்ற ‘ஹமீ திய படுகொலை’ நடத்தப்பட்டது. அர்மேனிய போராளிகள் இஸ்தான் புல் நகரில் ஓட்டோமான் வங்கியின் தலைமை அலுவலகத்தைச் சிறைப்பிடித்து ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால், அவர் களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
                              ஓட்டோமான் பேரரசின் தொடர் பால்கன் போரினால் ஐரோப்பாவும், வட ஆப்பிரிக்காவும் மிகவும் சிரமப்பட் டன. ஆனாலும் 28 மில்லியன் மக்கள்தொகை பேரரசில் இருந்தது. இவற்றில் 17 மில்லியன் நவீன துருக்கியிலும், 3 மில்லியன் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனத்திலும், 2.5 மில்லியன் ஈராக்கிலும் இருந்தார்கள். இதல்லாமல் இன்னும் 5.5 மில்லியன் மக்கள் பெயர ளவில் ஓட்டோமான் பேரரசினாலான அரபிய தீபகற்பத்தில் இருந் தார்கள். சமூக ஆதாயம் பெறவேண்டி ஆஸ்ட்ரியா-ஹங்கேரியுடன் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா அலுவல் ரீதியாக இணை க்கப்பட்டது. இதனால் பேரரசு ஆஸ்ட்ரியாவுடனான போரைத்தவிர்ப் பதற்கு நோவிபஸரில் நிறுத்தியிருந்த படைகளை திரும்ப அழைத் துக்கொண்டது. 1911-12 ல் இத்தாலி-துருக்கிப்போரில் ஓட்டோமான் பேரரசு லிபியாவை இழந்தது. பால்கன் போரில் பேரரசு கிழக்கு த்ரேஸ் நகரத்தையும், சரித்திரப்புகழ் வாய்ந்த ஓட்டோமானின் அட் ரியநோபிள் நகரத்தையும் தவிர அனைத்து பால்கன் பகுதிகளையும் இழந்தது. ஓட்டோமான் இராணுவம் பின் வாங்கிவிட்டதால் ஏறக்கு றைய 400,000 முஸ்லீம் கள் கிரீக், செர்பியா, பல்கேரியா பகுதிகளில் என்ன நடக்குமோ என்று பயத்தில் உறைந்து போயிருந்தனர். ஜெர்ம னியின் கட்டுப்பாட்டில் பாக்தாத் ரெயில்வே ஈராக்கில் இரயில் பணி களைச் செய்தது. இந்த பணி ஏற்கனவே தொடங்கப் பட்டிருந்தாலும், பிரிட்டன் உலகப்போரை முன்னிட்டு இரயில்வே பணியால் கவலை யுற்றிருந்தது.
                            கான்ஸ்டாண்டிநோபிள் ஆக்கிரமிக்கப்பட்ட வுடன் கூடவே துருக்கியில் இஸ்மிர் என்ற நகரமும் ஆக்கிரமிக்கப் பட்டது. அவர்கள் துருக்கி தேசிய அமைப்பு என்ற ஒன்றைத் தொடங் கி துருக்கி சுதந்திரப்போர் என்று நடத்தி வெற்றி பெற்றார்கள். முஸ் தஃபா கெமால் பாஷா என்பவர் தலைவராய் இருந்தார். ஓட்டோ மான்களின் கடைசி சுல்தான் ஆறாம் மெஹ்மெத் வஹ்தெத்தின் நிராகரிக்கப்பட்டார். சுல்தான் 1922 நவம்பர் 1 ல் ராஜினாமா செய்து விட்டு துருக்கியை விட்டு வெளியேறினார். துருக்கி தனி நாடாக 1923 ஜூலை 24 ல் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது.  
                                 1974 ல் ஓட்டோமான் பேரரசின் வாரிசு களுக்கு துருக்கி அரசு, நாட்டுப்பிரஜைகளாக அங்கீகாரம் அளித்தது. ஓட்டோமான் இளவரசர் மெஹ்மெத் அப்துல் காதிரின் மகன் மெஹ் மெத் ஓர்ஹன் 1994 ல் இறந்துபோனார். ஓட்டோமான் சுல்தான் இர ண்டாம் அப்துல் ஹமீதின் பேரரும், அழிந்துபோன ஓட்டோமான் பேரரசின் மூத்த உறுப்பினருமான எர்துகுல் ஒஸ்மான் மட்டும் இருந் தார். இவர் துருக்கியின் பாஸ்போர்டை கூட பெறவிருப்பமில்லாமல் தான் இன்னும் எங்கள் மூதாதையரின் ஓட்டோமான் பேரரசைச் சேர் ந்தவன் தான் என்று கூறிவந்தார். மீண் டும் ஓட்டோமான்கள் ஆட்சி வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா என்ற பத்திரிக்கையாளர்க ளின் கேள்விக்கு, அவர், தேவையில்லை துருக்கி ஜனநாயக முறை யில் நன்றாகவே இருக்கிறது என்றார். 1992 ல் அவர் முதல் முறை யாக துருக்கி திரும்பி, துருக்கிப் பிரஜையாக வும் ஆகி, துருக்கி பாஸ்போர்டையும் பெற்றுக்கொண்டார்.
                              2009 செப்டம்பர் 23 ல் எர்துகுல் ஒஸ்மான் தனது 97 வது வயதில் இஸ்தான்புல் நகரில் கடைசி சுல்தான் வாரி சாக இருந்து இறந்து போனார். சுல்தான் அப்துல் மெஸித்தின் இர ண்டாவது மகன் பயேஸித் ஒஸ்மானின் இளைய பேரர் யாவுஸ் செலிம் ஓஸ்கூர் என்பவர் சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவராக (அதாவது பட்டத்திற்கு உரியவர் அல்ல) இன்னும் ஆஸ்திரேலியா வின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார்.